Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஆஞ்ஜநேயர் ஸமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்குப் போனது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஆஞ்ஜநேயர்
ஸமுத்திரத்தைத்
தாண்டி
லங்கைக்குப்
போனது
1
▾
Meaning
Keep
ததோ
ராவண
நீதாயா:
ஸீதாயா:
ஶத்ருகர்ஶந:
|
இயேஷ
பத³மந்வேஷ்டும்
சாரணாசரிதே
பதி²
||
Heading
▾
Meaning
Keep
அவதாரிகை
Avatāraṇikā
▾
Meaning
Keep
பகவான்
யாவற்றைக்
காட்டிலும்
மேலானவர்
என்பதற்கு
அடையாளமான
எண்ணிறந்த
கல்யாண
குணங்கள்
அவரிடத்தில்
விளங்குகின்றன
என்று
கிஷ்கிந்தா
காண்டத்தில்
சொல்லப்பட்டது.
அவர்
எல்லாவற்றையும்
நாசம்
செய்யும்
சக்தியுமுடையவர்
என்று
இந்தக்
காண்டத்தில்
உபதேசிக்கப்படுகிறது.
பதினைந்தாவது
ஸர்க்கத்தில்,
“ராமனை
விரோதித்துக்கொண்டவனை,
ராமனால்
கொல்லத்
தகுந்தவனை,
பிரஹ்மா,
ருத்திரன்,
இந்திரன்
முதலியவர்களும்
காப்பாற்ற
முடியாது”
என்பதால்
இது
நன்றாக
விளங்குகிறது.
Avatāraṇikā
▾
Meaning
Keep
கிஷ்கிந்தா
காண்டத்தில்
மித்திரர்களை
எப்படியாவது
ரக்ஷிக்க
வேண்டும்
என்ற
தர்மமும்,
இந்தக்
காண்டத்தில்
தூதனும்
பதிவிரதையும்
நடந்துகொள்ளவேண்டிய
தர்மமும்
சொல்லப்படுகின்றன.
Avatāraṇikā
▾
Meaning
Keep
அல்லது,
முன்
காண்டத்தில்
ஸகல
லோகங்களையும்
ரக்ஷிக்க
அவதரித்த
மஹாவிஷ்ணுவுக்கு,
ஆசாரியன்
என்ற
புருஷகாரம்
(மத்தியஸ்தம்)
கிடைத்த
தென்பதையும்,
இந்தக்
காண்டத்தில்
ஆசாரியன்
செய்யவேண்டிய
காரியத்தையும்
வால்மீகி
தெரிவிக்கிறார்.
அதில்
முதல்
ஸர்க்கத்தில்
உபதேசம்
பெறத்
தகுந்த
சிஷ்யனைக்
குரு
தேடிப்
போவது
சொல்லப்படுகிறது.
(கோவிந்தராஜீயம்)
Avatāraṇikā
▾
Meaning
Keep
முன்
காண்டத்தில்
ஆஞ்ஜநேயர்
மனத்தால்
லங்கைக்குச்
சென்றாரென்று
சொல்லப்பட்டது.
இந்தக்
காண்டத்தில்
தேகத்தாலும்
அங்கே
சென்றது
வர்ணிக்கப்
படுகிறது.
(தீர்த்தீயம்)
Avatāraṇikā
Keep
கிஷ்கிந்தா காண்டத்துடன் 11,000 சுலோகங்கள் முடிந்தன. ஸுந்தர காண்டம் முதல் ஸர்க்கம் முதல் சுலோகத்தில் ‘ததோ ராவண’ என்ற பதங்களில் நான்காவது அக்ஷரமாகிய ‘வ’ என்பது காயத்ரியின் பன்னிரண்டாவது அக்ஷரம்.
Avatāraṇikā
▾
Meaning
Keep
ராவண
நீதாயா:
(ராவணனால்
கொண்டுபோகப்பட்ட)
என்ற
விசேஷணத்தால்
ஸீதையின்
ஸாத்விகஸ்வரூபம்
அக்னி
குண்டத்திலும்,
ராஜஸஸ்வரூபம்
பகவானுடைய
வலது
புஜத்திலும்
என்றும்
பிரியாமலிருந்தனவென்றும்,
தாமஸ
ரூபத்தையே
ராவணன்
எடுத்துப்
போனானென்றும்
உட்கருத்து
குறிப்பிடப்படுகிறது.
Avatāraṇikā
▾
Meaning
Keep
ராமாயணத்தின்
மற்ற
காண்டங்களுக்கு
அந்தந்தப்
பெயர்களிட்டதற்குக்
காரணங்களுண்டு.
பால
காண்டம்
ராமனுடைய
பால்ய
விருத்தாந்தங்களையும்
அயோத்யா
காண்டம்
பன்னிரண்டாவது
வயது
முதல்
இருபத்தைந்தாவது
வயது
வரையில்
அயோத்யையில்
நடந்த
விருத்தாந்தங்களையும்,
ஆரண்ய
காண்டம்
தண்டகாரண்யத்தில்
நடந்த
வரலாற்றையும்,
கிஷ்கிந்தா
காண்டம்
கிஷ்கிந்தையில்
நடந்த
விசேஷங்களையும்,
யுத்த
காண்டத்தில்
ராமலக்ஷ்மணர்கள்,
வானர
ஸைன்யங்கள்
இவர்களுக்கும்
ராவணாதி
ராக்ஷஸர்களுக்கும்
நடந்த
யுத்த
விவரங்களையும்,
உத்தர
காண்டத்தில்
ராமன்
அயோத்யைக்கு
வந்த
பிறகு
நடந்த
காரியங்களையும்
வர்ணிப்பதால்
அந்தப்
பெயர்கள்
கிடைத்தன.
Avatāraṇikā
▾
Meaning
Keep
ஆனால்
இந்தக்
காண்டத்திற்கு
ஸுந்தரமென்ற
பெயர்
வாய்த்ததேன்?
ஸுந்தரமென்றால்
அழகு
பொருந்தினது
என்று
பொருள்.
ஆனால்
மற்ற
காண்டங்களின்
அமைப்பு
அழகு
வாய்ந்ததல்லவென்று
எண்ணக்கூடுமா?
ஆகையால்
வேறு
காரணம்
வால்மீகியின்
மனத்திலிருக்கவேண்டும்.
ஆஞ்ஜநேயர்
ஸமுத்திரத்தைத்
தாண்டினது,
லங்காநகரம்,
சந்திரோதயம்,
அசோகவனம்,
மதுவனம்
முதலியவைகளின்
வர்ணனை
ஒப்பற்றது
என்று
எல்லோராலும்
ஒப்புக்கொள்ளப்படுகின்றது.
ஆனால்
இந்தக்
காரணமே
போதுமா?
Avatāraṇikā
▾
Meaning
Keep
ராமாயணத்தின்
தத்வார்த்தத்தைக்
கவனித்தவர்களுக்கு
ஞான
பூமியான
அயோத்யையிலிருந்து
ஜீவன்
இந்திரியங்கள்,
அந்தக்கரணம்,
முக்குணங்கள்
என்ற
இவைகளால்
ஆக்ரமிக்கப்பட்டு
ஸம்ஸார
தசையில்
கட்டுண்டு
கிடக்கையில்
பரம
காருணிகரான
பகவான்
அதைத்
தேடிச்
சென்று
மறுபடியும்
தன்னடிச்
சோதிக்குச்
சேர்த்துக்கொள்ள
விரும்பிப்
பரம
குருவை
அனுப்புகிறார்.
அந்தக்
குருவினுடைய
தரிசனம்
சிஷ்யனான
ஜீவனுக்குக்
கிடைத்ததும்
பகவானுடைய
கல்யாணகுணங்களை
அவர்
ஜீவனுக்கு
உபதேசித்ததும்,
அவர்
தன்னைக்
காப்பாற்றுவாரென்று
ஜீவன்
தைரியமடைந்ததும்,
தன்
நிலைமையையும்
துக்கத்தையும்
ஜீவன்
ஆசார்யன்
மூலமாக
பகவானுடைய
ஸந்நிதியில்
தெரிவித்துக்கொண்டதும்
ஆசாரியன்
ஜீவனுடைய
நிலைமையைப்
பகவானிடத்தில்
விண்ணப்பம்
செய்துகொண்டதும்
இந்தக்
காண்டத்தில்
சொல்லப்படுகின்றன.
ஆகையால்
அக்ஞானம்
நீங்கி
ஞானோதயமாகி
மோக்ஷ
ஸாம்ராஜ்யத்தை
அடைவதற்கு
இந்தக்
காண்டத்தில்
விதை
விதைக்கப்பட்டது.
ஆகையால்
இது
ஸுந்தர
காண்டமெனத்
தகும்.
Avatāraṇikā
▾
Meaning
Keep
“ராமாயணமென்ற
மாலையில்
நடுநாயகமான
ரத்தினம்போல்
ஆஞ்ஜநேயர்
விளங்குகிறார்”
என்றபடி
இந்தக்
காண்டத்தில்
ஆரம்பம்
முதல்
முடிவுவரையில்
ஆஞ்ஜநேயரே
கதாநாயகன்.
அவருடைய
பலம்,
பராக்கிரமம்,
புத்தி,
மஹிமை,
வீரியம்
முதலியவைகளே
வர்ணிக்கப்படுகின்றன.
