Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸ்ரீ ராம பட்டாபிஷேக ஸர்க்கம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸ்ரீ
ராம
பட்டாபிஷேக
ஸர்க்கம்
Heading
Keep
(யுத்த காண்டம் - ஸர்க்கம் 131)
1
▾
Meaning
Keep
ஶிரஸ்யஞ்ஜலி
மாதா⁴ய
கைகேய்யாநந்த³
வர்த⁴ந:
|
ப³பா⁴ஷே
ப⁴ரதோ
ஜ்யேஷ்ட²ம்
ராமம்
ஸத்ய
பராக்ரமம்
||
Prose passage
▾
Meaning
Keep
பரதன்
தலைமேல்
கைகூப்பி,
மஹானுபாவரான
தன்
தமயனைப்
பார்த்து,
பின்வருமாறு
சொன்னார்.
கைகேயி
அந்த
வார்த்தைகளைக்
கேட்டு
முகம்
மலர்ந்து
பரமானந்தமடைந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
“ஸ்வாமீ!
தாங்கள்
இந்த
ராஜ்யத்தை
வேண்டாமென்று
ஒப்புக்கொள்ளாமல்
வனவாஸம்
செய்ததால்,
என்
மாதாவின்
மனத்தை
ஸந்தோஷப்படுத்தினீர்கள்.
பிறகு
சித்திரகூடத்தில்
இதை
என்னிடத்தில்
ஒப்புவித்தீர்கள்.
ஆகையால்,
தாங்கள்
என்னிடத்தில்
அடைக்கலமாய்
வைத்த
கோஸல
ராஜ்யத்தை
இப்பொழுது
தங்களிடத்தில்
மறுபடியும்
கொடுத்துவிட்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்,
‘நான்
கேட்டபொழுது
நீ
கொடுக்கலாம்;
அதுவரையில்
வைத்துக்கொண்டிரு.
நான்
அயோத்யையில்
ஸகல
போகங்களையும்
அனுபவித்துக்கொண்டு
ஸுகமாய்
வஸிக்கிறேன்.
நீயே
ராஜ்யத்தை
ஆண்டு
வா’
என்று
சொல்வீர்கள்.
“பூர்ணபலமுள்ள
ஒரு
எருது
தனியாய்
ஸஹாயமில்லாமல்
சுமந்துவந்த
பாரத்தைச்
சிறு
கன்றுக்குட்டி
சுமக்குமா?
அப்படியானால்
இதுவரையில்
எப்படி
ஆண்டு
வந்தாய்
என்று
கேட்பீர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஆற்றில்
ஜலத்தின்
வேகத்தைத்
தடுப்பதற்கு
மரக்கிளைகள்,
வைக்கோல்,
மரம்
முதலிய
பதார்த்தங்களால்
உறுதியாய்
அணை
கட்டாவிட்டால்,
அங்கங்கே
சிறு
துவாரங்கள்
ஏற்பட்டு
அவைகளின்வழியாய்
ஜலம்
பிரவஹித்து
முடிவில்
அணையை
அடித்துக்கொண்டு
போவதுபோல்,
இந்த
ராஜ்யபாலனம்
ஸுலபமல்ல.
ஆளுகிறவனுக்கு
உத்தம
குணங்களென்ற
பலமான
அணையில்லாவிட்டால்
ராஜ்ய
ரஹஸ்யங்கள்
சீக்கிரத்தில்
வெளிப்படும்.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்,
‘என்னைப்போல
நீயும்
பிரஜைகளை
உத்தம
குணங்களால்
வசப்படுத்தக்கூடாதா?’
என்பீர்கள்.
உத்தம
அசுவத்தின்
நடைக்கும்
கழுதையின்
நடைக்கும்
உவமையுண்டோ?
காக்கை
ராஜஹம்ஸத்தைப்
போலாகுமா?
தாங்கள்
போகும்
வழியில்
வேறொருவர்
அடி
வைக்கமுடியுமோ?
ஆனால்,
‘நானும்
உனக்கு
ஸஹாயமாயிருக்கிறேன்.
நீயே
ராஜ்யத்தை
ஆண்டுவா’
என்பீர்கள்.
ஒரு
வீட்டில்
வளர்த்த
மரம்
விசாலமான
கிளைகளுடன்
அழகான
புஷ்பங்களால்
நிறைந்தும்,
ஒரு
பழமாவது
இல்லாமலிருந்தால்
அதை
வளர்த்தவனுக்கு
என்ன
பிரயோஜனம்?
Prose passage
▾
Meaning
Keep
நமது
பிதா
அறுபதாயிரம்
வருஷங்கள்வரையில்
புத்திரனில்லாமல்
அசுவமேதம்
புத்திரகாமேஷ்டி
முதலிய
யாகங்களைச்
செய்து
தங்களைப்
பெற்றார்.
தாங்கள்
லோகோத்தமமான
அனந்த
கல்யாண
குணங்களுடன்
வளர்ந்து
வந்தீர்கள்.
