Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · லங்கையின் வளப்பம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
லங்கையின்
வளப்பம்
1
▾
Meaning
Keep
ஸ
ஸாக³ர
மநாத்⁴ருஷ்யமதிக்ரம்ய
மஹாப³ல:
|
த்ரிகூடஸ்ய
தடே
லங்காம்
ஸ்தி²தாம்
ஸ்வஸ்தோ²
த³த³ர்ஶ
ஹ
||
Prose passage
▾
Meaning
Keep
மஹா
பலசாலியான
வாயுபுத்திரன்
ஒருவராலும்
தாண்ட
முடியாத
ஸமுத்திரத்தைக்
கடந்து,
சிறிதும்
சிரமமடையாமல்,
திரிகூட
பர்வத
சிகரத்தில்
கட்டப்பட்ட
லங்காபுரியைக்
கவனித்துப்
பார்த்தார்.
பிறகு
அங்குள்ள
மரங்களிலிருந்து
விழுந்த
புஷ்பங்களால்
தூவப்பட்டு,
அந்த
மஹா
வீரன்
புஷ்பத்தால்
செய்யப்பட்ட
வானர
விக்கிரஹத்தைப்போல்
விளங்கினார்.
Prose passage
▾
Meaning
Keep
ஒப்பில்லாத
பராக்கிரமத்தையுடைய
அந்த
தேஜஸ்வி,
நூறு
யோஜனை
தூரம்
அதிவேகமாய்த்
தாண்டியும்,
பெருமூச்சு
விடவும்
இல்லை;
கொஞ்சமாவது
களைக்கவுமில்லை.
“இதைப்போல்
அநேக
நூறு
யோஜனை
தூரம்
தாண்டுவேன்;
கேவலம்
ஒரு
நூறு
யோஜனை
தூரமுள்ள
இந்த
ஸமுத்திரத்தைத்
தாண்டுவது
எனக்கு
ஒரு
பொருட்டா?”
என்று
நினைத்துக்கொண்டு,
வீரியத்திலும்
தாண்டுவதிலும்
ஒப்பில்லாத
ஹனுமான்,
கடலைத்
தாண்டின
பிறகு,
வேகமாய்
லங்கையை
நோக்கிச்
சென்றார்
பசுமையாய்ச்
செழித்து
வளரும்
இளம்
புல்
தரைகளையும்,
பரிமளமுள்ள
அநேக
மரங்களுடன்
பெரும்
பாறைகள்
நிறைந்த
காடுகளையும்
பார்த்துக்கொண்டு
அவைகளுக்கு
நடுவே
சென்றார்.
Prose passage
▾
Meaning
Keep
பலவித
விருக்ஷங்களால்
மறைந்த
மலைகளையும்,
புஷ்பங்களால்
விளங்கும்
வன
வரிசைகளையும்
தாண்டிப்
போனார்.
அந்த
மலையில்
நின்றுகொண்டே
வனங்களையும்
சிறு
காடுகளையும்
திரிகூடத்தின்மேல்
கட்டப்பட்ட
லங்காபுரியையும்
பார்த்தார்.
மலர்ந்த
புஷ்பங்கள்
நிறைந்த
சிவதை,
கோங்கு,
மலை
மல்லிகை,
தாழை
முதலிய
மரங்களையும்,
புஷ்பங்களாலும்,
அரும்புகளாலும்
மறைக்கப்பட்ட
கடம்பு,
ஏழிலைப்
பாலை,
மலையத்தி,
அலரி
முதலிய
மரங்களையும்,
சில
விருக்ஷங்கள்
இனிமையாய்ப்
பாடும்
பக்ஷிகளால்
நிறைந்து
காற்றால்
ஆட்டப்படும்
நுனிகளுடன்
விளங்குவதையும்,
அன்னம்,
நீர்க்காக்கை
முதலிய
நீர்ப்பறவைகளாலும்,
வெண்தாமரை,
செங்கமலம்,
கருநெய்தல்
முதலிய
மலர்களாலும்
பிரகாசிக்கும்
நீரோடைகளையும்,
ஸாதாரண
ஜனங்கள்
விளையாடும்
ஸ்தலங்களையும்
ஜலக்ரீடை
செய்யும்
மடுக்களையும்,
எந்தக்
காலத்திலும்
புஷ்பங்களாலும்,
பழங்களாலும்
விளங்கும்
விருக்ஷங்களுள்ள
அரசர்கள்
விளையாடும்
தோட்டங்களையும்
பார்த்துக்கொண்டே
சென்று;
லங்கா
நகரத்தருகில்
வந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அது
ராவணனுடைய
ராஜதானி;
தாமரை,
கருநெய்தல்
முதலிய
புஷ்பங்கள்
நிறைந்த
அகழ்களால்
சூழப்பட்டது;
ஸீதையை
எடுத்துக்கொண்டுபோய்
வைத்திருப்பதால்
ராவணன்
முன்னைவிட
அதிக
ஜாக்கிரதையாய்
அதைக்
காப்பாற்றி
வந்தான்.
