Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Kaṟpuṟucintai
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
கற்புறு சிந்தைமாதர் கணவரை யன்றி வேறோ,
ரிற்புறத் தவரைநாடார் யாங்களு மின்ப வாழ்வுந்,
தற்பொறி யாகநல்குந் தலைவநின் னலதோர்தெய்வ
ம், பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணானந்த
வாழ்வே.
2
Keep
முருந்திள நகையார்பார முலைமுகந்த ழுவிச் செ
வ்வாய், விருந்தமிர் தெனவருந்தி வெறியாட்டுக் கா
ளாய்நாளு, மிருந்தலோ காயதப்பே ரினத்தனாயிரு
ந்த வேழை, பொருந்தவுங் கதிமே லுண்டோ பூர
ணானந்த வாழ்வே.
3
Keep
தீதெலா மொன்றாம் வன்மை செறிந்திருட் பட
லம்போர்த்த, பாதகசிந்தைபெற்றபதக னுன்பாத
நீழ, லாதரவடைய வுள்ளன் பருளகிலை யாயின்மற்
றியார், போதனைசெய்ய வல்லார் பூரணானந்த வா
ழ்வே.
Nātaṉai nātātī…
Keep
நாதனை நாதாதீத நண்பனை நடுவாய்நின்ற, நீத
னைக் கலந்துநிற்க நெஞ்சமே நீவாவென்றால், வாத
னை பெருக்கி யென்னை வசஞ்செய்து மனந்துன்மார்
க்க, போதனைசெய்தனன்றோ பூரணானந்தவாழ்வே.
5
Keep
எண்ணிய வெண்ண மெல்லா மிறப்புமேற் பிறப்
புக்காசை, பண்ணியென் னறிவையெல்லாம் பாழா
க்கி யெனைப்பாழாக்குந், திண்ணிய வினையைக் கொ
ன்று சிறியனை யுய்யக்கொண்டாற், புண்ணிய நினக்
கேயன்றோ பூரணானந்த வாழ்வே.
Pattinī pattik…
Keep
பத்திநீ பத்திக்கான பலனுநீ பலவாச் சொல்லுஞ்
சித்திநீ சித்தர்சித்தித் திறமுநீ திறமார் மோன
முத்திநீ முத்திக்கான முதலுநீ முதன்மையான
புத்திநீயெனக்கொன் றுண்டோபூரணானந்தவாழ்வே
7
Keep
தாயினு மினியநின்னைச் சரணென வடைந்த நா
யேன், பேயினுங் கடையனாகிப் பிதற்றுதல் செய்த
னன்றோ, தீயிடை மெழுகாய் நொந்தேன் றெளிவி
லேன் வீணேகாலம், போயின தாற்ற கில்லேன் பூர
ணானந்த வாழ்வே.
Previous
←
Ākkuvai
Next
Malaivaḷarkātali
→