Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Tantaitāy
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
Tantaitāy maka…
Keep
தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கை
சகமனைத்து மௌனியரு டழைத்த போதே
யிந்திரசா லங்கனவு கான னீரா
யிருந்ததுவே யிவ்வியற்கை யென்னே யென்னே.
2
Keep
என்னை நான் கொடுக்கவொருப் பட்டகால
மியாதிருந்தென் னதுபோ யென்னென்னை நீங்கா
அன்னைபோ லருள்பொழியுங் கருணை வாரி
யானந்தப் பெருமுகிலே யரசே சொல்லாய்.
3
Keep
அரசேநின் றிருக்கருணை யல்லா தொன்றை, யறி
யாத சிறியேனா னதனான் முத்திக், கரைசேரும்
படிக்குனருட் புணையைக் கூட்டுங், கைப்பிடியே
கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன்.
Kaṇṭēṉiṅ keṉṉa…
Keep
கண்டேனிங் கென்னையு மென்றனையு நீங்காக்,
கருணையுநின் றன்னையுநான் கண்டேன் கண்டேன்,
விண்டே னென்றெனைப் புறம்பாத் தள்ளவேண்டா
ம், விண்டதுநின் னருட்களிப்பின் வியப்பாலன்றோ.
5
Keep
ஓவென்ற சுத்தவெளி யொன்றே நின்றிங்
குயிரையெல்லாம் வம்மினென வுவட்டா வின்பத்
தேவென்ற நீகலந்து கலந்து முத்தி
சேர்த்தனையேற் குறைவாமோ செக விலாசம்.
6
Keep
செகத்தையெல்லா மணுவளவுஞ் சிதறா வண்ணஞ்
சேர்த்தணுவில் வைப்பை யணுத்திரளை யெல்லாம்
மகத்துவமாப் பிரமாண்ட மாகச்செய்யும் வல்லவா
நீநினைந்த வாறே யெல்லாம்.
Collālē vāytuṭ…
Keep
சொல்லாலே வாய்துடிப்ப தல்லா னெஞ்சந்
துடித்திருக ணீரருவி சொரியத் தேம்பிக்
கல்லாலே யிருந்தநெஞ்சுங் கல்லான் முக்கட்
கனியேநெக் குருகிடவுங் காண்பேன் கொல்லோ.
Previous
←
Periyanāyaki viruttam
Next
Peṟṟavaṭkē
→