ஸர்வசக்தனான
பகவானும்
அவருடைய
உதவியைத்
தேடினாரென்றும்
ஸீதாபிராட்டிக்கே
அவர்
பிராணதானம்
செய்தாரென்றும்
சொல்லியிருப்பதாலும்,
‘நீ
செய்த
உபகாரத்திற்கு
நான்
பதில்
செய்யச்
சக்தியற்றவன்’
என்று
பெருமாளும்
பிராட்டியும்
தெரிவிப்பதாலும்,
ஆஞ்சநேயருடைய
சரித்திரத்தைச்
சொல்லும்
இந்தக்
காண்டமே
ஸுந்தரமானது.
Avatāraṇikā
▾
Meaning
Keep
ராமாயண
பீடிகையில்
இந்தக்
காண்டத்தின்
மஹிமையையும்
மந்திரத்தையும்
விஸ்தாரமாய்ச்
சொல்லியிருப்பதைப்
பார்க்கவும்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஜாம்பவானால்
தூண்டப்பட்ட
ஆஞ்ஜநேயர்,
சாரணர்கள்
ஸஞ்சரிக்கும்
ஆகாச
மார்க்கத்தில்,
ராவணனால்
அபகரித்துக்
கொண்டு
போகப்பட்ட
ஸீதை
இருக்குமிடத்தைத்
தேடிக்
கண்டுபிடிக்க
விரும்பினார்.
அப்படித்
தேடும்
விஷயத்தில்
நேரும்
இடையூறுகளை
நீக்க
அவருக்குள்ள
ஸாமர்த்தியம்
எவருக்கும்
கிடையாது.
Prose passage
▾
Meaning
Keep
[சிஷ்யனிருக்குமிடத்தைத்
தேடிப்
போகும்
பரம
குருவின்
ஸ்வரூபம்
உபதேசிக்கப்படுகிறது.
சிஷ்யன்
தாபத்ரயத்தால்
நொந்து,
தன்னைத்
தேடி
வரும்
வரையில்
பொறுத்திருப்பவர்
குரு.
சிஷ்யனுடைய
துக்கத்தையும்
கஷ்டத்தையும்
அவனைக்
காட்டிலும்
நன்றாயறிந்து
மனமுருகித்
தாங்காமல்
அவனை
வலுவில்
தேடிப்
போய்
ரக்ஷிக்கிறவர்
பரமகுரு.
Prose passage
▾
Meaning
Keep
‘கு’
என்ற
அக்ஷரம்
அக்ஞானமாகிய
இருட்டையும்,
‘ரு’
என்ற
அக்ஷரம்
அவ்விருட்டைப்
போக்கும்
சக்தியையும்
குறிக்கின்றது.
“அக்ஞானமென்ற
இருட்டைப்
போக்குவதால்
குரு
என்ற
பெயர்
கிடைத்தது”
என்ற
வாக்கியப்படி
அக்ஞானத்தைப்
போக்கும்
ஸ்வபாவத்தையுடைய
குரு,
புராதன
தர்மங்களை
லோகத்தார்
அனுஷ்டிக்கும்படி
செய்யும்
பூர்வாசாரியர்கள்
அனுஷ்டித்து
வந்த
மார்க்கத்தை
அவலம்பித்தவராய்,
ஞானத்திற்கு
விரோதமான
புத்தியைக்
கொடுக்கும்
அவிவேகத்தால்
வசப்படுத்தப்பட்டு,
அநாதியாய்ப்
பகவானுக்குப்
பரதந்திரனான
ஜீவனிருக்கும்
ஸம்ஸாரமண்டலத்தைத்
தேடிச்
சென்றார்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
என்ற
சப்தத்தால்
ஸ்த்ரீ
புருஷ
ஸம்பந்தமில்லாமல்
உண்டானதென்றும்,
ஸ்த்ரீலிங்கத்தால்
பரதந்த்ரமான
ஸ்வபாவத்தை
உடையதென்றும்
தெரிகின்றது.
பகவானைத்
தவிர
மற்றவர்கள்
ஸ்த்ரீயைப்போலவென்பதும்
காண்க.
ஸாத்விகமான
ஸம்பாஷணம்,
ஸாத்விக
ஸ்வபாவமுள்ளவரிடத்தில்
ப்ரேமை,
ஸர்வப்பிராணிகளிடத்திலும்
துவேஷமில்லாமை,
பகவானுடைய
கடாக்ஷம்
முதலிய
குணங்கள்
ஆசாரியனை
அடைவதற்கு
ஹேதுக்களென்றபடி.
இவ்வடையாளங்களால்
ஜீவனிருக்குமிடத்தைக்
கண்டுபிடிக்க,
அல்லது
ஜீவனுக்குப்
பகவானை
அடைவதில்
ஏற்படும்
முயற்சியை
அறிய
விரும்பினார்
என்று
அர்த்தமாகும்.]
Prose passage
▾
Meaning
Keep
பிறரால்
செய்யமுடியாத
அபூர்வமான
காரியத்தைச்
செய்ய
நிச்சயம்
கொண்டு,
ஹனுமான்
உயர்ந்த
தலையையும்
கழுத்தையும்
உடையவராய்ப்
பசுக்கூட்டங்களுக்குத்
தலைவனான
காளையைப்
போல்
விளங்கினார்.
வைடூரிய
வர்ணமுடையதால்
சுத்த
ஜலத்தைப்
போல்
பிரகாசிக்கும்
இளம்புல்
நிறைந்த
மஹேந்திர
பர்வதத்தின்
மேற்புறங்களில்
ஸுகமாய்
உலாவினார்.
சிறந்த
புத்தியுடைய
அந்த
வானர
சிரேஷ்டன்
பக்ஷிகளைப்
பயமுறச்
செய்து,
விருக்ஷங்களை
மார்பால்
முறித்துக்கொண்டு,
அநேக
மிருகங்களை
அடித்துத்
தள்ளி,
பூர்ண
பலத்தையுடைய
ஸிம்ஹம்போல்
பிரகாசித்தார்.
கருப்பு,
சிவப்பு,
வெளுப்பு
முதலிய
நானா
வர்ணங்களையுடைய
அநேக
தாதுக்களால்
அலங்கரிக்கப்பட்டு,
இஷ்டமான
ரூபத்தை
எடுக்கக்கூடிய
யக்ஷகின்னரர்கள்
அழகான
கந்தர்வபன்னக
கணங்கள்
அலங்கரித்துக்கொண்டு
இஷ்டப்படி
ஸஞ்சரிக்கப்பெற்று,
கணக்கில்லாத
மதயானைகள்
நிறைந்த
அந்தப்
பர்வதத்தில்
ஆஞ்ஜநேயர்
விஸ்தாரமான
மடுவில்
விளையாடும்
கஜத்தைப்போல்
காணப்பட்டார்.
Prose passage
▾
Meaning
Keep
பின்பு
தனக்கு
ஆசாரியரான
ஸூரியபகவானுக்கும்,
தான்
கற்ற
ஐந்திரவியாகரணத்தைச்
செய்த
மஹேந்திரனுக்கும்,
தன்
பிதாவான
வாயுபகவானுக்கும்,
தனக்கு
அபூர்வமான
வரங்களை
அளித்த
பிரஹ்மதேவருக்கும்,
தேவயோனியில்
பிறந்த
பூதகணங்களுக்கும்
கைகூப்பி
வந்தனம்
செய்து,
புறப்பட
நிச்சயித்தார்.
கிழக்கு
முகமாய்
நின்று,
தன்
தகப்பனான
வாயு
பகவானைக்
கைகூப்பி
நமஸ்கரித்து,
மிகுந்த
ஸாமர்த்தியமுள்ள
மாருதி,
தெற்கே
திரும்பி
தன்
ரூபத்தை
வளரச்
செய்தார்.
வானர
சிரேஷ்டர்கள்
ஆச்சரியத்துடன்
பார்த்துக்
கொண்டிருக்க,
ஸமுத்திரத்தைத்
தாண்ட
நிச்சயித்து,
ராமனுக்கு
க்ஷேமம்
விருத்தியாவதற்காக,
பர்வ
காலங்களில்
ஸமுத்திரம்
பொங்குவதுபோல்
வளர்ந்தார்.
அளவற்ற
சரீரத்தை
உடையவராய்,
கடலைக்
கடக்க
விரும்பி,
கைகளாலும்
கால்களாலும்
அந்த
மலையை
அழுத்தினார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அந்த
மலை
ஒரு
முகூர்த்தகாலம்
வரையில்
கிடுகிடென்று
நடுங்கிற்று.
அதிலுள்ள
மரங்களிலிருந்த
புஷ்பங்கள்
பூமியில்
சொரிந்தன.
அந்த
புஷ்பவர்ஷத்தால்
அம்மலை
மறைந்து
மணம்வீசிப்
புஷ்பமலைபோல்
காணப்பட்டது.
உத்தமமான
வீரியத்தையுடைய
ஆஞ்ஜநேயரால்
அழுத்தப்பட்ட
அந்த
மஹேந்திர
பர்வதம்,
மதயானை
மதஜலத்தைப்
பெருக
விடுவதுபோல்
நீர்த்
தாரைகளைப்
பெருக்கிற்று;
மஹாபலவானான
மாருதியால்
பீடிக்கப்பட்டு,
தங்கம்,
வெள்ளி
முதலிய
நிறங்களையுடைய
ரேகைகளை
வெளிப்படுத்திற்று.
