Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Thoṇḍaraḍippoḍi Āzhvār · Thirumālai
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
காவலில்
புலனை
வைத்து
கலி
தன்னை
கடக்க
பாய்ந்து
நாவல்
இட்டு
உழிதர்கின்றோம்
நமன்
தமர்
தலைகள்
மீதே
மூ
உலகு
உண்டு
உமிழ்ந்த
முதல்வ
நின்
நாமம்
கற்ற
ஆவலிப்பு
உடைமை
கண்டாய்
அரங்கம்
மா
நகர்
உளானே
2
▾
Meaning
Keep
பச்சை
மா
மலை
போல்
மேனி
பவள
வாய்
கமல
செம்
கண்
அச்சுதா
அமரர்
ஏறே
ஆயர்
தம்
கொழுந்தே
என்னும்
இச்சுவை
தவிர
யான்
போய்
இந்திர
லோகம்
ஆளும்
அச்சுவை
பெறினும்
வேண்டேன்
அரங்கம்
மா
நகர்
உளானே
3
▾
Meaning
Keep
வேத
நூல்
பிராயம்
நூறு
மனிசர்
தாம்
புகுவரேலும்
பாதியும்
உறங்கி
போகும்
நின்றதில்
பதினையாண்டு
பேதை
பாலகன்
அது
ஆகும்
பிணி
பசி
மூப்பு
துன்பம்
ஆதலால்
பிறவி
வேண்டேன்
அரங்கம்
மா
நகர்
உளானே
4
▾
Meaning
Keep
மொய்த்த
வல்
வினையுள்
நின்று
மூன்று
எழுத்து
உடைய
பேரால்
கத்திரபந்தும்
அன்றே
பராங்கதி
கண்டு
கொண்டான்
இத்தனை
அடியரானார்க்கு
இரங்கும்
நம்
அரங்கன்
ஆய
பித்தனை
பெற்றும்
அந்தோ
பிறவியுள்
பிணங்கும்
ஆறே
5
▾
Meaning
Keep
பெண்டிரால்
சுகங்கள்
உய்ப்பான்
பெரியது
ஓர்
இடும்பை
பூண்டு
உண்டு
இரா
கிடக்கும்
போது
உடலுக்கே
கரைந்து
நைந்து
தண்
துழாய்
மாலை
மார்பன்
தமர்களாய்
பாடி
ஆடி
தொண்டு
பூண்டு
அமுதம்
உண்ணா
தொழும்பர்
சோறு
உகக்கும்
ஆறே
6
▾
Meaning
Keep
மறம்
சுவர்
மதிள்
எடுத்து
மறுமைக்கே
வெறுமை
பூண்டு
புறம்
சுவர்
ஓட்டை
மாடம்
புரளும்
போது
அறிய
மாட்டீர்
அறம்
சுவர்
ஆகி
நின்ற
அரங்கனார்க்கு
ஆள்
செய்யாதே
புறம்
சுவர்
கோலம்
செய்து
புள்
கவ்வ
கிடக்கின்றீரே
7
▾
Meaning
Keep
புலை
அறம்
ஆகி
நின்ற
புத்தொடு
சமணம்
எல்லாம்
கலை
அற
கற்ற
மாந்தர்
காண்பரோ
கேட்பரோ
தாம்
தலை
அறுப்புண்டும்
சாகேன்
சத்தியம்
காண்மின்
ஐயா
சிலையினால்
இலங்கை
செற்ற
தேவனே
தேவன்
ஆவான்
8
▾
Meaning
Keep
வெறுப்பொடு
சமணர்
முண்டர்
விதியில்
சாக்கியர்கள்
நின்பால்
பொறுப்பு
அரியனகள்
பேசில்
போவதே
நோயது
ஆகி
குறிப்பு
எனக்கு
அடையும்
ஆகில்
கூடுமேல்
தலையை
ஆங்கே
அறுப்பதே
கருமம்
கண்டாய்
அரங்கம்
மா
நகர்
உளானே
9
▾
Meaning
Keep
மற்றும்
ஓர்
தெய்வம்
உண்டே
மதி
இலா
மானிடங்காள்
உற்றபோது
அன்றி
நீங்கள்
ஒருவன்
என்று
உணர
மாட்டீர்
அற்றம்
மேல்
ஒன்று
