Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Niṉaivoṉṟu
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
நினைவொன்று நினையாம னிற்கினகமென்பார்நிற்
குமிட மேயருளா நிட்டையரு ளொட்டுந், தனையெ
ன்று மறந்திருப்ப வருள்வடிவா னதுமேற் றட்டி
யெழுந் திருக்குமின்பந் தன்மயமேயதுவாம், பினை
யொன்று மிலையந்த வின்பமெனு நிலயம்பெற்றாரே
பிறவாமை பெற்றார்மற்றுந்தான், மனையென்று மக
வென்றுஞ் சுற்றமென்று மசுத்த வாதனையா மாசை
யொழி மன்னொரு சொற்கொண்டே.
2
Keep
ஒருமொழியே பலமொழிக்கு மிடங்கொடுக்கு
மந்த வொருமொழியே மலமொழிக்கு மொழிக்கு,
மென மொழிந்த, குருமொழியே மலையிலக்குமற்
றைமொழி யெல்லாங் கோடின்றி வட்டாடல் கொ
ள்வதொக்குங் கண்டாய், கருமொழியிங் குனக்கில்
லை மொழிக்குமொழி ருசிக்கக்கரும்பனைய சொற்
கொடுனைக் காட்டவுங்கண்டனைமேற், றருமொழி
யிங் குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத் தற்பரமா
யானந்தப் பொற்பொதுவாய்நில்லே.
3
Keep
நில்லாதவாக்கை நிலையன்றெனவே கண்டாய் நே
யவருண் மெய்யன்றோ நிலயமதாநிற்கக், கல்லாதே
யேன்படித்தாய் கற்றதெல்லா மூடங்கற்றதெல்லா
மூடமென்றே கண்டனையு மன்று, சொல்லாலே பய
னில்லை சொன்முடிவைத் தானே தொடர்ந்துபிடி
மர்க்கடம்போற் றொட்டதுபற்றாநில், லெல்லாரு ம
றிந்திடவே வாய்ப்பறைகொண் டடிநீ யிராப்பகலில்
லாவிடமே யெமக்கிடமென் றறிந்தே.
4
Keep
இடம்பொரு ளேவலைக்குறித்து மடம்புகு நாயெ
னவே யெங்கேநீ யகப்பட்டா யிங்கேநீ வாடா,மடம்
பெறுபாழ் நெஞ்சாலே யஞ்சாதே நிராசைமன்னி
டமே யிடமந்த மாநிலத்தே பொருளுந், திடம்
பெறவே நிற்கினெல்லா வுலகமும்வந் தேவல்செய்யு
மிந்த நிலைநின்றோர் சனகன்முதன் முனிவர், கடம்
பெறுமா மதயானை யென்னவுநீ பாசக்கட்டான நி
களபந்தக் கட்டவிழப் பாரே.
5
Keep
பாராதி யண்டமெலாம் படர்கானற்சலம்போற்
பார்த்தனையே முடிவினின்று பாரெதுதா னின்ற,
தாராலு மறியாத சத்தன்றோ வதுவா யங்கிருநீ
யெங்கிருந்து மதுவாவை கண்டாய், பூராய மாகவுநீ
மற்றொன்றைவிரித்துப்புலம்பாதே சஞ்சலமாப் புத்
தியை நாட்டாதே, யோராதே யொன்றையுநீ முன்
னிலைவை யாதேயுள்ளபடி முடியுமெலா முள்ளபடி
காணே.
6
Keep
உள்ளபடி யென்னவுநீ மற்றொன்றைத் தொடர்ந்
திட் டுளங்கருத வேண்டாநிஷ் களங்கமதியாகிக்,
கள்ளமனத் துறவை விட்டெல்லாந்துறந்த துற
வோர் கற்பித்த மொழிப்படியே கங்குல்பக லற்ற,
வெள்ளவெளிக் கடன்மூழ்கி யின்பமயப் பொருளா
ய் விரவியெடுத் தெடுத்து விள்ளவும்வா யின்றிக்,
கொள்ளைகொண்ட கண்ணீருங் கம்பலையு மாகிக்
கும்பிட்டுச் சகம்பொயெனத் தம்பட்டமடியே.
7
Keep
அடிமுடியு நடுவுமற்ற பரவெளிமேற் கொண்டா
லத்துவித வானந்த சித்தமுண்டா நமது, குடிமுழு
தும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்தகோல
மெல்லா நன்றாகுங் குறைவு நிறைவறவே, விடியுமுத
யம்போல வருளுதயம் பெற்ற வித்தகரோ டுங்கூடி
விளையாடலாகும், படிமுழுதும் விண்முழுதுந் தந்தா
லுங் களியாப் பாலருட னுன்மத்தர் பிசாசர்குணம்
வருமே.
8
Keep
வரும்போமென் பனவுமின்றி யென்றுமொருபடி
த்தாய் வானாதி தத்துவத்தை வளைந்தருந்தி வெளி
யா, மிரும்போகல் லோமரமோ வென்னுநெஞ்சைக்
கனன்மேலிட்டமெழு காவுருக்கு மின்பவெள்ள
மாகிக், கரும்போகண் டோசீனி சருக்கரையோ
தேனோ கனியமிர்தோ வெனருசிக்குங் கருத்தவி
ழ்ந்தோ ருணர்வா, ரரும்போநன் மணங்காட்டுங்
காமரசங் கன்னியறிவாளோ வபக்குபவர்க்கோ வந்
நலந்தான் விளங்கும்.
9
Keep
தானேயு மிவ்வுலக மொருமுதலு மாகாத்தன்மை
யினாற் படைத்தளிக்குந் தலைமையது வான, கோ
னாக வொருமுதலிங் குண்டெனவும் யூகங்கூட்டியது
ஞ் சகமுடிவிற் குலவுறுமெய்ஞ் ஞான, வானாக வம்
முதலே நிற்குநிலை நம்மான் மதிப்பரிதா மென
மோனம் வைத்ததுமுன்மனமே, யானாலுமனஞ்சட
மென் றழுங்காதே யுண்மையறிவித்த விடங்குருவா
மருளிலதொன் றிலையே.
Previous
←
Paṉmālai
Next
Poṉṉaimātarai
→