இந்த
ராஜ்யத்தைத்
தங்களிடத்தில்
ஒப்புவித்துத்
தான்
செய்த
பிரயத்தனங்களின்
பலனை
அனுபவிக்கலாமென்று
அவர்
நினைத்தார்.
இப்பொழுது
ஸகல
பூமண்டலத்தையும்
தர்மமாகப்
பரிபாலனம்
செய்யத்தகுந்த
உத்தம
குணங்கள்
தங்களிடத்தில்
இருந்தும்,
வம்ச
பரம்பரையாய்
ஜ்யேஷ்ட
புத்திரர்களால்
ஆளப்பட்டுவந்த
இந்த
ராஜ்யத்தைத்
தாங்கள்
ஆளாவிட்டால்
தங்களைப்பெற்று
வளர்த்ததின்
பிரயோஜனமென்ன?
Prose passage
▾
Meaning
Keep
ஸூரியன்
மத்யாஹ்ன
காலத்தில்
ஆகாச
வீதியில்
பூர்ணகிரணங்களுடன்
ஸகல
ஜகத்திற்கும்
பிரகாசத்தையும்
ஆயுளையும்
கொடுத்துக்கொண்டு
விளங்குவதுபோல்
தாங்கள்
பட்டாபிஷேக
மஹோத்ஸவம்
பெற்று,
ஸிம்ஹாஸனத்திலிருந்து
எங்களெல்லோருக்கும்
க்ஷேமத்தைக்
கொடுப்பதை
நாங்கள்
பார்த்து
மகிழ்கிறோம்.
விடியற்காலத்தில்
மதுரமான
கானங்களாலும்
வாத்ய
சப்தங்களாலும்,
தங்கச்
சலங்கைகளால்
அலங்கரிக்கப்பட்ட
உத்தம
ஸ்த்ரீகளின்
நாட்டியங்களாலும்,
தாங்கள்
எழுப்பப்படுவதை
நாங்கள்
கண்டு
மகிழ்கிறோம்.
ஸகல
போகங்களையும்
அனுபவிக்கத்தகுந்தவர்கள்
தாங்களே.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்,
‘உங்களுக்கு
ராஜ்யபாலனம்
செய்ய
ஆசையில்லையோ?’
என்று
கேட்பீர்கள்.
ஸூரியன்
சந்திரன்
கிரஹங்கள்
நக்ஷத்திரங்கள்
முதலியன
உள்ளவரையிலும்,
இந்தப்
பூமியுள்ளவரையிலும்
தாங்கள்
எங்களைப்
பரிபாலனம்
செய்யவேண்டுமென்பதே
எங்கள்
பிரார்த்தனை”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
ராமன்
பரதனுடைய
சரணாகதியை
அங்கீகரித்து
உத்தமமான
ஆஸனத்தில்
உட்கார்ந்தார்.
பிறகு
ஸுகமாயும்
சீக்கிரமாயும்
சாதுரியமாயும்
க்ஷவரம்
செய்யக்கூடியவர்களைச்
சத்ருக்னர்
தருவிக்க,
அவர்கள்
ராமலக்ஷ்மண
பரதசத்ருக்னர்களுடைய
ஜடைகளை
நீக்கினார்கள்.
பரதன்,
லக்ஷ்மணன்,
ஸுக்ரீவன்,
விபீஷணன்
முதலியவர்கள்
ஸ்நானம்
செய்தபிறகு
விசித்திரமான
மாலைகளாலும்
பரிமளங்களாலும்
வஸ்திரங்களாலும்
ஆபரணங்களாலும்
ராமலக்ஷ்மணர்களைச்
சத்ருக்னன்
அலங்காரம்
செய்வித்தார்.
தசரதருடைய
பத்தினிகள்
ஸீதைக்கு
ஸகல
அலங்காரங்களையும்
தாங்களே
செய்தார்கள்.
தாரை
முதலிய
வானர
ஸ்த்ரீகளுக்கு
ஸகல
அலங்காரங்களையும்
ராமனிடத்தில்
எல்லையற்ற
வாத்ஸல்யத்தை
வைத்த
கௌஸல்யை
செய்வித்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
சத்ருக்னருடைய
உத்தரவால்
இக்ஷ்வாகுகுல
ஸாரதியான
ஸுமந்திரர்
உத்தம
அசுவங்கள்
பூட்டின
ராஜரதத்தைக்
கொண்டுவந்து
நிறுத்தினார்.
ஸூரிய
மண்டலத்தைப்போல்
பிரகாசிக்கும்
அந்த
ரதத்தில்
ராமன்
ஏறினார்.
ஸுக்ரீவனும்
ஹநுமானும்
மஹேந்திரனைப்போல்
தேஜஸால்
ஜ்வலித்துக்கொண்டு,
நேர்த்தியான
வஸ்திராபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டு
ராமனுடன்
போனார்கள்.
