ஊழியில் வாழு மாக்களி லென்பாலூதியம் யாதுநீ பெற்றாய்பாழினில் வீழா தேழையைக் காத்துன்பதத்தினி லிருத்திவைத் தனையேயாழியாங் கருணை யண்ணலே யெண்ணவகமிக நாணநண் ணிடுமால்வாழிநீ யருணா சலவுனை வழுத்திவாழ்த்திடத் தாழ்த்துமென் றலையே.
ஊழியில் வாழும் மாக்களில் என்பால் ஊதியம் யாது நீ பெற்றாய் பாழினில் வீழாது ஏழையை காத்து உன் பதத்தினில் இருத்திவைத்தனையே ஆழியாம் கருணை அண்ணலே எண்ண அகம் மிக நாண நண்ணிடும் மால் வாழி நீ அருணாசல உனை வழுத்தி வாழ்த்திட தாழ்த்தும் என் தலையே
In plain words
Out of every creature that has ever lived through an age, you picked me. What did you get out of it? What was the profit? You would not let the poor fool fall into the pit. You kept him. You sat him down at your foot and left him there. Ocean of compassion. When I think about it a kind of stupor comes over me, and I am ashamed all the way through. Long life to you, Arunachala. My head goes down. That is all the praise I have.
Word for word
Among the creatures that live through the aeon, what profit did you get from me? Without letting the poor wretch fall into the waste, having protected him, you seated me at your foot and kept me there. O great one whose compassion is an ocean! When I think of it, a bewilderment that shames the heart exceedingly comes over me. Long live you, O Arunachala! To praise you and to hail you, this head of mine bows down.