Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Akaval
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
Tiruvaruṇñāṉañ…
Keep
திருவருண்ஞானஞ்சிறந்தருள்கொழிக்குங்
குருவடி வானகுறைவிலாநிறைவே
நின்றவொன்றேநின்மலவடிவே
குன்றாப்பொருளேகுணப்பெருங்கடலே
யாதியுமந்தமுமானந்தமயமாஞ்
சோதியேசத்தேதொலைவிலாமுதலே
சீர்மலிதெய்வத்திருவருளதனாற்
பார்முதலண்டப்பரப்பெலாநிறுவி
யண்டசமுதலாமெண்டருநால்வகை
எழுபிறவியிற்றாழாதோங்கு
மனந்தயோனியினினம்பெறமல்க
வணுமுதலசலமானவாக்கையுங்
கணமுதலளவிற்கற்பகாலமுங்
கன்மப்பகுதித்தொன்மைக்கீடா
விமைப்பொழுதேனுந்தமக்கெனவறிவிலா
வேழையுயிர்த்திரள்வாழவமைத்தனை
எவ்வுடலெடுத்தாரவ்வுடல்வாழ்க்கை
இன்பமெனவேதுன்பமிலையெனப்
பிரியாவண்ணமுரிமையின்வளர்க்க
வாதரவாகக்காதலுமமைத்திட்
டூகமின்றியேதேகநானென
வறிவுபோலறியாமையியக்கிக்
காலமுங்கன்மமுங்கட்டுங்காட்டியே
மேலுநரகமுமேதகுசுவர்க்கமும்
மாலறவகுத்தனையேலும்வண்ண
மமையாக்காதலிற்சமயகோடி
யறம்பொருளாதிதிறம்படுநிலையிற்
குருவாயுணர்த்தியொருவர்போலனைவருந்
தத்தநிலையேமுத்திமுடிவென
வாததர்க்கமும்போதநூல்களும்
நிறைவிற்காட்டியேகுறைவின்றிவயங்க
வங்கங்குநின்றனையெங்குமாகிச்
சமயாதீதத்தன்மையாகி
இமையோர்முதலியயாவருமுனிவருந்
தம்மைக்கொடுத்திட்டெம்மையாளென
வேசற்றிருக்கமாசற்றஞான
நலமுங்காட்டினைஞானமிலேற்கு
நிலையுங்காட்டுதனின்னருட்கடனே.
Previous
←
Āṉantakkaḷippu
Next
Vaṇṇam
→