Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Aruṇācala Navamaṇimālai
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
1
அசலனே ஆயினும் அச்சவை தன்னில்
அசலையாம் அம்மை எதிர் ஆடும் அசல
உருவில் அச்சத்தி ஒடுங்கிட ஓங்கும் அருணாசலம்
என்று அறி
2
சத்திய சிற்சுகம் அன்றி பரவுயிர் சார அயிக்க
மார்த்தவத் தத்வமசி அருணப்பொருள் ஆம் அசலத்து
அர்த்தம் கனம் அது ஆகும் செவ்வாடக வார் ஒளியா
முத்தி நினைக்க அருள் அருணாசலம் முன்னிடவே
3
அருணாசலத்தில் உறு கருணாகர பரமன்
அருணாரவிந்த பதமே
பொருள் நாடு சுற்றமொடு வருணாதி பற்றி உள மருள்
நாடல் அற்று நிதமும் தெருள்
நாளத்தினின் அல் அருள் நாடி நிற்கும் அவர்
இருள் நாசம் உற்று புவிமேல் தருண
அருணக்கதிரின் அருள் நாளும் உற்று சுக
வருண ஆலயத்தில் இழிவார்
4
அண்ணாமலை உனை எண்ணான் என எனை அண்ணார்
தேங்கிட எண்ணாதே
மண்ணாம் மலவுடல் என்னா அகம் என
மண்ணா மாய்ந்திட ஒண்ணாதே
தண் ஆர் அளி செறி கண் ஆடு ஒரு கிறி பண்ணாது
என் இரு கண்ணாளா
பெண் ஆண் அலி உரு நண்ணா ஒளியுரு அண்ணால்
என் அகம் நண்ணாயே
5
சீரான சோணகிரி சிறக்க வாழும்
சிற்சொருபன் ஆம் இறையே சிறியனேன் தன்
பேரான பிழையெல்லாம் பொறுத்து காத்து
பின்னும் இவன் பாழிதனில் வீழா வண்ணம்
காரான கருணைவிழி கொடுப்பாய் இன்றேல்
கடும்பவத்தின் நின்று கரையேற மாட்டேன்
நேரானது உண்டோ தாய் சிசுவுக்கு ஆற்று
நிகரற்ற நலனுக்கு நிகழ்த்துவாயே
6
காமாரி என்று நீ அன்பரால் என்றுமே
கதித்திடப்படுகின்றாய்
ஆமாமெய் உனக்கு இது ஆமா என்று ஐயுறும்
அருணாசலேச்சுரனே
ஆமாயின் எங்கனம் தீரனே சூரனே
ஆயினும் வல்லனங்கன்
காமாரி ஆகும் முன் கால் அரண் சரண்புகு
கருத்தினுள் புகவலனே
7
அண்ணாமலையாய் அடியேனை
ஆண்ட அன்றே ஆவி உடல்
கொண்டாய் எனக்கு ஓர் குறை உண்டோ
குறையும் குணமும் நீயல்லால்
எண்ணேன் இவற்றை என்னுயிரே எண்ணம்
எதுவோ அது செய்வாய்
கண்ணே உன்றன் கழலிணையில்
காதல் பெருக்கே தருவாயே
8
புவிக்குள் பொங்கிடும் புவிச்சொல் புங்கவன்
புரிக்குள் புண்ணியன் சுழிக்குள் சுந்தரன்
தவற்கு சுந்தரம் சதிக்கு உற்பன்னன் அந்தலத்தில்
புன்புலன் சழக்கில் துன்புறும்
தவிக்கு துஞ்சிடும் படிக்கு தன்னுளம்
தழைக்க தன்பதம் எனக்கு தந்தனன்
சிவக்க சின்மயம் செழிக்க தன்மயம்
செகத்தில் துன்னு செம்பொருப்பு செம்மலே
9
அம்மையும் அப்பனும் ஆய் எனை பூமியில் ஆக்கி அளித்து
இம்மகி மாயையென் ஆழ்கடல் வீழ்ந்து யான் ஆழ்ந்திடுமுன்
என்மனம் அன்னியி இழுத்து உன் பதத்தில் இருத்தினையால் சின்மயனாம்
அருணாசல நின் அருள் சித்ரம் என்னே