Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Paripūraṇāṉantam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
வாசாகயிங்கரிய மன்றியொருசாதன
மனோவாயுநிற்கும்வண்ணம்
வாலாயமாகவும் பழகியறியேன்றுறவு
மார்க்கத்தினிச்சைபோல
நேசானுசாரியாய் விவகரிப்பேனந்த
நினைவையுமறந்தபோது
நித்திரைகொள்வேன்றேகநீங்குமெனவெண்ணிலோ
நெஞ்சந்துடித்தயருவேன்
பேசாதவானந்த நிட்டைக்குமறிவிலாப்
பேதைக்கும்வெகுதூரமே
பேய்க்குணமறிந்திந்த நாய்க்குமொருவழிபெரிய
பேரின்பநிட்டையருள்வாய்
பாசாடவிக்குளே செல்லாதவர்க்கருள்
பழுத்தொழுகுதேவதருவே
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
2
Keep
தெரிவாகவூர்வன நடப்பனபறப்பன
செயற்கொண்டிருப்பனமுதற்
றேகங்களத்தனையு மோகங்கொள்பௌதிகஞ்
சென்மித்தவாங்கிறக்கும்
விரிவாயபூதங்க ளொன்றோடொன்றாயழியு
மேற்கொண்டசேடமதுவே
வெறுவெளிநிராலம்ப நிறைசூன்யமுபசாந்த
வேதவேதாந்தஞானம்
பிரியாதபேரொளி பிறக்கின்றவருளருட்
பெற்றோர்கள்பெற்றபெருமை
பிறவாமையென்றைக்கு மிறவாமையாய்வந்து
பேசாமையாகுமெனவே
பரிவாயெனக்குநீ யறிவிக்கவந்ததே
பரிபாககாலமலவோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
3
Keep
ஆராயும்வேளையிற் பிரமாதியானாலு
மையவொருசெயலுமில்லை
யமைதியொடுபேசாத பெருமைபெறுகுணசந்த்ர
ராமெனவிருந்தபேரும்
நேராகவொருகோப மொருவேளைவரவந்த
நிறைவொன்றுமில்லாமலே
நெட்டுயிர்த்துத்தட் டழிந்துளறுவார்வசன
நிர்வாகரென்றபேரும்
பூராயமாயொன்று பேசுமிடமொன்றைப்
புலம்புவார்சிவராத்திரிப்
போதுதுயிலோமென்ற விரதியருமறிதுயிற்
போலேயிருந்துதுயில்வார்
பாராதிதனிலுள்ள செயலெலாமுடிவிலே
பார்க்கினின்செயலல்லவோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
4
Keep
அண்டபகிரண்டமும் மாயாவிகாரமே
யம்மாயையில்லாமையே
யாமெனவுமறிவுமுண் டப்பாலுமறிகின்ற
வறிவினையறிந்துபார்க்கி
னெண்டிசைவிளக்குமொருதெய்வவருளல்லாம
லில்லையெனுநினைவுமுண்டிங்
கியானெனதறத்துரிய நிறைவாகிநிற்பதே
யின்பமெனமன்புமுண்டு
கண்டனவெலாமல்ல வென்றுகண்டனைசெய்து
கருவிகரணங்களோயக்
கண்மூடியொருகண மிருக்கவென்றாற்பாழ்த்த
கர்மங்கள்போராடுதே
பண்டையுளகர்மமே கர்த்தாவெனும்பெயர்ப்
பக்ஷநானிச்சிப்பனோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
5
Keep
சந்ததமுமெனதுசெய னினதுசெயலியானெனுந்
தன்மைநினையன்றியில்லாத்
தன்மையால்வேறலேன் வேதாந்தசித்தாந்த
சமரசசுபாவமிதுவே
யிந்தநிலைதெளியநா னெக்குருகிவாடிய
வியற்கைதிருவுளமறியுமே
யிந்நிலையிலேசற் றிருக்கவென் றான்மடமை
யிதசத்ருவாகவந்து
சிந்தைகுடிகொள்ளுதே மலமாயைகன்மந்
திரும்புமோதொடுவழக்காய்ச்
சென்மம்வருமோவெனவும் யோசிக்குதேமனது
சிரத்தையெனும்வாளுமுதவிப்
பந்தமறமெய்ஞ்ஞான தீரமுந்தந்தெனைப்
பாதுகாத்தருள்செய்குவாய்
