சத்தியினாற் றாமியங்குந் தன்மையுணராதகிலசித்திகணாஞ் சேர்வமெனச் சேட்டிக்கும் பித்தர்கூத்தென்னையெழுப்பிவிடி னெம்மட்டித் தெவ்வரெனச்சொன்னமுட வன்கதையின் சோடு
சத்தியினால் றாம் இயங்கும் தன்மை உணராது அகில சித்திக(ள்) நாஞ் சேர்வம் என சேட்டிக்கும் பித்தர் கூத்து என்னை எழுப்பிவிடின் எம்மட்டு இத் தெவ்வர் என சொன்ன முடவன் கதையின் சோடு
In plain words
You are moved by a Power that is not your own doing — and this you have not noticed. Not noticing it, some set to work in a fever, declaring, 'We shall lay hold of every power there is.' Their whole performance is the twin of that old tale: the lame man who could not rise from where he sat, boasting, 'Only let someone lift me to my feet, and what are these enemies to me?'
Word for word
Not knowing the fact that they themselves move by the Power, saying 'we shall attain all the siddhis' — the antic of the madmen who bustle about is the very match of the story of the cripple who said, 'If someone will raise me up, of what account are these enemies?'