The works of Ramaṇa Maharṣi

Aruṇācala Padikam

Verse 11

கிரியிது பரமாக் கருதிய வென்போற்கெட்டவ ரெத்தனை கொல்லோவிரிதுய ராலிப் பிழைப்பினில் விழைவுவிட்டுடல் விட்டிட விரகுகருதியே திரிவீர் கருத்தினு ளொருகாற்கருதிடக் கொலாமலே கொல்லுமருமருந் தொன்றுண் டவனியி லதுதானருணமா திரமென வறிவீர்.

கிரி இது பரமாக் கருதிய என்போல் கெட்டவர் எத்தனை கொல்லோ விரி துயரால் இப் பிழைப்பினில் விழைவு விட்டு உடல் விட்டிட விரகு கருதியே திரிவீர் கருத்தினுள் ஒருகால் கருதிட கொலாமலே கொல்லும் அரு மருந்து ஒன்று உண்டு அவனியில் அது தான் அருணமா திரம் என அறிவீர்

In plain words

How many people have been ruined the way I was, taking this hill for the Absolute? I wonder. There must be a crowd of us. And you — you who go about looking for a trick that will let you drop your cravings and drop the body, in this sorry business of getting by that sorrow has spread out all around you — think of it once. Just once, inside your mind. There is one rare medicine on this earth. It kills without killing anything at all. It is Aruna, the great one. The one that does not move. Know that.

Word for word

How many are the ruined ones like me, I wonder, who held this hill to be the Supreme! You who wander about plotting a device by which to give up craving and give up the body in this way of living that is spread out by sorrow — if it be thought of within your mind once, there is on earth one rare medicine that kills without killing at all. Know it to be verily the great Aruna, the Immovable.