Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Āraṇam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
ஆரணமார்க்கத்தாகமவாசி
யற்புதமாய்நடந்தருளுங்
காரணமுணர்த்துங்கையுநின்மெய்யுங்
கண்கண்மூன்றுடையவென்கண்ணே
பூரணவறிவிற்கண்டிலமதனாற்
போற்றியிப்புந்தியோடிருந்து
தாரணியுள்ளமட்டுமேவணங்கத்
தமியேனைவேண்டிடத்தகுமே.
2
Keep
இடமொருமடவாளுலகன்னைக்கீந்திட்
டெவ்வுலகத்தையுமீன்றுந்
தடமுறுமகிலமடங்குநாளம்மை
தன்னையுமொழித்துவிண்ணெனவே
படருறுசோதிக்கருணையங்கடலே
பாயிருட்படுகரிற்கிடக்கக்
கடனதோநினைப்புமறப்பெனுந்திரையைக்
கவர்ந்தெனைவளர்ப்பதுன்கடனே.
3
Keep
வளம்பெறுஞானவாரிவாய்மடுத்து
மண்ணையும்விண்ணையுந்தெரியா
தளம்பெறுந்துரும்பொத்தாவியோடாக்கை
யானந்தமாகவேயலந்தேன்
களம்பெறுவஞ்சநெஞ்சினர்காணாக்
காட்சியேசாக்ஷியேயறிஞ
ருளம்பெறுந்துணையேபொதுவினினடிக்கு
முண்மையேயுள்ளவாறிதுவே.
4
Keep
உள்ளமேநீங்காவென்னைவாவாவென்
றுலப்பிலாவானந்தமான
வெள்ளமேபொழியுங்கருணைவான்முகிலே
வெப்பிலாத்தண்ணருள்விளக்கே
கள்ளமேதுரக்குந்தூவெளிப்பரப்பே
கருவெனக்கிடந்தபாழ்மாயப்
பள்ளமேவீழாதெனைக்கரையேற்றிப்
பாலிப்பதுன்னருட்பரமே.
5
Keep
பரம்பரமாகிப்பக்குவம்பழுத்த
பழவடியார்க்கருள்பழுத்துச்
சுரந்தினிதிரங்குந்தானகற்பகமே
சோதியேதொண்டனேனின்னை
யிரந்துநெஞ்சுடைந்துகண்டு…ல்பெறாம
லிருந்ததுமென்கணிலிருட்டைக்
கரந்துநின்கண்ணாற்றுயில்பெறல்வேண்டிக்
கருதினேன்கருத்திதுதானே.
6
Keep
கருத்தினுட்கருத்தாயிருந்துநீயுணர்த்துங்
காரணங்கண்டுசும்மாதான்
வருத்தமற்றிருந்துசுகம்பெறாவண்ணம்
வருந்தினேன்மதியின்மைதீர்ப்பா
ரொருத்தராருளப்பாடுணர்பவர்யாவ
ருலகவர்பன்னெறியெனக்குப்
பொருத்தமோசொல்லாய்மௌனசற்குருவே
போற்றிநின்பொன்னடிப்போதே.
7
Keep
அடியெனுமதுவுமருளெனுமதுவு
மறிந்திடினிர்க்குணநிறைவு
முடியெனுமதுவும்பொருளெனுமதுவு
மொழிந்திடிற்சுகமனமாயைக்
குடிகெடவேண்டிற்பணியறநிற்றல்
குணமெனப்புன்னகைகாட்டிப்
படிமிசைமௌனியாகிநீயாளப்
பாக்கியமென்செய்தேன்பரனே.
8
Keep
என்செயலின்றியாவுநின்செயலென்
றெண்ணுவேனொவ்வொருகாலம்
புன்செயன்மாயைமயக்கினென்செயலாப்
பொருந்துவேனஃதொருகாலம்
பின்செயல்யாதுநினைவின்றிக்கிடப்பேன்
பித்தனேனன்னிலைபெறநின்
றன்செயலாகமுடித்திடல்வேண்டுஞ்
சச்சிதானந்தசற்குருவே.
9
Keep
குருவுருவாகிமௌனியாய்மௌனக்
கொள்கையையுணர்த்தினையதனாற்
கருவுருவாவதெனக்கில்லையிந்தக்
காயமோபொய்யெனக்கண்ட
திருவுருவாளரனுபவநிலையுஞ்
சேருமோவாவலோமெத்த
வருவுருவாகியல்லவாய்ச்சமய
மளவிடாவானந்தவடிவே.
10
Keep
வடிவிலாவடிவாய்மனநினைவணுகா
மார்க்கமாய்நீக்கருஞ்சுகமாய்
முடிவிலாவீட்டின்வாழ்க்கைவேண்டினர்க்குன்
மோனமல்லால்வழியுண்டோ
படியிருளகலச்சின்மயம்பூத்த
பசுங்கொம்பையடக்கியோர்கல்லா
லடியிலேயிருந்தவானந்தவரசே
யன்பரைப்பருகுமாரமுதே.
Previous
←
Poṉṉaimātarai
Next
Collaṟkariya
→