Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Uḷḷadu Nāṟpadu Anubandham
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
Maṅgalam
எதன் கண் ணே நிலை ஆகி இருந்திடும் இவ் உலகம் எலாம் எதன் அது எல்லாம்
எதன் இன்று இவ் அனைத்து உலகு உம் எழுமோ மற்று இவை யாவு உம் எதன் பொருட்டு ஆம்
எதனால் இவ் வையம் எலாம் எழுந்திடும் இவ் எல்லாம் உம் எதுஏ ஆகும்
அது தானே உள பொருள் ஆஞ் சத்தியம் ஆம் அச் சொருபம் அகம் இல் வைப்பாம்
1
சத் இணக்கத்தினாற் சார்பு அகலுஞ் சார்பு அகலச்
சித்தத்தின் சார்பு சிதையுமே சித்தச் சார்பு
அற்றார் அலைவு இலது இல் அற்றார் சீவன் முத்தி
பெற்றார் அவர் இணக்கம் பேண்
2
சாது உறவு சார உளஞ் சார் தெளிவு விசாரத்தால்
ஏது பரம் ஆம் பதம் இங்கு எய்துமோ ஓதும் அது
போதகனால் நூற் பொருளாற் புண்ணியத்தாற்
சாதகத்தாற் சார ஒணாது ஆல்
3
சாதுக்கள் ஆவார் சகவாச நண்ணினால்
ஏதுக் காம் இந் நியம எல்லாம் உம் ஏதக்க
தண் டென்றன் மாருதந் தான் வீசவே விசிறி
கொண்டு என்ன காரிய நீ கூறு
4
தாபந் தண் சந்திரனாற் றைனிய நற் கற்பகத்தாற்
பாபந் தான் கங்கையாற் பாறுமே தாப முதல்
இ மூன்று ஏகும் இணை (ய்)இல்லா சாதுக்கள்
தம் மா தரிசனத்தாற் றான்
5
கம் மயமாந் தீர்த்தங்கள் கன் மண்ணாந் தெய்வங்கள்
அம் மகத்துக்கட்கு இணைஏ ஆகா ஆம் அம்ம அவை
எண் இலா நாள் ஆற் றூய்மை ஏய்விப்ப சாதுக்கள்
கண்ணின் ஆற் கண்டு இடஏ காண்
6
தேவன் ஆரார் மனந் தேருவன் என் மனம் ஆவி ஆம்
என்னால் அறிபடுமே தேவன் ஆகுமே
ஆகையால் ஆர்க்குஞ் சுருதியால்
ஏகன் ஆந் தேவனே என்று
7
ஒளி (ய்)உனக்கு எது பகலினன் எனக்(கு) (க்)இருள் விளக்(கு)
ஒளி உணர் ஒளி எது கண் அது உணர் ஒளி எது
(வ்)ஒளி மதி மதி உணர் ஒளி எது (வ்)அது (வ்)அகம்
ஒளி தனில் ஒளியு(ம்) நீ என குரு (வ்)அகம் அதஏ
8
இதயம் ஆம் குகையின் நாப்பண் ஏகம் ஆம் பிரம்மம் மாத்ரம்
அது அகம் அகமா நேரே அவிர்ந்திடும் ஆன்மா ஆக
இதயமே சார்வாய் தன்னை எண்ணி ஆம் அலது வாயு
அதனுடன் ஆழ் மனத்தால் ஆன்மாவின் நிட்டன் ஆவாய்
9
அக கமலத்துஏ அமல அசல
அகம் உருவம் ஆகும் அறிவு ஏது அகத்தை
அகற்றி இடுவது ஆல் அவ் அகம் ஆம் அறிவுஏ
அக வீடு அளிப்பது அறி
10
தேகங் கட நிகர் சடம் இதற் க அகம் எனுந் திகழ்வு இலது ஆல்
நாகஞ் சடலம் இறு யிலின் இனின் இனம் உறு நமது இயலாற்
கோகங் கரன் எவன் உளன் உணர்ந் து உளர் உள குகை உள்ளே
சோகம் புரணவ ருணகிரி சிவ விபு சுயம் ஒளிர்வான்
11
பிறந்தது எவன் றன் (தன்) பிரம்ம மூலத்தே
பிறந்தது எவ(ண்) நான் என்று பேணி பிறந்தான்
அவனே பிறந்தான் அவன் னிதமு(ம்) னீசன்
அவன் அவன் அவன் றினமு(ம்) நாடு
12
இழிவு உடல் யான் என்னல் இகந்திடுக என்றும்
ஒழிவு இல் இன்பு ஆம் தன்னை ஓர்க அழியும்
உடல் ஓம்பலோடு தனை ஓர உனல் யாறு
கடக்க கரா புணை கொண்டு அற்று
13
தானந் தவம் வேள்வி தன்மம் யோகம் பத்தி
வானம் பொருள் சாந்தி வாய்மை அருள் மோன நிலை
சாகாமற் சாவு அறிவு சார் துறவு வீடு இன்பந்
தேக ஆன்ம பாவம் அற நேர்
14
