Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதையின் விருத்தாந்தம் (தொடர்ச்சி)
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதையின்
விருத்தாந்தம்
(தொடர்ச்சி)
1
▾
Meaning
Keep
அதா²ஹ
முத்தரம்
தே³வ்யா
புநருக்த:
ஸஸம்ப்⁴ரம:
|
தவ
ஸ்நேஹாந்
நரவ்யாக்⁴ர
ஸௌஹார்தா³
த³நுமாந்ய
வை
||
Prose passage
▾
Meaning
Keep
“தாங்கள்
என்னிடத்தில்
வைத்தப்
பிரீதியாலும்
ஸீதை
என்னிடத்தில்
வைத்த
ஸ்நேகத்தாலும்
அவளால்
நான்
கௌரவிக்கப்பட்டு,
மேல்
நடக்கவேண்டிய
காரியத்தைப்
பற்றிப்
பின்வருமாறு
ஆக்ஞாபிக்கப்பட்டேன்.
‘ராமன்
ராவணனை
யுத்தத்தில்
கொன்று
என்னைச்
சீக்கிரம்
அடையும்படி
நான்
சொன்னபடியும்
இன்னும்
உன்
புத்திக்குத்
தோன்றும்
பலவிதமாயும்
சொல்லவேண்டியது.
Prose passage
▾
Meaning
Keep
உனக்கு
இஷ்டமிருந்தால்
இங்கே
இன்னும்
ஒருதினம்
தங்கிப்
போ.
ராக்ஷஸர்கள்
கண்டுபிடிக்கக்கூடாத
ஓரிடத்தில்
சிரமம்
தீர்த்துக்கொண்டு
மறுநாள்
போகலாம்.
மஹாவீரனான
நீ
என்
ஸமீபத்திலிருக்கும்
வரையில்
பாக்கியமில்லாத
நான்
அனுபவிக்கும்
துக்கம்
ஒரு
முகூர்த்தமாவது
விலகியிருக்கும்.
நீ
போய்விட்டால்,
திரும்பி
வருவாயென்று
நான்
எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில்
என்
பிராணன்
போனாலும்
போகும்.
துக்கத்தின்மேல்
துக்கம்
என்னை
வாட்டுகின்றது;
துக்கத்தைத்
தவிர
எனக்கு
வேறு
பிராப்தமில்லை;
சொல்லமுடியாத
கஷ்டத்தை
அனுபவிக்கிறேன்;
உன்னையும்
பார்க்காவிட்டால்
மறுபடியும்
துக்கம்
என்னை
வாட்டுமே.
Prose passage
▾
Meaning
Keep
அது
இருக்கட்டும்.
கருடனையும்
வாயுவையும்
வாயுபுத்திரனான
உன்னையும்
தவிர
இந்த
ஸாகரத்தைத்
தாண்டக்கூடியவர்
ஒருவரும்
இல்லையே.
ராமலக்ஷ்மணர்களாவது
வானர
சிரேஷ்டர்களாவது
வானர
ஸைன்யங்களாவது
மலைபோன்ற
அலைகளையுடைய
இந்தப்
பெருங்கடலை
எப்படித்
தாண்டப்போகிறார்கள்?
இந்த
ஸந்தேகம்
எப்பொழுதும்
என்
மனத்தில்
குடிகொண்டு
என்னை
உபத்திரவிக்கிறது.
மஹாபுத்திமானான
நீயே
இதற்கு
ஒரு
உபாயம்
சொல்லவேண்டியது.
Prose passage
▾
Meaning
Keep
ஸமுத்திரத்தைத்
தாண்டி
ராவணனையும்
அவனைச்
சேர்ந்தவர்களையும்
யுத்தம்
செய்து
கொன்று,
லங்கையை
நாசம்
செய்து,
என்னை
அழைத்துப்போக
நீ
ஒருவனே
போதும்.
மஹாபராக்கிரமசாலியான
உனக்கு
அது
விசேஷ
கீர்த்தியைக்
கொடுக்கும்.
ஆனால்
ராமன்
ஸைன்யங்களுடன்
இங்கே
வந்து,
ராவணனையும்
ராக்ஷஸர்களையும்
யுத்தத்தில்
கொன்று
என்னை
அயோத்யைக்கு
அழைத்துப்போனால்
அது
அவருடைய
குலத்திற்கும்
ஆசாரத்திற்கும்
பராக்கிரமத்திற்கும்
கீர்த்திக்கும்
அழகு.
அவரிடத்தில்
பயந்து
அவரில்லாத
வேளையில்
திருடனைப்போல்
ராவணன்
என்னை
எடுத்து
வந்தபடியால்,
இங்கிருந்து
அவனுக்குத்
தெரியாமல்
ரஹஸ்யமாய்
என்னை
அழைத்துப்போவது
அவருக்குத்
தகாது.
Prose passage
▾
Meaning
Keep
மஹாவீரன்,
லோகமறிய
ஸேனாஸமுத்திரத்தை
இங்கே
அழைத்துக்கொண்டு
வந்து
லங்கையைத்
தூளாக்கி,
ராக்ஷஸர்களை
வேரறுத்து,
என்னை
ஜயலக்ஷ்மியுடன்
அழைத்துப்போவது
அவருக்குத்
தகும்.
யுத்தத்தில்
அவரைப்
போன்ற
சூரனுண்டோ?
