சீரான சோணகிரி சிறக்க வாழுஞ்சிற்சொருப னாமிறையே சிறிய னேன்றன்பேரான பிழையெல்லாம் பொறுத்துக் காத்துப்பின்னுமிவன் பாழிதனில் வீழா வண்ணங்காரான கருணைவிழி கொடுப்பா யின்றேற்கடும்பவத்தி னின்றுகரை யேற மாட்டேனேரான துண்டோதாய் சிசுவுக் காற்றுநிகரற்ற நலனுக்கு நிகழ்த்து வாயே.
சீரான சோணகிரி சிறக்க வாழும் சிற்சொருபன் ஆம் இறையே சிறியனேன் தன் பேரான பிழையெல்லாம் பொறுத்து காத்து பின்னும் இவன் பாழிதனில் வீழா வண்ணம் காரான கருணைவிழி கொடுப்பாய் இன்றேல் கடும்பவத்தின் நின்று கரையேற மாட்டேன் நேரானது உண்டோ தாய் சிசுவுக்கு ஆற்று நிகரற்ற நலனுக்கு நிகழ்த்துவாயே
In plain words
You live on that hill and your very substance is awareness. I am the small one with the enormous faults. Put up with them. Keep me out of the pit. One look from that rain-dark eye would do it. And if you are weighing whether I deserve it — does a mother work out whether the baby deserves it?
Word for word
O Lord whose very form is consciousness, who dwells gloriously on the glorious Śoṇagiri! Bear with all the enormous faults of this small one and protect him; give the cloud-dark eye of compassion so that he may not fall into the pit again. If not, I shall not manage to reach the shore from this fierce sea of birth. Is what a mother performs for her infant a matter of fitness? Bring about the incomparable good.