ஸுக்ரீவனுடைய
பாரியைகளும்
ஸீதையும்
திவ்யாலங்காரங்களுடன்
அயோத்யையைப்
பார்க்க
அவர்களுடன்
போனார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அயோத்யையில்
தசரதருடைய
மந்திரிகளும்
வஸிஷ்டரும்
ராமனுடைய
பட்டாபிஷேகத்திற்கு
வேண்டிய
மங்களத்
திரவியங்களை
ஸம்பாதித்தார்கள்.
அசோகன்,
விஜயன்,
ஸுமந்திரன்
முதலியவர்கள்,
“ராமனுக்கு
க்ஷேமமும்,
ஸுகமும்,
ஐசுவரியமும்
விருத்தியாவதற்கும்,
இந்த
நகரமும்
ராஜ்யமும்
எப்பொழுதும்
மங்களத்தை
அடைவதற்கும்
வேண்டிய
ஸகல
சுபக்கிரியைகளையும்
குறைவில்லாமல்
செய்யவேண்டியது”
என்று
வஸிஷ்டரைப்
பிரார்த்தித்து,
ராமனைப்
பார்ப்பதற்காகத்
திரும்பி
வந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
திவ்ய
அசுவங்கள்
பூட்டிய
ரதத்தில்
மாதலி
ஸாரத்யம்
செய்ய
தேவகணங்கள்
புடைசூழ
இந்திரன்
வருவதுபோல்
திவ்யமான
ரதத்தில்
ஸுமந்திரர்
ஸாரத்யம்
செய்ய,
ஸஹோதரர்களும்
வானரர்களும்,
ராக்ஷஸர்களும்,
பிரஜைகளும்
புடைசூழ,
ராமசந்திரன்
விளங்குவதைக்
கண்டார்கள்.
பரதன்
கடிவாளங்களைப்
பிடித்துக்கொண்டு
ஸுமந்திரருக்குப்
பக்கத்திலிருந்து
ஸாரத்யம்
செய்துவந்தார்.
சத்ருக்னன்
இக்ஷ்வாகு
சக்ரவர்த்திகளுடைய
வெண்குடையைப்
பிடித்தார்.
லக்ஷ்மணன்
ராமனுக்கு
முன்நின்று
வெண்சாமரத்தை
வீசினார்.
ராக்ஷஸாதிபதியான
விபீஷணன்
மற்றொரு
வெண்சாமரத்தை
வீசினான்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஆகாசவீதியில்
தேவர்களும்,
ரிஷிகளும்,
மருத்கணங்களும்,
ராவணாதி
ராக்ஷஸர்களை
நாசம்
செய்து
தங்களுக்கு
எல்லையற்ற
ஸுகத்தையும்,
க்ஷேமத்தையும்
கொடுத்ததைப்பற்றி
ராமனைக்
கொண்டாடும்
மதுரமான
த்வனி
கேட்கப்பட்டது.
மஹாபர்வதத்தைப்போல்,
மத
ஜலத்தைப்
பெருகவிட்டுக்கொண்டிருக்கும்
சத்ருஞ்ஜயனென்ற
பட்டத்து
யானையின்மேல்
ஸுக்ரீவன்
ஏறி,
ஐராவதத்தின்மேல்
விளங்கும்
இந்திரனைப்போல்
பிரகாசித்தான்.
இதர
வானரர்கள்
மனுஷ்ய
ரூபத்துடன்
ஸர்வாபரண
பூஷிதர்களாய்
ஒன்பதாயிர
மதயானைகளின்மேல்
ஏறிவந்தார்கள்.
இப்படிச்
சங்கம்,
பேரீ,
துந்துபி,
வீணை,
மிருதங்கம்
முதலிய
வாத்யகோஷங்களுடன்
ரகுவீரன்
அயோத்யையை
நோக்கிப்
போனார்.
Prose passage
▾
Meaning
Keep
மந்திரிகள்
அவரை,
‘ஜய
விஜயீபவா’
என்று
வாழ்த்தி,
அவரால்
உபசரிக்கப்பட்டு,
அவரைப்
பின்தொடர்ந்து
வந்தார்கள்.
பிரஜைகளாலும்,
பிராம்மணர்களாலும்
மந்திரிகளாலும்
சூழப்பட்டு
ராகவன்,
ஆகாசவீதியில்
நக்ஷத்திரங்களால்
சூழப்பட்ட
சந்திரனைப்போல்
பிரகாசித்தார்.
அவருக்குமுன்
அநேகர்
மங்கள
வாத்தியங்களைக்
கோஷித்துக்கொண்டு
சென்றார்கள்.
ஸ்வஸ்திகம்
முதலிய
மதுரமான
வாத்தியங்களை
அநேகர்
வாசித்துக்கொண்டு
போனார்கள்.
கன்யைகளும்,
பிராம்மணர்களும்,
மஞ்சள்
கலந்த
அக்ஷதைகளை
எடுத்துக்கொண்டு
முன்னே
போனார்கள்.
