Leave

Piḷḷaiyār Katai · Day 4 of 21

Tap a verse for its meaning

  1. சிறப்புப் பாயிரம்

    Pāyiram
    செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்கந்த புராணக் கதையிலுள் ளதுவும்இலிங்க புராணத் திருந்தநற் கதையும்உபதேச காண்டத் துரைத்தநற் கதையும்தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்குவாய்ந்தநல் விரத மான்மிய முரைத்தான்கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்அரங்க நாத னளித்தருள் புதல்வன்தீரம்பெறு முருகனைத் தினந் தொறும்வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.
  2. காப்பு

    கரும்பு மிளநீருங் காரெள்ளுந் தேனும்விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்கணபதியே யிக்கதைக்குக் காப்பு.
  3. திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறிவருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்குமுன்பிறந்த யானை முகவா வுனைத்தொழுவேன்என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
  4. விநாயகர் துதி

    திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்பெருவாக்கும் பீடும் பெருக்கு - முருவாக்கும்ஆதலால் வானோரு மானைமுகத் தானைக்காதலாற் கூப்புவர்தங் கை.
  5. ஒற்றை மருப்பு மோரிரண்டு கைத்தலமும்வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொருதண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொழுதும்கொண்டக்கால் வாராது கூற்று.
  6. அதிகாரம்

    Atikāram
    பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்அன்னதிற் பிறவில் அரிறபத் திரட்டித்தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
  7. கதை

