Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Maṇṭalattiṉ
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை
யகோவெனவும் வாரணாதி, யண்டமவை யடுக்கடுக்
கா யந்தரத்தி னிறுத்து மவதானம்போல, வெண்ட
ருநல் லகிலாண்ட கோடியைத் தன்னருள் வெளியி
லிலகவைத்துக், கொண்டுநின்ற வற்புதத்தை யெவ
ராலு நிச்சயிக்கக் கூடாவொன்றை.
2
Keep
ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங் கடந்
தேழாம் யோகபூமி, நின்று தெளிந்தவர் பேசா
மௌனநியா யத்தைநிறை நிறைவைத்தன்னை, அன்
றியொரு பொருளிலதா வெப்பொருட்குந் தான்
முதலா யசலமாகி, யென்றுமுள்ள வின்பத்தைத்
தண்ணென்ற சாந்தபத வியற்கை தன்னை.
3
Keep
பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலான ஞானபதப்
பரிசு காட்டிச், சதமாகி நிராலம்ப சாக்ஷியதா யார
ம்பத் தன்மையாகி, விதம்யாவுங் கடந்தவித்தை
யெனுமிருளைக்கீண்டெழுந்து விமலமாகி, மதமாறுங்
காணாதவானந்த சாகரத்தை மௌனவாழ்வை.
4
Keep
வாழ்வனைத்துந் தந்தவின்ப மாகடலைநல்லமிர்தை
மணியைப் பொன்னைத், தாழ்வற வென்னுளத்திரு
ந்த தத்துவத்தை யத்துவித சாரந்தன்னைச், சூழ்பெ
ரும்பே ரொளியையொளி பரந்தபர வெளியையின்
பச்சுகத்தைமாறா, வேழுலகுங்கலந்தின்றாய் நாளையா
யென்றுமா மியற்கைதன்னை.
5
Keep
தன்னையறிந் தவர்தம்மைத் தானாகச் செய்தரு
ளுஞ் சமத்தைலோக, மின்னைநிகர்த் திடவழியாச்
சொரூபானந் தச்சுடரை வேதமாதி, யென்னையறி
வரிதென்னச் சமயகோ டிகளிடைய விடையறாத,
பொன்னைவிரித் திடுமுலகத் தும்பருமிம் பரும்பர
வும் புனிதமெய்யை.
6
Keep
பரவரிய பரசிவமா யதுவெனலாய் நானெனலா
ய்ப் பாசசாலம், விரவிநின்ற விசித்திரத்தை யைக்ய
பதத் தினிதிருந்த விவேகந் தன்னை, இரவுபகனினை
ப்புமறப் பெனுந்தொந்த மறியார்க ளிதயம்வேதச்,
சிரமெனவாழ் பராபரத்தை யானந்த நீங்காத சிதா
காசத்தை.
7
Keep
அத்துவித வனுபவத்தை யனந்தமறை யின்ன
மின்ன மறியேமென்னு, நித்தியத்தை நிராமயத்
தை நிர்க்குணத்தைத் தன்னருளா னினைவுக்குள்ளே,
வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தானாகவெந்நா
ளும்வளர்த்துக்காக்குஞ், சித்தினைமா தூவெளியைத்
தன்மயமா மானந்தத் தெய்வந் தன்னை.
8
Keep
தன்னிலே தானாக நினைந்துகனிந் தவிழ்ந்துசுக
சமாதியாகப், பொன்னிலேபணிபோலு மாயைதரு
மனமேயுன் புரைகடீர்ந்தா, யென்னினோ யான்பி
ழைப்பேனெனக்கினியா ருன்போல்வாரில்லையில்லை,
உன்னிலோ திருவருளுக் கொப்பாவா யென்னுயிர்
க்கோ ருறவுமாவாய்.
9
Keep
உறவுடலை யெடுத்தவரிற் பிரமாதி யேனுமுனை
யொழிந்துதள்ளற், கறவுமரி தரிதன்றோ விகபரமு
முன்னையன்றி யாவதுண்டோ, வறிதிலுன்னை யசத்
தென்னல் வழக்கன்று சத்தெனவும் வாழ்த்துவே
னென், சிறுமைகெடப் பெருமையினின் சென்மதே
யத்தினினீ செல்லல் வேண்டும்.
10
Keep
வேண்டியநா ளென்னோடும் பழகியநீ யெனைப்பிரி
ந்த விசாரத் தாலே, மாண்டுகிடக் கினுமந்தவெல்லை
யையும் பூரணமா வணக்கஞ்செய்வே, னாண்டகுரு
மௌனிதன்னால் யானெனதற் றவனருணானாவேன்
பூவிற், காண்டகவென் சித்திமுத்தி யெனக்குண்டா
முன்னாலென் கவலைதீர்வேன்.
11
Keep
தீராதவென்சனன வழக்கெல்லாந்தீருமிந்தச் சன
னத்தோடே, ஆரேனு மரிவறிய சீவன்முத்தி யுண்
டாகு மையவையோ, காரேனுங் கற்பகப்பூங்காவே
னு முனக்குவமை காட்டப் போமோ, பாராதியாக
வெழு மண்டலத்தி னின்மகிமை பகரலாமோ.
Previous
←
Eṉakkeṉacceyal
Next
Pāyappuli
→