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
6
Keep
பூதலயமாகின்ற மாயைமுதலென்பர்சிலர்
பொறிபுலனடங்குமிடமே
பொருளென்பர்சிலர்கரண முடிவென்பர்சிலர்குணம்
போனவிடமென்பர்சிலபேர்
நாதவடிவென்பர்சிலர் விந்துமயமென்பர்சிலர்
நட்டநடுவேயிருந்த
நாமென்பர்சிலருருவ மாமென்பர்சிலர்கருதி
நாடிலருவென்பர்சிலபேர்
பேதமறவுயிர்கெட்ட நிலயமென்றிடுவர்சிலர்
பேசினருவென்பர்சிலபேர்
பின்னுமுன்னுங்கெட்ட சூனியமதென்பர்சிலர்
பிறவுமேமொழிவரிவையாற்
பாதரசமாய்மனது சஞ்சலப்படுமலாற்
பரமசுகநிட்டைபெறுமோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
7
Keep
அந்தகாரத்தையோ ரகமாக்கிமின்போலெ
னறிவைச்சுருக்கினவரா
ரவ்வறிவுதானுமே பற்றினதுபற்றா
யழுந்தவுந்தலைமீதிலே
சொந்தமாயெழுதப் படித்ததார்மெய்ஞ்ஞான
சுகநிட்டைசேராமலே
சோற்றுத்துருத்தியைச் சதமெனவுமுண்டுண்டு
தூங்கவைத்தவரார்கொலோ
தந்தைதாய்முதலான வகிலப்ரபஞ்சந்
தனைத்தந்ததெனதாசையோ
தன்னையேநோவனோ பிறரையேநோவனோ
தற்காலமதைநோவனோ
பந்தமானதுதந்த வினையையேநோவனோ
பரமார்த்தமேதுமறியேன்
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
8
Keep
வாராதெலாமொழிய வருவனவெலாமெய்த
மனதுசாக்ஷியதாகவே
மருவநிலைதந்ததும் வேதாந்தசித்தாந்த
மரபுசமரசமாகவே
பூராயமாயுணர வூகமதுதந்ததும்
பொய்யுடலைநிலையன்றெனப்
போதநெறிதந்ததுஞ் சாசுவதவானந்த
போகமேவீடென்னவே
நீராளமாயுருக வுள்ளன்புதந்தது
நின்னதருளின்னுமின்னும்
நின்னையேதுணையென்ற வென்னையேகாக்கவொரு
நினைவுசற்றுண்டாகிலோ
பாராதியறியாத மோனமேயிடைவிடாப்
பற்றாகநிற்கவருள்வாய்
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
9
Keep
ஆழாழிகரையின்றி நிற்கவிலையோகொடிய
வாலமமுதாகவிலையோ
அக்கடலின்மீதுவட வனனிற்கவில்லையோ
வந்தரத்தகிலகோடி
தாழாமனிலைநிற்க வில்லையோமேருவுந்
தனுவாகவளையவிலையோ
சத்தமேகங்களும் வச்ரதரனாணையிற்
சஞ்சரித்திடவில்லையோ
வாழாதுவாழவே யிராமனடியாற்சிலையு
மடமங்கையாகவிலையோ
மணிமந்த்ரமாதியால் வேண்டுசித்திகளுலக
மார்க்கத்தில்வைக்கவிலையோ
பாழானவென்மனங் குவியவொருதந்திரம்
பண்ணுவதுனக்கருமையோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
10
Keep
ஆசைக்கொரளவில்லை யகிலமெல்லாங்கட்டி
யாளினுங்கடன்மீதிலே
ஆணைசெலவேநினைவ ரளகேசனிகராக
வம்பொன்மிகவைத்தபேரும்
நேசித்துரசவாத வித்தைக்கலைந்திடுவர்
நெடுநாளிருந்தபேரும்
நிலையாகவேயினுங் காயகற்பந்தேடி
நெஞ்சுபுண்ணாவரெல்லாம்
யோசிக்கும்வேளையிற் பசிதீரவுண்பது
முறங்குவதுமாகமுடியு
முள்ளதேபோதுநா னானெனக்குளறியே
யொன்றைவிட்டொன்றுபற்றிப்
பாசக்கடற்குளே வீழாமன்மனதற்ற
பரிசுத்தநிலையையருள்வாய்
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
Previous
←
Tiruvaruḷvilācap paraciva vaṇakkam
Next
Poruḷvaṇakkam
→