அண்ணா மலையா யடியேனையாண்ட வன்றே யாவியுடற்கொண்டா யெனக்கோர் குறையுண்டோகுறையுங் குணமு நீயல்லாலெண்ணே னிவற்றை யென்னுயிரேயெண்ண மெதுவோ வதுசெய்வாய்கண்ணே யுன்றன் கழலிணையிற்காதற் பெருக்கே தருவாயே.
அண்ணாமலையாய் அடியேனை ஆண்ட அன்றே ஆவி உடல் கொண்டாய் எனக்கு ஓர் குறை உண்டோ குறையும் குணமும் நீயல்லால் எண்ணேன் இவற்றை என்னுயிரே எண்ணம் எதுவோ அது செய்வாய் கண்ணே உன்றன் கழலிணையில் காதல் பெருக்கே தருவாயே
In plain words
The day you took me, you took all of it — the life and the body, both. So what could I still be short of? And my faults and my virtues are yours now too, so I have stopped keeping the account. Do whatever you were going to do. Only give me this: the love, coming down in flood, at your feet.
Word for word
O Annamalai! That very day you took this servant as yours, you took soul and body. Is there any want left for me? Fault and virtue are yours, not mine — I do not think about them. O my life, whatever your intention is, do that. O my eye, give only the flood of love at your two feet.