Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Ēcaṟṟavannilai
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
Ecaṟṟa vannila…
Keep
எசற்ற வந்நிலையே யெந்தைபரி பூரணமாய்
மாசற்ற வானந்த வாரி வழங்கிடுமே
ஊசற் சுழல்போ லுலகநெறி வாதனையாற்
பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே.
Pāzhāki yaṇṭap…
Keep
பாழாகி யண்டப் பரப்பையெல்லாம் வாய்மடுத்
து, மாழாழி யின்பத் தழுந்தப் படியாயோ, தாழா
யோ வெந்தையருட் டாட்கீழ்நெஞ் சேயெனைப்
போல், வாழாதுவாழ்ந்தழியா வண்ணமிருப்பாயே.
Iruppā yirunti…
Keep
இருப்பா யிருந்திடப்பே ரின்பவெளிக் கேநமக்குக்
குருப்பார்வை யல்லாமற் கூடக் கிடைத்திடுமோ
வருட்பாய் நமக்காக வாளவந்தார் பொன்னடிக்கீழ்
மருட்பேயர்போலிருக்கவாகண்டாய்வஞ்சநெஞ்சே
Vañcamō paṇṭai…
Keep
வஞ்சமோ பண்டையுள வாதனையா னீயலைந்து,
கொஞ்சமுற்றா யுன்னைக் குறைசொல்ல வாயுமுண்
டோ, வஞ்சலஞ்ச லென்றிரங்கு மானந்தமா கடற்
கீழ், நெஞ்சமே யென்போல நீயழுந்த வாராயோ.
5
Keep
வாரா வரவாய் வடநிழற்கீழ் வீற்றிருந்த, பூராய
நம்மைப் புலப்படுத்த வேண்டி யன்றோ, வோரா
யோ நெஞ்சே யுருகாயோ வுற்றிருந்து, பாராயோ
வவ்வுருவைப் பார்க்க நிறைவாய் விடுமே.
6
Keep
வாயாதோ வின்பவெள்ளம் வந்துன் வழியாகப்
பாயாதோ நானும் பயிராய்ப் பிழையேனோ
வோயாம லுன்னி யுருகுநெஞ்சே யந்நிலைக்கே
தாயான மோனனருள் சந்திக்க வந்திடுமே.
7
Keep
வந்த வரவை மறந்துலகாய் வாழ்ந்துகன்ம, பந்த
முற வுன்னைப் படிப்பிக்கக் கற்றவர்யா, ரிந்தமதியே
னுனக்கிங் கென்மதிகே ளென்னாலே, சந்ததநெஞ்
சேபரத்திற் சாரினின்ப முண்டாமே.
8
Keep
இன்பமய மாயுலக மெல்லாம் பிழைப்பதற்குன்
னன்புநிலை யென்பா ரதுவுநினையன் றியுண்டோ,வுன்
புலத்தை யோரினருட் கொப்பாவாய் நெஞ்சேநீ,
தென்புலத்தா ரோடிருந்து செய்பூசை கொண்ட
ருளே.
9
Keep
அருளேயோ ராலயமா வானந்தமாயிருந்த, பொ
ருளோடியானிருக்கப் போயொளித்த நெஞ்சேநீ,
மருடீர்முயற்கோடோ வான்மலரோபேய்த்தேரோ,
விருடீர நீயுறைந்த தெவ்விடமோ காணேனே.
10
Keep
எவ்விடத்தும் பூரணமா மெந்தைபிரான் றண்ண
ருளே, யவ்விடத்தே யுன்னைநெஞ்சே யாராயிற் கண்
டிலனே, யவ்விடத்து மாயையிலே மாண்டனையோ
வவ்விடமுஞ், செவ்விடமேநீயுஞ் செனனமற்று வா
ழியவே.
Previous
←
Uṭalpoyyuṟavu
Next
Kāṭuṅkaraiyum
→