வினை யும் விபத்தி வியோகம் அஞ் ஞானம்
இனையவை யார்க்கு என்று ஆய்ந்து இடலே வினை பத்தி
யோகம் உணர்வு ஆய்ந்திட நான் இன்றி அவை என்றும் இறா
னாக அமனலே உண்மை ஆம்
15
சத்தியினால் றாம் இயங்கும் தன்மை உணராது அகில
சித்திக(ள்) நாஞ் சேர்வம் என சேட்டிக்கும் பித்தர் கூத்து
என்னை எழுப்பிவிடின் எம்மட்டு இத் தெவ்வர் என
சொன்ன முடவன் கதையின் சோடு
16
சித்தத்தின் சாந்தி அதுஏ சித்தம் ஆம் முத்தி எனிற்
சித்தத்தின் செய்கை இன்றி சித்தியா சித்திகளிற் சித்தஞ்
சேர்வார் எங்ஙன் சித்த கலக்கந் தீர்
முத்தி சுகந் தோய்வார் மொழி
17
பூ பரந் தாங்கஇ றை போலி யுயிர் தாங்கல் அது
கோபுரந் தாங்கி யுருக் கோரணி காண் மா பரங் கொள்
வண்டி செலுவான் சுமையை வண்டி வையாது தலை
கொண்டு நலி கொண்டது எவர் கோது
18
இரு முலை நடு மார் படி வயி நிதன் மேல்
இரு முப் பொருள் உள நிறம் பல வி வற்றுள்
ஒரு பொரு ளாம்பல் அரும்பு என வுள்ளே
யிரு விரல் வலத்தே யிருப்பது இதயம்
19
அதன் முக(ம்) இகல் உளது அகம் உள சிறு துளை
அதனில் ஆசா ஆதி ஒடு அமர்ந்து உளது இருந் தமம்
அதனை ஆசிரித்து உள அகில மா நாடிகள்
அது வளி மனது ஒளி அவற்றினது இருப்பிடம்
20
இதய மலர்க் குகை அகமா(ய்) இலகு இறைஏ
குகேசன் என வே ஏத்தப் பட்டோன்
இதம் அனைய குகேசன் யான் எனும் சோகம்
பாவனை தான் நின் உடம்பிற்(ல்)
திதம் உறு நான் எனும் திடம் போல் அப்பியாச
பலத்தால் அத் தேவாய் நிற்கிற்(ல்)
சிதையும் உடல் நான் எனும் அவித்தை செங்கதிரோன்
எதிர் இருள் போற்(ல்) சிதையும் அன்றுஏ
21
எப் பெருங் கண்ணாடியின்கண் இவை யாவும்
நிழலாக வெதிரே தோன்றும்
இப் பிரபஞ்சத்து உயிர்கட்கு எல்லாம் அவ்
விதயம் என விசைப்பது ஏதோ
செப்புதி என்றே வினவும் மிராமனுக்கு
வசிட்ட முனி செப்புகின்றான்
இப் புவியின் உயிர்க்கு எல்லாம் மிதயம் இரு
விதமாகும் எண்ணுங் காலே
22
கொளத் தக்க து உம் தள்ளத் தக்கது உம் ஆம்
இவ் விரண்டின் கூறு கேளாய்
அளத்தற்கு ஆம் உடம்பின் மார் பகத்து ஒரிடத்
திதயம் என வமைந்த வங்கம்
தளத் தக்க து ஓர் அறிவு ஆகார விதயம்
கொள்ளத் தக்க து ஆம் என்
று உளத்து கொள் ள ஃது உள்ளும் புறமும் உள
து உள் வெளியில் உள்ளது அன்று உம்
23
அது வே முக்கிய விதய(ம்) அதன் கண் இவ் அகிலம் உமே அமர்ந்து
இருக்கும்
அது ஆடி எ பொருட்கு உம் எல்லா செல்வங்கட்கு உம் அது வே
இல்லம்
அதன் உலே அனைத்து உயிர்க்கு உம் அறிவு அது வே
இதயம் என அறையல் ஆகும்
சிதையா நிற்கும் கல் போல் சட உடலின்
அவயவத்து ஓர் சிறு கூறு அன்றுல்
24
ஆதலினால் அறிவு மயம் ஆம் சுத்த
இதயத்தே அகத்தை சேர்க்கும்
சாதனையால் வாதனைகள் ஒடு வாயு
ஒடுக்கமுமே சாரும் தானே
25
அகில உபாதி அகன்ற அறிவே அகம் அச்
சிவம் என்று அனிசம் அகத்தே
அகலா தியானம் அதன் உலகத்தின் அகில
ஆசத்தி அகற்று
26
வித வித மா நிலைகள் எலாம் விசாரஞ் செய்து
மிச்சை அறு பரமபதம் யாது ஒன்று உண்டுஓ
வ அதனைஏ திடமாக அகத்தாற் பற்றி
ய அனவரதம் உலகில் விளையாடு வீரா
வெ எது சகல விதமான தோற்றங்கட்கு உம்
