Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Ciṟcukōtayavilācam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
காகமோடுகழு கலகைநாய்நரிகள்
சுற்றுசோறிடுதுருத்தியைக்
காலிரண்டுநவ வாசல்பெற்றுவளர்
காமவேணடனசாலையை
மோகவாசைமுறி யிட்டபெட்டியைமு
மலமிகுந்தொழுகுகேணியை
மொய்த்துவெங்கிருமி தத்துகும்பியை
முடங்கலார்கிடைசரக்கினை
மாகவிந்த்ரதனு மின்னையொத்திலக
வேதமோதியகுலாலனார்
வனையவெய்யதடி காரனானயமன்
வந்தடிக்குமொருமட்கலத்
தேகமானபொயை மெய்யெனக்கருதி
யையவையமிசைவாடவோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
2
Keep
குறிகளோடுகுண மேதுமின்றியன
லொழுகநின்றிடுமிரும்பனற்
கூடலின்றியது வாயிருந்தபடி
கொடியவாணவவறைக்குளே
யறிவதேதுமற வறிவிலாமைமய
மாயிருக்குமெனையருளினா
லளவிலாததனு கரணமாதியை
யளித்தபோதுனையறிந்துநான்
பிறிவிலாதவண நின்றிடாதபடி
பலநிறங்கவருமுபலமாய்ப்
பெரியமாயையி லழுந்திநின்னது
ப்ரசாதநல்லருண்மறந்திடுஞ்
சிறியனேனுமுனை வந்தணைந்துசுக
மாயிருப்பதினியென்றுகாண்
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
3
Keep
ஐந்துபூதமொரு கானனீரென
வடங்கவந்தபெருவானமே
யாதியந்தநடுவேதுமின்றியரு
ளாய்நிறைந்திலகுசோதியே
தொந்தரூபமுட னரூபமாதிகுறி
குணமிறந்துவளர்வஸ்துவே
துரியமேதுரிய வுயிரினுக்குணர்வு
தோன்றநின்றருள்சுபாவமே
யெந்தநாளுநடு வாகிநின்றொளிரு
மாதியேகருணைநீதியே
யெந்தையேயென விடைந்திடைந்துருகு
மெளியனேன்கவலைதீரவுஞ்
சிந்தையானதை யறிந்துநீயுனருள்
செய்யநானுமினியுய்வனோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
4
Keep
ஐவரென்றபுல வேடர்கொட்டம
தடங்கமர்க்கடவன்முட்டியா
யடவிநின்றுமலை யருகினின்றுசரு
காதிதின்றுபனிவெயிலினான்
மெய்வருந்துதவ மில்லைநற்சரியை
கிரியையோகமெனுமூன்றதாய்
மேவுகின்றசவு பானநன்னெறி
விரும்பவில்லையுலகத்திலே
பொய்முடங்குதொழில் யாததற்குநல
சாரதித்தொழினடத்திடும்
புத்தியூகமறி வற்றமூகமிவை
பொருளெனக்கருதுமருளன்யான்
தெய்வநல்லருள் படைத்தவன்பரொடு
சேரவுங்கருணைகூர்வையோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
5
Keep
ஏகமானவுரு வானநீயருளி
னாலனேகவுருவாகியே
யெந்தநாளகில கோடிசிருஷ்டிசெய
விசையுநாள்வரையநான்முத
லாகநாளது வரைக்குமுன்னடிமை
கூடவேசனனமானதோ
வனந்தமுண்டுநல சனனமீதிதனு
ளறியவேண்டுவனவறியலாம்
மோகமாதிதரு பாசமானதை
யறிந்துவிட்டுனையுமெனையுமே
முழுதுணர்ந்துபக மானவின்பவெள
மூழ்கவேண்டுமிதுவின்றியே
தேகமேநழுவி நானுமோநழுவின்
பின்னையுய்யும்வகையுள்ளதோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
6
Keep