அறீயீர்
அவன்
அல்லால்
தெய்வம்
இல்லை
கற்றினம்
மேய்த்த
எந்தை
கழல்
இணை
பணிமின்
நீரே
10
▾
Meaning
Keep
நாட்டினான்
தெய்வம்
எங்கும்
நல்லது
ஓர்
அருள்
தன்னாலே
காட்டினான்
திருவரங்கம்
உய்பவர்க்கு
உய்யும்
வண்ணம்
கேட்டிரே
நம்பிமீர்காள்
கெருட
வாகனனும்
நிற்க
சேட்டை
தன்
மடி
அகத்து
செல்வம்
பார்த்து
இருக்கின்றீரே
11
▾
Meaning
Keep
ஒரு
வில்லால்
ஓங்கு
முந்நீர்
அடைத்து
உலகங்கள்
உய்ய
செருவிலே
அரக்கர்
கோனை
செற்ற
நம்
சேவகனார்
மருவிய
பெரிய
கோயில்
மதிள்
திருவரங்கம்
என்னா
கருவிலே
திரு
இலாதீர்
காலத்தை
கழிக்கின்றீரே
12
▾
Meaning
Keep
நமனும்
முற்கலனும்
பேச
நரகில்
நின்றார்கள்
கேட்க
நரகமே
சுவர்க்கம்
ஆகும்
நாமங்கள்
உடைய
நம்பி
அவனது
ஊர்
அரங்கம்
என்னாது
அயர்த்து
வீழ்ந்து
அளிய
மாந்தர்
கவலையுள்
படுகின்றார்
என்று
அதனுக்கே
கவல்கின்றேனே
13
▾
Meaning
Keep
எறியும்
நீர்
வெறி
கொள்
வேலை
மா
நிலத்து
உயிர்கள்
எல்லாம்
வெறி
கொள்
பூம்
துளவ
மாலை
விண்ணவர்
கோனை
ஏத்த
அறிவு
இலா
மனிசர்
எல்லாம்
அரங்கம்
என்று
அழைப்பர்
ஆகில்
பொறியில்
வாழ்
நரகம்
எல்லாம்
புல்
எழுந்து
ஒழியும்
அன்றே
14
▾
Meaning
Keep
வண்டு
இனம்
முரலும்
சோலை
மயில்
இனம்
ஆலும்
சோலை
கொண்டல்
மீது
அணவும்
சோலை
குயில்
இனம்
கூவும்
சோலை
அண்டர்
கோன்
அமரும்
சோலை
அணி
திருவரங்கம்
என்னா
மிண்டர்
பாய்ந்து
உண்ணும்
சோற்றை
விலக்கி
நாய்க்கு
இடுமின்
நீரே
15
▾
Meaning
Keep
மெய்யர்க்கே
மெய்யன்
ஆகும்
விதி
இலா
என்னை
போல
பொய்யர்க்கே
பொய்யன்
ஆகும்
புள்
கொடி
உடைய
கோமான்
உய்யப்போம்
உணர்வினார்கட்கு
ஒருவன்
என்று
உணர்ந்த
பின்னை
ஐயப்பாடு
அறுத்து
தோன்றும்
அழகன்
ஊர்
அரங்கம்
அன்றே
16
▾
Meaning
Keep
சூதன்
ஆய்
கள்வன்
ஆகி
தூர்த்தரோடு
இசைந்த
காலம்
மாதரார்
கயல்
கண்
என்னும்
வலையுள்
பட்டு
அழுந்துவேனை
போதரே
என்று
சொல்லி
புந்தியில்
புகுந்து
தன்பால்
ஆதரம்
பெருக
வைத்த
அழகன்
ஊர்
அரங்கம்
அன்றே
17
▾
Meaning
Keep
விரும்பி
நின்று
ஏத்த
மாட்டேன்
விதி
இலேன்
மதி
ஒன்று
இல்லை
இரும்பு
போல்
வலிய
நெஞ்சம்
இறை
இறை
உருகும்
வண்ணம்
சுரும்பு
அமர்
சோலை
சூழ்ந்த
அரங்கம்
மா
கோயில்
கொண்ட
கரும்பினை
கண்டு
கொண்டு
என்
கண்
இணை
களிக்கும்
ஆறே
18
▾
Meaning
Keep
இனிது
திரை
திவலை
மோத
எறியும்
தண்
பரவை
மீதே
தனி
கிடந்து
அரசு
செய்யும்
தாமரை
கண்ணன்