எதார்த்தம் அது ஆய் ய அகத்து உளதுஓ வ அதைய நிந்தாய்
அதன் உல பார்வையினைய அகலாது என்றும்
ஆசை போல் உலகில் விளையாடு வீரா
27
போலி மன வெழுச்சி மகிழ்வு உற்றோ னாகி
போலி மனப் பதைப்பு வெறுப் புற்றோ னாகி
போலி முயல் வாந் தொடக்க முற்றோ னாகி
புரை யிலனா யுலகில் விளை யாடு வீரா
மால் எனும் பல் கட்டு விடு பட்டோ னாகி
மன்னு சம னாகியெல்லா நிலைமைக் கண்ணும்
வேலைகள் வேடத் தியைவ வெளியிற் செய்து
வேண்டியவா றுலகில் விளை யாடு வீரா
28
அறிவு உண்மை நிட்டன் ஆம் ஆன்ம வித்து ஆவான்
அறிவாற் புலன் செற்று உனுர் தான் அறிவு அங்கி
யாவன் அறிவு ஆம் குலிசத்தான் கால காலன் அவன்
சாவினை மாய் வீரன் என சாற்று
29
தத்துவங் கண்ட வற்குத் தாமே வளரும் ஒளி
புத்தி வலு வும் வசந்தம் போந்ததுமே யித்தரையிற்
றுரு வழ காதி சகல குணங்களுஞ்
சேர விளங்கல் எனத் தேர்
30
சேய்மை உளஞ் சென்று கதை கேட்பார் போல் வாதனைகள்
தேய் மனஞ் செய் துஞ் செய்யா தே யவைகள்
தோய் மனஞ் தின்றேனுஞ் செய்ததே யிங் கசைவற்
குன்று ஏறி வீழ்வார் குழி
31
வண்டி துயில்வானுக்கு அவ் வண்டி செலல் நிற்றல் ஒடு
வண்டி தனி உற்றிடுதல் மானுமே வண்டி ஆம்
ஊன உடல் உள்ளே உறங்கும் மெய் ஞானிக்கு உம்
ஆன தொழில் நிட்டை உறக்கம்
32
நனவு கனவு துயி(ல்) னுடுவார்க் கப்பால்
நனவு துயிற் றுரிய நாமத் தெனும் அத்
துரியம் அதே யுளதாற் றோன்றும் மூன் றின்று
றுரிய வதீதந் துணி
33
சஞ்சித வா காமியங்கள் சாரா வா ஞானிக்கு ஊழ்
விஞ்சும் எனல் வேற்று கேள் விக்கு யிளம் புஞ் சொல் லாம்
பர்த்தா போய் கைம்மை உறு பத்தினி யெஞ்
கர்த்தா போ மூ வினையும் காண்
34
மக்கள் மனைவி முதல் மற்றவர்கள் அற்ப மதி மக்கட்கு
ஒரு குடும்பம் ஆன வே மிக்க கல்வி
உள்ளவர் தம் உள்ளத்தே ஒன்று அல பல் நூல் குடும்பம்
உள்ளது யோகத்து அடையாய் ஓர்
35
எழுத்து அறிந்த தாம் பிறந்தது எங்கே யென் றெண்ணி
யெழுத்தைத் தொலைக்க வெணுதோ ரெழுத்து அறிந்தென்
சத்தங் கொ ளெந்திரத்தின் சால்பு உற்றுர் சோணகிரி
வித்தகனே வேறுர் விளம்பு
36
கற்று அடங்காரிற் கல்லாதார் ஏ உய்ந்தார்
பற்றும் மத பேயின் பால் உய்ந்தார் சுற்று பல
சிந்தை வாய் நோய் உய்ந்தார் சீர் தேடி ஓடல் உய்ந்தார் உய்ந்தது
ஒன்று அன்று என்று உணர்
37
எல்லா வ்- உலகு -உம் துரும்பு ஆயினும் மறைகள்
எல்லாமே கைக்குள் இருந்தாலும் பொல்லா
புகழ்ச்சி ஆம் வேசி வசம் புக்கார் ர்- அடிமை
ய்- அகல விடல் அம்மா வ்- அரிது
38
தான் அன்றி யார் உண்டு தன்னை யார் என் சொலின் என்று
உன் தன்னை வாழ்த்துகினும் தாழ்த்துகினும் தான் என்ன
தான் பிறர் என்று ஓராமல் தன் நிலையில் பேராமல்
றுன் என்று நின்றிடவே தான்
39
அத்துவிதம் என்று அகக்து உறுக ஓர் போதும்
அத்துவிதஞ் செய்கையில் ஆற்றற்க புத்திரனே
அத்துவிதம் மூவுலகத்து ஆகும் குருவினோடு
அத்துவிதம் ஆகாது அறி
40
அகில வே(தாந்த) சித்(தாந்த) சா ரத்தை
யகம் உண்மை யாக வறைவ ன னகம் ஞ்செத் து
அகம் அது வாகில் லறிவு உரு வாம் அவ்
வகம் அதஏ மிச்ச ம் மறி