Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Aruṇācala Padikam
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
1
கருணையால் என்னை ஆண்ட நீ எனக்கு உன்
காட்சி தந்து அருளிலை என்றால்
இருள் நலி உலகில் ஏங்கியே பதைத்து இவ்
உடல் விடில் என் கதி என்னாம்
அருணனை காணாது அலருமோ கமலம்
அருணனுக்கு அருணனாய் மன்னி அருள்
நனி சுரந்து அங்கு அருவியாய் பெருகும்
அருணமா மலை எனும் அன்பே
2
அன்பு உரு அருணாசல அழல் மெழுகாய்
அகத்து உனை நினைந்து நைந்து உருகும்
அன்பிலி எனக்கு உன் அன்பினை அருளாது
ஆண்டு எனை அழித்திடல் அழகோ
அன்பினில் விளையும் இன்பமே அன்பர் அகத்தினில்
ஊறும் ஆரமுதே
என் புகல் இடம் நின் இட்டம் என் இட்டம் இன்பது
எற்கு என் உயிர் இறையே
3
இறை உனை நினையும் எண்ணமே நண்ணா
எனை உனது அருள் கயிற்றால் ஈர்த்து
இறை உயிர் இன்றி கொன்றிட நின்றாய்
என் குறை இயற்றினன் ஏழை
இறை இனி குறை என் குற்றுயிர் ஆக்கி எனை
வதைத்திடல் எதற்கு இங்ஙன்
நிறைவனாம் அருணாசல எணம் முடித்தே
ஏகனா வாழி நீ ஊழி
4
ஊழியில் வாழும் மாக்களில் என்பால்
ஊதியம் யாது நீ பெற்றாய்
பாழினில் வீழாது ஏழையை காத்து உன் பதத்தினில்
இருத்திவைத்தனையே
ஆழியாம் கருணை அண்ணலே எண்ண
அகம் மிக நாண நண்ணிடும் மால்
வாழி நீ அருணாசல உனை வழுத்தி
வாழ்த்திட தாழ்த்தும் என் தலையே
5
தலைவ நீ என்னை களவினில் கொணர்ந்து உன்
தாளில் இந்நாள் வரை வைத்தாய்
தலைவரின் தன்மை என்ன என் பார்க்கு
தலைகுனி சிலையென வைத்தாய்
தலைவ நான் வலைமான் தனை நிகராது என்று
அளர்வினுக்கு அழிவு நாடிடுவாய்
தலைவனாம் அருணாசல உளம் ஏதோ
தமியனார் தனை உணர்தற்கே
6
தற்பர நாளும் தாளினில் தங்கி
தண்டு அலர் மண்டுகம் ஆனேன் சிற்பத
நல் தேன் உண் மலர் அளியா
செய்திடில் உய்தி உண்டு உன்றன்
நல் பதப் போதின் நான் உயிர் விட்டால் நட்ட
தூண் ஆகும் உன் பழியே
வெற்பு உரு அருண விரி கதிர் ஒளியே
விண்ணினும் நுண் அருள் வெளியே
7
வெளி வளி தீ நீர் மண் பல உயிரா
விரிவுறு பூத பௌதிகங்கள்
வெளி ஒளி உன்னை அன்றி இன்று என்னின்
வேறு யான் ஆர் உளன் விமலா
வெளியதாய் உளத்து வேறற விளங்கின்
வேறென வெளிவருவேன் ஆர்
வெளிவராய் அருணாசல அவன் தலையில்
விரி மலர் பதத்தினை வைத்தே
8
வைத்தனை வாளா வையகத்து உய்யும்
வழி அறி மதி அழித்து இங்ஙன்
வைத்திடில் ஆர்க்கும் இன்பு இலை துன்பே
வாழ்வு இதில் சாவதே மாண்பு ஆம்
பைத்தியம் பற்றி பயன் அறும் எனக்கு உன்
பதம் உறும் அரு மருந்து அருள்வாய்
பைத்திய மருந்தாய் பார் ஒளிர் அருண
பருப்பத உரு பெறு பரனே
9
பரம நின் பாதம் பற்று அற பற்றும்
பரவு அறிவு அறியரில் பரமன்
பரம் உனக்கு என என் பணி அற பணியாய்
பரித்திடும் உனக்கு எது பாரம்
பரம நிற் பிரிந்து இவ் உலகினை தலையிற்
பற்றி யான் பெற்றது போதும்
பரமனாம் அருணாசல எனை இனி உன்
பதத்தினின்று ஒதுக்குறப் பாரேல்
10
பார்த்தனன் புதுமை உயிர் வலி காந்த
பருவதம் ஒருதரம் இதனை
ஓர்த்திடும் உயிரின் சேட்டையை ஒடுக்கி ஒரு
தனது அபிமுகம் ஆக ஈர்த்து
அதைத் தன்போல் அசலமாச் செய்து
அவ் இன் உயிர் பலிகொளும் இஃது என்
ஓர்த்து உய்மின் உயிர்காள் உளமதில் ஒளிர் இவ்
உயிர்க்கொலி அருணமா கிரியே
11
கிரி இது பரமாக் கருதிய என்போல்
கெட்டவர் எத்தனை கொல்லோ விரி
துயரால் இப் பிழைப்பினில் விழைவு
விட்டு உடல் விட்டிட விரகு
கருதியே திரிவீர் கருத்தினுள் ஒருகால்
கருதிட கொலாமலே கொல்லும்
அரு மருந்து ஒன்று உண்டு அவனியில் அது தான்
அருணமா திரம் என அறிவீர்