Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Tiruvaruḷvilācap paraciva vaṇakkam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
அங்கிங்கெனாதபடி யெங்கும்ப்ரகாசமா
யானந்தபூர்த்தியாகி
யருளொடுநிறைந்ததெது தன்னருள்வெளிக்குளே
யகிலாண்டகோடியெல்லாந்
தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க்குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினிற்
றட்டாமனின்றதெது சமயகோடிகளெலாந்
தந்தெய்வமெந்தெய்வமென்
றெங்குந்தொடர்ந்தெதிர் வழக்கிடவுநின்றதெது
வெங்கணும்பெருவழக்காய்
யாதினும்வல்லவொரு சித்தாகியின்பமா
யென்றைக்குமுள்ளதெதுமேற்
கங்குல்பகலறநின்ற வெல்லையுளதெதுவது
கருத்திற்கிசைந்தததுவே
கண்டனவெலாமோன வுருவெளியதாகவுங்
கருதியஞ் சலிசெய்குவாம்.
2
Keep
ஊரனந்தம்பெற்ற பேரனந்தஞ்சுற்று
முறவனந்தம்வினையினா
லுடலனந்தஞ்செயும் வினையனந்தங்கருத்
தோவனந்தம்பெற்றபேர்
சீரனந்தஞ்சொர்க்க நரகமுமனந்தநற்
றெய்வமுமனந்தபேதந்
திகழ்கின்றசமயமு மனந்தமதனான்ஞான
சிற்சத்தியாலுணர்ந்து
காரனந்தங்கோடி வருக்ஷித்ததெனவன்பர்
கண்ணும்விண்ணுந்தேக்கவே
கருதரியவானந்த மழைபொழியுமுகிலைநங்
கடவுளைத்துரியவடிவைப்
பேரனந்தம்பேசி மறையனந்தஞ்சொலும்
பெரியமௌனத்தின்வைப்பைப்
பேசருமனந்தபத ஞானவானந்தமாம்
பெரியபொருளைப்பணிகுவாம்.
3
Keep
அத்துவிதவத்துவைச் சொற்ப்ரகாசத்தனியை
யருமறைகண்முரசறையவே
யறிவினுக்கறிவாகி யானந்தமயமான
வாதியையநாதியேக
தத்துவசொரூபத்தை மதசம்மதம்பெறாச்
சாலம்பரகிதமான
சாசுவதபுட்கல நிராலம்பவாலம்ப
சாந்தபதவ்யோமநிலையை
நித்தநிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப்பொருளை
நிர்விஷயசுத்தமான
நிர்விகாரத்தைத் தடத்தமாய்நின்றொளிர்
நிரஞ்சனநிராமயத்தைச்
சித்தமறியாதபடி சித்தத்தினின்றிலகு
திவ்யதேசோமயத்தைச்
சிற்பரவெளிக்குள்வளர் தற்பரமதானபர
தேவதையையஞ்சலிசெய்வாம்.
Next
Paripūraṇāṉantam
→