அநேகர்
மோதகங்களை
எடுத்துக்கொண்டு
போனார்கள்.
உத்தமலக்ஷணங்களுள்ள
பசுக்கள்
சென்றன.
Prose passage
▾
Meaning
Keep
ராமனுக்கும்
ஸுக்ரீவனுக்கும்
நேர்ந்த
ஸ்நேஹத்தையும்,
வாயு
புத்திரனுடைய
பிரபாவத்தையும்,
வானரர்களுடைய
பராக்கிரமத்தையும்,
ராக்ஷஸர்களுடைய
பலத்தையும்,
விபீஷணனுடைய
ஸஹாயத்தையும்
ராமன்
மந்திரிகளுக்கு
விஸ்தாரமாய்
எடுத்துச்
சொன்னார்.
அதைக்
கேட்டு
நகரத்து
ஜனங்கள்
ஆச்சரியமடைந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படிப்
பேசிக்கொண்டே
ஸகல
ஸௌக்கியங்களும்
பொருந்தின
ஜனங்களால்
அலங்கரிக்கப்பட்ட
அயோத்யையில்
ராமன்
பிரவேசித்தார்.
ஒவ்வொரு
வீட்டிலும்
மாலைகளாலும்,
ஹாரங்களாலும்
தோரணங்களாலும்
கொடிகளாலும்
த்வஜங்களாலும்
விசித்திரமாய்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ராமன்
பிரஜைகளால்
வாழ்த்தப்பட்டு
இக்ஷ்வாகு
வம்சத்தரசர்கள்
வஸிக்கும்
அரண்மனையில்
பிரவேசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
கௌஸல்யை,
ஸுமித்திரை,
கைகேயி
முதலிய
ராஜபத்தினிகளை
நமஸ்கரித்து,
பரதனை
நோக்கி,
‘அழகான
அசோகத்
தோட்டத்துடன்
விளங்கும்
உத்தமமான
என்
அரண்மனையில்
ஸுக்ரீவன்
தங்கட்டும்’
என்றார்.
அவருடைய
அபிப்பிராயத்தை
பரதன்
அந்த
வார்த்தைகளால்
அறிந்துகொண்டு,
ஸுக்ரீவனுடைய
கையைப்
பிடித்து,
அந்த
அரண்மனைக்கு
அழைத்துக்கொண்டு
போனார்.
பிறகு
பரிசாரகர்கள்
சத்ருக்னனுடைய
உத்தரவால்
தீபங்களையும்,
ஆஸனங்களையும்,
விரிப்புகளையும்,
படுக்கைகளையும்
அந்த
அரண்மனையில்
கொண்டுபோய்
வைத்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
சத்ருக்னன்
ஸுக்ரீவனைப்
பார்த்து,
“பிரபோ!
ராமனுடைய
அபிஷேகத்திற்காக
வானரர்களை
அனுப்புங்கள்”
என்றார்.
நான்கு
வானர
சிரேஷ்டர்களை
அழைத்து,
ரத்தினங்களிழைத்த
நான்கு
ஸ்வர்ண
கடங்களைக்
கொடுத்து,
“வானரர்களே!
பொழுதுவிடியுமுன்
நான்கு
திக்குகளிலுள்ள
ஸாகரங்களிலிருந்தும்,
புண்ய
தீர்த்தங்களிலிருந்தும்
பரிசுத்தமான
ஜலத்தைக்
கொண்டுவந்து
ஸித்தமாக
இருக்கவேண்டும்”
என்று
ஆக்ஞாபித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
மதயானைகளைப்
போன்ற
வானரவீரர்கள்
ஆகாசத்தில்
கிளம்பிக்
கருடனைப்போல்
அதிவேகமாய்ப்
போனார்கள்.
ஜாம்பவான்,
ஹநுமான்,
வேகதர்சீ,
ரிஷபன்
முதலியவர்கள்,
தங்கக்
கலசங்களில்
ஐந்நூறு
நதிகளிலிருந்து
புண்யதீர்த்தங்களைக்
கொண்டுவந்தார்கள்.
ஸுஷேணன்
கிழக்கு
ஸமுத்திரத்திலிருந்தும்,
ரிஷபன்
தெற்கு
ஸமுத்திரத்திலிருந்தும்,
கவயன்
மேற்கு
ஸமுத்திரத்திலிருந்தும்,
நளன்
வடக்கு
ஸமுத்திரத்திலிருந்தும்
ஜலத்தைக்
கொண்டுவந்தார்கள்.
வானரர்கள்
ராமனுடைய
அபிஷேகத்திற்காகப்
புண்ய
ஜலங்களைக்
கொண்டுவந்தார்களென்றறிந்து,
சத்ருக்னனும்
மந்திரிகளும்,
வஸிஷ்டருக்கும்
இதர
ஸ்நேஹிதர்களுக்கும்
தெரிவித்தார்.