பயங்கரமான
வில்லுகளைத்
தரித்த
ராக்ஷஸர்கள்
எப்பொழுதும்
நான்கு
திக்குகளிலும்
காவல்
காத்துக்
கொண்டிருந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
தங்கமயமான
உயர்ந்த
மதிற்
சுவர்களால்
சூழப்பட்ட
விஸ்தாரமான
நகரம்
அது;
அதிலுள்ள
வீடுகள்
நவக்கிரகங்கள்
போலும்,
சரத்
காலத்து
மேகங்கள்
போலும்
விளங்கி
உயர்ந்தும்,
நற்சாந்து
பூசப்பட்டு
வெண்மையாயும்
இருந்தன.
கோட்டைச்
சுவர்களின்மேல்
அங்கங்கே
யுத்தம்
செய்வதற்காக
அநேக
ஸ்தானங்கள்
அமைக்கப்
பட்டிருந்தன.
கொடி
செடிகள்
எழுதப்பட்ட
அநேக
வஸ்திரங்கள்
சில
இடங்களில்
கட்டித்
தொங்கவிடப்பட்டிருந்தன;
சில
இடங்களில்
மீன்,
மகரம்
முதலிய
ஜந்துக்களைப்போல்
அமைக்கப்பட்ட
கொடிகள்
நாட்டப்பட்டிருந்தன.
விசித்திரமான
கொடிகள்
வரிசையாக
எழுதப்பட்ட
தங்கமயமான
தோரணங்கள்
கண்ணைப்
பறித்தன.
தேவலோகத்தில்
விளங்கும்
அமராவதியோ
என்று
பிரமிக்கும்படி
இருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
பர்வத
சிகரத்தில்
கட்டப்பட்டு
வெண்மையான
வீடுகளுடன்
விளங்கும்
லங்கையைப்
பார்க்கையில்
ஆஞ்சநேயருக்கு
அது
ஆகாசத்தில்
பறந்து
செல்லும்
நகரம்போல்
தோன்றிற்று;
அதை
அமைத்தவன்
விசுவகர்மா;
அதில்
அரசு
செலுத்துகிறவனோ
ராவணேசுவரன்.
லங்கை
என்ற
பெண்ணிற்குக்
கோட்டைச்
சுவர்களைத்
தாங்கும்
கட்டடங்களே
இடை;
சுத்த
ஜலத்தால்
நிறைந்த
அகழ்களே
புது
வஸ்திரம்;
மதில்களில்
வைத்திருக்கும்
பீரங்கி,
சூலம்
முதலிய
ஆயுதங்களே
தலைமயிர்;
மதில்களில்
கட்டப்பட்ட
யுத்த
ஸ்தானங்களே
காதில்
அணியும்
ஆபரணங்கள்;
அந்நகரம்
விசுவகர்மாவால்
அமைக்கப்பட்டது.
ஆனால்
பார்க்கையில்
மனத்தால்
ஸ்ருஷ்டிக்கப்
பட்டதோ
என்று
எண்ணும்படி
இருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஹனுமான்
வடக்கு
வாசலுக்கருகில்
சென்று
அந்தப்
பட்டணத்தை
உற்றுப்
பார்த்தார்.
அது
கைலாஸ
சிகரத்தைப்போல்
வெண்மையாய்
ஆகாசத்தை
அளாவியிருந்தது.
உயர்ந்த
வீடுகளைப்
பார்க்கையில்
ஆகாசத்தில்
பறந்து
போவதுபோல்
காணப்பட்டது.
