இருந்தொளி ருனைவிடுத் தடுத்திட றெய்வமிருட்டினை விளக்கெடுத் தடுத்திட லேகாணிருந்தொளி ருனையறி வுறுத்திடற் கென்றேயிருந்தனை மதந்தொறும் விதவித வுருவாயிருந்தொளி ருனையறி கிலரெனி லன்னோரிரவியி னறிவறு குருடரே யாவாரிருந்தொளி ரிரண்டற வெனதுளத் தொன்றுயிணையது மருணமா மலையெனு மணியே.
இருந்து ஒளிர் உனை விடுத்து அடுத்திட றெய்வம் இருட்டினை விளக்கு எடுத்து அடுத்திடல் ஏகாண் இருந்து ஒளிர் உனை அறிவுறுத்திடற்கு என்றே இருந்தனை மதந்தொறும் விதவித உருவாய் இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில் அன்னோர் இரவியின் அறிவு அறு குருடரே ஆவார் இருந்து ஒளிர் இரண்டு அற எனது உளத்து ஒன்றி இணையது அருணமா மலை எனும் மணியே
In plain words
You are already here, already lit. To walk away from that and go looking for a god is exactly this: picking up a lamp and setting off into the dark. And all those forms, in every religion, kind upon kind — you took them so that you could be known. If people have the forms and still do not know you in them, then they are blind men, and the sun is not to blame for it. So: be here, and shine, until there is no two left. Be one in my heart. Gem with no equal. The great hill of Aruna.
Word for word
Leaving you who abide and shine, to approach a god is just this, look — taking up a lamp and approaching the darkness. It was precisely in order to make you who abide and shine known that you have been in forms of every various kind in every religion. If they do not know you who abide and shine, such ones become the blind, devoid of the knowing of the sun. Abide and shine so that twoness is cut off, having become one in my heart, O gem without equal that is called the great Aruna hill!