Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Malaivaḷarkātali
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கண் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும்
பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
படரெனுந் திமிரமணுகாக்
கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
காயசித் திகளுமுண்டு
கறையுண்ட கண்டர்பா லம்மைநின் றாளிற்
கருத்தொன்று முண்டாகுமேல்
நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
ஞானவா னந்தவொளியே
நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
நானெனு மகந்தைதீர்த்தென்
மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
மதுசூ தனன்றங்கையே
வரைராஜனுக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே.
2
Keep
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
சிற்றிடையிலே நடையிலே
சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
சிறுபிறை நுதற்கீற்றிலே
பொட்டிலே யவர்கட்டு பட்டிலே புனைகந்த
பொடியிலே யடியிலேமேற்
பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
புந்திதனை நுழையவிட்டு
நெட்டிலே யலையாம லறிவிலே பொறையிலே
நின்னடியர் கூட்டத்திலே
நிலைபெற்ற வன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்திலே யுனிருதாள்
மட்டிலே மனதுசெல நினதருளு மருள்வையோ
வளமருவு தேவையரசே
வரைராஜனுக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே.
3
Keep
பூதமுத லாகவே நாதபரி யந்தமும்
பொய்யென் றெனைக்காட்டியென்
போதத்தி னடுவாகி யடியீறு மில்லாத
போதபூரண வெளிக்கு
ளேதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை
வெல்லாஞ்செய் வல்லசித்தா
மின்பவுரு வைத்தந்த வன்னையே நின்னையே
யெளியேன் மறந்துய்வனோ
வேதமுத லானநல் லாகமத் தன்மையை
விளக்குமுட் கண்ணிலார்க்கு
மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
வீறுவா தம்புகலும்வாய்
வாதநோ யாளர்க்கு மெட்டாத முக்கணுடை
மாமருந் துக்கமிர்தமே
வரைராஜனுக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே.
4
Keep
மிடியிட்ட வாழ்க்கையா லுப்பிட்ட கலமெனவு
மெய்யெலா முள்ளுடைந்து
வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
வேதனைக ளுறவேதனுந்
துடியிட்ட வெவ்வினையை யேவினான் பாவிநான்
றொடரிட்ட தொழில்களெல்லாந்
துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன்
றொண்டர்பணி செய்வதென்றோ
வடியிட்ட செந்தமிழி னருமையிட் டாரூரி
லரிவையோர் பரவைவாயி
லம்மட்டு மடியிட்டு நடைநடந் தருளடிக
ளடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
வளமருவு தேவையரசே
வரைராஜக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே.
5
Keep
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி த்ரியம்பகியெழிற்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சத்தியென் றுன்
னாமமே யுச்சரித் திடுமடியர் நாமமே
நானுச்சரிக்க வசமோ
வாரணி சடைக்கடவு ளாரணி யெனப்புகழ
வகிலாண்ட கோடியீன்ற
வன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசு
மானந்த ரூபமயிலே
வாரணியு மிருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவையரசே
வரைராஜனுக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே.
6
Keep
பாகமோ பெறவுனைப் பாடவறி யேன்மல
பரிபாகம் வரவுமனதிற்
பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
பாவியேன் பாபரூப
தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
சிந்தியேன் பேரின்பமோ
சேரவென் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
சிந்திக்கு தென்செய்குவேன்
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
முற்றுமாற் சரியமோதான்
முறியிட் டெனைக்கொள்ளு நிதியமோதேடவெனின்
மூசுவரி வண்டுபோல
மாகமோ டவும்வல்ல னெனையாள வல்லையோ
வளமருவு தேவையரசே
வரைராஜனுக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே.
7
Keep
தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
தொக்கினுட் சிக்கிநாளுஞ்
சுழலேறு காற்றினிடை யழலேறு பஞ்செனச்
சூறையிட் டறிவையெல்லாம்
நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றி
னட்பேற வுள்ளுடைந்து
நயனங்க ளற்றதோ ரூரேறு போலவே
நானிலந் தனிலலையவோ
வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
விரையேறு மாலைசூடி
விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
வெருட்டிய கருங்கூந்தலாய்
வாளேறு கண்ணியே விடையேறு மெம்பிரான்
மனதுக் கிசைந்தமயிலே
வரைராஜனுக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்காதலிப் பெணுமையே.
8
Keep
பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
புந்திமுத லானபேய்கள்
போராடு கோபாதி ராக்ஷசப் பேய்களென்
போதத்தை யூடழித்து
வேதனை வளர்த்திடச் சதுர் வேத வஞ்சன்
விதித்தானிவ் வல்லலெல்லாம்
வீழும் படிக்குனது மௌனமந் த்ராதிக்ய
வித்தையை வியந்தருள்வையோ
நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
நாதாந்த வெட்டவெளியே
நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
ஞானவா னந்தமயிலே
வாதமிடு பரசமயம் யாவுக்கு முணர்வரிய
மகிமைபெறு பெரிய பொருளே
வரைராஜனுக் கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே.
Previous
←
Kaṟpuṟucintai
Next
Akilāṇṭanāyaki
→