Heading
▾
Meaning
Keep
ஸ்ரீ
ராம
பட்டாபிஷேகம்
58
Keep
தத: ஸ ப்ரயதோ வ்ருத்³தோ⁴ வஸிஷ்டோ² ப்³ராஹ்மணை:ஸஹ
ராமம் ரத்நமயே பீடே² ஸஹஸீதம் ந்யவேஶயத் | |
59
▾
Meaning
Keep
வஸிஷ்டோ²
வாமதே³வஶ்ச
ஜாபா³லிரத²
காஶ்யப:
|
காத்யாயந:
ஸுயஜ்ஞஶ்ச
கௌ³தமோ
விஜயஸ்
ததா²
||
60
▾
Meaning
Keep
அப்⁴யஷிஞ்சந்
நரவ்யாக்⁴ரம்
ப்ரஸந்நேந
ஸுக³ந்தி⁴நா
|
ஸலிலேந
ஸஹஸ்ராக்ஷம்
வஸவோ
வாஸவம்
யதா²
||
Śloka
▾
Meaning
Keep
ரித்விக்³பி⁴:
ப்³ராஹ்மணை:
பூர்வம்
கந்யாபி⁴ர்
மந்த்ரிபி⁴ஸ்ததா²|
யோதை⁴
ஶ்சைவாப்⁴யஷிஞ்சம்ஸ்தே
ஸம்ப்ரஹ்ருஷ்டா:
ஸநைக³மை:
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
இக்ஷ்வாகு
குல
சக்கரவர்த்திகளுக்குக்
குருவும்,
தீர்க்காயுளுள்ளவருமான
வஸிஷ்டமஹரிஷி,
இந்திரியங்களையும்
மனத்தையும்
ஸமாதானம்
செய்து
ஸகல
பிராம்மணர்களுடைய
அனுமதியைப்
பெற்று,
ஸ்ரீராமனை
ஸீதாதேவியுடன்
ரத்ன
மயமான
ஸிம்ஹாஸனத்தில்
உட்காரச்
செய்தார்.
தேவேந்திரனை
அஷ்டவஸுக்கள்
அபிஷேகம்
செய்ததுபோல்
வஸிஷ்டர்,
வாமதேவர்,
ஜாபாலி,
காச்யபர்,
காத்யாயநர்,
ஸுயஜ்ஞர்,
கௌதமர்,
விஜயர்
என்ற
எட்டு
மஹாத்மாக்களும்,
வேதோக்த
மந்திரங்களை
ஜபித்து
ஸ்ரீராமசந்திரனை
பரிமளத்
திரவியங்கள்
கலந்த
புண்ணிய
தீர்த்தத்தால்
விதிப்படி
பட்டாபிஷேகம்
செய்தார்கள்.
பிறகு
ஸகல
ஓஷதிகளும்
ரஸங்களும்
கலந்த
புண்ணிய
ஜலத்தால்
ரித்விக்குகளும்,
யுத்த
வீரர்களும்,
வர்த்தகத்
தலைவர்களும்
ரகுவீரனை
அபிஷேகம்
செய்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஆகாச
வீதியில்
லோகபாலர்களும்
தேவகணங்களும்
நின்று
ஆனந்தமாய்க்
கொண்டாடினார்கள்.
சத்ருக்னன்
வெண்குடை
பிடித்தார்.
ஸுக்ரீவன்
வெண்சாமரம்
போட்டார்.
இந்திரனால்
அனுப்பப்பட்ட
வாயுபகவான்
எண்ணிறந்த
தங்கத்
தாமரைப்
புஷ்பங்களால்
அமைக்கப்பட்ட
ஒரு
பிரகாசமான
மாலையையும்
நவரத்தினங்கள்
கலந்த
ஒரு
முத்துஹாரத்தையும்
கொண்டுவந்தார்.
தேவகந்தர்வர்கள்
அந்த
மஹோத்ஸவ
ஸமயத்தில்
மதுரமாய்ப்
பாடினார்கள்.
அப்ஸரஸ்
கணங்கள்
சாதுரியமாய்
நாட்டியம்
செய்தார்கள்.
ஸமஸ்த
பயிர்களால்
பூமி
செழித்தது.
விருக்ஷங்கள்
பழங்களால்
நிறைந்தன.
புஷ்பங்களிலிருந்து
நேர்த்தியான
பரிமளம்
வீசிற்று.
Prose passage
▾
Meaning
Keep
எண்ணிறந்த
பசுக்களையும்,
கன்றுகளையும்,
காளைகளையும்,
குதிரைகளையும்,
முப்பதுகோடி
தங்க
நாணயங்களையும்,
பலவித
ஆபரணங்களையும்,
வஸ்திரங்களையும்
ரகுநாதன்
பிராம்மணர்களுக்கும்
மற்ற
ஜாதியார்களுக்கும்
கொடுத்தார்.
நவரத்தினங்களிழைத்து,
ஸூரியனைப்போல்
பிரகாசிக்கும்
ஒரு
தங்கஹாரத்தை
ராகவன்
ஸூரியபுத்திரனான
ஸுக்ரீவனுக்குக்
கொடுத்தார்.
