Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Akṣaramaṇamālai
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
Kāppu
அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷர மணமாலை சாற்றக்
கருணாகரக் கணபதியே கரம் அருளிக் காப்பாயே
Refrain
அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா
1
அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை
வேர் அறுப்பாய் அருணாசலா
2
அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் உற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா
3
அகம் புகுந்து ஈர்த்து உன் அகக்குகை சிறையாய்
அமர்வித்தது என்கொல் அருணாசலா
4
ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா
5
இப்பழி தப்பு உனை ஏன் நினைப்பித்தாய்
இனி யார் விடுவார் அருணாசலா
6
ஈன்றிடும் அன்னையின் பெரிது அருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா
7
உனையே மாற்றி போடாது உளத்தின்மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா
8
ஊர் சுற்று உளம் விடாது உனை கண்டு அடங்கிட
உன் அழகை காட்டு அருணாசலா
9
எனை அழித்து இப்போது எனை கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா
10
ஏன் இந்த உறக்கம் எனை பிறர் இழுக்க
இது உனக்கு அழகோ அருணாசலா
11
ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில்
நீ இல்லையோ அருணாசலா
12
ஒருவனாம் உன்னை ஒளித்து எவர் வருவார்
உன் சூதே இது அருணாசலா
13
ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாசலா
14
ஔவை போல் எனக்கு உன் அருளை தந்து எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா
15
கண்ணுக்கு கண்ணாய் கண் இன்றி காண் உனை
காணுவது எவர் பார் அருணாசலா
16
காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா
17
கிரி உருவாகிய கிருபை கடலே
கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா
18
கீழ் மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
கீழ்மையை பாழ் செய் அருணாசலா
19
குற்றம் முற்று அறுத்து எனை குணமாய் பணித்து ஆள்
குரு உருவாய் ஒளிர் அருணாசலா
20
கூர் வாள் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
கூர்ந்து எனை சேர்ந்து அருள் அருணாசலா
21
கெஞ்சியும் வஞ்சியாய் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல் என்றே அருள் அருணாசலா
22
கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழை
கேடு செய்யாது அருள் அருணாசலா
23
கையினில் கனி உன் மெய் ரசம் கொண்டு
உவகை வெறி கொள அருள் அருணாசலா
24
கொடி இட்டு அடியனை கொல் உனக்கு கட்டிக்கொண்டு
எங்ஙன் வாழ்வேன் அருணாசலா
25
கோபம் இல் குணத்தோய் குறியாய் எனை கொள
குறை என் செய்தேன் அருணாசலா
26
கௌதமர் போற்றும் கருணை மா மலையே கடைக்கணித்து
ஆள்வாய் அருணாசலா
27
சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இனன் மன
சலசம் அலர்த்தியிடு அருணாசலா
28
சாப்பாடு உன்னை சார்ந்து உணவாய் யான்
சாந்தமாய் போவன் அருணாசலா
29
சித்தம் குளிர கதிர் அத்தம் வைத்து அமுத
வாயை திற உண் மதி அருணாசலா
30
சீரை அழித்து நிர்வாணமா செய்து அருள்
சீரை அளித்து அருள் அருணாசலா
31
சுகக்கடல் பொங்க சொல் உணர்வு அடங்க
சும்மா பொருந்திட அங்கு அருணாசலா
32
சூது செய்து என்னை சோதியாது இனி உன்
சோதி உரு காட்டு அருணாசலா
33
செப்படிவித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படி வித்தை காட்டு அருணாசலா