அவருடைய
பராக்கிரமமும்
பிரதாபமும்
எப்படி
விளங்குமோ
அப்படிச்
செய்யவேண்டியது
நீயே’
என்று
வினயமாய்
அனேக
காரணங்களுடன்
விசேஷ
அர்த்தங்கள்
அடங்கச்
சொன்னாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
நான்,
‘தாயே!
கணக்கற்ற
வானர
ஸைன்யங்களுக்கு
அதிபதியான
ஸுக்ரீவ
மஹாராஜா,
மஹாபலவான்;
ஒப்பற்ற
பராக்கிரமமுடையவர்.
அவருடைய
ஆக்ஞைகளை
நிறைவேற்றுவதற்கு
மஹாபலவான்களும்
பராக்கிரமசாலிகளும்
உத்ஸாஹமுள்ளவர்களும்
மனோவேகமுள்ளவர்களுமான
வானரவீரர்கள்
கணக்கில்லாமல்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எந்த
திக்குகளிலும்
அவர்களுக்குத்
தடையில்லை.
அபாரதேஜஸ்விகளானதால்
பெரிய
காரியங்களைத்
தயங்காமல்
நிறைவேற்றுவார்கள்.
கேவலம்
பலக்கொழுப்பால்
அவர்கள்
ஆகாசமார்க்கமாய்
இந்தப்
பூமியை
அனேகம்
தடவை
பிரதக்ஷிணம்
செய்திருக்கிறார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸுக்ரீவனிடத்தில்
இருப்பவர்கள்
எல்லோரும்
எனக்கு
ஸமானர்கள்;
அல்லது
எனக்கு
மேலானவர்கள்.
எனக்குத்
தாழ்ந்தவன்
அங்கே
ஒருவனும்
கிடையாது.
நானே
இங்கே
வந்திருக்கையில்
அவர்கள்
வரத்
தடையென்ன?
அரசன்
தன்னிடமிருக்கும்
ஸாமான்யர்களை
இதைப்போன்ற
வேலையிடுவானே
தவிர
சிரேஷ்டமானவர்களை
ஏவுவானா?
ஆகையால்
ஏன்
ஸந்தேகப்படுகிறீர்கள்?
கவலையை
விடுங்கள்.
அவர்கள்
கிஷ்கிந்தையிலிருந்து
ஒரே
மூச்சில்
தாண்டி
இங்கே
வந்து
குதிப்பார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
புருஷஸிம்ஹங்களான
அந்த
ராமலக்ஷ்மணர்கள்
என்
முதுகில்
ஏறிக்கொண்டு
ஸூரியசந்திரர்களைப்போல்
ஆகாசமார்க்கமாய்
இங்கே
வருவதையும்,
சத்துருகுலகாலனும்
ஸிம்ஹத்தைப்போல்
பராக்கிரமமுள்ளவருமான
ராமன்
கோதண்டபாணியாய்
லக்ஷ்மணருடன்
இந்த
லங்கைக்
கோட்டைவாசலில்
வந்து
நிற்பதையும்,
நகத்தையும்
பற்களையும்
ஆயுதங்களாயுடையவர்களும்
பராக்கிரமத்தில்
ஸிம்ஹங்களுக்கும்
புலிகளுக்கும்
நிகரானவர்களும்
மதயானையைப்போல்
விளங்குகிறவர்களும்
வீரசிரேஷ்டர்களுமான
வானரஸைன்யங்கள்
லங்கையைச்
சூழ்ந்து
அதன்
ஸமீபத்திலுள்ள
மலைத்தாழ்வரைகளில்
மஹா
மேகங்களைப்போல்
வீரகோஷம்
செய்வதையும்,
ஸ்ரீ
ரகுவீரன்
வனவாஸத்தை
முடித்துக்
சத்துருக்களை
நிர்மூலம்
செய்து
தங்களுடன்
அயோத்யைக்குச்
சென்று
ராஜ்யாபிஷேகம்
பெறுவதையும்
அதிசீக்கிரத்தில்
மஹாபாக்கியசாலியான
தாங்கள்
பார்க்கப்போகிறீர்கள்’
என்று
கம்பீரமாயும்
மங்களகரமாயும்
பிரியமாயும்
நான்
சொன்னதைக்
கேட்டு
தாங்களனுபவிக்கும்
கஷ்டத்தைக்
கேள்விப்பட்டு
எனக்கெதிரே
விசேஷ
துக்கத்தை
அடைந்த
ஜனகராஜபுத்திரி,
மனம்
தெளிந்து
ஆறுதலடைந்தாள்”
என்றார்.
29
▾
Meaning
Keep
ததோ
மயா
வாக்³பி⁴ரதீ³ந
பா⁴ஷிணா
ஶிவாபி⁴ரிஷ்டாபி⁴ரபி⁴
ப்ரஸாதி³தா
|
ஜகா³ம
ஶாந்திம்
மம
மைதி²லாத்மஜா
தவாபி
ஶோகேந
ததா³பி⁴பீடி³தா
||
Heading
▾
Meaning
Keep
ஸுந்தர
காண்டம்
முற்றிற்று
Verse
▾
Meaning
Keep
ஸ்ரீ
ஸீதாலக்ஷ்மண
பரத
ஶத்ருக்ந
ஹநுமத்ஸமேத
ஸ்ரீ
ராமசந்த்ர
பரப்ரஹ்மணே
நம:
Previous
←
ஸீதையின் விருத்தாந்தம்
Next
ஸ்ரீ ராம பட்டாபிஷேக ஸர்க்கம்
→