Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Vaṇṇam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
அருவென் பனவுமன்றி யுருவென் பனவுமன்றி
அகமும் புறமுமன்றி முறைபிறழாது
குறியுங் குணமுமன்றி நிறைவுங் குறைவுமன்றி
மறையொன் றெனவிளம்ப விமலமதாகி
அசலம் பெறவுயர்ந்து விபுதம் பெறவளர்ந்து
சபலஞ் சபலமென்று ளறிவினர்காண
ஞானவெளியிடைமேவுமுயிராய்-
அனலொன் றிடவெரிந்து புகைமண் டிடுவதன்று
புனலொன்றிடவமிழ்ந்து மடிவிலதூதை
சருவும் பொழுதுயர்ந்து சலனம் படுவதன்று
சமர்கொண்டழிவதன்றோ ரியல்பினதாகும்
அவனென்பதுவுமன்றி அவளென்பதுவுமன்றி
அதுவென்பதுவுமன்றி யெழில்கொடுலாவு
மாருநிலையறியாதபடியே-
இருளென் பதுவுமன்றி யொளியென் பதுவுமன்றி
எவையுந்தனுளடங்க வொருமுதலாகு
முளதென் பதுவுமன்றி யிலதென் பதுவுமன்றி
உலகந் தொழவிருந்த வயன்முதலோர்கள்
எவருங் கவலைகொண்டு சமயங் களில்விழுந்து
சுழலும் பொழுதிரங்கி யருள்செயுமாறு
கூறரியசகமாயையறவே-
எனதென் பதையிகழ்ந்த வறிவின்றிரளினின்று
மறிவொன் றெனவிளங்கு முபயமதாக
வறியுந் தரமுமன்று பிறியுந் தரமுமன்று
வசரஞ்சரமிரண்டி னொருபடியாகி
எதுசந் ததநிறைந்த தெதுசிந் தனையிறந்த
தெதுமங் களசுபங்கொள் சுகவடிவாகும்
யாதுபரமதைநாடியறிநீ-
பருவங் குலவுகின்ற மடமங் கையர்தொடங்கு
கபடந் தனில்விழுந்து கெடுநினைவாகி
வலையின் புடைமறிந்த மறியென் றவசமுண்டு
வசனந் திரமுமின்றி யவரிதழூறல்
பருகுந் தொழிலிணங்கி யிரவும் பகலுமின்சொல்
பகரும் படிதுணிந்து குழலழகாக
மாலைவகைபலசூடியுடனே-
பதுமந் தனையிசைந்த முலையென் றதையுகந்து
வரிவண் டெனவுழன்று கலிலெனவாடுஞ்
சிறுகிண் கிணிசிலம்பு புனைதண் டைகண்முழங்கு
மொலிநன்றெனமகிழ்ந்து செவிகொளநாசி
பசுமஞ் சளின்வியந்த மணமுந் திடமுகந்து
பவமிஞ் சிடவிறைஞ்சி வரிசையினூடு
காலின்மிசைமுடி சூடிமயலாய்-
மருளுந் தெருளுய்வந்து கதியென் பதைமறந்து
மதனன் சலதிபொங்க விரணமதான
வளிபுண் டனைவளைந்து விரல்கொண் டுறவளைந்து
சுரதஞ் சுகமிதென்று பரவசமாகி
மருவுந் தொழின்மிகுந்து தினமுந்தினமும் விஞ்சி
வளரும் பிறைகுறைந்த படிமதிசோர
வானரமதெனமேனிதிரையாய்-
வயதும் படவெழுந்து பிணியுந் திமிதிமென்று
வரவுஞ் செயலழிந்து ளிருமலுமாகி
அனமுஞ் செலுதலின்றி விழியுஞ் சுடர்களின்று
முகமுங் களைகளின்று சரியெனநாடி
மனையின் புறவிருந்த வினமுங் குலைகுலைந்து
கலகஞ்செயவிருண்ட யமன்வரும்வேளை
எதுதுணைபழி காரமனமே.
Previous
←
Akaval