Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Collaṟkariya
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
சொல்லற்கரிய பரம்பொருளே சுகவாரிதியே சு
டர்க்கொழுந்தே, வெல்லற்கரிய மயலிலெனைவிட்டெ
ங்கொளித்தா யாகெட்டேன், கல்லிற்பசிய நாருரித்
துக் கடுகிற்பெரிய கடலடைக்கு, மல்லிற்கரிய வந்த
கனார்க் காளாக்கினையோ வறியேனே.
2
Keep
அறிவிற்கறிவு தாரகமென் றறிந்தேயறிவோடறி
யாமை, நெறியிற் புகுதாதோர் படித்தாய் நின்ற
நிலையுந் தெரியாது, குறியற் றகண்டா தீதமயக்கோ
திலமுதே நினைக்குறுகிப், பிறிவற்றிருக்க வேண்டா
வோ பேயேற்கினிநீ பேசாயே.
3
Keep
பேசாவனுபூ தியையடியேன் பெற்றுப் பிழைக்க
ப் பேரருளாற், றேசோம யந்தந்தினி யொருகாற்
சித்தத்திருளுந் தீர்ப்பாயோ, பாசா டவியைக்கடந்
தவன்பர் பற்றுமகண்டப் பரப்பான, வீசாபொது
வினடமாடு மிறைவா குறையா வின்னமுதே.
Iṉpakkaṭaliṟ…
Keep
இன்பக்கடலிற் புகுந்திடுவா னிரவும்பகலுந் தோ
ற்றாம, லன்பிற்கரைந்து கரைந்துருகி யண்ணாவரசே
யெனக்கூவிப், பின்புற்றழுஞ் சேயெனவிழிநீர் பெ
ருக்கிப் பெருக்கிப் பித்தாகித், துன்பக்கடல்விட்
டகல்வேனோ சொரூபானந்தச் சுடர்க்கொழுந்தே.
5
Keep
கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக் கோவே
மன்றிற் கூத்தாடற், கெழுந்தசுடரே யிமையவரை
யென்றாய் கண்ணுக் கினியானே, தொழுந்தெய்வ
முநீ குருவுநீ துணைநீ தந்தைதாயுநீ, யழுந்தும்பவநீ
நன்மையுநீ யாவியாக்கை நீதானே.
6
Keep
தானேயகண்டா காரமயந் தன்னிலெழுந்து பொ
துநடஞ்செய், வானே மாயப்பிறப் பறுப்பான்வந்
துன்னடிக்கே கரங்கூப்பித், தேனேயென்னைப் பரு
கவல்ல தெள்ளாரமுதே சிவலோகக், கோனேயெ
னுஞ்சொன் னினதுசெவி கொள்ளாதென்னோ கூ
றாயே.
7
Keep
கூறாநின்ற விடர்க்கவலைக் குடும்பக் கூத்துட் டு
ளைந்துதடு, மாறாநின்ற பாவியைநீ வாவென்றழைத்
தா லாகாதோ, நீறார்மேனி முக்கணுடை நிமலா
வடியார் நினைவினிடை, யாறாய்ப்பெருகும் பெருங்
கருணை யரசேயென்னை யாள்வானே.
8
Keep
வானேமுதலாம் பெரும்பூதம் வகுத்துப் புரந்து
மாற்றவல்ல, கோனேயென்னைப் புரக்குநெறி குறித்
தாயிலையே கொடியேனைத், தானே படைத்திங்
கென்னபலன் றன்னைப் படைத்தா யுன்கருத்தை,
நானேதென் றிங்கறியேனே நம்பினேன் கண்ட
ருள்வாயே.
9
Keep
கண்டார்கண்ட காட்சியுநீகாணார் காணாக்கள்வ
னுநீ, பண்டாருயிர்நீ யாக்கையுநீ பலவாஞ்சமயப்
பகுதியுநீ, யெண்டோண் முக்கட்செம் மேனியெந்
தாய் நினக்கேயெவ்வாறு, தொண்டாய்ப் பணிவர
வர் பணிநீசூட்டிக் கொள்வதெவ்வாறே.
10
Keep
சூட்டியெனதென் றிடுஞ்சுமையைச் சுமத்தியெ
னையுஞ் சுமையாளாக், கூட்டிப்பிடித்து வினைவழி
யே கூத்தாட்டினையே நினதருளால், வீட்டைக்
கருதுமப்போதுவெளியாமுலக வியப்பனைத்து, மே
ட்டுக்கடங்காச் சொப்பனம்போ லெந்தாயிருந்த
தென்சொல்வேன்.
Previous
←
Āraṇam
Next
Vampaṉēṉ
→