Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Tēcōmayāṉantam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
மருமலர்ச்சோலைசெறி நன்னீழன்மலையாதி
மன்னுமுனிவர்க்கேவலாய்
மந்த்ரமாலிகைசொல்லு மியமநியமாதியா
மார்க்கத்தினின்றுகொண்டு
கருமருவுகாயத்தை நிர்மலமதாகவே
கமலாசனாதிசேர்த்துக்
காலைப்பிடித்தனலை யம்மைகுண்டலியடிக்
கலைமதியினூடுதாக்கி
யுருகிவருமமிர்தத்தை யுண்டுண்டுறங்காம
லுணர்வானவிழியைநாடி
யொன்றோடிரண்டெனாச் சமரசசொரூபசுக
முற்றிடவென்மனதின்வண்ணந்
திருவருண்முடிக்கவித் தேகமொடுகாண்பனோ
தேடரியசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
2
Keep
இப்பிறவியெனுமோ ரிருட்கடலின்மூழ்கிநா
னென்னுமொருமகரவாய்ப்பட்
டிருவினையெனுந்திரையி னெற்றுண்டுபுற்புத
மெனக்கொங்கைவரிசைகாட்டுந்
துப்பிதழ்மடந்தையர் மயற்சண்டமாருதச்
சுழல்வந்துவந்தடிப்பச்
சோராதவாசையாங் கானாறுவானதி
சுரந்ததெனமேலுமார்ப்பக்
கைப்பரிசுகாரர்போ லறிவானவங்கமுங்
கைவிட்டுமதிமயங்கிக்
கள்ளவங்கக்காலர் வருவரென்றஞ்சியே
கண்ணருவிகாட்டுமெளியேன்
செப்பரியமுத்தியாங் கரைசேரவுங்கருணை
செய்வையோசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
3
Keep
தந்தைதாய்தமர்தார மகவென்னுமிவையெலாஞ்
சந்தையிற்கூட்டமிதிலோ
சந்தேகமில்லைமணி மாடமாளிகைமேடை
சதுரங்கசேனையுடனே
வந்ததோர்வாழ்வுமோ ரிந்த்ரசாலக்கோலம்
வஞ்சனைபொறாமைலோபம்
வைத்தமனமாங்கிருமி சேர்ந்தமலபாண்டமோ
வாஞ்சனையிலாதகனவே
யெந்தநாளுஞ்சரி யெனத்தேர்ந்துதேர்ந்துமே
யிரவுபகலில்லாவிடத்
தேகமாய்நின்றநின் னருள்வெள்ளமீதிலே
யானென்பதறவுமூழ்கிச்
சிந்தைதான்றெளியாது சுழலும்வகையென்கொ
லோ தேடரியசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
4
Keep
ஆடாமலோய்ந்திட்ட பம்பரம்போல்விசை
யடங்கிமனம்வீழநேரே
யறியாமையாகின்ற விருளகலவிருளொளியு
மல்லாதிருந்தவெளிபோற்
கோடாதெனைக்கண் டெனக்குணிறைசாந்தவெளி
கூடியின்பாதீதமுங்
கூடினேனோசரியை கிரியையின்முயன்றுநெறி
கூடினேனோவல்லனியா
னீடாகவேயாறு வீட்டினினிரம்பியே
யிலகிவளர்பிராணனென்னு
மிருநிதியினைக்கட்டி யோகபரனாகாம
லேழைக்குடும்பனாகித்
தேடாதழிக்கவொரு மதிவந்ததென்கொலோ
தேடரியசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
5
Keep
பாடாதுபாடிப் படித்தளவில்சமயமும்
பஞசுபடுசொல்லனிவனைப்
பார்மினோபார்மினோ வென்றுசபைகூடவும்
பரமார்த்தமிதுவென்னவே
யாடாதுமாடிநெஞ் சுருகிநெக்காடவே
யமலமேயேகமேயெம்
மாதியேசோதியே யெங்குநிறைகடவுளே
யரசேயெனக்கூவிநான்
வாடாதுவாடுமென் முகவாட்டமுங்கண்டு
வாடாவெனக்கருணைநீ
வைத்திடாவண்ணமே சங்கேதமாவிந்த
வன்மையைவளர்ப்பித்ததார்
தேடாதுதேடுவோர் தேட்டற்றதேட்டமே
தேடரியசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
6
Keep
பிறியாததன்னருட் சிவஞானியாய்வந்து
பேசரியவாசியாலே
பேரின்பவுண்மையை யளித்தனையென்மனதறப்
பேரம்பலக்கடவுளா
யறிவாயிருந்திடும் நாதவொலிகாட்டியே
யமிர்தப்பிரவாகசித்தி
யருளினையலாதுதிரு வம்பலமுமாகியெனை
