Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Civaṉceyal
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
சிவன்செயலாலே யாதும் வருமெனத் தேறே
னாளு, மவந்தரு நினைவையெல்லா மகற்றிலேனாசை
வெள்ளங், கவர்ந்துகொண் டிழுப்பவந்தக் கட்டிலே
யகப்பட்டையோ, பவந்தனை யீட்டியீட்டிப் பதைக்
கின்றேன் பாவியேனே.
2
Keep
பாவியேனினி யென்செய்கேன் பரமனே பணிந்
துன்பாதஞ், சேவியேன் விழிநீர்மல்கச் சிவசிவவெ
ன்று தேம்பி, யாவியே நிறையவந்த வமுதமே யெ
ன்னேனந்தோ, சாவிபோஞ் சமயத்தாழ்ந்து சகத்
திடைத் தவிக்கின்றேனே.
3
Keep
இடைந்திடைந் தேங்கிமெய் புளகிப்ப வெழுந்
தெழுந் தையநின்சரண, மடைந்தன னினிநீ கை
விடே லுனக்கே யபயமென்றஞ்சலி செய்துள், ளு
டைந்துடைந் தெழுது சித்திரப்பாவை யொத்துநா
னசைவற நிற்பத், தொடர்ந்துநீ யெனையாட் கொ
ள்ளுநா ளென்றோ சோதியே யாதிநாயகனே.
4
Keep
ஆதியாய்நடுவா யந்தமாய்ப் பந்தம்யாவுமற் றகம்
புறநிறைந்த, சோதியாய்ச் சுகமாயிருந்த வெம்பெ
ருமான் றொண்டனேன் சுகத்திலேயிருக்கப், போதி
யா வண்ணங் கைவிடன் முறையோ புன்மையே
னென்செய்கேன் மனமோ, வாதியாநின்றதன்றியும்
புலன்சேர் வாயிலோ தீயினுங் கொடிதே.
5
Keep
வாயிலோ ரைந்திற் புலனெனும் வேடர்வந்தெனை
யீர்த்துவெங்காமத், தீயிலேவெதுப்பி யுயிரொடுந்
தின்னச் சிந்தைநைந் துருகி மெய்ம்மறந்து, தாயிலா
ச் சேய்போ லலைந்தலைப் பட்டேன்றாயினுங் கருணை
யாமன்றுள், நாயகமாகி யொளிவிடு மணியே நாத
னே ஞானவாரிதியே.
6
Keep
ஞானமே வடிவாய்த் தேடுவார்தேடு நாட்டமே
நாட்டத்து ணிறைந்த, வானமேயெனக்குவந்து வந்
தோங்கு மார்க்கமே மருளர்தாமறியா, மோனமே
முதலே முத்திநல்வித்தே முடிவிலா வின்பமே செய்
யுந், தானமே தவமே நின்னைநா னினைந்தேன் றமிய
னேன் றனைமறப்பதற்கே.
7
Keep
மறமலி யுலகவாழ்க்கையே வேண்டும் வந்துநின்
னன்பர்தம் பணியா, மறமது கிடைக்கினன்றி யா
னந்த வற்புத நிட்டையி னிமித்தந், துறவது வேண்
டு மௌனியாயெனக்குத் தூயநல்லருடரி னின்னம்,
பிறவியும் வேண்டும் யானென திறக்கப் பெற்றவர்
பெற்றிடும்பேறே.
8
Keep
பெற்றவர் பெற்ற பெருந்தவக்குன்றே பெருகிய
கருணைவாரிதியே, நற்றவத்துணையே யானந்தக்கட
லே ஞாதுரு ஞானஞே யங்க, ளற்றவர்க் கறாத நட்
புடைக் கலப்பே யநேகமாய் நின்னடிக்கன்பு, கற்ற
துங்கேள்வி கேட்டது நின்னைக்கண்டிடும் பொருட்
டன்றோ காணே.
9
Keep
அன்றுநால் வருக்கு மொளிநெறி காட்டுமன்பு
டைச் சோதியே செம்பொன், மன்றுண் முக்கண்
ணுங்காளகண்டமுமாய் வயங்கியவானமே யென்னு
ட், டுன்றுகூரிருளைத் துரந்திடு மதியேதுன்பமு மி
ன்பமுமாகி, நின்றவாதனையைக் கடந்தவர் நினைவே
நேசமே நின்பரம்யானே.
10
Keep
யானெனல் காணேன் பூரண நிறைவில் யாதினு
மிருந்த பேரொளிநீ, தானென நிற்குஞ் சமத்துற
வென்னைத் தன்னவனாக்கவுந் தகுங்காண், வானென
வயங்கி யொன்றிரண் டென்னா மார்க்கமா நெறிதந்
துமாறாத், தேனென ருசித்து ளன்பரைக் கலந்த
செல்வமே சிற்பர சிவமே.
Previous
←
Vampaṉēṉ
Next
Taṉṉaiyoruvar
→