வாலிபுத்திரனான
அங்கதனுக்கு
நவரத்தினங்களிழைத்த
இரண்டு
அங்கதங்களைக்
(அதாவது,
தோள்வளைகளைக்)
கொடுத்தார்.
சந்திர
கிரணங்களைப்போல்
ஒளிவீசும்
ரத்தினங்கள்
கலந்த
ஒரு
முத்துஹாரத்தை
ஸீதைக்குக்
கொடுத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அவள்
இரண்டு
உத்தமமான
வஸ்திரங்களையும்
அநேக
ஆபரணங்களையும்
பர்த்தாவின்
அனுமதியைக்
கண்ஜாடையால்
அறிந்து
ஆஞ்ஜநேயருக்குக்
கொடுத்தாள்.
பிறகு
தன்
கழுத்திலிருந்து
அந்த
ஹாரத்தைக்
கழற்றி,
ஸகல
வானரர்களையும்
தன்
பர்த்தாவையும்
ஸீதை
அடிக்கடி
பார்த்தாள்.
ராமன்
அவளுடைய
கருத்தை
அறிந்து,
“ஸீதே!
எவனிடத்தில்
உனக்கு
விசேஷ
திருப்தி
இருக்கிறதோ,
எவனிடத்தில்
ஆண்மையும்
பராக்கிரமமும்
புத்தியும்
எல்லையற்று
விளங்குகின்றனவோ
அவனுக்கு
இதை
வெகுமானமாய்க்
கொடு”
என்றார்.
உடனே
ஸீதை
அந்த
ஹாரத்தை
ஆஞ்ஜநேயருடைய
கழுத்தில்
போட்டாள்.
அதனால்
சந்திர
கிரணங்கள்
சூழ்ந்த
வெண்மையான
மேகங்களால்
விளங்கும்
பர்வதத்தைப்போல்
அவர்
பிரகாசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
மைந்தன்,
த்விவிதன்,
நீலன்
முதலிய
ஸகல
வானரர்களுக்கும்
அவரவர்களுடைய
உத்தம
குணங்களுக்குத்
தகுந்தபடி
வஸ்திரங்களையும்
பூஷணங்களையும்
அபரிமிதமாய்க்
கொடுத்தார்.
விபீஷணன்,
ஸுக்ரீவன்,
ஹநுமான்,
ஜாம்பவான்
முதலிய
வானரவீரர்கள்
ரத்தினங்களாலும்,
வஸ்திரங்களாலும்,
ஆபரணங்களாலும்,
பூஷணங்களாலும்
வெகுமதி
செய்யப்பட்டுத்
தங்கள்
இருப்பிடம்
போனார்கள்.
வானரர்கள்
அந்த
பட்டாபிஷேக
மஹோத்ஸவத்தைக்
கண்டுகளித்து,
ராமனிடத்தில்
உத்தரவு
பெற்றுக்கொண்டு
கிஷ்கிந்தைக்குச்
சென்றார்கள்.
ராக்ஷஸாதிபதியான
விபீஷணன்
இக்ஷ்வாகு
வம்சத்தரசர்களுக்குக்
குலதனமான
ஸ்ரீரங்கவிமானத்தை
ராமனிடத்திலிருந்து
பெற்று
லங்கைக்குப்
போனான்.
விபீஷணன்
ஸகல
சத்துருக்களையும்
ஜயித்து,
மஹாகீர்த்திசாலியாய்
தர்ம
ராஜ்யம்
செய்து
வந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
ராமன்
பிரஜைகளைத்
தன்
குழந்தைகளைப்போல்
பாதுகாத்து,
துஷ்டநிக்ரஹ
சிஷ்டபரிபாலனம்
செய்துவந்தார்.
பிறகு,
“லக்ஷ்மண!
தர்ம
ரஹஸ்யங்களை
அறிந்த
புத்திமானே!
நமது
முன்னோர்களால்
ஆளப்பட்டுவந்த
இந்த
ராஜ்யத்தை
என்னுடன்
நீயும்
பரிபாலனம்
செய்.
உன்னை
யுவராஜாவாக
நியமிக்கிறேன்”
என்றார்.
அவர்
எவ்வளவு
சொல்லியும்
லக்ஷ்மணன்
கொஞ்சமாவது
ஸம்மதிக்காததால்,
பரதனுக்கு
யௌவராஜ்ய
பட்டாபிஷேகம்
செய்வித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பௌண்டரீகம்,
அச்வமேதம்,
வாஜபேயம்
முதலிய
யாகங்களைக்
கணக்கில்லாமல்
செய்தார்.
பதினோராயிர
வருஷங்கள்
வரையில்
ராஜ்யத்தை
ஆண்டார்.
அபரிமிதமான
தக்ஷிணைகளுடன்
எண்ணிறந்த
அசுவமேதயாகங்களைச்
செய்தார்.
