Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Peṟṟavaṭkē
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப் பேதை யறிவாளோ பேரானந்த
முற்றவர்க்கே கண்ணீர் கம்பலை யுண்டாகு
முறாதவரே கன்னெஞ்ச முடைய ராவார்.
2
Keep
ஆவாவென் றழுது தொழுங் கையராகி
யப்பனே யானந்த வடிகளே நீ
வாவாவென் றவர்க்கருளுங் கருணை யெந்தாய்
வன்னெஞ்சர்க் கிரங்குவதெவ்வாறு நீயே.
3
Keep
நீயேயிங் கெளியேற்குந் தாக மோக
நினைவூடே நின்றுணர்த்தி நிகழ்த்த லாலே
பேயேறகுந் தனக்கெனவோ ரன்பு முண்டோ
பெம்மானே யின்னமன்பு பெருகப் பாராய்.
Pārāyō veṉṟuya…
Keep
பாராயோ வென்றுயர மெல்லா மையா
பகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்
வாராயோ வின்னமொரு காலா னாலு
மலர்க்காலென்சென்னிமிசை வைத்திடாயோ.
Vaittiṭuṅkā…
Keep
வைத்திடுங்கா லைப்பிடித்துக் கண்ணின் மார்பில்,
வைத்தணைத்துக் கொண்டு கையால் வளைத்துக்
கட்டிச், சித்தமிசைப் புகவிருத்திப் பிடித்துக்
கொண்டு, தியக்கமற வின்பசுகஞ் சேர்வ தென்றோ.
6
Keep
சேராமற் சிற்றினத்தைப் பிரித்தெந் நாளுந்
திருவடிப்பே ரினத்துடனே சேராவண்ண
மாராக நானலைந்தே னரசே நீதா
னறிந்திருந்துமாயையிலே னழுந்தவைத்தாய்.
Vaittaporu…
Keep
வைத்தபொரு ளுடலாவி மூன்று நின்கை
வசமெனவே யான்கொடுக்க வாங்கிக்கொண்டு
சித்தமிசைப் புகுந்ததுதான் மெய்யோ பொய்யோ
சிறியேற்கிங் குளவுரையாய் திகையாவண்ணம்.
8
Keep
திகையாதோ வெந்நாளும் பேரா னந்தத்
தெள்ளமுத முதவாமற் றிவலை காட்டி
வகையாக வலக்கழித்தா யுண் டுடுத்து
வாழ்ந்தேனா னிரண்டுகான் மாடு போலே.
9
Keep
மாடுமக்கள் சிற்றிடையார் செம்பொ னாடை
வைத்தகன தனமேடை மாட கூடம்
வீடுமென்பாற் றொடர்ச்சி யோவிடைவி டாமன்
மிக்ககதி வீடன்றோ விளங்கல் வேண்டும்.
10
Keep
விளங்கவெனக் குள்ளுள்ளே விளங்காநின்ற
வேதகமே போதகமே விமல வாழ்வே
களங்கரகி தப்பொருளே யென்னை நீங்காக்
கண்ணுதலே நாதாந்த காட்சிப் பேறே.
11
Keep
நாதமே நாதாந்த வெளியே சுத்த
ஞாதுருவே ஞானமே ஞேய மேநல்
வேதமே வேதமுடி வான மோன
வித்தேயிங் கென்னையினி விட்டிடாதே.
Previous
←
Tantaitāy
Next
Kallāliṉ
→