Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Paṉmālai
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
Paṉmālaittiraḷ…
Keep
பன்மாலைத்திரளிருக் கத்தமையுணர்ந்தோர்
பாமாலைக்கேநீதான் பக்ஷமென்று
நன்மாலையாவெடுத்துச் சொன்னார்நல்லோர்
நலமறிந்துகல்லாதநானுஞ்சொன்னேன்
சொன்மாலைமாலையாக் கண்ணீர்சோரத்
தொண்டனேனெந்நாளுந்துதித்துநிற்பே
னென்மாலையறிந்திங்கேவாவாவென்றே
யெனைக்கலப்பாய்திருக்கருணையெம்பிரானே.
Karuṇaimozhiciṟ…
Keep
கருணைமொழிசிறிதில்லேனீதலில்லேன்
கண்ணீர்கம்பலையென்றன்கருத்துக்கேற்க
வொருபொழுதும்பெற்றறியேனென்னையாளு
மொருவாவுன்னடிமைநானொருத்தனுக்கோ
விருவினையுமுக்குணமுங்கரணநான்கு
மிடர்செயுமைம்புலனுங்காமாதியாறும்
வரவரவுமேழைக்கோரெட்டதான
மதத்தொடும்வந்தெதிர்த்தநவவடிவமன்றே.
Vaṭivaṉaittunt…
Keep
வடிவனைத்துந்தந்தவடிவில்லாச்சுத்த
வான்பொருளேயெளியனேன் மனமாமாயைக்
குடிகெடுக்கத்துசங்கட்டிக்கொண்டமோன
குருவேயென்றெய்வமேகோதிலாத
படியெனக்கானந்தவெள்ளம்வந்துதேக்கும்
படியெனக்குந்திருக்கருணைபற்றுமாறே
யடியெடுத்தென்முடியிலின்னம்வைக்கவேண்டு
மடிமுடியொன்றில்லாதவகண்டவாழ்வே.
Vāzhvaṉaittumay…
Keep
வாழ்வனைத்துமயக்கமெனத் தேர்ந்தேன்றேர்ந்த
வாறேநானப்பாலோர்வழிபாராமற்
றாழ்வுபெற்றிங்கிருந்தேனீதென்னமாயந்
தடையுற்றான்மேற்கதியுந்தடையதாமே
யூழ்வலியோவல்லதுன்றன்றிருக்கூத்தோவிங்
கொருதமியேன்மேற்குறையோ வுணர்த்தாயின்னம்
பாழவதிப்படவெனக்குமுடியாதெல்லாம்
படைத்தளித்துத்துடைக்கவல்லபரிசினானே.
Nāṉāṉiṅkeṉumak…
Keep
நானானிங்கெனுமகந்தையெனக்கேன்வைத்தாய்
நல்வினைதீவினையெனவேநடுவேநாட்டி
யூனாருமுடற்சுமையென்மீதேன்வைத்தா
யுயிரெனவுமென்னையொன்றா வுள்ளேன்வைத்தா
யானாமையாயமகிலநிகிலபேத
மனைத்தினுள்ளுந்தானாகியறிவானந்தத்
தேனாகிப்பாலாகிக்கனியாய்க்கன்னற்
செழும்பாகாய்க்கற்கண்டாய்த்திகழ்ந்தவொன்றே.
6
Keep
ஒன்றியொன்றிநின்றுநின்றுமென்னையென்னை
யுன்னியுன்னும்பொருளலைநீயுன்பாலன்பால்
நின்றதன்மைக்கிரங்கும்வயிராக்கியனல்லே
னிவர்த்தியவைவேண்டுமிந்தநீலனுக்கே
யென்றுமென்றுமிந்நெறியோர்குணமுமில்லை
யிடுக்குவார்கைப்பிள்ளையேதோவேதோ
கன்றுமனத்துடனாடுதழைதின்றாற்போற்
கல்வியுங்கேள்வியுமாகிக்கலக்குற்றேனே.
Uṟṟatuṇainīyal…
Keep
உற்றதுணைநீயல்லாற்பற்றுவேறொன்
றுன்னேன்பன்னாளுலகத்தோடியாடிக்
கற்றதுங்கேட்டதுமிதனுக்கேதுவாகுங்
கற்பதுங்கேட்பதுமமையுங்காணாநீத
நற்றுணையேயருட்டாயேயின்பமான
நாதாந்தபரம்பொருளேநாரணாதி
சுற்றமுமாய்நல்லன்பர்தமைச்சேயாகத்
தொழும்புகொள்ளுங்கனா கனமேசோதிக்குன்றே.
Kuṉṟātamūvuruv…
Keep
குன்றாதமூவுருவாயருவாய்ஞானக்
கொழுந்தாகியறுசமயக்கூத்துமாடி
நின்றாயேமாயையெனுந்திரையைநீக்கி
நின்னையாரறியவல்லார்நினைப்போர்நெஞ்சம்
மன்றாகவின்பக்கூத்தாடவல்ல
மணியேயென்கண்ணேமாமருந்தேநால்வர்க்
கன்றாலின்கீழிருந்துமோனஞான
மமைத்தசின்முத்திரைக்கடலேயமரரேறே.
Tiraiyillākkaṭ…
Keep
திரையில்லாக்கடல்போலச்சலனந்தீர்ந்து
தெளிந்துருகும்பொன்போலச் செகத்தையெல்லாங்
கரையவேகனிந்துருக்குமுகத்திலேநீ
கனிந்தபரமானந்தக்கட்டியிந்நாள்
வரையிலேவரக்காணேனென்னாற்கட்டி
வார்த்தைசொன்னாற்சுகம்வருமோ வஞ்சனேனை
யிரையிலேயிருத்திநிருவிகற்பமான
வின்பநிட்டைகொடுப்பதையாவெந்தநாளோ.
10
Keep
எந்தநாளுனக்கடிமையாகுநாளோ
வெந்நாளோகதிவருநாளெளியனேன்றன்
சிந்தைநாளதுவரைக்குமயங்கிற்றல்லாற்
றெளிந்ததுண்டோமௌனியாய்த்தெளியவோர்சொற்
றந்தநாண்முதலின்பக்கால்சற்றல்லாற்
றடையறவானந்தவெள்ளந்தானேபொங்கி
வந்தநாளில்லைமெத்தவலைந்தேனுன்னை
மறவாவின்பத்தாலேவாழ்கின்றேனே.
Previous
←
Tēṉmukam
Next
Niṉaivoṉṟu
→