Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Ātma Vidyā
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
Pallavi
ஐயே அதிசுலபம் ஆன்மவித்தை
ஐயே அதிசுலபம்
Anupallavi
நொய்யார் தமக்கும் உளங்கை ஆமலகக் கனி
பொய் ஆய் ஒழிய மிகு மெய் ஆய் உளது ஆன்மா
1
மெய்யாய் நிரந்தரம் தான் ஐயாது இருந்திடவும்
பொய் ஆம் உடம்பு உலகம் மெய் ஆம் உளத்து எழும் பொய்மை
ஆர் நினைவு அணுவும் எய்யாது ஒடுக்கிடவே
மெய் ஆர் இதய வெளி வெய்யோன் சுய ஆன்மா
விளங்குமே இருள் அடங்குமே இடர் ஒடுங்குமே
இன்பம் பொங்குமே
2
ஊன் உரு உடல் இதுவே நான் ஆம் எனும் நினைவே
நானா நினைவுகள் சேர் ஓர் நார் எனும் அதனால் நான்
ஆர் இடம் எது என்று உட் போனால் நினைவுகள் போய்
நானான் என குகையுள் தானாய் திகழும் ஆன்ம
ஞானமே இதுவே மோனமே ஏக வானமே
இன்ப தானமே
3
தன்னை அறிகல் இன்றி பின்னை எது அறிகிலென்
றன்னை அறிந்திடில் பின் என்னே உளது அறிய
பின்ன உயிர்களில் அபின்ன விளக்கு எனும் அத்
தன்னை தனில் உணர பின்னும் தன் உள் ஆன்ம
ப்ரகாசமே அருள் விலாசமே அக விகாசமே
இன்ப விகாசமே
4
கன்ம ஆதி கட்டு அவிழ சென்ம ஆதி நட்டம் எழ
எம் மார்க்கம் அதனினும் இம் மார்க்கம் மிக்கு எளிது சொல்
மானத தனுவின் கன்ம ஆதி சிறிது இன்றி
சும்மா அமர்ந்திருக்க அம்மா அகத்தில் ஆன்ம
சோதியே நிதானுபூதியே இராது பீதியே
இன்ப அம்போதியே
5
விண் ஆதிய விளக்கும் கண் ஆதிய பொறிக்கும்
கண் ஆம் மனக்கணுக்கும் கண்ணாய் மன விணுக்கும்
விண்ணாய் ஒரு பொருள் வேறு என்னா நிற்கும்படி
உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை பொருள் ஆன்மா
காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே
இன்பு தோணுமே