நடுவில்
கொழுந்து
விட்டெறியும்
அக்னியிலிருந்து
புகை
வரிசையாகக்
கிளம்புவதுபோல்,
அம்மலையிலிருந்து
மனச்சிலையென்னும்
கற்களுடன்
கூடின
பாறைகள்
தெரித்து
விழுந்தன.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அழுத்தப்பட்ட
அந்த
மலையால்
நசுங்கி,
அதன்
குகைகளிலுள்ள
ஜந்துக்கள்
நான்கு
புறங்களிலிருந்தும்
விகாரமாகக்
கத்தின.
அந்த
ஓசை
பூமியிலும்
திக்குகளிலும்
தோப்புகளிலும்
பரவி
நிறைந்தது.
அங்குள்ள
கொடிய
ஸர்ப்பங்கள்
விஷ்ணுபாதம்
போன்ற
ரேகைகளால்
அலங்கரிக்கப்பட்ட
பெரிய
படங்களை
எடுத்துக்
கோபாவேசத்துடன்
குரூரமான
விஷங்களைக்
கக்கிக்கொண்டு
பாறைகளைக்
கடிக்க,
அவை
விஷத்
தீயால்
ஜ்வலித்து
ஆயிரம்
துண்டுகளாகப்
பிளந்தன.
அந்த
மலையிலுள்ள
விஷத்தைப்
போக்கும்
ஔஷதிகள்
அந்த
ஸர்ப்பங்களின்
விஷத்தைப்
போக்கமுடியவில்லை.
இந்த
மலையைப்
பூதங்கள்
பிளக்கின்றன
என்றெண்ணி,
அங்கே
வஸித்த
தபஸ்விகள்
அங்கிருந்து
போனார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அங்குள்ள
வித்யாதரர்கள்
பானபூமியில்
மதுவால்
நிறைந்த
தங்கப்
பாத்திரங்களையும்
விலையுயர்ந்த
தங்கமயமான
போஜன
பாத்திரங்களையும்,
லேஹ்யம்,
பக்ஷ்யம்,
பலவித
மாம்ஸங்கள்,
எருமைத்
தோலால்
செய்யப்பட்ட
கேடயங்கள்,
தங்கப்
பிடி
போட்ட
கத்திகள்
முதலியவைகளையும்
விட்டு,
வெண்தாமரையைப்
போன்ற
கண்கள்
மதுபானத்தால்
செந்தாமரையைப்
போல்
சிவந்து,
சிவந்த
மலர்கள்
சிறந்த
சந்தனங்களால்
அலங்கரிக்கப்பட்டு
மயங்கி,
ஸ்த்ரீகளுடன்
ஆகாசத்தில்
கிளம்பிப்
போனார்கள்.
ஹாரங்கள்
சிலம்புகள்
தோள்வளை
கைவளைகளால்
அலங்கரிக்கப்பட்ட
ஸ்த்ரீகள்
தங்கள்
நாயகர்களுடனும்,
வித்யாதர
சிரேஷ்டர்கள்
அணிமாதி
அஷ்டமஹாஸித்திகளைக்
காட்டிக்கொண்டும்,
ஆகாசத்திலிருந்து
கூட்டம்
கூட்டமாக
அந்த
மலையைப்
பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
களங்கமற்ற
ஆகாசத்தில்
நிற்கும்
மஹரிஷிகளும்
சாரணர்களும்
ஸித்தர்களும்
“வாயுகுமாரரான
ஆஞ்ஜநேயர்
மலையைப்
போன்ற
தேகத்துடன்
ஒருவராலும்
தாண்டமுடியாத
இந்த
ஸமுத்திரத்தைத்
தாண்டி
அக்கரைக்குப்
போய்,
ராமனையும்
வானரர்களையும்
உத்தேசித்து,
பிறரால்
ஸாத்தியமில்லாத
காரியத்தைச்
செய்ய
விரும்புகிறார்”
என்று
சொல்லக்
கேட்டு,
வித்யாதரர்கள்
மஹேந்திர
பர்வதத்தில்
ஒப்பில்லாத
வீரியத்துடன்
நிற்கும்
மாருதியைப்
பார்த்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்
மயிர்களைச்
சிலிர்த்தார்;
பெரிய
மலையைப்போல்
அசைந்தார்;
நீருண்ட
மேகத்தைப்போல்
கர்ஜித்தார்;
அடிமுதல்
நுனி
வரையில்
நீண்டு
உருண்டு
மயிர்களடர்ந்த
வாலை,
கருடன்
மஹாநாகத்தைப்
பற்றிச்
சுழற்றுவதுபோல்
சுழற்றி
உதறினார்.
ஆகாசத்தில்
செல்வதற்கு
வேண்டிய
வேகத்தை
வளர்க்கும்
ஆஞ்ஜநேயருடைய
வால்,
ஸமுத்திரத்திலிருந்து
கருடனால்
கொத்திக்
கொண்டுபோகப்படும்
பெரிய
ஸர்ப்பத்தைப்போல்
காணப்பட்டது.
Prose passage
▾
Meaning
Keep
அளவற்ற
காந்தியையும்
வீரியத்தையுமுடைய
வாயுபுத்திரர்
கோட்டை
வாசல்
தாழ்ப்பாளைப்போன்ற
புஜங்களைப்
பூமியில்
பலமாக
ஊன்றி,
இடுப்பைச்
சுருக்கி,
கால்களை
மடக்கி,
புஜங்களையும்
கழுத்தையும்
வளைத்து,
தேஜஸையும்
ஸத்வத்தையும்
வீரியத்தையும்
விருத்தி
செய்தார்.
வெகு
தூரம்
வரையில்
தான்
போகும்
வழியை
நிமிர்ந்து
உற்றுப்
பார்த்து,
ஆகாசத்தை
நோக்கிப்
பிராணவாயுக்களை
ஹிருதயத்தில்
நிறுத்தினார்.
கால்களை
உறுதியாக
ஊன்றி,
காதுகளை
மடக்கிக்கொண்டு,
அந்த
மஹாபலசாலியான
வானர
சிரேஷ்டன்
ஆகாசத்தில்
தாவும்
ஸமயத்தில்
வானர
வீரர்களைப்
பார்த்து,
இவ்விதம்
சொன்னார்.
Prose passage
▾
Meaning
Keep
“வாயு
வேகமுள்ள
ராமபாணம்
தடையில்லாமல்
எப்படிப்
போகுமோ,
அப்படி
ராவணனால்
ஆளப்பட்ட
லங்கைக்குப்
போவேன்.
அங்கே
ஜானகியைக்
காணாவிட்டால்
அந்த
வேகத்துடன்
தேவலோகத்திற்குப்
போவேன்.
அங்கேயும்
அவளைக்
காணாவிட்டால்
கொஞ்சம்கூட
சிரமமில்லாமல்
ராக்ஷஸ
ராஜனான
ராவணனைப்
பிடித்துக்
கட்டி
இங்கே
கொண்டு
வருவேன்.
உத்தேச
காரியத்தை
எப்படியாவது
முடித்துக்கொண்டு
ஸீதையுடன்
திரும்பி
வருவேன்.
அல்லது
ராவணனுடைய
லங்கையையும்
வேருடன்
பெயர்த்து
இங்கே
கொண்டு
வருவேன்”
என்று
அவர்களுக்குத்
தைரியம்
சொல்லிக்
கவலையில்லாமல்
அதிவேகமாக
ஆகாசத்தில்
கிளம்பி,
தன்னைப்
பக்ஷிராஜனான
கருடனுக்கு
ஸமமாக
எண்ணினார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அந்த
வேகத்தால்
மலையிலுள்ள
மரங்கள்
யாவும்
இலைகளுடன்
நான்கு
புறங்களிலிருந்து
மேலே
கிளம்பின.
மதம்கொண்ட
நாரைகளுடன்
மலர்ந்த
புஷ்பங்களால்
விளங்கும்
அந்த
மரங்களைத்
தன்
தொடையின்
வேகத்தால்
இழுத்துக்கொண்டு
ஆகாசத்தில்
போனார்.
நெடுந்தூரம்
பிரயாணம்போகும்
ஒருவனை
அவனுடைய
பிரியமான
பந்துக்கள்
சிறிதுதூரம்
வரையில்
சென்று
வழி
விடுவதுபோல்,
அந்த
மரங்கள்
கொஞ்ச
தூரம்
அவரைத்
தொடர்ந்தன.
ஸேனைகள்
அரசனைத்
தொடர்வதுபோல்
அவருடைய
வேகத்தால்
முறிக்கப்பட்ட
ஆச்சா
முதலிய
மரங்கள்
அவரைப்
பின்
தொடர்ந்தன.
Prose passage
▾
Meaning
Keep
மஹா
பர்வதம்
போன்ற
மாருதி
புஷ்பங்களால்
விளங்கும்
அந்த
மரங்களால்
சூழப்பட்டு
ஆச்சரியமாகக்
காணப்பட்டார்.
மஹேந்திரனைக்
கண்டு
பயந்து,
மலைகள்
கடலில்
விழுந்து
மறைந்ததுபோல்,
வைரமுள்ள
மரங்கள்
கடலில்
விழுந்து
முழுகின.
மஹாமேகம்
போன்ற
ஆஞ்ஜநேயர்
பல
வர்ணங்களுள்ள
புஷ்பங்களாலும்
குருத்துகளாலும்
மொட்டுகளாலும்
சூழப்பட்டு,
மின்மினிப்
பூச்சிகள்
மொய்த்த
பெரிய
மலையைப்போல்
தோன்றினார்.
