Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Aruṇācala Pañcaratnam
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
1
அருள் நிறைவான அமுதக் கடலே
விரி கதிரால் யாவும் விழுங்கும் அருண
கிரி பரமான்மாவே கிளர் உளப் பூ நன்றாய்
விரி பரிதியாக விளங்கு
2
சித்திரமாம் இஃது எல்லாம் செம்மலையே நின்பாலே
உத்திதமாய் நின்றே ஒடுங்கிடுமால் நித்தியமும்
நான் என்று இதயம் நடித்திடுவையால் உன் பேர்
தான் இதயம் என்றிடுவர் தாம்
3
அகமுகமாய் ஆர்ந்த அமலமதி தன்னால்
அகம் இது தான் எங்கு எழும் என்று ஆய்ந்தே அகவுருவை
நன்கு அறிந்து முந்நீர் நதிபோலும் ஓயுமே
உன்கண் அருணாசலனே ஓர்
4
வெளி விடயம் விட்டு விளங்கும் அருணேசா
வளி அடக்க நிற்கும் மனத்தால் உளமதனில்
உன்னை தியானித்து யோகி ஒளி காணும் உன்னில்
உயர்வு உறும் ஈது என்
5
உன்னிடத்தில் ஒப்புவித்த உள்ளத்தால் எப்பொழுதும்
உன்னை கண்டு எல்லாமும் உன் உருவாய் அன்னியம் இல்
அன்பு செயும் அன்னோன் அருணாசலா வெல்கும்
இன்பு உருவாய் உன்னில் ஆழ்ந்தே