    மந்தர கிரியில் வடபா லாங்கோர்
  8. இந்துதவழ் சோலை யிராசமா நகரியில்
  9. அந்தண னொருவனு மாயிழை யொருத்தியுஞ்
  10. கடவுளா லயமும் கடிமலர்ப் பொய்கையுந்
  11. தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
  12. புதல்வரைத் தருகெனப் பொருப்பர சீன்ற
  13. மற்றவர் புரியு மாதவங் கண்டு
  14. சிற்றிடை யுமையாள் சிவனடி வணங்கிப்
  15. பரனே சிவனே பல்லுயிர்க் குயிரே
  16. அரனே மறையவர்க் கருள்புரிந் தருளென
  17. அந்தவந் தணனுக் கிந்தநற் பிறப்பின்
  18. மைந்தரில் லையென்று மறுத்தர னுரைப்ப
  19. எப்பரி சாயினும் எம்பொருட் டொருசுதன்
  20. தப்பிலா மறையோன் றனக்கருள் செய்கென
  21. எமையா ளுடைய வுமையாண் மொழிய
  22. இமையா முக்க ணிறைவன் வெகுண்டு
  23. பெண்சொற் கேட்டல் பேதமை யென்று
  24. பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
  25. மாதுமை யவளும் மனந்தளர் வுற்றுப்
  26. பொன்றிடு மானிடப் புன்பிறப் பெய்துதல்
  27. நன்றல வென்றே நடுக்கமுற் றுரைப்பக்
  28. கறைமிடற் றண்ணல் கருணை கூர்ந்து
  29. பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்
  30. சென்றவண் வளர்ந்து சிலபகற் கழித்தால்
  31. மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று
  32. விடைகொடுத் தருள விலங்கன்மா மகளும்
  33. பெடைமயிற் சாயற் பெண்மக வாகித்
  34. சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்
  35. யாவையும் பயின்ற வியல்பின ளாகி
  36. ஐயாண் டடைந்தபி னன்னையு மத்தனும்
  37. மையார் கருங்குழல் வாணுத றன்னை
  38. கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
  39. பிறப்பிறப் பில்லாப் பெரியோற் கன்றி
  40. அறத்தகு வதுவைக் கமையேன் யானென
  41. மற்றவன் றன்னையுன் மணமக னாகப்
  42. பெற்றிட லரிதெனப் பெயர்த்தவர் பேச
  43. அருந்தவ முயற்சியா லணுகுவே னியானெனக்
  44. கருந்தட நெடுங்கட் கவுரியங் குரைப்ப
  45. மருமலி கமல மலர்த்தடத் தருகிற்
  46. றருமலி நிழற்றவச் சாலைய தமைத்துப்
  47. அணிமலர்க் குழலுமை யருந்தவம் புரிதலும்
  48. அரிவைத னருந்தவ மறிவோம் யாமென
  49. இருவரு மறியா விமையவர் பெருமான்
  50. மானிட மேந்தும் வண்ணம தொழிந்து
  51. மானிட யோக மறையவ னாகிக்
  52. குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
  53. மடமயி றவம்புரி வாவிக் கரையிற்
  54. தண்ணறுங் கூந்தற் றையலை நோக்கி
  55. மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
  56. என்பெறத் தவமிங் கியற்றுவ தென்றலுங்
  57. கொன்றைவார் சடையனைக் கூடவென் றுரைத்தலும்
  58. நன்றெனச் சிரித்து நான்மறை யோனும்
  59. மாட்டினி லேறி மான்மழுத் தரித்துக்
  60. காட்டினிற் சுடலையிற் கணத்துட னாடிப்
  61. பாம்பு மெலும்பும் பஃறலை மாலையுஞ்
  62. சாம்பரு மணிந்து தலையோ டேந்திப்
  63. பிச்சைகொண் டுழலும் பித்தன் றன்னை
  64. நச்சிநீர் செய்தவம் நகைதரு நுமக்கெனப்
  65. பூங்கொடி யருந்தவம் பூசுரன் குலைத்தலும்
  66. ஆங்கவ ணாணமுற் றணிமனை புகுதச்
  67. வாடுத லொழிகென மனமிகத் தேற்றிச்
  68. சிந்துர வாணுதற் சேடியர் சிலர்போய்த்
  69. தந்தைதா யிருவர் தாளிணை வணங்கி
  70. வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
  71. பாவைதன் செங்கையைப் பற்றின னென்றலுந்
  72. தோடலர் கமலத் தொடைமறை முனியை
  73. ஆடக மாடத் தணிமனை கொணர்கென
  74. மாடக யாழ்முரல் மங்கைய ரோடி
  75. நீடிய புகழாய் நீயெழுந் தருளென
  76. மைமலர்க் குழலி வந்தெனை யழைக்கில்
  77. அம்மனைப் புகுவனென் றந்தண னுரைத்தலும்
  78. பொற்றொடி நீபோய்ப் பொய்கையி னின்ற
  79. நற்றவ முனியை நடாத்திக் கொணர்கென
  80. சிவனை யிகழ்ந்த சிற்றறி வுடையோன்
  81. அவனையான் சென்றிங் கழைத்திடே னென்று
  82. சிற்றிடை மடந்தையுஞ் சீறின ளாகி
  83. மற்றைய மாதர் மதிமுக நோக்கி
  84. நெற்றியிற் கண்ணுடை நிமலனுக் கல்லதென்
  85. பொற்பமர் கொங்கை பொருந்துதற் கரிதால்
  86. மானிட வேட மறையவன் றனக்கு
  87. யான் வெளிப் படுவ தில்லையென் றிசைப்ப
  88. இணையடி தொழுத லிளையோர்க் கியல்பெனத்
  89. சிந்தை குளிர்ந்து சீறுத லொழிந்து
  90. தாய்சொன் மறுத்தல் பாவமென் றஞ்சி
  91. ஆயிழை தானு மவனெதிர் சென்று
  92. சுற்றிவந் தவனடி சுந்தரி வணங்கி
  93. மற்றவன் றன்னை மனையிற் கொணர்ந்து
  94. ஆதியம் பகவற் கன்ப னாகும்
  95. வேதியன் பழைய விருத்தனென் றெண்ணி
  96. ஆசனம் நல்கி யருக்கிய முதலாப்
  97. பாதபூ சனைகள் பண்ணிய பின்னர்ப்
  98. போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
  99. ஆன்பால் மாங்கனி யழகிய பலாச்சுளை
  100. தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
  101. அந்தணன் றன்னை அமுதுசெய் வித்துச்
  102. சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத்
  103. தக்கோ லத்தொடு சாதிக் காயும்
  104. கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
  105. வெள்ளிலை யடைக்காய் விளங்கிய பொன்னின்
  106. ஒள்ளிய தட்டி லுகந்துமுன் வைத்துச்
  107. சிவனெனப் பாவனை செய்து நினைந்து
  108. தேனமர் குழலி திருமுக நோக்கி
  109. மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
  110. கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
  111. நெற்றியி னயனமுந் நீல கண்டமும்
  112. மானும் மழுவும் மலர்க்கரத் திலங்கக்
  113. கரந்ததன் னுருவங் காட்டிமு னிற்ப
  114. மரகத மேனி மலைமக டானும்
  115. விரைவொடங் கவனடி வீழ்ந்திறைஞ் சினளே,
  116. அரிய யனிந்திர னமரர் விஞ்சையர்
  117. ஏதமில் முனிவ ரவுணரி ராக்கதர்
  118. பூத ரியக்கர்கிம் புருட ரலகை
  119. சித்தர்தா ரகைகந் தருவர்கள் முதலாய்க்
  120. கணிக்கரும் பதினெண் கணத்திலுள் ளவரும்
  121. மணிக்கருங் களத்தனை வந்தடைந் ததற்பின்
  122. தென்றல்வந் திலங்கு முன்றி லகத்துப்
  123. பொன்றிகழ் பவளப் பொற்கா னாட்டி
  124. மாணிக் கத்தால் வளைபல பரப்பி
  125. ஆணிப்பொற் றகட்டா லழகுற வேய்ந்து
  126. பத்திக டோறும் பலமணி பதித்துத்
  127. தோரண நாட்டித் துகில்விதா னித்துப்
  128. திக்குத் தோறுந் திருவிளக் கேற்றிப்
  129. கன்னலுங் கமுகுங் கதலியு நாட்டிப்
  130. பன்மலர் நாற்றிப் பந்தர்சோ டித்து
  131. நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்
  132. வருசுரர் மகளிர் மலைமக டன்னைத்
  133. திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
  134. எம்பி ரானையு மிளங்கொடி தன்னையும்
  135. உம்ப ரெல்லா மொருங்குடன் கூடிக்
  136. கடலென விளங்குங் காவணந் தன்னிற்
  137. மறைபுகழ்ந் தேத்த மகிழ்ந்துட னிருத்திப்
