The works of Ramaṇa Maharṣi

Aruṇācala Padikam

Verse 8

வைத்தனை வாளா வையகத் துய்யும்வழியறி மதியழித் திங்ஙன்வைத்திடி லார்க்கு மின்பிலை துன்பேவாழ்விதிற் சாவதே மாண்பாம்பைத்தியம் பற்றிப் பயனறு மெனக்குன்பதமுறு மருமருந் தருள்வாய்பைத்திய மருந்தாய்ப் பாரொளி ரருணபருப்பத வுருப்பெறு பரனே.

வைத்தனை வாளா வையகத்து உய்யும் வழி அறி மதி அழித்து இங்ஙன் வைத்திடில் ஆர்க்கும் இன்பு இலை துன்பே வாழ்வு இதில் சாவதே மாண்பு ஆம் பைத்தியம் பற்றி பயன் அறும் எனக்கு உன் பதம் உறும் அரு மருந்து அருள்வாய் பைத்திய மருந்தாய் பார் ஒளிர் அருண பருப்பத உரு பெறு பரனே

In plain words

You have left me here doing nothing, and first you wrecked the part of me that knew how to get by. If you leave me like this, nobody gets anything out of it. There is no joy in it for anyone. Only misery. In a life like this, dying would at least be a decent outcome. Madness took me and I am no use to anybody now. So give me the rare medicine — the one that is reaching your foot. You are the medicine for madness. You shine over the whole earth. You took a mountain for a body. Supreme.

Word for word

You have set me idly, having destroyed the intellect that knows the way of deliverance in the world. If you set me thus, there is no joy for anyone at all, only sorrow; in this life, dying itself would be what is fitting. To me, whom madness has seized and whose use has ceased, grant the rare medicine that attains your foot. O Supreme who has taken a mountain for form, Aruna shining upon the earth as the medicine for madness!