அவருடைய
வேகத்தாலுண்டான
சக்தி
அடங்கி,
அந்த
மரங்கள்
புஷ்பங்களை
உதிர்த்துக்கொண்டு
ஸமுத்திரத்தில்
விழுவதைப்
பார்க்கும்பொழுது,
பிரயாணியை
வழியனுப்பிவிட்டு,
கண்ணீர்
சொரிந்துகொண்டு
திரும்பும்
மித்திரர்களைப்போல்
காணப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
அவருடைய
வேகத்தால்
அந்த
லேசான
புஷ்பங்கள்
நானா
வர்ணங்களுடன்
ஸமுத்திரத்தில்
தூவப்பட்டு,
நக்ஷத்திரங்களால்
நிறைந்த
ஆகாசத்தைப்போல்
அந்தக்
கடலை
விளங்கச்
செய்தன.
நானா
வர்ணங்களுள்ள
அந்த
புஷ்பங்களால்
சூழப்பட்ட
வாயு
புத்திரன்,
மின்னற்
கொடிகளுடன்
ஆகாசத்தில்
கிளம்பும்
மேகத்தைப்போல்
பிரகாசித்தார்.
அவர்
போகும்
வேகத்தால்
நாற்புறங்களிலும்
இறைக்கப்பட்ட
புஷ்பங்களால்
நிறைந்த
ஸமுத்திரம்
அழகான
நக்ஷத்திரக்
கூட்டங்கள்
உதித்த
ஆகாச
வீதிபோல்
காணப்பட்டது.
Prose passage
▾
Meaning
Keep
இரு
கைகளையும்
நீட்டிக்கொண்டு
அவர்
வாயுமார்க்கத்தில்
போகும்பொழுது,
மலைச்
சிகரத்திலிருந்து
கிளம்பும்
ஐந்து
தலை
நாகங்களைப்போல்
தோன்றினார்.
தாண்டும்
வேகத்தால்
வரவரக்
குறையும்
கடலைக்
குடித்து,
ஆகாசத்தை
விழுங்கப்
பார்ப்பவர்போல்
காணப்பட்டார்.
ஆகாசமார்க்கத்தில்
போகும்போது
அந்த
வானர
சிரேஷ்டனுடைய
மஞ்சள்
வர்ணமுள்ள
வட்டமான
இரண்டு
கண்களும்
மின்னலைப்
போலும்,
மலைச்சிகரங்களில்
கொழுந்துவிட்டெரியும்
நெருப்பு
ஜ்வாலைகளைப்
போலும்
ஒரே
காலத்தில்
சந்திரஸூரியர்கள்
உதித்தது
போலும்
பிரகாசித்தன.
அவருடைய
சிவந்த
முகம்,
சிவந்த
மூக்கின்
காந்தியால்,
ஸந்தியா
காலத்துச்
சிவப்பால்
பரவப்பட்ட
ஸூரியமண்டலத்தைப்
போல்
விளங்கிற்று.
Prose passage
▾
Meaning
Keep
உயர்ந்து
வளர்ந்த
வால்,
அவர்
ஆகாசத்தில்
போகும்பொழுது
மேலே
இந்த்ரத்வஜம்
தூக்கிக்
கட்டப்பட்டதுபோல்
தோன்றிற்று.
வெளுத்த
பற்களையுடைய
மாருதி,
சக்கரம்போல்
தன்னைச்
சுற்றிவளைந்த
வாலால்,
மண்டலம்சூழ்ந்த
ஸூரியனைப்போல்
பிரகாசித்தார்.
வாலின்
அடிப்பாகம்
சிவந்து,
பிளந்த
மலையில்
சிவந்த
தாதுக்கள்
விளங்குவதுபோல்
தோன்றிற்று.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
வானர
சிரேஷ்டன்
ஸமுத்திரத்தைத்
தாண்டும்பொழுது
விலாப்புறங்களிலிருந்து
கிளம்பும்
காற்று
மேகம்போல்
கர்ஜித்தது.
ஆகாசத்தில்
வடக்கிலிருந்து
தெற்கு
முகமாக
வாலுடன்
கூடின
உல்கா
என்ற
எரிகொள்ளி
வேகமாக
விழுவதுபோல்
ஆஞ்ஜநேயர்
அப்பொழுது
காணப்பட்டார்.
நீண்ட
வேகத்தையுடைய
அஞ்ஜனாபுத்திரன்
வடக்கிலிருந்து
தெற்கே
போகும்
ஸூரியனைப்
போலவும்,
இறுக்கிக்
கட்டப்பட்ட
கச்சுப்பட்டையால்
நீண்ட
மதயானையைப்
போலவும்
தோன்றினார்.
கப்பலில்
அடிப்பாகம்
ஜலத்தில்
மூழ்கி
மேல்பாகம்
ஆகாசத்தில்
காணப்பட்டுப்
பாய்களில்
காற்றுத்
தாக்கி
ஓடுவதுபோல்
அவருடைய
நிழல்
ஸமுத்திரத்தில்
அழுந்தித்
தேகம்
ஆகாசத்தில்
தோன்றிற்று;
ஸமுத்திரத்தில்
போகுமிடமெல்லாம்
அவருடைய
தொடை
வேகத்தால்
ஜலம்
காக்கை
வலிப்பு
கொண்டதுபோல்
சுழன்று
கதறி
நுரையுடன்
காணப்பட்டது.
Prose passage
▾
Meaning
Keep
மார்பின்
காற்று
வேகத்தால்
மலை
போன்ற
அலைகளை
அடித்துத்
தள்ளிக்கொண்டு
அந்த
வானரசிரேஷ்டன்
அதிவேகமாகக்
கடலைத்
தாண்டினார்.
மேகத்தின்
மழைக்
காற்றும்
அவருடைய
வேகக்காற்றும்
சேர்ந்து
பயங்கரமாகச்
சப்திக்கும்
ஸமுத்திரத்தைக்
கலக்கி
நடுங்கச்
செய்தது.
மலைகளைப்
போன்ற
அலைகளை
இழுத்துக்கொண்டு
போகும்
அந்த
ராமதூதன்,
ஆகாசத்தையும்
பூமியையும்
பிரிப்பவரைப்போல்
தாவினார்.
மேரு
மந்திரம்
முதலிய
மஹாபர்வதங்களைப்
போல்
எழும்பும்
அலைகளை
ஒவ்வொன்றாக
எண்ணுகிறவரைப்போல்
தாண்டிப்
போனார்.
அவருடைய
வேகத்தால்
மேலே
கிளப்பப்பட்ட
கடல்
ஆகாசத்தில்
சரத்காலத்தில்
விளங்கும்
நீருண்ட
மேகத்தைப்போல்
காணப்பட்டது.
Prose passage
▾
Meaning
Keep
மனிதர்கள்
உடுக்கும்
வஸ்திரங்களை
அவிழ்த்தெறிந்தால்
அவர்களுடைய
தேகம்
காணப்படுவதுபோல்,
ஸமுத்திரத்தில்
வாழும்
திமிங்கிலம்,
முதலை,
மீன்,
ஆமை
முதலிய
ஜந்துக்கள்,
தங்களை
மூடியிருந்த
ஜலம்
மேலே
கிளம்பினதால்
வெளியில்
காணப்பட்டன.
கடலில்
வஸிக்கும்
மஹாஸர்ப்பங்கள்
ஆகாசத்தில்
அதிவேகமாகப்
போகும்
அந்த
வானர
சிரேஷ்டனைப்
பார்த்துக்
கருடனென்றெண்ணிப்
பயந்தன.
Prose passage
▾
Meaning
Keep
பத்து
யோஜனை
அகலமும்,
முப்பது
யோஜனை
நீளமும்
உள்ள
அவருடைய
நிழல்
அந்த
ஸமுத்திர
ஜலத்தில்
அழகாக
விளங்கிற்று.
(காலையில்
புறப்பட்டு
ஸூரியாஸ்தமனத்திற்கு
ஒரு
முகூர்த்தத்திற்கு
முந்தியே
அக்கரைக்குப்
போயிருக்க
வேண்டும்.)
அந்த
நிழல்
ஸமுத்திரத்தில்
அவரைத்
தொடர்ந்து
செல்லும்பொழுது
வெளுத்த
மேகக்
கூட்டங்களைப்போல்
காணப்பட்டது.
(இது
நடுப்
பகலில்
தோன்றும்.)
யாதொரு
பற்றுமில்லாத
வாயுமார்க்கத்தில்
அந்த
மஹாதேஜஸ்வி
பெரிய
சரீரத்துடன்
போகும்பொழுது
இறக்கைகளையுடைய
மலை
ஆகாசத்தில்
பறப்பது
போலிருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
வேகத்தால்
அவர்
போகும்
வழியிலுள்ள
ஸமுத்திர
ஜலம்
பெரிய
மலையைப்
போல்
சேர்க்கப்பட்டு
நின்றது.
பக்ஷிகள்
பறக்கும்
ஆகாசத்தில்
பக்ஷி
ராஜனை
போலும்
வாயுபகவான்
மேகக்
கூட்டங்களை
அடித்துக்கொண்டு
போவது
போலும்
ஹனுமான்
அதிவேகமாகப்
போனார்.
அந்த
மேகங்கள்
வெளுப்பு,
சிவப்பு,
நீலம்,
மஞ்சள்
முதலிய
வர்ணங்களுடன்
அதி
விசித்திரமாக
விளங்கின.