நியமலட்சணமு மியமலக்ஷணமு
மாசனாதிவிதபேதமு
நெடிதுணர்ந்திதய பத்மபீடமிசை
நின்றிலங்குமசபாநலத்
தியலறிந்துவளர் மூலகுண்டலியை
யினிதிறைஞ்சியவளருளினா
லெல்லையற்றுவளர் சோதிமூலவன
லெங்கண்மோனமனுமுறையிலே
வயமிகுந்துவரு மமிர்தமண்டல
மதிக்குளேமதியைவைத்துநான்
வாய்மடுத்தமிர்த வாரியைப்பருகி
மன்னுமாரமிர்தவடிவமாய்ச்
செயமிகுந்துவரு சித்தயோகநிலை
பெற்றுஞானநெறியடைவனோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
7
Keep
எறிதிரைக்கடனி கர்த்தசெல்வமிக
வல்லலென்றொருவர்பின்செலா
தில்லையென்னுமுரை பேசிடாதுலகி
லெவருமாமெனமதிக்கவே
நெறியின்வைகிவளர் செல்வமும்முதவி
நோய்களற்றசுகவாழ்க்கையாய்
நியமமாதிநிலை நின்றுஞானநெறி
நிட்டைகூடவுமெந்நாளுமே
யறிவினின்றுகுரு வாயுணர்த்தியது
மன்றிமோனகுருவாகியே
யகிலமீதுவர வந்தசீரருளை
யையவையவினியென்சொல்கேன்
சிறியனேழைநம தடிமையென்றுனது
திருவுளத்தினிலிருந்ததோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
8
Keep
எவ்வுயிர்த்திரளு முலகினென்னுயி
ரெனக்குழைந்துருகிநன்மையா
மிதமுரைப்பவென தென்றயாவையு
மெடுத்தெறிந்துமதயானைபோற்
கவ்வையற்றநடை பயிலவன்பரடி
கண்டதேவருளின்வடிவமாக்
கண்டயாவையு மகண்டமென்னவிரு
கைகுவித்துமலர்தூவியே
பவ்வவெண்டிரை கொழித்ததண்டரளம்
விழியுதிர்ப்பமொழிகுளறியே
பாடியாடியு ளுடைந்துடைந்தெழுது
பாவையொத்தசைதலின்றியே
திவ்யவன்புருவ மாகியன்பரொடு
மின்பவீட்டினிலிருப்பனோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
9
Keep
மத்தர்பேயரொடு பாலர்தன்மையது
மருவியேதுரியவடிவமாய்
மன்னுதேசமொடு காலமாதியை
மறந்துநின்னடியரடியிலே
பத்தியாய்நெடிது நப்புமென்னையொரு
மையறந்தகிலமாயையைப்
பாருபாரென நடத்தவந்ததென
பாரதத்தினுமிதுள்ளதோ
சுத்தநித்தவியல் பாகுமோவுனது
விசுவமாயைநடுவாகவே
சொல்லவேண்டும்வகை நல்லகாதிகதை
சொல்லுமாயையினுமில்லையென்
சித்தமிப்படி மயங்குமோவருளை
நம்பினோர்கள்பெறுபேறிதோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
10
Keep
பன்முகச்சமய நெறிபடைத்தவரு
மியாங்களேகடவுளென்றிடும்
பாதகத்தவரும் வாததர்க்கமிடு
படிறருந்தலைவணங்கிடத்
தன்முகத்திலுயிர் வரவழைக்குமெம
தருமனும்பகடுமேய்க்கியாய்த்
தனியிருப்பவட நீழலூடுவளர்
சனகனாதிமுனிவோர்கடஞ்
சொன்மயக்கமது தீரவங்கைகொடு
மோனஞானமதுணர்த்தியே
சுத்தநித்தவரு ளியல்பதாகவுள
சோமசேகரகிர்பாலுவாய்த்
தென்முகத்தின்முக மாயிருந்தகொலு
வெம்முகத்தினும்வணங்குவேன்
றெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்சுகோதயவிலாசமே.
Previous
←
Tēcōmayāṉantam
Next
Ākārapuvaṉam citampararakaciyam
→