முழங்கால்
வரையில்
நீண்ட
திருக்கைகளுடனும்,
மேருமலை
போன்ற
திருமார்புடனும்,
மஹாப்
பிரதாபசாலியாய்,
லக்ஷ்மணனால்
எப்பொழுதும்
உபசரிக்கப்பட்டு
லோகத்தை
ஆண்டார்.
பந்துக்களுடனும்
மித்திரர்களுடனும்
பலவகை
யக்ஞங்களைச்
செய்து
முடித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அவருடைய
ராஜ்யத்தில்
ஸ்த்ரீகள்
புருஷனை
இழந்து
வருத்தப்பட்டதில்லை.
துஷ்ட
மிருகங்களால்
உபத்திரவமில்லை.
வியாதியால்
பீடிக்கப்பட்டவர்களில்லை.
திருடர்களால்
பயமில்லை.
ஒருவனுக்கும்
கஷ்டமென்பது
நேரவில்லை.
அகாலத்தில்
ஒருவரும்
மரணமடையவில்லை.
எல்லோரும்
ஸந்தோஷமாய்க்
காலம்
கழித்தார்கள்.
எல்லோரும்
தர்மத்திலேயே
நாடின
மனமுடையவர்களாக
இருந்தார்கள்.
தர்ம
ஸ்வரூபியான
ராமனுடைய
ஆசாரத்தையே
பிரஜைகளும்
அனுஸரித்து
ஒருவரையொருவர்
உபத்திரவிக்கவில்லை.
அநேக
ஆயிர
வருஷங்கள்
ஜீவித்திருந்து,
அநேக
ஆயிரம்
புத்திரர்களுடன்,
வியாதியில்லாமலும்
சோகமில்லாமலும்
வாழ்ந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ராமன்
ராஜ்யத்தை
ஆளும்பொழுது
எங்கே
பார்த்தாலும்
ராமன்
ராமனென்றே
எல்லோரும்
அவருடைய
சரித்திரங்களை
வர்ணித்து
அவரையே
கொண்டாடினார்கள்.
ஜகத்
முழுவதும்
ராமமயமாயிற்று.
எந்த
ருதுவிலும்
விருக்ஷங்கள்
விசாலமான
கிளைகளுடனும்
புஷ்பங்களுடனும்
பழங்களுடனும்
செழித்தன.
மேகங்கள்
அந்தந்தக்
காலத்தில்
மழை
பெய்தன.
காற்று
ஸுகமாய்
வீசிற்று.
Prose passage
▾
Meaning
Keep
பிராம்மணர்களும்,
க்ஷத்திரியர்களும்,
வைச்யர்களும்,
சூத்திரர்களும்
பேராசையற்றவர்களாய்,
தங்களுடைய
வர்ணாசிரம
தர்மங்களைத்
திருப்தியாயும்
ஸந்தோஷமாயும்
நடத்தி
வந்தார்கள்.
ஸகலப்
பிரஜைகளும்
தர்மத்தில்
பிரியமுள்ளவர்களாயும்,
தர்மத்தில்
எப்பொழுதும்
நோக்கமுள்ளவர்களாயும்,
ஸத்தியவான்களாயும்,
சுப
லக்ஷணங்கள்
பொருந்தியவர்களாயும்
இருந்தார்கள்.
ஸ்ரீராமன்
ஸகோதரர்களால்
உபசரிக்கப்பட்டு,
பதினோராயிர
வருஷங்கள்
வரையில்
நிகரற்ற
காந்தியுடன்,
ராஜ்ய
பரிபாலனம்
செய்தார்.
Prose passage
▾
Meaning
Keep
வால்மீகி
மஹரிஷியால்
ஆதியில்
செய்யப்பட்ட
இந்தக்
காவியம்
தனத்தையும்,
கீர்த்தியையும்,
ஆயுளையும்,
ஜயத்தையும்
அரசர்களுக்குக்
கொடுக்கும்.
இதைப்
படித்தவனும்,
கேட்டவனும்
பாபத்திலிருந்து
விடுபடுகிறான்.
ராமனுடைய
பட்டாபிஷேக
மஹோத்ஸவக்
கதையைக்
கேட்பவன்
புத்திரர்களை
விரும்பினால்
புத்திரர்களை
அடைகிறான்.
தனத்தை
விரும்பினால்
தனத்தை
அடைகிறான்.
அரசன்
சத்துருக்களை
ஜயித்து
லோகத்தை
ஆளுகிறான்.
ஸ்த்ரீகளாயிருந்தால்
கௌஸல்யை
ராமனையும்
ஸுமித்திரை
லக்ஷ்மணனையும்
கைகேயி
பரதனையும்
அடைந்ததுபோல்,
தீர்க்காயுளுள்ள
உத்தமப்
புத்திரர்களை
அடைகிறார்கள்.
இந்த
ராமாயணத்தையும்
ராமனுடைய
விஜயத்தையும்
கேட்கிறவன்
தீர்க்காயுளைப்
பெறுகிறான்.