  138. பறையொலி யோடு பனிவளை யார்ப்ப
  139. வதுவைக் கேற்ற மறைவிதி நெறியே
  140. சதுர்முக னோமச் சடங்குக ளியற்றத்
  141. தறுகலற் றொளிபொற் றாலி பூட்டிச்
  142. சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
  143. அரிவலஞ் சூழ வெரிவலம் வந்து
  144. போதணி கருங்குழற் பூவைதன் னுடனே
  145. ஓதநீர் வேலிசூ ழுஞ்சையம்பதி புக
  146. ஏரார் வழியி னெண்டிசை தன்னைப்
  147. பாரா தேவா பனிமொழி நீயென
  148. வருங்கருங் குழலாண் மற்றுமுண் டோவெனத்
  149. களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்
  150. டொளிர்மணி பூணா ளுரவோ னுடனே
  151. இவ்வகை யாய்விளை யாடுவோ மீங்கென
  152. அவ்வகை யரனு மதற்குடன் பட்டு
  153. மதகரி யுரித்தோன் மதகரி யாக
  154. மதர்விழி யுமைபிடி வடிவம தாகிக்
  155. அந்தணர் சிறக்க வானினம் பெருகச்
  156. செந்தழல் வேள்விவே தாகமஞ் சிறக்க
  157. அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
  158. திறம்பல வரசர் செகதலம் விளங்க
  159. வெங்கரி முகமும் வியன்புழைக் கையோ
  160. டைங்கர தலமு மலர்ப்பத மிரண்டும்
  161. பவளத் தொளிசேர் பைந்துவர் வாயுந்
  162. தவளக் கிம்புரித் தடமருப் பிரண்டுங்
  163. கோடிசூ ரியர்போற் குலவிடு மேனியும்
  164. பேழைபோ லகன்ற பெருங்குட வயிறும்
  165. நெற்றியி னயனமு முப்புரி நூலுங்
  166. தங்கிய முறம்போற் றழைமடிச் செவியுமாய்
  167. ஐங்கரத் தண்ணல் வந்தவ தரித்தலும்
  168. பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தியும்
  169. மங்கை மனமிக மகிழ்ந்துட னோக்கி
  170. விண்ணு ளோர்களும் விரிந்தநான் முகனும்
  171. மண்ணு ளோர்களும் வந்துனை வணங்க
  172. ஆங்கவர் தங்கட் கருள்சுரந் தருளித்
  173. தீங்கது தீர்த்துச் செந்நெறி யளித்துப்
  174. பாரண மாகப் பலகனி யருந்தி
  175. ஏரணி யாலின்கீ ழினிதிரு வென்று
  176. பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்
  177. தெய்வ நாயகன் சிறந்தினி திருந்தபின்
  178. வானவ ராலும் மானுட ராலுங்
  179. கானமர் கொடிய கடுவிலங் காலுங்
  180. கருவிக ளாலுங் கால னாலும்
  181. ஒருவகை யாலு முயிரழி யாமல்
  182. திரம்பெற மாதவஞ் செய்துமுன் னாளில்
  183. வரம்பெறு கின்ற வலிமையி னாலே
  184. ஐமுகச் சீயமொத் தடற்படை சூழக்
  185. கைமுகம் படைத்த கயமுகத் தவுணன்
  186. பொன்னுல கழித்துப் புலவரை வருத்தி
  187. இந்நிலத் தவரை யிடுக்கண் படுத்திக்
  188. கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண் டேங்கி
  189. அடுந்தொழிற் குலிசத் தண்ணலு மமரருங்
  190. முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
  191. அஞ்சலீ ரென்றவர்க் கபயங் கொடுத்தே
  192. அஞ்சுகைக் கரிமுகத் தண்ணலை நோக்கி
  193. ஆனை மாமுகத் தவுணனோ டவன்றன்
  194. வென்றுவா வென்று விடைகொடுத் தருள
  195. ஆங்கவன் றன்னோ டமர்பல வுடற்றிப்
  196. பாங்குறு மவன்படை பற்றறக் கொன்றபின்
  197. தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்
  198. கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
  199. ஒற்றைவெண் மருப்பை யொடித்தவ னுரத்திற்
  200. குற்றிட வெறிந்தான் குருதிசோர்ந் திடவே
  201. சோர்ந்தவன் வீழ்ந்து துண்ணென வெழுந்து
  202. வாய்ந்தமூ டிகமாய் வந்தவன் பொரவே
  203. வந்த மூடிகத்தை வாகன மாக்கி
  204. எந்தை விநாயக னேறின னிப்பால்
  205. எறிந்தவெண் மருப்பங் கிமைநொடி யளவிற்
  206. செறிந்தது மற்றவன் றிருக்கரத் தினிலே
  207. வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத் தருளும்
  208. வல்லவை தனைத்தன் மனையென மணந்தே
  209. ஓகையோ டெழுந்தாங் குயர்படை சூழ
  210. வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
  211. கருச்சங் கோட்டிக் கயல்கமு கேறுந்
  212. திருச்செங் காட்டிற் சிவனையர்ச் சித்துக்
  213. கணபதீச் சரமெனுங் காரண நாமம்
  214. பணபதி புகழ்தரு பதிக்குண் டாக்கிச்
  215. சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ
  216. இங்குவந் தன்புட னெய்திய பின்னர்க்
  217. கணங்களுக் கரசாய்க் கதிர்முடி சூட்டி
  218. இணங்கிய பெருமைபெற் றிருந்திட வாங்கே
  219. தேவர்கள் முனிவர் சித்தர்கந் தருவர்
  220. யாவரும் வந்திவ னேவல்செய் திடுநாள்
  221. அதிகமா யுரைக்கு மாவணித் திங்களின்
  222. விநாயகர்க் குரிய விரதமென் றெண்ணி
  223. இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள்
  224. ஒப்பரும் விரதத் துறுமொரு சதுர்த்தியில்
  225. நோற்றுநற் பூசை நுடங்கா தாற்றிப்
  226. போற்றிசெய் திட்டார் புலவரைங் கரனை
  227. நிருமலன் குமர னிருத்தம் புரிந்தான்
  228. அனைவரும் கைதொழு தடியிணை போற்ற
  229. வனைகழற் சந்திரன் மனச்செருக் கதனால்
  230. பேழைபோல் வயிறும் பெருத்தகாத் திரமுந்
  231. கண்டன னகைத்தான் கரிமுகக் கடவுளுங்
  232. என்னைக் கண்டிங் கிகழ்ந்தனை சிரித்தாய்
  233. உன்னைக் கண்டவ ருரைக்குமித் தினத்திற்
  234. அழிவுமெய் துவரென் றசனிபோற் சபித்தான்
  235. விண்ணவ ரெல்லா மிகமனம் வெருவிக்
  236. கண்ணருள் கூருங் கடவுளித் தினத்திற்
  237. கோரவெஞ் சினமிகக் கொண்டன னந்நாண்
  238. மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
  239. சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்
  240. றிதயத் தெண்ணி யாவரும் நோற்றார்;
  241. இப்புவி மாந்த ரியம்பிய விரதம்
  242. வைப்புட னோற்ற வகையினிச் சொல்வாம்
  243. குருமணி முடிபுனை குருகுலத் துதித்த
  244. தருமனு மிளைய தம்பியர் நால்வருந்
  245. தேவகி மைந்தன் றிருமுக நோக்கி
  246. எண்ணிய விரத மிடையூ றின்றிப்
  247. பண்ணிய பொழுதே பலிப்புண்டாகவுஞ்
  248. செருவினி லெதிர்த்த செறுநரை வென்று
  249. எந்தத் தெய்வ மெவ்விர தத்தை
  250. வந்தனை செய்யில் வருநமக் குரையெனப்
  251. பாட்டளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
  252. கேட்டருள் வீரெனக் கிளர்த்துத லுற்றான்
  253. அக்குநீ றணியு மரன்முத லளித்தோன்
  254. ஓடவைத் திடும்பொன் னொத்தொளி விளங்குங்
  255. கோடிசூ ரியர்போற் குலவிய மேனியன்
  256. தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்
  257. சர்வா பரணமுந் தரிக்கப் பட்டவன்
  258. உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
  259. ஒருகையிற் றந்தமு மொருகையிற் பாசமும்
  260. ஒருகையின் மோதக மொருகையிற் செபஞ்செய்
  261. உத்தம மாலையோ னுறுநினை வின்படி
  262. சித்திசெய் வதனாற் சித்தி விநாயகன்
  263. என்றிமை யவரும் யாவருந் துதிப்ப
  264. நன்றித ருந்திரு நாமம் படைத்தோன்