போகவதீ
என்ற
நகரம்
நாகர்களால்
காக்கப்படுவதுபோலும்,
மலைக்குகை
ஸர்ப்பங்களால்
ரக்ஷிக்கப்படுவதுபோலும்,
கணக்கில்லாத
ராக்ஷஸர்கள்
கோரைப்பற்களுடன்
பயங்கரமானரூபம்தரித்து,
ஆயுதபாணிகளாய்
எப்பொழுதும்
அதைப்
பாதுகாத்து
வந்தார்கள்;
பூர்வத்தில்
குபேரனுடைய
ராஜதானியான
அந்த
நகரம்
அழகாகக்
கட்டப்பட்டு,
இப்படிப்பட்டதென்று
மனத்தாலும்
நினைக்கமுடியாததாக
இருந்தது.
அதற்கு
ஏற்பட்ட
அரண்களோ
வெகு
ஆச்சரியமானவை;
மேலும்
ஒருவராலும்
தாண்டமுடியாத
ஸமுத்திரம்
அதை
நான்கு
புறங்களிலும்
பாதுகாக்கின்றது;
அதை
ஆளும்
அரசனோ
பெயரைக்
கேட்டவுடனே
எல்லோரும்
நடுங்கும்படியான
ராவணேசுவரன்.
Prose passage
▾
Meaning
Keep
இதை
எல்லாம்
யோசித்து
ஹனுமான்,
“வானர
ஸைன்யங்கள்
இங்கே
வருவது
அரிது.
அப்படி
வந்தாலும்
பிரயோஜனப்படாது.
தேவதைகள்
ஒன்று
சேர்ந்தாலும்
இந்த
லங்கையை
முற்றுகையிட்டுப்
பிடிப்பது
அஸாத்தியம்.
சத்துருக்கள்
ஜயிப்பதற்கரிய
அரண்களையுடையதாய்,
பிரதாப
லங்கேசுவரனால்
ரக்ஷிக்கப்பட்ட
இந்த
நகரத்திற்கு
ஒருவேளை
ராகவன்
எப்படியாவது
வந்தாலும்
அவரால்
என்ன
செய்ய
முடியும்?
Prose passage
▾
Meaning
Keep
அஸுர
ஸ்வபாவமுள்ள
இந்த
ராக்ஷஸர்களை
ஸாமமென்ற
உபாயத்தால்
வசப்படுத்த
முடியாது;
அளவற்ற
ஐசுவரியத்தையுடையவர்களை
திரவியத்தைக்
கொடுத்து
வசப்படுத்த
முடியுமோ?
பலபராக்கிரமங்களால்
இறுமாப்புக்
கொண்டிருப்பவர்களுக்குள்
கலஹம்
செய்து
அவர்களைக்
கெடுக்க
முடியாதே.
புத்தியிலும்
பராக்கிரமத்திலும்
சிரேஷ்டர்களானதால்
யுத்தத்தில்
தோல்வியடையார்கள்.
அங்கதன்,
நீலன்,
ஸுக்ரீவன்,
நான்
இவர்களைத்
தவிர
மற்ற
வானரர்கள்
இங்கே
வரமுடியாது.
Prose passage
▾
Meaning
Keep
இருக்கட்டும்;
ஜானகி
உயிரோடிருக்கிறாளா
இல்லையா
என்று
தெரிந்துகொள்வோம்.
பிழைத்திருந்தால்
அப்போது
இதைப்பற்றி
யோசித்துக்கொள்ளலாம்”
என்று,
ஒரு
முகூர்த்தகாலம்
அந்த
மலைச்சிகரத்தில்
உட்கார்ந்து
ராமனுடைய
க்ஷேமத்தில்
கவலைகொண்டவராய்
ஸீதையைக்
காணும்
உபாயத்தை
ஆலோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“எப்பொழுது
லங்கைக்குள்
பிரவேசிக்கலாம்?
எந்த
ரூபத்தை
எடுக்கலாம்?
இந்த
ரூபத்துடன்
பிரவேசிப்பதில்
பிரயோஜனமில்லை.