யாண்டனைபினெய்திநெறியாப்க்
குறிதானளித்தனைநன் மரவுரிகளந்தணக்
கோலமாயசபாநலங்
கூறினபின்மௌனியாய்ச் சும்மாவிருக்கநெறி
கூட்டினையெலாமிருக்கச்
சிறியேன்மயங்கிமிக வறிவின்மையாவனோ
தேடரியசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
7
Keep
ஆராரெனக்கென்ன போதித்துமென்னவென்
னறிவினைமயக்கவசமோ
வண்டகோடியையெலாங் கருப்பவறைபோலவு
மடுக்கடுக்காவமைத்துப்
பேராயனின்றபர வெளியிலேமனவெளி
பிறங்குவதலாதொன்றினும்
பின்னமுறமருவாது நன்னயத்தாலினிப்
பேரின்பமுத்திநிலையுந்
தாராதுதள்ளவும் போகாதுனாலது
தள்ளினும்போகேனியான்
றடையேதுமில்லையாண்டவ னடிமையென்னுமிரு
தன்மையிலுமென்வழக்குத்
தீராதுவிடுவதில்லை நடுவானகடவுளே
தேடரியசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
8
Keep
கந்துகமதக்கரியை வசமாநடத்தலாங்
கரடிவெம்புலிவாயையுங்
கட்டலாமொருசிங்க முதுகின்மேற்கொள்ளலாங்
கட்செவியெடுத்தாட்டலாம்
வெந்தழலினிரதம்வைத் தைந்துலோகத்தையும்
வேதித்துவிற்றுண்ணலாம்
வேறொருவர்காணாம லுலகத்துலாவலாம்
விண்ணவரையேவல்கொளலாஞ்
சந்ததமுமிளமையோ டிருக்கலாமற்றொரு
சரீரத்தினும்புகுதலாஞ்
சலமேனடக்கலாங் கனன்மேலிருக்கலாந்
தன்னிகரில்சித்திபெறலாஞ்
சிந்தையையடக்கியே சும்மாவிருக்கின்ற
திறமரிதுசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
9
Keep
எல்லாமறிந்தவரு மேதுமறியாதவரு
மில்லையெனுமிவ்வுலகமீ
தேதுமறியாதவ னெனப்பெயர்தரித்துமிக
வேழைக்குளேழையாகிக்
கல்லாதவறிவிற் கடைப்பட்டநானன்று
கையினாலுண்மைஞானங்
கற்பித்தநின்னருளி னுக்கென்னகைம்மாறு
காட்டுவேன்குற்றேவனா
னல்லார்ந்தமேனியொடு குண்டுகட்பிறையெயிற்
றாபாசவடிவமான
வந்தகாநீயொரு பகட்டாற்பகட்டுவ
தடாதடாகாசுநம்பாற்
செல்லாதடாவென்று பேசவாயதுதந்த
செல்வமேசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
10
Keep
மின்போலுமிடையொடியு மொடியுமெனமொழித
ல்போன் மென்சிலம்பொலிகளார்ப்ப
வீங்கிப்புடைத்துவிழ சுமையன்னகொங்கைமட
மின்னார்கள்பின்னேவலா
லென்போலலைந்தவர்கள் கற்றார்கள்கல்லார்க
ளிருவர்களிலொருவருண்டோ
வென்செய்கேனம்மம்ம வென்பாவமென்கொடுமை
யேதென்றெடுத்துமொழிவே
னன்பால்வியந்துருகி யடியற்றமரமென்ன
வடியிலேவீழ்ந்துவீழ்ந்தெம்
மடிகளேயுமதடிமை யாங்களெனுநால்வருக்
கறமாதிபொருளுரைப்பத்
தென்பாலின்முகமாகி வடவாலிருக்கின்ற
செல்வமேசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
11
Keep
புத்தமிர்தபோகமுங் கற்பகநனீழலிற்
பொலிவுறவிருக்குமியல்பும்
பொன்னுலகிலயிரா வதத்தேறுவரிசையும்
பூமண்டலாதிக்கமும்
மத்தவெறியினர்வேண்டு மாலென்றுதள்ளவுமெ
மாலுமொருசுட்டுமறவே
வைக்கின்றவைப்பாளன் மௌனதேசிகனென்ன
வந்தநின்னருள்வாழிகாண்
சுத்தபரிபூரண வகண்டமேயேகமே
சுருதிமுடிவானபொருளே
சொல்லரியவுயிரினிடை யங்கங்குநின்றருள்
சுரந்துபொழிகருணைமுகிலே
சித்திநிலைமுத்திநிலை விளைகின்றபூமியே
தேடரியசத்தாகியென்
சித்தமிசைகுடிகொண்ட வறிவானதெய்வமே
தேசோமயானந்தமே.
Previous
←
Caccitāṉantacivam
Next
Ciṟcukōtayavilācam
→