Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Taṉṉaiyoruvar
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
Taṉṉai yoruvar…
Keep
தன்னை யொருவர்க் கறிவரிதாய்த் தானே தானா
யெங்குநிறைந், துன்னற்கரிய பரவெளியா யுலவா
வமுதா யொளிவிளக்கா, யென்னுட் கலந்தா யான
றியாதிருந்தாயிறைவா வினியேனும், நின்னைப்பெறு
மா றெனக்கருளாநிலையைக் கொடுக்க நினையாயோ.
2
Keep
நினைவு நினைவுக் கெட்டாத நெறிபெற் றுணர்ந்த
நெறியாளர், வினையைக் கரைக்கும் பரமவின்ப வெ
ள்ளப் பெருக்கே நினதருளான், மனைவிபுதல்வ ரன்
னைபிதா மாடுவீடென் றிடுமயக்கந், தனையுமறந் திங்
குனை மறவாத் தன்மைவருமோ தமியேற்கே.
3
Keep
வருப்போ மென்னு மிருநிலைமை மன்னா தொரு
தன் மைத்தாகிக், கரும்பே தேனோ முக்கனியோ
வென்னவென்னுட் கலந்துநலந், தரும்பேரின்பப்
பொருளேநின் றன்னைநினைந்து நெக்குருகே, னிரும்
போ கல்லோ மரமோ வென்னிதய மியாதென் றறி
யேனே.
4
Keep
அறியுந் தரமோ நானுன்னை யறிவுக் கறிவாய் நிற்
கையினாற், பிறியுந்தரமோநீயென்னைப் பெம்மானே
பேரின்பமதாய்ச், செறியும் பொருணீ நின்னையன்
றிச் செறியாப் பொருணான் பெறும்பேற்றை, நெறி
நின் றொழுக விசாரித்தா னினக்கோவில்லை யெனக்
காமே.
5
Keep
எனதென் பதும்பொய் யானெனல் பொய்யெல்
லா மிறந்த விடங்காட்டும், நினதென்பதும் பொய்
நீயெனல்பொய் நிற்குநிலைக்கே நேசித்தேன், மன
தென்பதுமோ வென்வசமாய் வாராதைய நின்னரு
ளோ, தனதென் பதுக்கு மிடங்காணேன் றமியே
னெவ்வா றுய்வேனே.
6
Keep
உய்யும்படிக்குன் றிருக்கருணை யொன்றைக் கொ
டுத்தா லுடையாய்பாழ்ம், பொய்யு மவாவுமழுக்கா
றும் புடைபட்டோடு நன்னெறியாம், மெய்யுமறிவு
பெறும்பேறும் விளங்குமெனக்குன் னடியார்பாற்,
செய்யும் பணியுங் கைகூடுஞ் சிந்தைத் துயருந் தீர்ந்
திடுமே.
7
Keep
சிந்தைத் துயரென் றொருபாவி சினந்து சினந்து
போர்முயங்க, நிந்தைக்கிடமாய்ச் சகவாழ்வை நிலை
யென்றுணர்ந்தே நிற்கின்றே, னெந்தப்படி யுன்ன
ருள்வாய்க்கு மெனக்கப்படி நீயருள் செய்வாய்,
பந்தத் துயரற் றவர்க்கெளிய பரமானந்தப் பழம்
பொருளே.
8
Keep
பொருளைப் பூவைப் பூவையரைப் பொருளென்
றெண்ணு மொருபாவி, யிருளைத் துரந்திட்டொளி
நெறியை யென்னுட் பதிப்பதென்று கொலோ, தெ
ருளத் தெருள வன்பர் நெஞ்சந் தித்தித் துருகத்
தெவிட்டாத, வருளைப்பொழியுங் குணமுகிலே யறி
வானந்தத் தாரமுதே.
9
Keep
ஆராவமிர்தம் விரும்பினர்க ளறியவிடத்தை யமி
ர்தாக்கும், பேரானந்த சித்தனெனும் பெரியோ யா
விக்குரியோய் கேள், காராகிரக வலையினிடைக் கட்
டுண்டிருந்த களைகளெல்லா, மூராலொருநாட் கையு
ணவேற் றுண்டாலெனக்கிங் கொழிந்திடுமே.
10
Keep
எனக்கென் றிருந்த வுடல்பொருளும் யானுநின
வென் றீந்தவண்ண, மனைத்துமிருந்து மிலாதாகவரு
ளாய் நில்லா தழிவழக்காய், மனத்துட் புகுந்து
மயங்கவு மென்மதிக்குட் களங்கம்வந்த தென்னோ,
தனக்கொன் றுவமை யறநிறைந்த தனியே தன்னந்
தனிமுதலே.
Previous
←
Civaṉceyal
Next
Ācaiyeṉum
→