Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Appaḷappāṭṭu
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
Pallavi
அப்பளம் இட்டு பாரு அத்தை
சாப்பிட்டு உன் நசையை தீரு
Anupallavi
இப்புவி தன்னில் ஏங்கி திரியாமல்
சற்போத சுக சற்குரு ஆனவர்
செப்பாது சொன்ன தத்துவம் ஆகிற ஒப்பு
உயர்வு இல்லா ஓர் மொழியின்படி
1
தான் அல்லா ஐங்கோச க்ஷேத்ரம் இதில் வளர்
தான் என்னும் மானம் ஆம் தான்ய உளுந்தை
நான் ஆர் என் ஞான விசாரத் திரிகையில் நான்
அல்ல என்றே உடைத்து பொடித்து
2
சத்சங்கம் ஆகும் பிரண்டை ரசத்தொடு
சமதமம் ஆகின்ற ஜீரக மிளகுடன்
உபரதி ஆகும் மன உப்போடு உள் அகல்
வாசனை ஆம் பெருங்காயமும் சேர்த்து
3
கல் நெஞ்சு இளகும் என்று கலங்கா
உண்முக உலக்கையால் ஓயாது இடித்து
சாந்தம் ஆம் குழவியால் சமமான பலகையில்
சங்கம் சலிப்பு அற சந்தோஷம் ஆகவே
4
மோன முத்திரை ஆகும் முடிவு இல்லா பாத்ரத்தில்
ஞான ஆக்னியால் காயு நல் பிரம்ம மெய் அதின்
நன்று ஆகவே நானும் பொரித்து
தானே தானாக புஜிக்க தன்மய