Contents
Aruṇaramaṇālaya
The works of Ramaṇa Maharṣi
Realm
Read
Kept
Search
Settings
←
Leave
Upadeśa Undiyār
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Verse by verse
Continuous
1
கன்மம் பயன் றரல் கர்த்தனது ஆணையாற்
கன்மங் கடவுளோ உந்தீபற
கன்மஞ் சடம் அதால் உந்தீபற
2
வினையின் விளைவு விளிவு உற்று வித்து ஆய்
வினை கடல் வீழ்த்திடும் உந்தீபற
வீடு தரல் இலை உந்தீபற
3
கருத்தனுக்கு ஆக்கு நிட்காமிய கன்மங்
கருத்தை திருத்தி அஃது உந்தீபற
கதிவழி காண்பிக்கும் உந்தீபற
4
திடம் இது பூசை செபமும் தியானம்
உடல் வாக்கு உளத்து ஒழில் உந்தீபற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற
5
எண் உரு யாவும் இறை உருவாம் என
எண்ணி வழிபடல் உந்தீபற ஈசன்
நல் பூசனை உந்தீபற
6
வழுத்தலில் வாக்கு உச்ச வாய்க்குள் செபத்தில்
விழுப்பமாம் மானதம் உந்தீபற
விளம்பும் தியானம் இது உந்தீபற
7
விட்டு கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்
விட்டிடாது உன்னலே உந்தீபற
விசேடமாம் முன்னவே உந்தீபற
8
அனிய பாவத்தின் அவன் அகம் ஆகும்
அனனிய பாவமே உந்தீபற
அனைத்தினும் உத்தமம் உந்தீபற
9
பாவ பலத்தினால் பாவனா அதீத சத்
பாவத்து இருத்தலே உந்தீபற
பரபத்தி தத்துவம் உந்தீபற
10
உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல்
அது கன்மம் பத்தியும் உந்தீபற
அது யோக ஞானமும் உந்தீபற
11
வளி உள் அடக்க வலை படு புள் போல்
உளமும் ஒடுங்குறும் உந்தீபற
ஒடுக்க உபாயம் இது உந்தீபற
12
உளமும் உயிரும் உணர்வும் செயலும்
உளவாம் கிளை இரண்டு உந்தீபற
ஒன்று அவற்றின் மூலம் உந்தீபற
13
இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்கம்
இலயித்து உளது எழும் உந்தீபற
எழாது உரு மாய்ந்ததே உந்தீபற
14
ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை
விடுக்கவே ஓர் வழி உந்தீபற
வீயும் அதன் உரு உந்தீபற
15
மன உரு மாய மெய் மன்னும் மா யோகி
தனக்கு ஓர் செயல் இலை உந்தீபற
தன் இயல் சார்ந்தனன் உந்தீபற
16
வெளி விடயங்களை விட்டு மனம் தன்
ஒளி உரு ஓர்தலே உந்தீபற
உண்மை உணர்ச்சி ஆம் உந்தீபற
17
மனத்தின் உருவை மறவாது உசாவ
மனம் என ஒன்று இலை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற
18
எண்ணங்களே மனம் யாவினும் நான் எனும்
எண்ணமே மூலம் ஆம் உந்தீபற
யானாம் மனம் எனல் உந்தீபற
19
நான் என்று எழும் இடம் ஏது என நாட உள்
நான் தலை சாய்ந்திடும் உந்தீபற
ஞான விசாரம் இது உந்தீபற
20
நான் ஒன்று தானத்து நானான் என்று ஒன்று அது
தானாக தோன்றுமே உந்தீபற
தான் அது பூன்றம் ஆம் உந்தீபற
21
நான் என்னும் சொல் பொருள் ஆம் அது நாளுமே
நான் அற்ற தூக்கத்தும் உந்தீபற
நமது இன்மை நீக்கத்தால் உந்தீபற
22
உடல் பொறி உள்ளம் உயிர் இருள் எல்லாம்
சடம் அசத்து ஆனதால் உந்தீபற
சத்து ஆன நான் அல்ல உந்தீபற
23
உள்ளது உணர உணர்வு வேறு இன்மையின் உள்ளது
உணர்வு ஆகும் உந்தீபற
உணர்வே நாம் ஆய் உளம் உந்தீபற
24
இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள்
ஒரு பொருளே யாவர் உந்தீபற
உபாதி உணர்வே வேறு உந்தீபற
25
தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வது ஆம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற
26
தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்
தான் இரண்டு அற்றதால் உந்தீபற
தன்மய நிட்டை ஈது உந்தீபற
27
அறிவு அறியாமையும் அற்ற அறிவே
அறிவு ஆகும் உண்மை ஈது உந்தீபற அறிவதற்கு
ஒன்று இலை உந்தீபற
28
தனாது இயல் யாது என தான் தெரிகிற்பின்
அனாதி அனந்த சத்து உந்தீபற அகண்ட
சிதானந்தம் உந்தீபற
29
பந்த வீடு அற்ற பரசுகம் உற்ற ஆறு
இந்த நிலை நிற்றல் உந்தீபற
இறை பணி நிற்றல் ஆம் உந்தீபற
30
யான் அற்று இயல்வது தேரின் எது அது
தான் நற்றவம் என்றான் உந்தீபற
தான் ஆம் ரமணேசன் உந்தீபற