  265. வித்தியா ரம்பம் விரும்பிடும் போதும்
  266. உத்தியோ கங்க ளுஞற்றிடும் போதும்
  267. ஆங்கவன் றன்னை யருச்சனை புரிந்தால்
  268. தீங்குறா தெல்லாஞ் செயமுண் டாகும்
  269. கரதல மைந்துடைக் கணபதிக் குரிய
  270. விரதமொன் றுள்ளதை விரும்பிநோற் றவர்க்குச்
  271. சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
  272. புந்தியி னினைந்த பொருள்கை கூடும்
  273. மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
  274. தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு,
  275. நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
  276. விரித்தெமக் குரைத்திட வேண்டுமென் றிரப்ப
  277. வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
  278. தேருநீ ராவணித் திங்களின் மதிவளர்
  279. முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
  280. சந்தி வந்தனந் தவறா தியற்றி
  281. அத்தின மதனி லைங்கரக் கடவுளைப்
  282. பத்தியோ டர்ச்சனை பண்ணுதல் வேண்டும்
  283. வெள்ளியாற் பொன்னால் விளங்கு மவன்றன்
  284. ஒள்ளிய வருட்டிரு வுருவுண் டாக்கிப்
  285. ஆசிலா மண்ணா லமைத்தலுந் தகுமால்
  286. பூசைசெய் திடுமிடம் புனிதம தாக்கி
  287. கோடிகங் கோசிகங் கொடிவிதா னித்து
  288. நீடிய நூல்வளை நிறைகுடத் திருத்தி
  289. விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
  290. சிந்தையி னினைந்து தியானம் பண்ணி
  291. ஆவா கனமுத லர்க்கிய பாத்தியம்
  292. வாகா ராச மனம்வரை கொடுத்து
  293. ஐந்தமிர் தத்தா லபிடே கித்துக்
  294. கந்தஞ் சாத்திக் கணேசமந் திரத்தால்
  295. ஈசுர புத்திர னென்னுமந் திரத்தால்
  296. மாசக லிரண்டு வத்திரஞ் சாத்திப்
  297. பொருந்துமை சுதனாப் புகலுமந் திரத்தாற்
  298. றிருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
  299. பச்சறு குடனிரு பத்தொரு விதமாப்
  300. உமாசுதன் கணாதிப னுயர்கரி முகத்தோன்
  301. குமார குரவன் பாசாங் குசகரன்
  302. ஏக தந்த னீசுர புத்திரன்
  303. ஆகு வாகன னருடரு விநாயகன்
  304. சர்வகா ரியமுந் தந்தருள் புரிவோன்
  305. ஏரம்ப மூர்த்தி யென்னுநா மங்களால்
  306. ஆரம் பத்துட னர்ச்சனை பண்ணி
  307. மோதக மப்ப முதற்பணி காரந்
  308. தீதகன் மாங்கனி தீங்கத லிப்பழம்
  309. தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
  310. பருப்புநெய் பொரிக்கறி பாறயிர் போனகம்
  311. விருப்புள சுவைப்பொருள் மிகவுமுன் வைத்து
  312. உருத்திரப் பிரியவென் றுரைக்குமந் திரத்தால்
  313. நற்றவர் புகன்றநா னான்குப சாரமும்
  314. மற்றவன் றிருவுள மகிழ்ந்திடச் செய்து
  315. எண்ணுந் தகுதி யிருபிறப் பாளர்க்
  316. குண்ணறு சுவைசே ரோதன நல்கிச்
  317. சந்தன முத்துத் தானந் தக்கிணை
  318. அந்தணர்க் கீந்திட் டருச்சகன் றனக்குத்
  319. திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
  320. தரித்தவத் திரத்துடன் றானமாக் கொடுத்து
  321. நைமித் திகமென நவிறரு மரபால்
  322. இம்முறை பூசனை யாவர்செய் தாலும்
  323. எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
  324. திண்ணிய செருவிற் செயமிகப் பெறுவர்
  325. அரனிவன் றன்னைமுன் னர்ச்சனை பண்ணிப்
  326. புரமொரு மூன்றும் பொடிபட வெரித்தான்
  327. உருத்திர னிவனை யுபாசனை பண்ணி
  328. விருத்திரா சுரனை வென்றுகொன் றிட்டான்
  329. அகலிகை யிவன்றா ளர்ச்சனை பண்ணிப்
  330. பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
  331. தண்ணார் மதிமுகத் தாடம யந்தி
  332. அன்னா ளிவனை யர்ச்சனை பண்ணி
  333. நண்ணார் பரவு நளனைய டைந்தாள்
  334. ஐங்கரக் கடவுளை யர்ச்சனை பண்ணி
  335. தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
  336. பகிரத னென்னும் பார்த்திவ னிவனை
  337. மகிதலந் தன்னின் மலர்கொ டர்ச்சித்து
  338. வரநதி தன்னை வையகத் தழைத்தான்
  339. அட்டதே வதைகளு மர்ச்சித் திவனை
  340. அட்டபோ கத்துட னமிர்தமும் பெற்றார்
  341. உருக்மணி யென்னு மொண்டொடி தன்னைச்
  342. செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றான்
  343. கொண்டுபோ மளவிற் குஞ்சர முகவனை
  344. வண்டுபாண் மிழற்றா மலர்கொடர்ச் சித்துத்
  345. தாரியின் மறித்தவன் றன்னைப்புறங் கண்டு
  346. யாமுமங் கவளை யின்புறப் பெற்றோம்
  347. இப்புவி தன்னி லெண்ணுதற் கரிதால்
  348. அப்படி நீவிரு மவனையர்ச் சித்தால்
  349. எப்பொருள் விரும்பினீ ரப்பொருள் பெறுவீர்
  350. என்றுகன் றெறிந்தோ னெடுத்திவை யுரைப்ப
  351. அன்றுமுற் றருமனு மனுசரு மிவனைப்
  352. பூசனை புரிந்து கட் புலனிலான் மைந்தரை
  353. நாசனம் பண்ணி நராதிப ராகிச்
  354. சிந்தையி னினைந்தவை செகத்தினிற் செயங்கொண்
  355. டந்தமில் செல்வத் தரசியல் பெற்றார்;
  356. ஈங்கிது நிற்க விவ்விர தத்தியல்
  357. ஓங்கிய காதைமற் றொன்றுரை செய்வாம்
  358. கஞ்சநான் முகன்றருங் காசிபன் புணர்ந்த
  359. வஞ்சக மனத்தாண் மாயைதன் வயிற்றிற்
  360. சூரனென் றொருவனுந் துணைவருந் தோன்றி
  361. ஆர்கலி சூழ்புவி யனைத்தையு மழித்தே
  362. நிரந்தரந் தீய நெறிநடத் துதலால்
  363. ஆயிரங் கண்ணனு மமரரும் முனிவரும்
  364. நீயிரங் கெமக்கென நெடுங்கரங் கூப்பி
  365. இரசத கிரியுறை யிறைவனை வணங்கி
  366. வரமிகுஞ் சூரன் வலிமைக ளுரைக்கச்
  367. கதிர்விடு வடிவேல் கரதலத் தேந்தும்
  368. புதல்வனைத் தருவோம் போமி னீரென
  369. அமரர் கோனுக் கரன்விடை கொடுத்துச்
  370. கூடிய கலவியிற் கூடா தூடலும்
  371. ஓடிய வானோ ரொருங்குடன் கூடிப்
  372. பாவகன் றன்னைப் பரிவுட னழைத்துச்
  373. சூரன் செய்யுந் துயர மெல்லாம்
  374. ஊரர வணிந்தோற் குரையென வுரைப்பக்
  375. காமனை யெரித்த கடவுளென் றஞ்சிப்
  376. பாவகன் பயமுறப் பயமுனக் கேதென
  377. உற்றிடுங் கரதலத் துன்னையே தரித்தான்
  378. நெற்றியி னயனமு நீயே யாதலிற்
  379. குற்ற மடாது கூறுநீ சென்றென
  380. வானவர் மொழிய மற்றவன் றானுந்
  381. தானுமச் சபையிற் றரியா தேகி
  382. எமையா ளுடைய வுமையா ளுடனே
  383. அமையா வின்பத் தமர்ந்தினி திருந்த
  384. ஒள்ளிய மடந்தை ஒதுங்கிநா ணுதலுந்
  385. அறுமுகப் பிள்ளையை யவன்கையி லீதலும்
  386. வாத ராசன் மலர்க்கையிற் கொடுப்ப
  387. நீதி யோடு நின்றுகை யேந்திப்
  388. போதநீள் வாயுவும் பொறுக்கவொண் ணாமற்
  389. றரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத்
  390. தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற்
  391. தண்ணார் வதனத் தாமரை யாறுங்
  392. கண்ணா றிரண்டுங் கரமீ ராறுந்
  393. தூணெனத் திரண்ட தோளீ ராறும்