மேகக்
கூட்டங்களுக்கு
நடுவில்
அடிக்கடி
புகுந்து
வெளிப்படும்பொழுது
அவர்
சந்திரனைப்போல்
தோன்றினார்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அதிகவேகமாய்
அவர்
ஸமுத்திரத்தைத்
தாண்டிச்
செல்வதைக்
கண்டு,
தேவர்களும்,
தானவர்களும்,
கந்தர்வர்களும்
புஷ்பமாரி
பெய்தார்கள்.
ராமகாரியத்தின்
பொருட்டுச்
செல்லும்
அந்த
வானரசிரேஷ்டனை
ஸூரியன்
உஷ்ணமான
கிரணங்களால்
சிரமப்படுத்தவில்லை.
வாயுபகவானும்
அவர்மேல்
குளிர்ச்சியாய்
வீசி
சிரமத்தைப்
போக்கினார்.
மஹரிஷிகள்
ஸ்தோத்திரம்
செய்தார்கள்.
தேவர்களும்
கந்தர்வர்களும்
அந்த
மஹாவீரிய
சாலியைக்
கொண்டாடினார்கள்.
அந்த
வானரசிரேஷ்டன்
சிரமமில்லாமல்
மஹாவேகமாய்
ஆகாசத்தில்
செல்வதைக்
கண்டு
நாகர்களும்,
யக்ஷர்களும்,
திக்பாலர்களான
பல
ராக்ஷஸர்களும்,
விபுதர்களும்,
கருடர்களும்
அவரைப்
புகழ்ந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஸமுத்திர
ராஜன்
இக்ஷ்வாகு
குலத்தை
மரியாதை
செய்ய
விரும்பி,
“இந்த
வானரசிரேஷ்டனான
ஹனுமானுக்கு
நான்
ஒத்தாசை
செய்யாவிட்டால்
லோகத்தில்
எல்லோரும்
என்னை
நிந்திப்பார்கள்.
இக்ஷ்வாகு
வம்சத்தரசனான
ஸகர
மஹாராஜனால்
வளர்க்கப்பட்டேன்.
இவர்
இக்ஷ்வாகு
குலதிலகரான
ராமனுடைய
தூதன்.
இவர்
சிரமப்படும்படி
விடுவது
எனக்கு
அழகல்ல.
ஆகையால்
இவர்
சற்று
நேரம்
இங்கே
இளைப்பாறிப்
பிறகு
அதி
சீக்கிரமாய்
ஸமுத்திரத்தைத்
தாண்டும்படி
செய்ய
வேண்டும்”
என்று
ஹிதமான
யோசனை
செய்து,
ஸமுத்திர
ஜலத்தில்
தங்கச்
சிகரங்களுடன்
மறைந்திருக்கும்
மைனாக
பர்வதத்தைப்
பார்த்து,
“தோழா!
Prose passage
▾
Meaning
Keep
பாதாளத்திலுள்ள
அஸுரர்கள்
மேலே
வராதபடி
இந்திரன்
உன்னைக்
கோட்டை
வாசல்
தாழ்ப்பாளைப்
போல்
இங்கே
வைத்திருக்கிறானல்லவா?
அந்த
மஹா
பலசாலிகள்
மேலே
வர
யத்தினம்
செய்கையில்
அவர்களை
விடாமல்
பாதாளத்
துவாரத்தை
மறைத்துக்கொண்டு
நிற்கிறாயல்லவா?
மேலும்
கீழும்
நான்கு
பக்கங்களிலும்
வளரும்
சக்தி
உனக்குண்டு.
ஆகையால்
உன்னை
ஏவினேன்.
பர்வதராஜனே!
சீக்கிரம்
எழுந்திரு.
Prose passage
▾
Meaning
Keep
வானர
சிரேஷ்டரான
ஹனுமான்
ராமகாரியத்தின்
பொருட்டு
ஆகாச
மார்க்கமாய்
உனக்கு
நேராக
வருகிறார்.
இக்ஷ்வாகு
குலத்திற்குப்
பணிவிடை
செய்ய
ஆசைகொண்ட
நான்
இவருக்கு
என்னால்
கூடிய
ஒத்தாசை
செய்யவேண்டியது.
அந்த
அரசர்களை
நான்
பூஜிக்க
வேண்டியதல்லவா?
அதே
காரணத்தால்தான்
நீயும்
அவர்களை
விசேஷமாய்ப்
பூஜிக்கவேண்டியது.
அவர்களால்
வெட்டப்பட்ட
இந்த
ஸமுத்திரத்தில்
ஒளிந்துகொண்டு
உன்
பிராணனைக்
காப்பாற்றி
வருகிறாயல்லவா?
மேலும்
உன்னை
இங்கே
கொண்டுவந்து
சேர்த்த
வாயுவின்
புத்திரனான
இந்த
ஆஞ்ஜநேயருக்கு
ஸஹாயம்
செய்வது
உன்
கடமையல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
இவருக்குத்
தகுந்த
உபகாரம்
செய்.
நாம்
உத்தேசித்த
காரியம்
காலதாமதமாகக்
கூடாது.
செய்யவேண்டிய
காரியத்தைத்
தகுந்த
காலத்தில்
செய்யாவிட்டால்
ஸாதுக்கள்
கோபிப்பார்கள்.
ஆகையால்
மேலே
வா;
ஆஞ்ஜநேயர்
உன்னிடத்தில்
இளைப்பாறட்டும்;
இவர்
நமக்கு
உத்தமமான
அதிதி;
பூஜிக்கத்
தகுந்தவர்;
வானரசிரேஷ்டர்.
தேவர்களால்
பூஜிக்கப்பட்டு
ஸுவர்ண
சிகரங்களுடன்
பிரகாசிக்கும்
பர்வதராஜ!
இவர்
உன்னிடத்தில்
கொஞ்சம்
சிரம
பரிஹாரம்
செய்துகொண்டு
பிறகு
அதி
சீக்கிரமாய்
அக்கரை
சேர்வார்.
ஹனுமானுக்கு
ஸீதையிடத்திலுள்ள
தயையையும்,
ஸீதை
நாயகனைப்
பிரிந்து
லங்கையில்
துக்கிப்பதையும்,
ஆஞ்ஜநேயருடைய
சிரமத்தையும்
யோசித்து
நான்
சொன்னபடி
செய்”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
இதைக்
கேட்டு
அந்தப்
பர்வதராஜனும்
மரம்,
செடி,
கொடிகளுடன்
பிரகாசமான
கிரணங்களுடன்
ஸூரியன்
மேகங்களின்
நடுவிலிருந்து
புறப்படுவதுபோல்
அதிவேகமாகக்
கிளம்பினான்.
ஸமுத்திர
ஜலத்தால்
சூழப்பட்ட
அந்த
மலை,
உரகர்,
கின்னரர்
முதலிய
கணங்களால்
நிறைந்த
தன்
தங்கச்
சிகரங்களைச்
சீக்கிரத்தில்
வெளியில்
காட்ட,
நிர்மலமான
ஆகாசத்தில்
ஸூரியன்
உதிப்பதுபோல்,
அவை
மேக
மண்டலத்தைப்
பிளந்துகொண்டு
மேலே
கிளம்பின.
ஸ்வபாவமாகவே
அதிக்
காந்தியுள்ள
அந்தத்
தங்கக்
கொடிமுடிகளால்
மைநாகமலை
பல
ஸூரியர்களுடன்
பிரகாசிப்பது
போல்
தோன்றிற்று.
Prose passage
▾
Meaning
Keep
இப்படித்
தனக்கு
எதிரில்
தடையில்லாமல்
எழுந்த
அந்த
மலையைப்
பார்த்து
மாருதி,
“இது
நமக்கு
நேர்ந்த
முதலாவது
தடை”
என்று
நினைத்தார்.
அதிவேகமாகச்
சென்று
கொண்டிருந்த
வாயுபுத்திரன்,
அளவில்லாமல்
வர
வர
வளரும்
அந்த
மலையை,
வாயுபகவான்
மேகங்களைச்
சிதறவடிப்பது
போல்,
தன்
மார்பால்
விளையாட்டாக
அடித்துத்
தள்ளினார்.
அதைக்
கண்டு
மைநாகம்
அவருடைய
வேகத்தையும்
சக்தியையும்
அறிந்து
ஆச்சரியப்பட்டு
ஸந்தோஷித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
மனுஷ்ய
ரூபத்துடன்
அவன்
ஆகாசமார்க்கத்தில்
நின்றுகொண்டு
அந்த
வழியாகச்
செல்லும்
வானர
வீரனைப்
பார்த்து,
மிகுந்த
பிரீதியுடன்,
வானர
சிரேஷ்ட!
ஒருவரும்
செய்யத்
துணியாத
காரியத்தை
செய்யப்
புகுந்திருக்கிறீர்.
என்
சிகரங்களில்
சற்று
நேரம்
இளைப்பாறும்.
ராமனுடைய
முன்னோர்கள்
இந்த
ஸமுத்திரத்தை
வெட்டினார்கள்.
ராமகாரியத்திற்காகச்
செல்லும்
உமக்கு
ஸமுத்திர
ராஜன்
பூஜை
செய்கிறார்.
உபகாரம்
செய்தவனுக்கு
பதில்
உபகாரம்
செய்வது
புராதனமான
தர்மம்.
அப்படி
செய்ய
விரும்பும்
நாங்கள்
உமக்குக்
கொடுக்கும்
அதிதி
பூஜையை
நீர்
பெற்றுக்கொள்ள
வேண்டும்.
