Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Aruṇācala Aṣṭakam
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
1
அறிவு அறு கிரி என அமர்தரும் அம்மா அதிசயம்
இதன் செயல் அறிவரிது ஆர்க்கும்
அறிவு சிறு வயது அது முதல் அருணாசலம்
மிக பெரிது என அறிவினில் லங்க அறிகிலன்
அதன் பொருள் அது திருவண்ணாமலை
என ஒருவரால் அறிவுற பெற்றும்
அறிவினை மருள் உறுத்து அருகினில் ஈர்க்க அருகு
உறும் அமயம் இது அசலமா கண்டேன்
2
கண்டவன் எவன் என கருத்தினுள் நாட
கண்டவன் இன்றிட நின்றது கண்டேன்
கண்டனன் என்றிட கருத்து எழவில்லை
கண்டிலன் என்றிட கருத்து எழுமாறு என்
விண்டு இது விளக்கிட விறல் உறுவோன் ஆர்
விண்டிலை பண்டு நீ விளக்கே என்றால்
விண்டிடாது உன் நிலை விளக்கிட என்றே விண்
தலம் அசலமா விளங்கிட நின்றாய்
3
நின்னை யான் உரு என எண்ணியே நண்ண
நிலமிசை மலை எனும் நிலையினை நீதான்
உன் உரு அரு என உன்னிடின் விண் நோக்கு
உற உலகு அலைதரும் ஒருவனை ஒக்கும்
உன் உரு உனல் அற உன்னிட முந்நீர்
உறு சருக்கரை உரு என உரு ஓயும்
என்னை யான் அறிவுற என் உரு வேறு ஏது
இருந்தனை அருண வான் கிரி என இருந்தோய்
4
இருந்து ஒளிர் உனை விடுத்து அடுத்திட றெய்வம்
இருட்டினை விளக்கு எடுத்து அடுத்திடல் ஏகாண்
இருந்து ஒளிர் உனை அறிவுறுத்திடற்கு என்றே
இருந்தனை மதந்தொறும் விதவித உருவாய்
இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில் அன்னோர்
இரவியின் அறிவு அறு குருடரே ஆவார்
இருந்து ஒளிர் இரண்டு அற எனது உளத்து ஒன்றி
இணையது அருணமா மலை எனும் மணியே
5
மணிகளிற் சரடென உயிர்தொறு நானா
மதந்தொறும் ஒருவனா மருவினை நீதான்
மணி சுடைந்தென மனம் மனம் எனும் கல்லின்
மறு அற கடைய நின் அருள் ஒளி மேவும்
மணி ஒளி என பிறிது ஒரு பொருள் பற்று
மருவுறல் இலை நிழற் படி தகட்டின் விண்
மணி ஒளி பட நிழல் பதியுமோ உன்னின்
மறு பொருள் அருண நல் ஒளி மலை உண்டோ
6
உண்டு ஒரு பொருள் அறிவு ஒளி உளமே நீ
உளது உனில் அலது இலா அதிசய சத்தி
நின்று அணு நிழல் நிரை நினைவு அறிவோடே
நிகழ்வினை சுழலில் அந் நினைவு ஒளி ஆடி
கண்டன நிழற்சக விசித்திரம் உள்ளும்
கண் முதல் பொறிவழி புறத்தும் ஒர் சில்லால்
நின்றிடு நிழல் பட நிகர் அருள் குன்றே
நின்றிட சென்றிட நினைவிட இன்றே
7
இன்று அகம் எனும் நினைவு எனில் பிற ஒன்றும்
இன்று அது வரை பிற நினைவு எழில் ஆர்க்கு எற்கு ஒன்று
அகம் உதிதலம் எது என உள் ஆழ்ந்து
உளத்து அவிசு உறின் ஒரு குடை நிழற் கோவே
இன்று அகம் புறம் இரு வினை இறல் சன்மம்
இன்பு துன்பு இருள் ஒளி எனும் கனவு இதயம் அன்று
அசும் அசலமா நடமிடும் அருண
மலை எனும் எலை அறு அருள் ஒளி கடலே
8
கடல் எழும் எழிலியால் பொழிதரு நீர்தான் கடல்
நிலை அடைவரை தடைசெயின் இல்லாது
உடல் உயிர் உனில் எழும் உனை உறுவரையின்
உறு பல வழிகளின் உழலினும் நில்லாது
இட வெளி அலையினும் நிலை இலை புள்ளுக்கு
இட நிலம் அலது இலை வருவழி செல்ல
கடன் உயிர் வருவழி சென்றிட இன்ப
கடல் உனை மருவிடும் அருண பூதரனே