  394. மாணயி லாதி வான்படை யுங்கொண்
  395. டறுமுகக் கடவுளங் கவதரித் திடலும்
  396. மறுகிய வும்பர் மகிழ்வுடன் கூடி
  397. அறுமீன் களைப்பா லளித்திரென் றனுப்ப
  398. ஆங்கவர் முலையுண் டறுமுகன் றானும்
  399. ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில்
  400. விமலனு முமையும் விடையுகைத் தாறு
  401. தலைமக னிருந்த சரவணத் தடைந்து
  402. முருகலர் குழலுமை முலைப்பா லூட்ட
  403. இருவரு மின்பா லெடுத்தெடுத் தணைத்துத்
  404. தேவர்தம் படைக்குச் சேனா பதியெனக்
  405. காவல்கொண் டளிக்கக் கதிர்முடி சூட்டி
  406. அயில்வேன் முதற்பல வாயுதங் கொடுத்துத்
  407. திசையெலாஞ் செல்லுந் தேருமொன் றுதவிப்
  408. ஓதுறு மவுணரை யொறுத்திடென் றனுப்ப
  409. இருளைப் பருகு மிரவியைப் போலத்
  410. தகுவரென் றவரைச் சமரிடை முருக்கிக்
  411. யாவரும் வியப்புற விந்திரன் மகளாந்
  412. தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட்
  413. டமரர் கோனுக் கமருல களித்துக்
  414. அமரா வதியி லமர்ந்தினி திருந்தான்
  415. சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண்
  416. டமரர் மாத ரனைவரு மயங்கி
  417. எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே
  418. அண்ட ரெல்லா மடைவுடன் கூடி
  419. மாதொரு பாகனை வந்தடி வணங்கி
  420. மருமலர்க் கடம்பனெம் மாநகர் புகாமல்
  421. அருள்செய வேண்டுநீ யம்பிகா பதியென
  422. இமையவ ருரைப்ப விறையவன் றானுங்
  423. குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக்
  424. காவல்கொண் டெம்வினை கட்டறுத் தருளுஞ்
  425. சேவலங் கொடியோன் றேசம் போகத்
  426. திருந்திழை யுமையா ளருந்துய ரெய்தி
  427. வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து
  428. மங்கை நீதான் வருந்துத லொழிகுதி
  429. அங்கையாற் சூதெறிந் தாடுவோம் வாவென
  430. வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக்
  431. குன்றமென் முலையாள் கூறிய சமயம்
  432. புற்றர வணிந்த புனிதனைக் காணவங்
  433. குற்றனன் றிருமா லூழ்வினை வலியாற்
  434. சக்கிர பாணியைச் சான்றெனக் குறித்து
  435. மிக்கதோர் சூது விருப்புட னாடச்
  436. நாயகி வெல்ல நாயகன் றோற்ப
  437. இன்பவா யிதழுமை யான்வென் றேனென
  438. எம்பெரு மானும் யான்வென் றேனென
  439. ஒருவர்க் கொருவ ருத்தரம் பேசி
  440. இருவருஞ் சாட்சி யிவனைக் கேட்ப
  441. மாமனை வதைத்த மான்முக நோக்கிக்
  442. காமனை யெரித்தோன் கட்கடை காட்ட
  443. வென்ற நாயகி தோற்றா ளென்றுந்
  444. தோற்ற நாயகன் வென்றா னென்றும்
  445. ஒன்றிய பொய்க்கரி யுடனங் குரைப்பக்
  446. கன்றிய மனத்தொடு கவுரியங் குருத்து
  447. நோக்கிநீ யிருந்தும் நுவன்றிலை யுண்மை
  448. வாக்கினி லொன்றாய் மனத்தினி லொன்றாய்
  449. மைக்கரி யுரித்தோன் வதன நோக்கிப்
  450. பொய்க்கரி யுரைத்த புன்மையி னாலே
  451. கனலென வயிற்றிற் கடும்பசி கனற்ற
  452. கடகரி முகத்துக் கடவுள்வீற் றிருக்கும்
  453. வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள்
  454. முளரிகள் பூத்த முகினிறத் துருப்போய்த்
  455. துளவணி மருகனுந் துணைவிழி யிழந்தே
  456. ஆண்டரைக் கணத்தி லாயிரம் யோசனை
  457. நீண்டபைப் பாந்த ணெட்டுட லெடுத்து
  458. வளர்மருப் பொன்றுடை வள்ளல்வீற் றிருக்குங்
  459. கிளர்சினை யாலின் கீழ்க்கிடந் தனனால்
  460. திரிகடக் கரியின் றிருமுகக் கடவுளும்
  461. வழிபடு மடியார் வல்வினை தீர்த்தே
  462. எழில்பெறு வடமரத் தின்கீ ழிருந்தான்
  463. கம்பாமா முகத்துக் கடவுடன் பெருமையை
  464. அம்புவி யோருக் கறிவிப் போமென
  465. உம்ப ருலகத் தோரெழு கன்னியர்
  466. தம்பநூ லேணியிற் றாரணி வந்து
  467. கரிமுகக் கடவுளைக் கைதொழு தேத்திக்
  468. கார்த்திகைக் கார்த்திகை கழிந்தபின் னாளில்
  469. ஆர்த்த கலிங்கத் தணியிழை வாங்கி
  470. இருபத் தோரிழை இன்புறக் கட்டி
  471. ஒருபோ துண்டி யுண்டொரு மனமாய்
  472. வேதத் தாதியும் பூமியி லெழுத்தும்
  473. ஆதிவி நாயகற் கானவெ ழுத்தும்
  474. மூன்றெழுத் ததனான் மொழிந்தமந் திரமும்
  475. தேன்றருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
  476. உரைதரு பதினா றுபசா ரத்தால்
  477. வரைமகண் மதலையை வழிபா டாற்றி
  478. இருபது நாளு மிப்படி நோற்று
  479. மற்றநா ளைங்கர மாமுகன் பிறந்த
  480. தற்றைநாட் சதயமு மாறாம் பக்கமுஞ்
  481. சேருமத் தினத்திற் றெளிபுன லாடி
  482. சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக்
  483. குலவுபொற் கலைகள் கொடுவிதா னித்து
  484. மலர்பல தொடுத்திடு மாலைக ளாற்றிக்
  485. கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை
  486. மலைமுகக் கடவுளை மஞ்சன மாட்டிப்
  487. செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு
  488. மருவிரி ஞாழன் மகிழிரு வாட்சி
  489. தாமரை முல்லை தழையவிழ் கொன்றை
  490. பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை
  491. காந்த ளாத்தி கடம்புசெவ் வந்தி
  492. வாய்ந்தநல் லெருக்கு மலர்க்கர வீரம்
  493. பச்சிலை நொச்சி படர்கொடி யறுகு
  494. தூபதீ பங்கள் சுகம்பெறக் கொடுத்தே
  495. அப்ப மோதக மவலெள் ளுண்டை
  496. சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன்
  497. பானறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
  498. நோற்பது கண்டு நோலா திருந்த
  499. பாப்புரு வாகிய பஞ்சா யுதனும்
  500. யாப்புறு கொங்கையீர் யானுநோற் பேனென
  501. ஆங்கவன் றனக்கும் வேண்டுவ தளித்துப்
  502. பாங்கொடிவ் விரதம் பரிந்து நோற்பித்தார்
  503. அண்டர்நா யகனா மைங்கர னருளால்
  504. விண்டுவும் பண்டுள வேடம் பெற்றே
  505. உஞ்சைமா நகர்புகுந் துமையொடு விமலன்
  506. கஞ்சநாண் மலர்ப்பதங் கைதொழு திடலும்
  507. வெஞ்சின மிகுந்து விமலனை நோக்கி
  508. யானிடுஞ் சாப நீங்கிய தேதென
  509. மானெடுங் கண்ணி மணிக்கத வடைப்ப
  510. இறையவ னிதற்குக் காரண மேதென
  511. மறிகடற் றுயிலு மாயவ னுரைப்பான்
  512. பிறைமருப் பொன்றுடைப் பிள்ளையன் றெனக்குத்
  513. தந்தருள் புரிந்த தவப்பய னீதெனச்
  514. பூங்கொடி யடைத்த பொற்றாழ் நீங்கச்
  515. சாங்குமுன் னுரைத்த சக்கிர பாணி
  516. இக்கதை சொல்ல வக்கணி சடையனும்
  517. மிக்கநல் விரதம் விருப்புட னோற்றபின்
  518. மாதுமை யடைத்த வன்றாழ் நீக்கி
  519. நாதனை நணுகிட நம்பனு நகைத்தான்
  520. நானோ வந்து நகையா னதுவெனத்
  521. தேனேர் மொழியா டெளியக் கூறென
  522. உன்மக னோன்பி னுறுதி யறிந்து
  523. சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