Prose passage
▾
Meaning
Keep
வால்மீகி
மஹரிஷியால்
செய்யப்பட்ட
இந்தக்
காவியத்தை,
காமக்குரோதங்களை
அடக்கி,
சிரத்தையுடன்
கேட்கிறவன்
ஸகல
கஷ்டங்களையும்
தாண்டுகிறான்.
தூரதேசத்திற்குப்
போயிருந்தால்
தன்
புத்திர
மித்திர
பந்துக்களுடன்
சேருகிறான்.
ரகுநாதனிடத்திலிருந்து
வேண்டிய
வரங்களைப்
பெறுகிறான்.
இந்த
ராமாயணத்தைக்
கேட்பவனிடத்தில்
ஸகல
தேவதைகளும்
பிரீதி
வைக்கிறார்கள்.
அவனுடைய
கிருஹத்திலிருக்கும்
விநாயகர்களென்ற
தேவதைகள்
பிரஸன்னமாகின்றன.
Prose passage
▾
Meaning
Keep
அரசன்
பூமியை
ஜயிப்பான்.
தேசாந்திரம்
போனவன்
க்ஷேமமாய்
வந்துசேருவான்.
யௌவன
ஸ்த்ரீகள்
உத்தமமான
புத்திரர்களைப்
பெறுவார்கள்.
இதைப்
பூஜித்துப்
படித்தால்
பாவங்கள்
நீங்கி
தீர்க்காயுளை
அடைவார்கள்.
க்ஷத்திரியர்கள்
எப்பொழுதும்
இந்தப்
புண்ணிய
சரித்திரத்தை
நமஸ்கரித்து
பிராம்மணர்களிடத்திலிருந்து
கேட்கவேண்டியது.
அவர்களுக்கு
அளவற்ற
ஐசுவரியமும்
புத்திரலாபமும்
கிடைக்கும்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
ராமாயணம்
முழுவதையும்
எப்பொழுதும்
ஒருவன்
கேட்டாலும்
படித்தாலும்
ஸ்ரீராமமூர்த்தி
அவனிடத்தில்
அழிவற்றப்
பிரீதியை
வைக்கிறார்.
அவர்
அநாதியான
மஹாவிஷ்ணுவல்லவா?
ஆதிதேவனும்
மஹானுபாவரும்
ஸர்வேசுவரனுமான
ஸ்ரீமந்நாராயணனே
ஸாக்ஷாத்
ராமனாயும்,
அவருக்கு
வாஹனமான
ஆதிசேஷனே
லக்ஷ்மணனாயும்
அவதரித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
மங்களகரமான
காவியத்தைக்
கேட்கிறவர்களுக்குக்
குடும்ப
விருத்தியும்
தனதான்ய
விருத்தியும்
உத்தமமான
ஸுகமும்
கிடைக்கும்.
ஸகல
புருஷார்த்தங்களும்
கைகூடும்.
ஸகல
மனோரதங்களும்
நிறைவேறும்.
உத்தமமான
ஸ்த்ரீகளை
அடைவார்கள்.
தீர்க்காயுளும்
தேகாரோக்கியமும்
கீர்த்தியும்
ஸகோதரர்களின்
ஒற்றுமையும்
தீக்ஷணமான
புத்தியும்,
அழிவற்ற
ஸுகமும்
கிடைக்கும்.
தேஜஸைக்
கொடுக்கும்
இந்தக்
கிரந்தத்தை,
ஐசுவரியத்தை
விரும்பும்
ஒவ்வொருவரும்
நியமத்துடன்
கேட்கவேண்டியது.
Prose passage
▾
Meaning
Keep
“வெகு
காலத்திற்குமுன்
நடந்த
இந்தச்
சரித்திரம்
உங்களுக்கு
மங்களகரமாக
இருக்கட்டும்.
விஷ்ணுவினுடைய
சக்தி
லோகங்களில்
விருத்தியடையட்டும்”
என்று
நிச்சயமாய்ச்
சொல்லுங்கள்.
ராமாயணத்தைப்
படிப்பதாலும்,
கேட்பதாலும்
ஸகல
தேவர்களும்
பித்ருக்களும்
ஸந்தோஷமடைகிறார்கள்.
வேத
ஸம்ஹிதைக்கு
ஸமமான
இந்த
வால்மீகி
ராமாயணத்தைப்
பக்தியுடன்
எழுதுகிறவர்கள்
எந்நாளும்
ஸ்வர்க்கத்தில்
வஸிப்பார்கள்.
121
▾
Meaning
Keep
ப⁴க்த்யா
ராமஸ்ய
யே
சேமாம்
ஸம்ஹிதாம்
ரிஷிணாக்ருதாம்
|
லேக²யந்தீஹ
ச
நரா:
தேஷாம்
வாஸஸ்
த்ரிவிஷ்டபே
||
Previous
←
ஸீதையின் விருத்தாந்தம் (தொடர்ச்சி)