Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Tēṉmukam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
தேன்முகம் பிலுற்றும் பைந்தாட் செய்ய பங்கய
த்தின் மேவு, நான்முகத் தேவேநின்னா னாட்டிய
வகில மாயை, கான்முயற் கொம்பே யென்கோகா
னலம்புனலேயென்கோ, வான்முகமுளரி யென்கோ
மற்றென்கோ விளம்பல் வேண்டும்.
2
Keep
வேண்டுவ படைத்தாய் நுந்தைவிதிப்படி புரந்
தானத்தைக், காண்டகவழித்தான் முக்கட்கடவுடா
னினையவாற்றா, லாண்டவ னெவனோ வென்ன வறி
கிலா தகிலநீயே, யீண்டிய வல்லறீர வெம்மனோர்க்
கியம்பு கண்டாய்.
3
Keep
கண்டன வல்ல வென்றே கழித்திடுமிறுதிக்கண்
ணே, கொண்டதுபரமானந்தக் கோதிலாமுத்தியத்
தாற், பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன
மாயை யோடே, வெண்டலை விழிகை காலில் விளங்
கிட நின்றான் யாவன்.
4
Keep
விளங்கவெண் ணீறு பூசி விரிசடைக் கங்கை தா
ங்கித், துளங்குநன் னுதற்கண்டோன்றச் சுழல்வளி
நெடுமூச் சாகக், களங்கமி லுருவந்தானே ககன
மாய்ப் பொலியப்பூமி, வளர்ந்ததா ளென்னவுள்ள
மன்றென மறையொன்றின்றி.
5
Keep
மறைமுழக் கொலிப்பத் தானேவரதமோடபயக்
கைகண், முறைமையி னோங்கநாத முரசெனக் கற
ங்க வெங்குங், குறைவிலா வணநிறைந்து கோதிலா
நடனஞ்செய்வா, னிறையவனெனலா மியார்க்கு மி
தயசம் மதமீதல்லால்.
6
Keep
அல்லலாந் தொழில்படைத்தே யடிக்கடி யுருவெ
டுத்தே, மல்லன்மா ஞாலங்காக்க வருபவர் கடவு
ளென்னிற், றொல்லையாம் பிறவிவேலைதொலைந்திடா
திருணீங் காது, நல்லது மாயைதானு நானென
வந்து நிற்கும்.
7
Keep
நானென நிற்குஞான ஞான மன்றந்த ஞான,
மோனமா யிருக்க வொட்டா மோனமின் றாகவே
தான், தேனென ருசிக்கு மன்பாற் சிந்தை நைந்
துருகும் வண்ணம், வானென நிறைந்தா னந்தமா
கடல் வளைவ தின்றே.
8
Keep
இன்றென விருப்போ மென்னி னென்றுஞ் சூனி
யமா முத்தி, நன்றொடு தீதுமன்றிநா முன்னே
பெறும வித்தை, நின்றது பெத்தந்தானே நிரந்தர
முத்தி யென்னி, னொன்றொரு வரைநான் கேட்க
வுணர்வில்லை குருவு மில்லை.
9
Keep
இல்லையென் றிடினிப்பூமி யிருந்தவா றிருப்போ
மென்னி, னல்லவன் சாருவாக னான்சொலு நெறிக்
குவீணிற், றொல்லையேனாகமாதி தொடுப்பதேன் ம
யக்க மேதிங், கொல்லைவந்திருமி னென்ன வுறவு
செய் திடுவனந்தோ.
10
Keep
அந்தணர் நால்வர்காண வருட்குரு வாகிவந்த,
வெந்தையே யெல்லாந் தானென் றியம்பின னெ
மைப் படைத்த, தந்தைநீ யெம்மைக் காக்குந்தலை
வனே நுந்தை யன்றோ, பந்தமில் சித்தி முத்தி ப
டைக்கநின் னருள்பா லிப்பாய்.
Previous
←
Ākārapuvaṉam citampararakaciyam
Next
Paṉmālai
→