  524. அந்தமி லரனை யாயிழை வணங்கிப்
  525. பொருஞ்சூ ரறவேல் போக்கிய குமரன்
  526. வரும்படி யானும் வருந்திநோற் பேனென
  527. இறையவன் கதைசொல வேந்திழை நோற்றபின்
  528. சுடர்வடி வேலோன் றொல்வினை தீர்ந்து
  529. தாதுமை வண்டுழுந் தாமத் தாமனை
  530. மாதுமை யாளை வந்துகண் டனனே
  531. கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாகெனத்
  532. தண்ணறுங் குழலுமை சாபமிட் டதுவும்
  533. அக்குநீ றணியு மரன்முத லளித்த
  534. விக்கின விநாயகன் விரதநோற் றதன்பின்
  535. சுடர்க்கதை யேந்துந் துளவ மாலையன்
  536. விடப்பணி யுருவம் விட்டுநீங் கியதும்
  537. பரிவுகொள் கூத்துடைப் பரமனு நோற்றுக்
  538. கவுரியன் றடைத்த கபாடந் திறந்ததும்
  539. நாரத முனிவ னவின்றிடக் கேட்டே
  540. இந்நிலந் தன்னி லிவ்விர தத்தை
  541. மன்னவன் வச்சிர மாலிமுன் னோற்றுக்
  542. காயத் தெழுந்த கடும்பிணி தீர்ந்து
  543. தடமுலைத் திலோத்தமை தனைமணம் புணர்ந்து
  544. மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
  545. கடைமுறை வெள்ளியங் கயிலையி லுற்றான்
  546. பரிவொடிவ் விரதம் பாரகந் தன்னில்
  547. விரைகமழ் நறுந்தார் விக்ரமா தித்தன்
  548. மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள்
  549. மற்றவன் காதன் மடவர லொருத்தி
  550. இற்றிடு மிடையா ளிலக்கண சுந்தரி
  551. மெத்தவன் புடனிவ் விரதநோற் பேனென
  552. அத்தந் தன்னி லணியிழை செறித்துச்
  553. சித்த மகிழ்ந்து சிலநா னோற்றபின்
  554. உற்ற நோன்பி னுறுதி மறந்து
  555. கட்டிய விழையைக் காரிகை யவிழ்த்து
  556. ஆங்கது தழைத்தே யலருந் தளிருமாய்ப்
  557. பாங்குற வோங்கிப் படர்வது கண்டு
  558. வேப்பஞ் சேரியிற் போய்ச்சிறை யிருந்த
  559. பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி
  560. அவ்விய மில்லா ளவ்விடந் தன்னிற்
  561. கொவ்வை யடகு கொய்வாள் குறுகி
  562. இழையது கிடப்பக் கண்டவ ளெடுத்துக்
  563. குழைதவழ் வரிவிழிக் கோதைகைக் கட்டி
  564. அப்பமோ டடைக்கா யவைபல வைத்துச்
  565. செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
  566. கரிமுகத் தண்ணல் கருணை கூர்ந்து
  567. பண்டையி லிரட்டி பதமவட் கருளக்
  568. கொண்டுபோ யரசனுங் கோயிலுள் வைத்தான்
  569. விக்கிரமா தித்தன் விழிதுயில் கொள்ள
  570. உக்கிர மான வுடைமணி கட்டித்
  571. தண்டையுஞ் சிலம்புந் தாளினின் றொலிப்பக்
  572. கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன்
  573. மனமிகக் கலங்கு மன்னவன் றன்னிடங்
  574. கனவினில் வந்து காரண மாக
  575. இலக்கண சுந்தரி யிம்மனை யிருக்கிற்
  576. கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத்
  577. துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக்
  578. அண்ண லுரைத்திடு மவ்வழி தன்னில்
  579. ஆனை குதிரை யவைபல முடிவுற
  580. மாநகர் கேடுறும் வகையது கண்டு
  581. இமைப்பொழு திவளிங் கிருக்கலா காதென
  582. அயற்கடை யவனு மகற்றிய பின்னர்
  583. வணிகன் றனது மனைபுகுந் திருப்ப
  584. மணியு முத்தும் வலியகல் லாய்விட
  585. அணியிழை தன்னை யவனு மகற்ற
  586. உழவர்தம் மனையி லுற்றவ ளிருப்ப
  587. வளர்பயி ரழிந்து வளம்பல குன்ற
  588. அயன்மனை யவரு மகற்றிய பின்னர்க்
  589. குயக்கல முடைந்து கொள்ளை போக
  590. அயற்கடை யவனு மகற்றிய பின்னர்த்
  591. தூசுதூய தாக்குந் தொழிலோர் மனைபுகத்
  592. தூசுகளெல்லாந் துணிந்துவே றாகத்
  593. தூசரு மவளைத் தூரஞ் செய்ய
  594. மாலைக் காரன் வளமனை புகலும்
  595. மாலை பாம்பாம் வகையது கண்டு
  596. ஞால மெல்லா நடுங்கவந் துதித்தாய்
  597. சாலவும் பாவிநீ தான்யா ரென்ன
  598. வெம்மன மிகவு மேவி முனிவுறா
  599. அம்மனை யவனு மகற்றிய பின்னர்
  600. அவ்வை தன்மனை யவள்புகுந் திருப்ப
  601. அவ்வை செல்ல அகங்க டோறும்
  602. வைதன ரெறிந்தனர் மறியத் தள்ளினர்
  603. அவ்வை மீண்டுதன் னகமதிற் சென்று
  604. இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக்
  605. காத்தாண் டுலகு கருணையோ டாண்ட
  606. மார்த்தாண்ட ராசன் மாமக ளொருத்தி
  607. எல்லார்க்கு மூத்தா ளிலக்கண சுந்தரி
  608. சொல்லுவிக் கிரம சூரியன் மனையெனச்
  609. சீர்கெட விருந்த தெரிவையை நோக்கி
  610. நீரது கொண்டு நிலமெழு கிடுகெனச்
  611. சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள்
  612. சாணியு முழுத்துத் தண்ணீர் வற்றிப்
  613. மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
  614. தானே சென்று சாணி யெடுத்துத்
  615. தண்ணீர் கொணர்ந்து தரைமெழுக் கிட்டு
  616. மண்ணிய வீட்டின் மணிவிளக் கேற்றிப்
  617. புத்தக மெடுத்து வாவெனப் புகலப்
  618. புத்தகம் பாம்பாய்ப் பொருந்திநின் றாட
  619. மெத்தவுண் ணடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக்
  620. அவ்வை தானே யகமதிற் சென்று
  621. புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து
  622. கற்பகப் பிள்ளைசெய் காரிய மிதுவென
  623. உத்தமி யவ்வை யுணர்ந்துமுன் னறிந்து
  624. நுவலரும் விநாயக நோன்புநோற் றிடுகெனக்
  625. கரத்துமூ வேழிழைக் காப்புக் கட்டி
  626. அப்பமு மவலும் மாம்பல பண்டமுஞ்
  627. செப்பம தாகத் திருமுன் வைத்தே
  628. மத்தகக் களிற்றின் மகாவிர தத்தை
  629. வித்தக மாக விளங்கிழை நோற்றுக்
  630. கற்பக நம்பி கருணைபெற் றதற்பின்
  631. சக்கர வாள சைனியத் தோடு
  632. விக்கிரமா தித்தன் வேட்டையிற் சென்று
  633. எவ்வகை செய்வோ மெனவுள மெலிந்தே
  634. அவ்வை தன்மனை யங்கவ ரணுக
  635. எய்துந் தாகமு மிளைப்புங் கண்டு
  636. செவ்வே யவற்றைத் தீர்க்க வெண்ணி
  637. இலக்கண சுந்தரி யென்பவ டன்னை
  638. அப்பமு நீரு மரசற் கருளெனச்
  639. செப்பிய வன்னை திருமொழிப் படியே
  640. உண்ணீர்க் கரகமு மொருபணி காரமும்
  641. பண்ணேர் மொழியார் பார்த்திபற் குதவ
  642. ஒப்பறு படையு முயர்படை வேந்தனும்
  643. ஆனை குதிரை யவைகளு முண்டுந்
  644. தானது தொலையாத் தன்மையைக் கண்டே
  645. இவ்வகை சமைத்தநீ யாரென வினவ
  646. அவ்வை தான்சென் றரசர்க் குரைப்பாள்
  647. கணபதி நோன்பின் காரணங் காணிது
  648. குணமுடை யிவளுன் குலமனை யாட்டி
  649. இலக்கண சுந்தரி யென்றவ்வை கூற
  650. மங்கையை நோக்கி மனமிக மகிழ்ந்து
  651. திங்கணேர் வெள்ளிச் சிவிகையி னேற்றிக்
  652. கொண்டூர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
  653. ஒண்டொடி யாரி லுயர்பத முதவினன்
  654. சிந்துர நுதலார் சென்றடி பணியச்
  655. சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.
  656. நூற்பயன்

    பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோ டெப்பொருளும்மன்னு நவமணியும் வந்தணுகும் - உன்னிஒருக்கொம்பின் யானைமுக வுத்தமனார் நோன்பின்றிருக்கதையைக் கேட்கச் சிறந்து.
  657. பொற்பனைக்கை முக்கட் புகர்முகத்துப் பொன்மவுலிக்கற்பகத்தி னோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்கற்றவரு நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.
  658. வெள்ளை யெருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்தபிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடிநோற்றார் மிகவாழ்வர் நோலா தருகிருந்துகேட்டோர்க்கும் வாராது கேடு.
  659. சூலிலார் நோக்கிற் சுதரை மிகப்பெறுவார்சாலமிகும் வெங்கலியார் தாநோற்கில் - மேலைப்பிறப்பெல்லா நல்ல பெருஞ்செல்வ மெய்திச்சிறப்பிலே வாழ்வார் சிறந்து.
  660. போற்றித் திருவகவல்

    Recited after the Piḷḷaiyār Katai

    அருள்புரிந் தருளு மரசே போற்றி
  661. இருவினை துடைக்கு மிறைவா போற்றி
  662. மறைமுனி யொருவன் மாங்கனி கொணர்ந்து
  663. கறைமிடற் றிறைவன் கையில் கொடுப்ப
  664. வேலனு நீயும் விரும்பிமுன் னிற்ப
  665. ஒருநொடி யதனி லுலகெலாம் வலமாய்
  666. வருமவர் தமக்கு வழங்குவோம் யாமென
  667. விரைவுடன் மயின்மிசை வேலோன் வருமுனர்
  668. அரனை வலம்வந் தக்கனி வாங்கிய
  669. விரகுள விக்கின விநாயக போற்றி
  670. மண்மிசை வைத்துனை வாவியிற் செல்லக்
  671. கண்ணிலா னிவனெனக் கரந்தவன் போகக்
  672. கரைமிசை யேறிக் காணா திரங்கி
  673. உரைதடு மாறி யுள்ளங் கலங்கிக்
  674. கூகூ கணபதி கூகூ வெனக்
  675. கூகூ வென்றருள் குன்றே போற்றி
  676. அப்பணி சடையோன் முப்புர மெரிக்க
  677. இப்புவி யதனை யிரத மாக்கித்
  678. தினகரன் மதிதேர்ச் சில்லி யாகப்
  679. பொருவரு மறைகளே புரவி யாகச்
  680. சங்கைசேர் நான்முகன் சாரதி யாகப்
  681. பங்கயக் கண்ணன் பகழி யாக
  682. மலை சிலை யாக வாசுகி நாணா
  683. நிலைபெற நிற்கு நெடுந்தேர் தன்னில்
  684. விக்கினந் தீர்க்கும் விநாயக நமவெனச்
  685. சிக்கென விறைவன் செப்பா தேறலின்
  686. அச்சறுத் தருளு மரசே போற்றி
  687. வேதப் பொருளாம் விமலா போற்றி
  688. கரமைந் துடைய களிறே போற்றி
  689. அகில மீன்றரு ளம்மை தனக்குத்
  690. திருமக னாகிய செல்வா போற்றி
  691. அற்றவர்க் கருள்புரி யரசே போற்றி
  692. பாசாங் குசங்கை பரித்தாய் போற்றி
  693. தேசார் மணிமுடித் தேவே போற்றி
  694. எழுநர கெழுபிறப் பறுப்பாய் போற்றி
  695. எழுமையு மெமக்கிங் கிரங்குவாய் போற்றி
  696. தளைசெறி வக்கிர துண்டா போற்றி
  697. வளநிக ரொற்றை மருப்பா போற்றி
  698. வரமிகு மரிதிரு மருகா போற்றி
  699. சுரர்தொழு முருகன் துணைவா போற்றி
  700. நல்லவர் புகழு நம்பா போற்றி
  701. வல்லபைக் குரிய மணாளா போற்றி
  702. கயமுகத் தவுணனைக் காய்ந்தாய் போற்றி
  703. வயமிகு மூஷிக வாகனா போற்றி
  704. ஓங்கா ரத்தனி யுருவே போற்றி
  705. துறவர் தமக்கொரு துணைவா போற்றி
  706. முறநிகர் தழைசெவி முதல்வா போற்றி
  707. துண்டமா மதிபோற் றுலங்கிய கோட்டைக்
  708. கண்டக மாகக் கைதனிற் பிடித்துப்
  709. போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி.
  710. வருக்கக் கோவை