எம்மான்
கனி
இருந்தனைய
செம்
வாய்
கண்ணனை
கண்ட
கண்கள்
பனி
அரும்பு
உதிரும்
ஆலோ
என்
செய்கேன்
பாவியேனே
19
▾
Meaning
Keep
குடதிசை
முடியை
வைத்து
குணதிசை
பாதம்
நீட்டி
வடதிசை
பின்பு
காட்டி
தென்
திசை
இலங்கை
நோக்கி
கடல்
நிற
கடவுள்
எந்தை
அரவு
அணை
துயிலும்
ஆ
கண்டு
உடல்
எனக்கு
உருகும்
ஆலோ
என்
செய்கேன்
உலகத்தீரே
20
▾
Meaning
Keep
பாயும்
நீர்
அரங்கம்
தன்னுள்
பாம்பு
அணை
பள்ளி
கொண்ட
மாயனார்
திரு
நல்
மார்வும்
மரகத
உருவும்
தோளும்
தூய
தாமரை
கண்களும்
துவர்
இதழ்
பவள
வாயும்
ஆய
சீர்
முடியும்
தேசும்
அடியரோர்க்கு
அகலலாமே
21
▾
Meaning
Keep
பணிவினால்
மனம்
அது
ஒன்றி
பவள
வாய்
அரங்கனார்க்கு
துணிவினால்
வாழ
மாட்டா
தொல்லை
நெஞ்சே
நீ
சொல்லாய்
அணியினார்
செம்பொன்
ஆய
அரு
வரை
அனைய
கோயில்
மணியனார்
கிடந்த
ஆற்றை
மனத்தினால்
நினைக்கலாமே
22
▾
Meaning
Keep
பேசிற்றே
பேசல்
அல்லால்
பெருமை
ஒன்று
உணரல்
ஆகாது
ஆசு
அற்றார்
தங்கட்கு
அல்லால்
அறியல்
ஆவானும்
அல்லன்
மாசு
அற்றார்
மனத்து
உளானை
வணங்கி
நாம்
இருப்பது
அல்லால்
பேசத்தான்
ஆவது
உண்டோ
பேதை
நெஞ்சே
நீ
சொல்லாய்
23
▾
Meaning
Keep
கங்கையில்
புனிதம்
ஆய
காவிரி
நடுவு
பாட்டு
பொங்கு
நீர்
பரந்து
பாயும்
பூம்
பொழில்
அரங்கம்
தன்னுள்
எங்கள்
மால்
இறைவன்
ஈசன்
கிடந்தது
ஓர்
கிடக்கை
கண்டும்
எங்ஙனம்
மறந்து
வாழ்கேன்
ஏழையேன்
ஏழையேனே
24
▾
Meaning
Keep
வெள்ள
நீர்
பரந்து
பாயும்
விரி
பொழில்
அரங்கம்
தன்னுள்
கள்வனார்
கிடந்த
ஆறும்
கமல
நல்
முகமும்
கண்டும்
உள்ளமே
வலியை
போலும்
ஒருவன்
என்று
உணர
மாட்டாய்
கள்ளமே
காதல்
செய்து
உன்
கள்ளத்தே
கழிக்கின்றாயே
25
▾
Meaning
Keep
குளித்து
மூன்று
அனலை
ஓம்பும்
குறி
கொள்
அந்தணமை
தன்னை
ஒளித்திட்டேன்
என்
கண்
இல்லை
நின்
கணும்
பத்தன்
அல்லேன்
களிப்பது
என்
கொண்டு
நம்பீ
கடல்
வண்ணா
கதறுகின்றேன்
அளித்து
எனக்கு
அருள்
செய்
கண்டாய்
அரங்கம்
மா
நகர்
உளானே
26
▾
Meaning
Keep
போது
எல்லாம்
போது
கொண்டு
உன்
பொன்
அடி
புனைய
மாட்டேன்
தீது
இலா
மொழிகள்
கொண்டு
உன்
திருக்குணம்
செப்ப
மாட்டேன்
காதலால்
நெஞ்சம்
அன்பு
கலந்திலேன்
அது
தன்னாலே
ஏதிலேன்
அரங்கர்க்கு
எல்லே
என்
செய்வான்
தோன்றினேனே
27
▾
Meaning
Keep
குரங்குகள்
மலையை
நூக்க
குளித்து
தாம்
புரண்டிட்டு
ஓடி
தரங்க
நீர்
அடைக்கல்
உற்ற
சலம்
இலா
அணிலும்