Prose passage
▾
Meaning
Keep
“இந்த
வானர
சிரேஷ்டர்
நூறு
யோஜனை
தூரம்
தாண்ட
உத்தேசித்துப்
புறப்பட்டு
வருகிறார்.
உன்
தாழ்வரைகளில்
சற்று
இளைப்பாறிப்
பிறகு
அக்கரைக்குப்
போவார்”
என்று
ஸமுத்திர
ராஜன்
என்னை
விசேஷ
மரியாதையுடன்
உம்மிடத்தில்
அனுப்பியிருக்கிறார்.
ஆகையால்
சற்று
நில்லும்.
என்னிடத்தில்
இளைப்பாறிப்
போம்.
என்னிடத்திலுள்ள
கந்தமூலங்கள்
அதிக
ருசியாயும்
மணத்துடனும்
இருக்கின்றன.
அவைகளை
அங்கீகரித்து
சிரமம்
தீர்த்துக்கொண்டு
பிறகு
செல்வீர்.
Prose passage
▾
Meaning
Keep
நம்மிருவர்க்கும்
வேறு
விதமான
ஸம்பந்தமும்
உண்டு.
அது
மூன்று
லோகங்களிலும்
பிரஸித்தி
பெற்றுப்
பெரியோர்களால்
ஒப்புக்கொள்ளப்
பட்டிருக்கிறது.
அதிவேகமாகத்
தாண்டிப்போகும்
வானரர்களுக்குள்
உம்மை
முதல்வராக
மதித்திருக்கிறேன்.
சாதாரணமான
அதிதியையும்
விவேகி
பூஜிக்க
வேண்டும்.
உம்மைப்போன்ற
மஹானை,
தர்மரஹஸ்யத்தை
அறிந்தவன்
விசேஷமாகப்
பூஜிக்க
வேண்டியதென்று
சொல்லவும்
வேண்டுமோ?
நீர்
தேவ
சிரேஷ்டனான
வாயு
பகவானுடைய
புத்திரர்;
வேகத்தில்
அவரைப்
போன்றவர்.
உம்மைப்
பூஜித்தால்
அவரைப்
பூஜித்ததாகும்
என்பதைத்
தர்மம்
தெரிந்த
உமக்குச்
சொல்ல
வேண்டியதில்லை.
ஆகையால்
நான்
உம்மை
பூஜிக்கவேண்டும்.
வேறொரு
காரணமும்
உண்டு.
Prose passage
▾
Meaning
Keep
“முன்பு
கிருதயுகத்தில்
மலைகளுக்கு
இறக்கைகளுண்டு.
அவை
வாயுவேக
கருட
வேகத்துடன்
ஸகல
திக்குகளிலும்
அதிவேகமாகப்
பறந்துபோகும்.
அதைக்
கண்ட
தேவ
கணங்களும்,
ரிஷிகளும்,
ஸகல
பூதங்களும்
எங்கே
இவை
மேலே
விழுந்து
நம்மை
நாசம்
செய்யுமோ
என்று
பயந்தார்கள்.
அப்பொழுது
தேவேந்திரன்
அவைகளிடத்தில்
கோபங்கொண்டு
வஜ்ராயுதத்தால்
அவைகளின்
இறக்கைகளைத்
துண்டு
துண்டாய்
வெட்டினான்.
பயங்கரமான
வஜ்ராயுதத்தைத்
தூக்கிக்கொண்டு
கோபாவேசத்துடன்
அவன்
என்னிடம்
வரும்பொழுது,
மஹாத்மாவான
வாயு
பகவான்
என்னை
இந்த
ஸமுத்திரத்தில்
அடித்துக்கொண்டு
வந்து
தள்ளினார்.
Prose passage
Keep
என் இறக்கைகளுக்கு யாதொரு அபாயமுமின்றி என்னைக் காப்பாற்றினார்: அவரை நான் பூஜிக்கவேண்டியதல்லவா? ஆகையால் உம்மையும் பூஜிக்க விரும்புகிறேன். நமக்கு இவ்விதமான ஸம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி விசேஷ உபகாரம் பெற்ற நானும், ஸமுத்திர ராஜனும் செய்யும் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டு எங்களை ஸந்தோஷப்படுத்த வேண்டும். சற்று இளைப்பாறும்; நாங்கள் செய்யும் உபசாரத்தையும் அதிதிபூஜையையும் பெற்றுக்கொள்ளும்.எங்களுக்கு உம்மிடத்திலுள்ள பிரீதியைக் கௌரவியும். உம்மைப் பார்த்ததால் எங்களுக்கு அளவற்ற ஆனந்தமுண்டாகியிருக்கிறது” என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
மாருதி,
“பர்வதராஜனே!
நீர்
இப்படிச்
சொல்வதாலேயே
நான்
மிகுந்த
பிரீதியடைந்தேன்.
உம்மைத்
தரிசித்ததே
எனக்குப்
போதும்.
நீர்
எனக்குச்
செய்யும்
அதிதி
பூஜை
இதுவே.
உம்
இஷ்டப்படி
நான்
இங்கே
தங்கவில்லை
என்று
கோபிக்கக்
கூடாது.
நான்
உத்தேசித்த
காரியத்தைச்
செய்ய
வேண்டிய
காலம்
என்னைச்
சீக்கிரப்படுத்துகிறது,
இங்கே
தங்கினால்
இன்று
பகலுக்குள்
லங்கைக்குப்
போக
முடியாது.
மேலும்
வழியில்
எவ்விடத்திலும்
தயங்காமல்
போக
வேண்டுமென்று
வானரர்களிடத்தில்
பிரதிக்ஞை
செய்திருக்கிறேன்”
என்று
கையால்
அந்த
மலையைத்
தொட்டு,
அவரால்
செய்யப்பட்ட
அதிதி
பூஜையை
அங்கீகரித்து,
மனம்
மகிழ்ந்து,
புன்சிரிப்புடன்
ஆகாசமார்க்கமாகச்
சென்றார்.
Prose passage
▾
Meaning
Keep
ஸமுத்திர
ராஜனும்
மைநாகமும்
மிகுந்த
பிரீதியுடன்
அவரைப்
பார்த்து
ஆசீர்வதித்தார்கள்.
பிறகு
ஆஞ்ஜநேயர்
அவர்களைவிட்டு
வெகுதூரம்
உயரக்
கிளம்பி,
தன்
பிதாவான
வாயு
பகவான்
ஸஞ்சரிக்கும்
மார்க்கத்தில்
வந்தார்.
அங்கிருந்து
மேலே
போய்ப்
பர்வதராஜனை
ஒரு
தடவை
பிரீதியுடன்
பார்த்து,
நிர்மலமான
ஆகாச
மார்க்கத்தில்
சென்றார்.
ஆஞ்ஜநேயர்
ஸமுத்திரத்தைத்
தாண்டிப்போவது
அவருடைய
அபூர்வச்
செயல்களில்
முதலாவது;
மைநாக
பர்வதத்தை
ஜயித்தது
இரண்டாவது;
இதைப்
பார்த்துக்
கொண்டிருந்த
தேவர்களும்,
ஸித்தர்களும்,
மஹரிஷிகளும்
மகிழ்ந்து
மாருதியைக்
கொண்டாடினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
தேவராஜன்
மைநாகனிடத்தில்
அளவற்ற
ஸந்தோஷமடைந்து,
“தங்கக்
கொடிமுடிகளுடன்
விளங்கும்
பர்வதசிரேஷ்டா!
இன்று
நீ
செய்த
காரியம்
அதிக
ஆனந்தத்தை
எனக்கு
உண்டுபண்ணுகிறது.
இன்று
முதல்
உனக்கு
யாதொரு
பயமுமில்லை;
உன்னிஷ்டப்படி
ஸுகமாக
இரு.
விஸ்தாரமான
ஸமுத்திரத்தைத்
தாண்டி
ஆகாசமார்க்கமாகப்
போகும்பொழுது
ஹனுமான்
கீழே
விழுவாரோ
என்று
பயந்தோம்.
ஆனால்,
அந்த
மஹாவீரன்
சற்றும்
பயமில்லாமல்
அலக்ஷ்யமாகப்
போகிறான்.
நீ
அவனுக்கு
நல்ல
உதவி
செய்தாய்.
ராமதூதனான
ஹனுமானுக்கு
நீ
செய்த
உபசாரம்
எனக்கு
எல்லையற்ற
ஆனந்தத்தைக்
கொடுக்கிறது”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
தன்னிடத்தில்
ஸந்தோஷித்ததைப்
பார்த்து
மைநாகனுக்கு
விசேஷ
மகிழ்ச்சி
உண்டாயிற்று.
பிறகு
இந்திரனிடத்தில்
மேலான
வரங்களைப்
பெற்று
ஸுகமாக
வஸித்தான்.
ஹனுமான்
அங்கிருந்து
ஒரு
முகூர்த்தத்தில்
அப்புறம்
சென்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
தேவ,
கந்தர்வ,
ஸித்த,
மஹரிஷி
கணங்கள்
ஸூரியனைப்போல்
விளங்குபவளும்
நாகங்களுக்குத்
தாயுமான
ஸுரஸையைப்
பார்த்து,
“இந்த
வானர
வீரன்
வாயுபுத்திரர்,
மஹாகாந்தியை
உடையவர்.
இந்த
ஹனுமான்
ஸமுத்திரத்தைத்
தாண்டி
ஆகாச
வீதியில்
போகிறார்.
நீ
சற்று
நேரம்
இவருக்கு
இடையூறாக
இரு.
