Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Ākātōveṉkaṇṇi
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
கல்லாதநெஞ்சங் கரைந்துருகவெத்தொழிற்கும்
வல்லாய்நின்னின்பம் வழங்கினாலாகாதோ.
Eṉṉaiyaṟiyaveṉ…
Keep
என்னையறியவெனக்கறிவாய் நின்றருணின்
றன்னையறிந்தின்பநலஞ் சாரவைத்தாலாகாதோ.
Poymmayamēyāṉa…
Keep
பொய்ம்மயமேயானபுரைதீர வெந்தையின்ப
மெய்ம்மயம்வந்தென்னை விழுங்கவைத்தாலாகாதோ.
Maṭṭilācciṟcuk…
Keep
மட்டிலாச்சிற்சுகமாம் வாழ்வேநின்னின்பமயஞ்
சிட்டர்போல்யானருந்தித்தேக்கவைத்தாலாகாதோ
5
Keep
அத்தாநின்பொற்றா ளடிக்கேயனுதினமும்
பித்தாக்கியின்பம் பெருகவைத்தாலாகாதோ.
6
Keep
மெல்லியலார்மோக விழற்கிறைப்பேனையாநின்
எல்லையிலானந்தநல மிச்சித்தாலாகாதோ.
7
Keep
சுட்டழகாயெண்ணுமனஞ் சூறையிட்டானந்தமயக்
கட்டழகாநின்னைக் கலக்கவைத்தாலாகாதோ.
8
Keep
சோதியேநந்தாச் சுகவடிவேதூவெளியே
ஆதியேநின்னை யறியவைத்தாலாகாதோ.
9
Keep
நேசஞ்சிறிதுமிலே னின்மலனேநின்னடிக்கே
வாசஞ்செயவிரங்கி வாவென்றாலாகாதோ.
Eṉṉaṟivukkuḷḷē…
Keep
என்னறிவுக்குள்ளே யிருந்ததுபோலையாவே
நின்னறிவுணின்னுடன்யா னிற்கவைத்தாலாகாதோ
Ātippirāṉēyeṉ…
Keep
ஆதிப்பிரானேயென் னல்லலிருளகலச்
சோதிப்ரகாசமயந் தோன்றுவித்தாலாகாதோ.
12
Keep
ஆசைச்சுழற்கடலி லாழாமலையாநின்
நேசப்புணைத்தா ணிறுத்தினாலாகாதோ.
13
Keep
பாசநிகளங்களெலலாம் பஞ்சாகச்செஞ்செவே
யீசவெனைவாவென் றிரங்கினாலாகாதோ.
Ōyāvuḷḷaṉpā…
Keep
ஓயாவுள்ளன்பா யுருகிவாய்விட்டரற்றிச்
சேயாகியெந்தைநின்னைச் சேரவைத்தாலாகாதோ.
Ātiyāmvāzhvā…
Keep
ஆதியாம்வாழ்வா யகண்டிதமாய்நின்றபரஞ்
சோதிநீயென்னைத் தொழும்பனென்றாலாகாதோ.
Viṇṇārakkaṇṭa…
Keep
விண்ணாரக்கண்ட விழிபோற்பரஞ்சோதி
கண்ணாரநின்னிறைவைக் காணவைத்தாலாகாதோ.
Cērāmaṟcērntun…
Keep
சேராமற்சேர்ந்துநின்று சின்மயனேநின்மயத்தைப்
பாராமற்பாரெனநீ பக்ஷம்வைத்தாலாகாதோ.
18
Keep
கண்ணாடிபோலவெல்லாங் காட்டுந்திருவருளை
உண்ணாடியையா வுருகவைத்தாலாகாதோ.
Mūlaviruḷkālvā…
Keep
மூலவிருள்கால்வாங்க மூதறிவுதோன்றவருட்
கோலம்வெளியாகவெந்தை கூடுவித்தாலாகாதோ.
20
Keep
சாற்றரிய வின்பவெள்ளந்தாக்குமதி னீமுளைக்கி,
லூற்றமுறு மென்னவதி லுண்மைசொன்னா லாகா
தோ.
21
Keep
கையுங்குவித்திரண்டு கண்ணருவிபெய்யவரு
ளையநின்றாட்கீழே யடிமைநின்றாலாகாதோ.
Previous
←
Kāṇpēṉōveṉkaṇṇi
Next
Illaiyōveṉkaṇṇi
→