போலேன்
மரங்கள்
போல்
வலிய
நெஞ்ச
வஞ்சனேன்
நெஞ்சு
தன்னால்
அரங்கனார்க்கு
ஆள்
செய்யாதே
அளியத்தேன்
அயர்க்கின்றேனே
28
▾
Meaning
Keep
உம்பரால்
அறியல்
ஆகா
ஒளி
உளார்
ஆனைக்கு
ஆகி
செம்
புலால்
உண்டு
வாழும்
முதலை
மேல்
சீறி
வந்தார்
நம்
பரம்
ஆயது
உண்டே
நாய்களோம்
சிறுமை
ஓரா
எம்பிராற்கு
ஆள்
செய்யாதே
என்
செய்வான்
தோன்றினேனே
29
▾
Meaning
Keep
ஊரிலேன்
காணி
இல்லை
உறவு
மற்று
ஒருவர்
இல்லை
பாரில்
நின்
பாத
மூலம்
பற்றிலேன்
பரம
மூர்த்தி
கார்
ஒளி
வண்ணனே
என்
கண்ணனே
கதறுகின்றேன்
ஆர்
உளர்
களைகண்
அம்மா
அரங்கம்
மா
நகர்
உளானே
30
▾
Meaning
Keep
மனத்தில்
ஓர்
தூய்மை
இல்லை
வாயில்
ஓர்
இன்
சொல்
இல்லை
சினத்தினால்
செற்றம்
நோக்கி
தீ
விளி
விளிவன்
வாளா
புனம்
துழாய்
மாலையானே
பொன்னி
சூழ்
திருவரங்கா
எனக்கு
இனி
கதி
என்
சொல்லாய்
என்னை
ஆள்
உடைய
கோவே
31
▾
Meaning
Keep
தவத்துளார்
தம்மில்
அல்லேன்
தனம்
படைத்தாரில்
அல்லேன்
உவர்த்த
நீர்
போல
என்றன்
உற்றவர்க்கு
ஒன்றும்
அல்லேன்
துவர்த்த
செம்
வாயினார்க்கே
துவக்கு
அற
துரிசன்
ஆனேன்
அவத்தமே
பிறவி
தந்தாய்
அரங்கம்
மா
நகர்
உளானே
32
▾
Meaning
Keep
ஆர்த்து
வண்டு
அலம்பும்
சோலை
அணி
திருவரங்கம்
தன்னுள்
கார்
திரள்
அனைய
மேனி
கண்ணனே
உன்னை
காணும்
மார்க்கம்
ஒன்று
அறிய
மாட்டா
மனிசரில்
துரிசன்
ஆய
மூர்க்கனேன்
வந்து
நின்றேன்
மூர்க்கனேன்
மூர்க்கனேனே
33
▾
Meaning
Keep
மெய்
எல்லாம்
போக
விட்டு
விரி
குழலாரில்
பட்டு
பொய்
எல்லாம்
பொதிந்து
கொண்ட
போழ்க்கனேன்
வந்து
நின்றேன்
ஐயனே
அரங்கனே
உன்
அருள்
என்னும்
ஆசை
தன்னால்
பொய்யனேன்
வந்து
நின்றேன்
பொய்யனேன்
பொய்யனேனே
34
▾
Meaning
Keep
உள்ளத்தே
உறையும்
மாலை
உள்ளுவான்
உணர்வு
ஒன்று
இல்லா
கள்ளத்தேன்
நானும்
தொண்டு
ஆய்
தொண்டுக்கே
கோலம்
பூண்டு
உள்ளுவார்
உள்ளிற்று
எல்லாம்
உடன்
இருந்து
அறிதி
என்று
வெள்கிப்போய்
என்னுள்ளே
நான்
விலவு
அற
சிரித்திட்டேனே
35
▾
Meaning
Keep
தாவி
அன்று
உலகம்
எல்லாம்
தலைவிளா
கொண்ட
எந்தாய்
சேவியேன்
உன்னை
அல்லால்
சிக்கென
செம்
கண்
மாலே
ஆவியே
அமுதே
என்றன்
ஆர்
உயிர்
அனைய
எந்தாய்
பாவியேன்
உன்னை
அல்லால்
பாவியேன்
பாவியேனே
36
▾
Meaning
Keep
மழைக்கு
அன்று
வரை
முன்
ஏந்தும்
மைந்தனே
மதுர
ஆறே
உழைக்கன்றே
போல
நோக்கம்
உடையவர்
வலையுள்
பட்டு
உழைக்கின்றேற்கு
என்னை