கோரைப்
பற்களாலும்
நெருப்புப்
பொறிகளைப்
போன்ற
கண்களாலும்
ஆகாசம்போல்
திறந்த
வாயாலும்,
மலைபோன்ற
சரீரத்தாலும்
பயங்கரமான
ராக்ஷஸ
ரூபத்துடன்
இவருக்கெதிரில்
நில்.
இவருடைய
பலத்தையும்,
பராக்கிரமத்தையும்
மறுபடியும்
பரீக்ஷிக்க
வேண்டும்.
உன்னை
உபாயத்தால்
ஜயிக்கிறாரா?
தைரியமற்று
மயங்குகிறாரா?”
என்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படித்
தேவதைகளால்
வேண்டப்பட்டு
ஸுரஸை,
ஸகல
பிராணிகளும்
கண்டு
நடுங்கும்
கோர
ராக்ஷஸ
ரூபத்துடன்
கடலின்
நடுவில்
நின்று,
அந்த
வழியாக
வரும்
மாருதியை
மறித்து,
“தேவர்கள்
எனக்கு
ஆஹாரமாக
இங்கே
உன்னை
அனுப்பியிருக்கிறார்கள்;
உன்னை
விழுங்கப்
போகிறேன்;
என்
வாயில்
நுழை”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
அந்த
மஹா
தேஜஸ்வி
கைகூப்பி
வணக்கமாக,
“தசரத
புத்திரனான
ராமன்
தம்பி
லக்ஷ்மணனோடும்
பார்யை
ஜானகியோடும்
தண்டகாரண்யத்தில்
ஸஞ்சரித்துக்
கொண்டிருக்கும்பொழுது,
அவருக்கு
விரோதியான
ராவணனென்ற
ராக்ஷஸராஜன்,
அவர்
வேறு
வேலையாகப்
போயிருக்கையில்
அவருடைய
பார்யையை
எடுத்துப்
போனான்.
கீர்த்தி
வாய்ந்த
அந்த
ஸீதையினிடத்தில்
என்னைத்
தூதனாக
ராமன்
அனுப்பியிருக்கிறார்.
அவருடைய
ராஜ்யத்தில்
வஸிக்கும்
நீ
அவருக்கு
உதவி
செய்ய
வேண்டியதல்லவா?
அல்லது
ஸீதையைக்
கண்டு
அவளுடைய
வரலாற்றை
ராமனுக்குத்
தெரிவித்த
பிறகு
உனக்கு
ஆஹாரமாகிறேன்.
இது
நான்
செய்யும்
பிரதிக்ஞை”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஸுரஸை,
“என்னைத்
தாண்டி
ஒருவரும்
செல்லக்
கூடாது.
இது
நான்
பெற்ற
வரம்.
என்
வாயில்
புகுந்து
செல்வதைத்
தவிர
வேறு
வழியில்லை”
என்று
சொல்லிக்கொண்டிருக்கையில்,
அதை
லக்ஷ்யம்
செய்யாமல்
ஆஞ்ஜநேயர்
போய்க்கொண்டிருந்தார்.
ஸுரஸை
அதைக்
கண்டு,
அவருடைய
பலத்தை
அறிய
விரும்பி,
“இன்று
நீ
என்
வாயில்
நுழைந்தே
அப்புறம்
போகவேண்டும்.
இப்படி
பிரஹ்மா
எனக்கு
வரம்
கொடுத்திருக்கிறார்”
என்று
தன்
வாயை
விஸ்தாரமாகத்
திறந்து
வாயுபுத்திரனுக்கெதிரில்
நின்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஆஞ்ஜநேயர்
கோபம்கொண்டு,
“என்னை
விழுங்கும்படி
வாயை
விஸ்தாரமாகத்
திற”
என்று
பத்து
யோஜனை
தூரம்
வளர்ந்தார்;
ஸுரஸை
தன்
வாயை
இருபது
யோஜனையளவு
திறந்தாள்;
பிறகு
ஹனுமான்
முப்பது
யோஜனை
உயரம்
வளர்ந்தார்;
ஸுரஸை
நாற்பது
யோஜனை
தூரம்
வாயைத்
திறந்தாள்;
பிறகு
ஹனுமான்
ஐம்பது
யோஜனை
தூரம்
வளர்ந்தார்;
ஸுரஸை
அறுபது
யோஜனை
உயரம்
வளர்ந்தாள்;
ஹனுமான்
எழுபது
யோஜனை
உயரம்
வளர்ந்தார்;
ஸுரஸை
எண்பது
யோசனை
தூரம்
வாயைத்
திறந்தாள்;
ஹனுமான்
பிறகு
தொண்ணூறு
யோஜனை
உயரம்
வளர்ந்தார்;
அப்பொழுதும்
ஸுரஸை
நூறு
யோஜனை
தூரம்
வாயைத்
திறந்தாள்;
ஹனுமான்
மஹா
புத்திமானானதால்
மிகவும்
விஸ்தாரமான
ஸுரஸையின்
வாயில்
ஸூக்ஷ்ம
ரூபத்துடன்
புகுந்து
வெளியில்
வர
இதே
ஸமயமென்று
நிச்சயித்து,
நீண்ட
நாக்குகளுடன்
கோரமான
நரகம்
போன்ற
அவளுடைய
வாயில்
கட்டை
விரலளவு
தன்
சரீரத்தைச்
சுருக்கிக்கொண்டு
சீக்கிரமாகப்
புகுந்து
வெளியில்
வந்து,
ஜயலக்ஷ்மி
ஜ்வலிக்க
ஆகாசத்தில்
நின்று,
“தக்ஷப்
பிரஜாபதியின்
புத்ரீ!
உன்னை
நமஸ்கரிக்கிறேன்.
உன்
வாயில்
புகுந்து
வெளிப்பட்டேன்.
உன்
வரமும்
நிஜமாயிற்று:
ஸீதை
இருக்குமிடத்திற்குப்
போகிறேன்”
என்று
சொன்னார்.
Prose passage
▾
Meaning
Keep
ராகுவின்
வாயிலிருந்து
வெளிப்பட்ட
சந்திரனைப்போல்
பிரகாசிக்கும்
ஆஞ்ஜநேயரைப்
பார்த்து
ஸுரஸை
தன்
உண்மையான
ரூபத்துடன்,
“குழந்தாய்!
உன்
காரியம்
கைகூடட்டும்,
ஸுகமாய்
போய்
வா.
ராமனையும்
ஸீதையையும்
சேர்த்து
வை”
என்று
ஆசீர்வதித்தாள்.
ஸகலப்
பிராணிகளும்
ஆஞ்ஜநேயருடைய
மூன்றாவது
அத்புதமான
செயலைக்
கண்டு
அவரைக்
கொண்டாடின.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஹனுமான்
மற்ற
எவராலும்
தாண்டமுடியாத
வருணனுக்கு
இருப்பிடமான
ஸமுத்திரத்தைக்
கடந்து
ஆகாச
மார்க்கத்தில்
கருடனைப்போல்
அதிவேகமாகப்
போனார்.
அங்கே
நீருண்ட
மேகங்கள்
ஓடிக்கொண்டிருந்தன.
பதகர்களும்,
வித்யாதரர்களும்
ஐராவதமென்ற
திக்கஜமும்
உலாவிக்
கொண்டிருந்தார்கள்.
அது
பதகர்களுக்கும்,
உரகர்களுக்கும்
வாஹனங்களான
ஸிம்ஹம்,
யானை,
புலி
முதலியவைகளாலும்
நிர்மலமான
விமானங்களாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வஜ்ராயுதம்,
இடி
முதலியவைகளைப்
போன்ற
அக்னிகளால்
பிரகாசித்தது.
புண்ணியகர்மங்களால்
ஸ்வர்க்க
லோகத்தையடைந்த
மஹான்களால்
விளங்கிற்று.
Prose passage
▾
Meaning
Keep
இவ்வுலகத்தில்
ஹோமம்
செய்யப்பட்ட
ஹவிஸை
தேவதைகளுக்குக்
கொண்டு
போய்க்
கொடுக்கும்
சித்திரபானு
என்ற
அக்னிபகவான்
ஸஞ்சரிக்கும்
வழி
அதே.
கிரஹங்கள்,
நக்ஷத்திரங்கள்,
சந்திரன்
முதலியவைகளால்
பிரகாசித்தது.
மகரிஷிக்
கூட்டங்களும்,
கந்தர்வர்களும்,
நாகர்களும்,
யக்ஷர்களும்
கூடுமிடம்
தனித்தனியாக
வகுக்கப்பட்டது;
நிர்மலமானது;
எங்கும்
பரவியது.
விசுவாவஸு
முதலிய
கந்தர்வர்களுக்கு
இருப்பிடம்;
மற்றத்
திசை
யானைகள்
விளையாடுமிடம்,
சந்திர
ஸூரியர்கள்
செல்லும்
வழி;
புண்ணியஸ்தலம்;
இந்தப்
பூலோகத்திற்கு
மேல்மெத்தையைப்
போன்றது;
விஸ்தாரமானது;
பிரஹ்மாவால்
நியமிக்கப்பட்டது;
வீரர்களாலும்
வித்யாதர
கணங்களாலும்
நிறைந்தது.
