Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Tiṭamuṟavē
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்
தாளக், கடனுனக்கென் றெண்ணி நின்னைக் கைகு
வித்தோ னானலனோ, வடைவு கெட்டபாழ் மாயை
யாழியிலே யின்னமல்லற், படமுடியா தென்னாவிப்
பற்றே பராபரமே.
2
Keep
ஆராமை கண்டிங் கருட்குருவாய்நீ யொருகால்
வாராயோ வந்துவருத்த மெல்லாந் தீராயோ
பூராயமாக வருட் பூரணத்தி லண்டமுதற்
பாராதி வைத்த பதியே பராபரமே.
3
Keep
வாழாது வாழவுனை வந்தடைந்தோ ரெல்லாரு
மாழாழி யென்ன வருளானா ரழுக்காற்றோ
டேழாயென வுலகமே கமினிநா னொருவன்
பாழாகாவாறுமுகம் பார்நீ பராபரமே.
Uḷḷatti ṉuḷḷē…
Keep
உள்ளத்தி னுள்ளே யொளித்தென்னை யாட்டுகின்ற
கள்ளக் கருணையையான் காணுந் தரமாமோ
வெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும்
பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் பராபரமே.
5
Keep
வாவிக் கமலமலர் வண்டாய்த் துவண்டு துவண்
டாவிக்கு ணின்றவுனக் கன்புவைத்தார்க் கஞ்சலெ
ன்பாய், பூவிற்கும் வான்கடையிற் புல்விற் போர்
போல வொன்றைப், பாவிக்க மாட்டேன் பதியே
பராபரமே.
6
Keep
விண்ணாறு வெற்பின் விழுந்தாங் கெனமார்பிற்,
கண்ணாறு பாய்ச்சிடுமென் காதல்வெள்ளங் கண்டி
லையோ, தண்ணாறு சாந்தபதத் தற்பரமே நால்வே
தப், பண்ணாறு மின்பப் பதியே பராபரமே.
Kūṭiyaniṉ cīra…
Keep
கூடியநின் சீரடியார் கூட்டமென்றோ வாய்க்கு
மென, வாடியவென் னெஞ்சுமுக வாட்டமுநீ கண்
டிலையோ, தேடியநின் சீரருளைத் திக்கனைத்துங் கை
குவித்துப், பாடியநான்கண்டாய்பதியேபராபரமே.
8
Keep
நெஞ்சத்தி னூடே நினைவாய் நினைவூடு
மஞ்சலென வாழுமென தாவித் துணைநீயே
சஞ்சலமாற் றினையினிமேற் றாய்க்குபசாரம்புகன்று
பஞ்சரிக்க நானார் பதியே பராபரமே.
9
Keep
புத்திநெறி யாகவுனைப் போற்றிப் பலகாலு, முத்
திநெறி வேண்டாத மூடனே னாகெடுவேன், சித்தி
நெறிக் கென்கடவேன் சீரடியார்க் கேவல்செயும்,
பத்திநெறிக் கேனுமுகம் பார்நீ பராபரமே.
10
Keep
கண்டறியேன் கேட்டறியேன் காட்டுநினை யேயி
தயங், கொண்டறியேன் முத்தி குறிக்குந் தரமுமுண்
டோ, தொண்டறியாப் பேதைமையேன் சொல்லே
னின் றொன்மையெல்லாம், பண்டறிவாய் நீயேபக
ராய் பராபரமே.
Previous
←
Mukamelām
Next
Taṉṉai
→