34
சேராய் எனின் மெய் நீராய் உருகி கண் நீரால்
தழிவேன் அருணாசலா
35
சையென தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாசலா
36
சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாசலா
37
சோம்பியாய் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என் கதி அருணாசலா
38
சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாசலா
39
ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாசலா
40
ஞானம் இல்லாது உன் இசையால் தளர்வு அற
ஞானம் தெரித்து அருள் அருணாசலா
41
ஞிமிறு போல் நீயும் அலர்ந்து இல்லை என்றே
நேர் நின்றனை என் அருணாசலா
42
தத்துவம் தெரியாது அத்தனை உற்று உய்
தத்துவம் இது என் அருணாசலா
43
தானே தானே தத்துவம் இதனை
தானே காட்டுவாய் அருணாசலா
44
திரும்பி அகந்தனை தினம் அகக்கண் காண
தெரியும் என்றனை என் அருணாசலா
45
தீரம் இல் அகத்தில் தேடி உன்தனை யான்
திரும்ப உற்றேன் அருள் அருணாசலா
46
துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
உப்பு இட வாயேன் அருணாசலா
47
தூய் மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
தோயவே அருள் என் அருணாசலா
48
தெய்வம் என்று உன்னை சாரவே என்னை
சேர ஒழித்தாய் அருணாசலா
49
தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்து
இயக்கம் தீர்த்து அருள் அருணாசலா
50
தைரியமோடு உன் மெய் அகம் நாட யான் தட்டழிந்தேன்
அருள் அருணாசலா
51
தொட்டு அருள் கை மெய் கட்டிடாய் எனில் யான்
நட்டம் ஆவேன் அருள் அருணாசலா
52
தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும் சந்தோடம்
ஒன்றிட அருள் அருணாசலா
53
நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
நகை இட்டு பார் நீ அருணாசலா
54
நாண் இலை நாடிட நாணு பொன்றி நீ
தாணுவா நின்றனை அருணாசலா
55
நின் எரி எரித்து எனை நீறு உக்கிடும் முன்
நின் அருள் மழை பொழி அருணாசலா
56
நீ நான் அற புலி நிதம் களி மயமா
நின்றிடு நிலை அருள் அருணாசலா
57
நுண் உரு உனை யான் விண் உரு நண்ணிட
எண்ணலை இறும் என்ற அருணாசலா
58
நூல் அறிவு அறியாப் பேதையன் என்றன்
மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா
59
நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனை புக நக்கனா
நின்றனை அருணாசலா
60
நேசம் இல் எனக்கு உன் ஆசையை காட்டி நீ
மோசம் செயாது அருள் அருணாசலா
61
நைந்து அழி கனியால் நலன் இலை அப்பதத்தில்
நாடி உட்கொள் நலம் அருணாசலா
62
நொந்திடாது உன்றனை தந்து எனை கொண்டிலை அந்தகன்
நீ எனக்கு அருணாசலா
63
நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா
64
பற்றி மால் விடம் கலை உற்றிடும் முனம் அருள்
பற்றிட அருள் புரி அருணாசலா
65
பார்த்து அருள் மால் அற பார்த்து இல்லை எனின் அருள்
பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா
66
பித்து விட்டு உனை சேர் பித்தனுக்கு இனைய அருள்
பித்தம் தெளி மருந்து அருணாசலா
67
பீதியில் உனை சார் பீதி இல் எனை சேர்
பீதி உன் தனக்கு ஏன் அருணாசலா
68
புல் அறிவு ஏது உரை நல் அறிவு ஏது உரை
புல்லிடவே அருள் அருணாசலா
69
பூ மணமா மனம் பூரண மணம் கொளப்
பூரண மணம் அருள் அருணாசலா
70
பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன்
பெருமை யார் அறிவார் அருணாசலா
71
பேய்த்தனம் விட விடா பேயாய் பிடித்து எனை
பேயனுக்கு இனை என் அருணாசலா
72