    Recited after the Piḷḷaiyār Katai

    அன்புடைக் கடவுளர்க் கதிபதி செயசெய
  711. ஆபத் தகற்று மைங்கர செயசெய
  712. இந்துச் சடைமுடி யிறைவா செயசெய
  713. உன்னிய முடிக்கு மொருவா செயசெய
  714. ஊர்மனை சந்தி யுகந்தாய் செயசெய
  715. எம்பெரு மானே யேகனே செயசெய
  716. ஏழுல குந்தொழ விருப்பாய் செயசெய
  717. ஐயா கணங்கட் காதீ செயசெய
  718. ஒற்றை மருப்பை யுடையாய் செயசெய
  719. ஓங்கிய கரிமுக முற்றாய் செயசெய
  720. ஔவிய மில்லா தவனே செயசெய
  721. அ, ஃகர வணிந்த வாதீ செயசெய
  722. கண்மூன் றுடைய களிறே செயசெய
  723. ஙப்போன் மழுவொன் றேந்தி செயசெய
  724. சங்கரன் றேரச் சறுத்தாய் செயசெய
  725. ஞயமுடை வித்தக நம்பீ செயசெய
  726. இ, டமுடை விக்கி னேசுரா செயசெய
  727. இ, ணங்கிய வன்பர்க் கினியாய் செயசெய
  728. பகீரதிக் கினிய பாலா செயசெய
  729. மன்று ளாடி மகனே செயசெய
  730. இ, யக்கரைக் களையு மிறைவா செயசெய
  731. அ, ரவக் கிங்கிணி யணிவாய் செயசெய
  732. இ, லகக் கொம்பொன் றேந்தீ செயசெய
  733. அ, ழகிய வேலனுக் கண்ணா செயசெய
  734. இ, றக்கரி சாடு மிறைவா செயசெய
  735. அ, னந்த லாடு மரசே செயசெய
  736. கரமைந் துடைய கணபதி செயசெய
  737. கீழ்மை யொழித்தும் கிளர்வாய் செயசெய
  738. கெண்டையங் கண்ணுமை மகனே செயசெய
  739. கேதா ரப்பிரிய மானாய் செயசெய
  740. கையிற் சக்கர முடையாய் செயசெய
  741. கோலக் குடநிகர் வயிற்றாய் செயசெய
  742. கௌவைப் பழவினை தீர்ப்பாய் செயசெய.
  743. தத்துவஞானத் திருவகவல்

    Auvaiyār’s Vināyakar Akaval, recited after the Piḷḷaiyār Katai

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
  744. பாதச் சிலம்பு பலவிசை பாடப்
  745. பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
  746. வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
  747. வேழ முகமும் வெண்ணீற் றணியும்
  748. அஞ்சு கரமும் அங்குச பாசமு
  749. நான்ற வாயு நாலிரு புயமும்
  750. மூன்று கண்ணு மும்மத யாறும்
  751. இரண்டு செவியு மிலங்குபொன் முடியுந்
  752. திரண்டமுப் புரிநூற் றிருமார் பகமும்
  753. அற்புத னீன்ற கற்பகக் களிறே
  754. முப்பழ நுகரு மூடிக வாகனா
  755. இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
  756. தாயா யெனக்குத் தானெழுந் தருளி
  757. மாயாப் பிறவி மயக்கை யறுத்துத்
  758. திருந்துநம் முதலஞ் செழுத்தையுங் காட்டிப்
  759. பொருந்திய வெனது புன்மனம் புகுந்து
  760. வாடா வண்ணம் வந்தெனக் கருளிக்
  761. கோடா யுதத்தாற் கொடுவினை களைந்து
  762. தெவிட்டாப் போதஞ் செப்பியென் செவியில்
  763. உவட்டா ஞானத் துண்மையுங் காட்டி
  764. ஐம்புலன் றன்னை யடக்குமு பாயமும்
  765. இன்புறு கருணையு மெனக்கினி தருளித்
  766. தலமொரு மூன்றுந் தந்தெனக் கருளி
  767. மலமொரு மூன்றின் மயக்கமு மறுத்தே
  768. ஒன்பது வாயி லொருமந் திரத்தால்
  769. அன்புறு கதவை யடைப்பதுங் காட்டி
  770. ஆறா தாரத் தங்குள நிலையை
  771. பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
  772. இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக்
  773. மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணில்
  774. நான்றெழு வாயி னாவி லுணர்த்திக்
  775. குண்டலி தன்னைக் கூறு மியல்பை
  776. விண்டெழு மந்திரம் விழைவுறச் செப்பி
  777. மூலா தார மூண்டெழு கனலைக்
  778. காலா லெழுப்பிக் கருத்தறி வித்தே
  779. அமுத கலசமு மலரி யியக்கமும்
  780. இடைச்சக் கரத்தி னெட்டு நிலையோ
  781. டுடற்சக் கரத்தி னுயிர்ப்பையுங் காட்டிச்
  782. எண்முக மாகிய வெண்பதொன் றிடமும்
  783. புரியட்ட காயமும் புலப்பட வெனக்குத்
  784. தெரியெண் நிலையுந் தெரிசனப் படுத்திக்
  785. கருத்தி லிருத்திக் கபாடங் காட்டி
  786. இருத்தி முத்தி சித்தியெற் கருளி
  787. என்னை யறிவித் தெனக்கருள் செய்து
  788. முன்னைப் பழவினை முதலறக் களைந்து
  789. வாக்கு மனமு மில்லா மனோலயந்
  790. தேக்கி யெனக்குச் சிந்தை தெளிந்தே
  791. இருவினை தனக்கு மியையுற நின்ற
  792. கருவினை வராக் கருத்தறி வித்தே
  793. எல்லையில் லாதோ ரின்பினை யருளி
  794. அல்லல் களைந்திட் டருள்வெளி யாக்கிச்
  795. சித்தத் துட்சிவ லிங்கங் காட்டிச்
  796. சத்தத் துள்ளே சதாசிவங் காட்டி
  797. அணுவுக் கணுவா யப்பாற் கப்பாற்
  798. வேடமு நீறும் விளங்க நிறுத்திக்
  799. அஞ்சக் கரத்தி னருள்புரி வித்து
  800. நெஞ்சக் கருத்தி னிலைபுகு வித்தே
  801. தத்துவ நிலையுந் தந்தெனை யாண்ட
  802. வித்தக விநாயகன் விரைகழற் சரணத்
  803. துரிமை சேர் அகவல் ஓதினார்
  804. பொருளொடு தவமும் புகழும் பெறுவரே.