யாதொரு
பற்றுமில்லாமல்
இந்த
வாயுமார்க்கத்தில்
ஸகலப்
பொருள்களையும்
கவனித்துப்
பார்த்துக்கொண்டு
கருடனைப்போலவும்,
இறக்கைகளுள்ள
மலையைப்போலவும்
வாயுபுத்திரன்
போனார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அந்த
வழியிலிருந்த
ஸிம்ஹிகை
என்ற
ராக்ஷஸி
அவர்
ஆகாசத்தில்
போவதைக்
கண்டு,
நினைத்த
ரூபத்தை
எடுக்கக்
கூடியவளானதால்
தன்
தேகத்தை
வளரச்
செய்து,
இவ்வளவு
நாளாக
ஆகாரமில்லாத
எனக்கு
இந்தப்
பெரிய
ஜந்து
வலுவில்
வந்து
கிடைக்கிறதென்று
நினைத்து
மாருதியின்
நிழலைப்
பிடித்திழுத்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைப்
பார்த்து
வாயுபுத்திரன்,
திடீரென்று
யாரோ
என்னைத்
தடுக்கிறார்கள்;
என்
பராக்கிரமம்
குறைகிறது.
ஸமுத்திரத்தில்
போகும்
பெரும்
கப்பலைப்
பலமான
எதிர்காற்றுத்
தாக்கி
நிறுத்துவதுபோல்
அசையமுடியவில்லை
என்று
மேலும்
கீழும்
நான்கு
புறங்களிலும்
கவனித்துப்
பார்த்தார்.
ஸமுத்திரத்திலிருந்து
ஒரு
பெரிய
ஜந்து
எழுந்து
நிற்பதைக்
கண்டார்.
உடனே
“ஸுக்ரீவனால்
சொல்லப்பட்ட
அற்புதமான
பிராணி
அதோ;
இந்த
விஸ்தாரமுள்ள
ஜந்து
மஹா
வீரியமுள்ளது;
நிழலைப்
பிடித்திழுக்கும்
சக்தியுள்ளது;
இதில்
சந்தேகமில்லை”
என்று
நிச்சயித்து
மஹாபுத்திமானான
மாருதி
அவள்
ஸிம்ஹிகை
என்றறிந்து
மழைக்காலத்து
மேகத்தைப்போல்
தன்
சரீரத்தை
வளரச்
செய்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அதைப்
பார்த்து
அவள்
தன்
வாயைப்
பாதாளத்தைப்போல்
திறந்து
மேகக்கூட்டங்களைப்போல்
கர்ஜித்து
ஆஞ்ஜநேயரை
விழுங்க
வாய்
திறந்து
ஓடிவந்தாள்.
அவர்
அவளுடைய
தேகப்
பிரமாணத்தையும்,
பெரிய
முகத்தையும்
திறந்த
வாயையும்,
உயிர்
நிலையையும்
உற்றுப்பார்த்து
மஹா
பலவானும்
வஜ்ராயுதத்தைப்
போன்ற
வலிமையுடையவருமானதால்
தன்
தேகத்தைச்
சுருக்கிக்
கொண்டு
அவளுடைய
வாயில்
புகுந்தார்.
பர்வகாலத்தில்
பூர்ண
சந்திரனை
ராகு
விழுங்குவதுபோல்
அவளுடைய
வாயில்
ஹனுமான்
நுழைந்ததை
ஸித்த
சாரணர்கள்
ஆச்சரியத்துடன்
பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
மனோ
வேகத்தையுடைய
மாருதி,
அவளுடைய
உயிர்
நிலையைத்
தன்
கூரான
நகங்களால்
பிளந்துவிட்டு
அவள்
வாயை
மூடுவதற்குள்
அதி
வேகமாக
வெளிப்பட்டார்.
தன்
பார்வையாலும்
தைரியத்தாலும்,
சாதுரியத்தாலும்
இப்படி
அவளை
வென்று
மறுபடியும்
முன்போல்
தேகத்தை
வளர்த்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
ஸிம்ஹிகை
ஹிருதயம்
பிளந்து,
கதறிக்கொண்டு
ஸமுத்திரத்தில்
விழுந்ததைப்
பார்த்து,
ஆகாசத்தில்
ஸஞ்சரிக்கும்
பூதங்கள்,
“மாருதே!
பயங்கரமான
காரியத்தைச்
செய்தீர்;
இந்த
மஹா
பலமுள்ள
ஜந்துவை
அலக்ஷ்யமாகக்
கொன்றீர்.
நீர்
உத்தேசித்த
காரியத்தை
க்ஷேமமாக
முடித்து
வாரும்.
உம்மைப்போல்
நுட்பமான
பார்வையும்
தைரியமும்
வஸ்துக்களின்
உண்மையை
அறியும்
புத்தியும்
திறமையும்
யாருக்குண்டோ
அவனே
தன்
காரியங்களில்
வருத்தப்படமாட்டான்”
என்று
கொண்டாடினார்கள்.
ஸுரஸையையும்
ஸிம்ஹிகையையும்
ஜயித்த
சுபசகுனத்தால்,
தான்
உத்தேசித்துப்
போகும்
காரியம்
கைகூடுமென்று
ஸந்தோஷமடைந்து,
ஹனுமான்
கருடனைப்போல்
ஆகாசவீதியில்
போனார்.
Prose passage
▾
Meaning
Keep
அக்கரைக்கு
ஸமீபத்தில்
போய்
நான்கு
பக்கங்களிலும்
பார்க்கையில்
நூறுயோஜனை
தூரத்தின்
முடிவில்
காடுகள்
தோன்றின.
ஆகாச
மார்க்கத்தில்
போய்க்கொண்டிருக்கையில்
மரங்களடர்ந்து
அழகான
லங்கைத்
தீவையும்
மலய
பர்வதத்தைச்
சேர்ந்த
காடுகளையும்,
கடலையும்
அதன்
கரையிலுள்ள
சதுப்பு
நிலங்களையும்,
அங்கே
வளரும்
மரங்களையும்,
த்ரிகூட
மலையிலிருந்து
ஆறுகள்
ஸமுத்திரத்தில்
விழுமிடங்களையும்
பார்த்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
பெரியமேகத்தைப்போல்
ஆகாசத்தை
மறைக்கும்
தன்
தேகத்தைப்
பார்த்து,
“நான்
இப்படிப்போனால்
என்
பெரிய
தேகத்தையும்
வேகத்தையும்
ராக்ஷஸர்கள்
கண்டு
ஆச்சரியமடைந்து
என்னை
யாரென்று
அறிய
முயல்வார்கள்”
என்று
யோசித்து,
மோஹம்
தீர்ந்த
ஆத்மஞானியைப்போல்
தன்
தேகத்தைச்
சுருக்கிக்கொண்டு,
முன்
ரூபத்தை
எடுத்தார்.
அப்போது
மஹாவிஷ்ணு
த்ரிவிக்ரமாவதாரமெடுத்து,
பலிச்சக்கரவர்த்தியின்
வீர்யத்தை
அபகரித்து
மறுபடியும்
வாமன
ரூபியாகி
நின்றதுபோல்
ஹனுமான்
விளங்கினார்.
Prose passage
▾
Meaning
Keep
அழகிய
அநேக
ரூபங்களை
எடுக்கக்கூடிய
ஆஞ்ஜநேயர்
சத்துருக்களால்
ஜயிக்கப்படாமல்
நூறு
யோஜனை
தூரமுள்ள
ஸமுத்திரத்தைத்
தாண்டி,
தன்
பெரிய
ரூபத்தையும்
தான்
செய்ய
வேண்டிய
காரியத்தையும்
ஆலோசித்துத்
தன்
உண்மையான
ரூபத்தை
அடைந்தார்.
பெரிய
மலைச்சிகரத்தைப்
போன்ற
அந்த
மஹாத்மா,
சிகரங்களால்
சூழப்பட்டு,
சிகரங்கள்
காணப்படாமல்
ஆகாயத்திலிருந்து
தொங்கிக்கொண்டிருப்பதுபோல்
தோன்றுவதும்
அநேக
அழகான
விருக்ஷங்களால்
விளங்குவதுமான
ஸுவேல
மலையின்
சிகரத்தில்
இறங்கினார்.
Prose passage
▾
Meaning
Keep
அக்கரை
சேர்ந்து
ஆகாச
வீதியிலிருந்துகொண்டு
ஆஞ்ஜநேயர்
திரிகூடபர்வத
சிகரத்தில்
அமைக்கப்பட்ட
லங்கையைக்
கண்டு,
அதுவரையில்
தரித்த
ரூபத்தை
மாற்றி
அந்த
மலையில்
இறங்கி,
அதில்
வஸிக்கும்
மிருகங்களையும்
பக்ஷிகளையும்
பயமுறச்
செய்தார்.
தானவர்களாலும்,
பன்னகர்களாலும்
நிறைந்து
பெரும்
அலைகளையுடைய
ஸமுத்திரத்தைத்
தன்
பலத்தால்
தாண்டி
அக்கரையில்
இறங்கி,
அமராவதியைப்போல்
விளங்கும்
லங்கையைக்
கண்டார்.
210
▾
Meaning
Keep
ஸ
ஸாக³ரம்
தா³நவ
பந்நகா³யுதம்
ப³லேந
விக்ரம்ய
மஹோர்மி
மாலிநம்
|
நிபத்ய
தீரே
ச
மஹோத³தே⁴ஸ்
ததா³
த³த³ர்ஶ
லங்கா
மமராவதீமிவ
||
Previous
←
ஸ்ரீமத் ராமாயண த்யாந சுலோகங்கள்
Next
லங்கையின் வளப்பம்
→