பைங்கொடியா நான் பற்று இன்றி வாடாமல்
பற்றுக்கோடு ஆய் கா அருணாசலா
73
பொடியான் மயக்கி என் போதத்தை பறித்து உன்
போதத்தை காட்டினை அருணாசலா
74
போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருள்
போராட்டம் காட்டு அருணாசலா
75
பௌதிகமா முடல் பற்று அற்று நானும் உன்
பவிசு கண்டு ஏற அருள் அருணாசலா
76
மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
மலைமருந்தாய் ஒளிர் அருணாசலா
77
மானம் கொண்டு எறுபவர் மானத்தை அழித்து
அபிமானம் இல்லாது ஒளிர் அருணாசலா
78
மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன் யான்
வஞ்சியாது அருள் எனை அருணாசலா
79
மீகாமன் இல்லாமல் மா காற்று அலை கலம்
ஆகாமல் காத்து அருள் அருணாசலா
80
முடி அடி காணா முடிவு இடுத்தனை நேர்
முடிவு இட கடன் இலை அருணாசலா
81
மூக்கிலன் முன் காட்டும் முகுரம் ஆகாது என
தூக்கி அணைந்து அருள் அருணாசலா
82
மெய் அகத்தின் மன மென் மலர் அணையினை
மெய் கலந்திட அருள் அருணாசலா
83
மேன்மேல் மூழ்ந்திடும் மெல்லியர் சோர்ந்து நீ
மேன்மை உற்றனை என் அருணாசலா
84
மைமய நீத்து அருள் மையினுள் உனது
உண்மை வசம் ஆக்கினை அருணாசலா
85
மொட்டையடித்து எனை வெட்டவெளியில் நீ
நட்டம் ஆடினை என் அருணாசலா
86
மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்து என்
மோகம் தீராய் என் அருணாசலா
87
மௌனியாய் கல் போன் மலராது இருந்தான்
மௌனம் இது ஆமோ அருணாசலா
88
யவன் என் வாயின் மண்ணினை அட்டி
என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா
89
யாரும் அறியாது என் மதியினை மருட்டி
எவர் கொளை கொண்டது அருணாசலா
90
ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது எனை
ரமித்திட செய வா அருணாசலா
91
ராப்பகல் இல்லா வெறுவெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணாசலா
92
லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனை
பட்சித்தாய் பிராணனை எடு அருணாசலா
93
லாபம் நீ இகபர லாபம் இல் எனை உற்று
லாபம் என் உற்றனை அருணாசலா
94
வரும்படி சொலிலை வந்து என் படியளவு
அருந்திட என் நல்விதி அருணாசலா
95
வா என்று அகம் புக்கு உன் வாழ்வு அருள் அன்றே என்
வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா
96
விட்டிடில் கட்டம் ஆம் விட்டிடாது உனை உயிர்
விட்டிட அருள் புரி அருணாசலா
97
வீடு விட்டு ஆர்த்து உள வீடு புக்கு பைய உன்
வீடு காட்டினை அருள் அருணாசலா
98
வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனை கா அருணாசலா
99
வேதாந்தத்தே வேறு அற விளங்கும்
வேத பொருள் அருள் அருணாசலா
100
வைதலை வாழ்த்தா வைத்து அருள் குடியா
வைத்து எனை விடாது அருள் அருணாசலா
101
அம்புவில் ஆலிபோல் அன்பு உரு உனில் எனை
அன்பா கரைத்து அருள் அருணாசலா
102
அருணை என்று எண்ணா யான் அருள் கண்ணி பட்டேன் உன்
அருள் வலை தப்புமோ அருணாசலா
103
சிந்தித்து அருள் பட சிலந்திபோல் கட்டி
சிறையிட்டு உண்டனை அருணாசலா
104
அன்போடு உன்னும் அங்கே என்பர் தம் அன்பருக்கு
அன்பனா ஆயிட அருள் அருணாசலா
105
என்போதும் தீனரை இன்புற காத்து நீ
என்னாளும் வாழ்ந்து அருள் அருணாசலா
106
என்பு உருகு அன்பர் தம் இன் சொல் கொள் செவியும் என்
புன்மொழி கொள அருள் அருணாசலா
107
பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலா
பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா
108
மாலை அளித்து அருணசல ரமண என்
மாலை அணிந்து அருள் அருணாசலா