நோக்காது
ஒழிவதே
உன்னை
அன்றே
அழைக்கின்றேன்
ஆதி
மூர்த்தி
அரங்கம்
மா
நகர்
உளானே
37
▾
Meaning
Keep
தெளிவு
இலா
கலங்கல்
நீர்
சூழ்
திருவரங்கங்கத்துள்
ஓங்கும்
ஒளியுளார்
தாமே
அன்றே
தந்தையும்
தாயும்
ஆவார்
எளியது
ஓர்
அருளும்
அன்றே
என்
திறத்து
எம்பிரானார்
அளியன்
நம்
பையல்
என்னார்
அம்மவோ
கொடிய
ஆறே
38
▾
Meaning
Keep
மேம்
பொருள்
போக
விட்டு
மெய்ம்மையை
மிக
உணர்ந்து
ஆம்
பரிசு
அறிந்து
கொண்டு
ஐம்
புலன்
அகத்து
அடக்கி
காம்பு
அற
தலை
சிரைத்து
உன்
கடைத்தலை
இருந்து
வாழும்
சோம்பரை
உகத்தி
போலும்
சூழ்
புனல்
அரங்கத்தானே
39
▾
Meaning
Keep
அடிமையில்
குடிமை
இல்லா
அயல்
சதுப்பேதிமாரில்
குடிமையில்
கடைமை
பட்ட
குக்கரில்
பிறப்பரேலும்
முடியினில்
துளபம்
வைத்தாய்
மொய்
கழற்கு
அன்பு
செய்யும்
அடியரை
உகத்தி
போலும்
அரங்கம்
மா
நகர்
உளானே
40
▾
Meaning
Keep
திரு
மறு
மார்வ
நின்னை
சிந்தையுள்
திகழ
வைத்து
மருவிய
மனத்தர்
ஆகில்
மா
நிலத்து
உயிர்கள்
எல்லாம்
வெருவுற
கொன்று
சுட்டிட்டு
ஈட்டிய
வினையரேலும்
அரு
வினை
பயனது
உய்யார்
அரங்கம்
மா
நகர்
உளானே
41
▾
Meaning
Keep
வான்
உளார்
அறியல்
ஆகா
வானவா
என்பர்
ஆகில்
தேன்
உலாம்
துளப
மாலை
சென்னியாய்
என்பர்
ஆகில்
ஊனம்
ஆயினகள்
செய்யும்
ஊன
காரகர்களேலும்
போனகம்
செய்த
சேடம்
தருவரேல்
புனிதம்
அன்றே
42
▾
Meaning
Keep
பழுது
இலா
ஒழுகல்
ஆற்று
பல
சதுப்பேதிமார்கள்
இழி
குலத்து
அவர்களேலும்
எம்
அடியார்கள்
ஆகில்
தொழுமின்
நீர்
கொடுமின்
கொள்மின்
என்று
நின்னோடும்
ஒக்க
வழிபட
அருளினாய்
போல்
மதிள்
திருவரங்கத்தானே
43
▾
Meaning
Keep
அமர
ஓர்
அங்கம்
ஆறும்
வேதம்
ஓர்
நான்கும்
ஓதி
தமர்களில்
தலைவர்
ஆய
சாதி
அந்தணர்களேலும்
நுமர்களை
பழிப்பர்
ஆகில்
நொடிப்பது
ஓர்
அளவில்
ஆங்கே
அவர்கள்
தாம்
புலையர்
போலும்
அரங்கம்
மா
நகர்
உளானே
44
▾
Meaning
Keep
பெண்
உலாம்
சடையினானும்
பிரமனும்
உன்னை
காண்பான்
எண்
இலா
ஊழி
ஊழி
தவம்
செய்தார்
வெள்கி
நிற்ப
விண்ணுளார்
வியப்ப
வந்து
ஆனைக்கு
அன்று
அருளை
ஈந்த
கண்ணறா
உன்னை
என்னோ
களைகணா
கருதும்
ஆறே
45
▾
Meaning
Keep
வளம்
எழும்
தவள
மாட
மதுரை
மா
நகரம்
தன்னுள்
கவளம்
மால்
யானை
கொன்ற
கண்ணனை
அரங்க
மாலை
துளவ
தொண்டு
ஆய
தொல்
சீர்
தொண்டரடிப்பொடி
சொல்
இளைய
புன்
கவிதையேலும்
எம்பிராற்கு
இனிய
ஆறே
Next
Thiruppaḷḷiyezhuchi
→