பலசாலிகளான
ராக்ஷஸர்கள்
எங்கும்
காவலிருக்கிறார்கள்;
வெகு
குரூரர்கள்;
உக்கிரமான
தேஜஸ்
உடையவர்கள்;
மஹா
வீரர்கள்.
இவர்களை
ஏமாற்றிப்
பிறகு
ஸீதையைத்
தேட
வேண்டும்.
நான்
எடுக்கும்
ரூபத்தைப்
பிறர்
ஸுலபமாய்க்
கண்டு
பிடிக்கக்கூடாது.
ஆனால்,
நான்
செய்யவேண்டிய
காரியத்திற்கு
அது
அனுகூலமாக
இருக்க
வேண்டும்.
பெரிய
ரூபத்தை
எடுத்தால்
ராக்ஷஸர்கள்
கண்டு
பிடிப்பார்கள்.
கண்ணிற்குத்
தெரியாத
ரூபத்தை
எடுத்தால்
லங்கை
முழுவதையும்
தேட
முடியாது.
ராத்திரியில்
உள்ளே
சென்றால்
நான்
உத்தேசித்த
பெரிய
காரியத்தை
முடிக்கலாம்”
என்று,
தேவர்களும்
நெருங்க
முடியாத
அந்த
நகரத்தைப்
பார்த்து,
ஸீதையைத்
தேடும்
வழியை
அடிக்கடி
ஆலோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“துராத்மாவான
ராவணனுடைய
கண்ணில்
படாமல்
எப்படி
ஜானகியைப்
பார்க்க
முடியும்?
ஸகலமும்
அறிந்த
ராமனுடைய
காரியம்
கெடாமலிருப்பதற்கு
வழி
என்ன?
ஒருவரும்
இல்லாமல்
தனியாக
இருக்கையில்
ஸீதையைப்
பார்க்கும்
உபாயம்
என்ன?
ஹிதமாய்
முடியப்போகிற
காரியங்களும்
விவேகமில்லாத
தூதனிடத்தில்
அகப்பட்டால்,
தேச
காலத்திற்குத்
தகுந்த
பிரயத்தனம்
செய்யப்படாமல்,
ஸூரியனைக்
கண்ட
இருள்போல்
நாசமடைகின்றன.
இது
மாத்திரமா?
அரசன்
மந்திரிகளுடன்
காரியா
காரியங்களையும்
ஸாதன
விரோதிகளையும்
தீர்க்காலோசனை
செய்துமுடித்துப்
பிறகு
பகுத்தறிவில்லாத
தூதனிடத்தில்
ஒப்புவித்தால்,
அவனுக்குப்
புத்திக்
குறைவும்
அபகீர்த்தியும்
நேருமே
தவிர,
காரியம்
கைகூடாது.
தூதர்கள்
தங்களை
மஹா
புத்திமான்களென்று
நினைத்துக்கொண்டு
தங்களை
நம்பிவிட்ட
காரியங்களைக்
கெடுத்து
விடுகிறார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ராம
காரியம்
கெடக்கூடாது;
இப்பொழுதே
பகலில்
லங்கையில்
போகலாமா?
ராத்திரியில்
போவது
நலமா?
இந்தப்
பெரிய
ரூபத்துடன்
செல்லலாமா?
சிறிய
ரூபத்தை
எடுப்பது
நலமா?
நான்
புத்திஹீனனென்று
பெயர்
வாங்கக்கூடாது.
நான்
ஸமுத்திரத்தைத்
தாண்டி
வந்தது
வீணாகக்கூடாது.
ராக்ஷஸ
ராஜனான
ராவணனை
நாசம்
செய்ய
வேண்டுமென்பது
எல்லாமறிந்த
ராமனுடைய
கருத்து;
நான்
தேடும்போது
ராக்ஷஸர்கள்
என்னைக்
கண்டுவிட்டால்
அந்தக்
காரியம்
கெட்டுவிடும்.
ராக்ஷஸ
ரூபத்தைத்
தரித்துக்கொண்டிருந்தாலும்
இங்கிருக்கும்
ராக்ஷஸர்களுக்குத்
தெரியாமல்
ஒரு
நிமிஷமாவது
இருக்க
முடியாது.
மற்ற
ரூபங்களைப்
பற்றிச்
சொல்ல
வேண்டுமோ?
ஆகையால்
இந்தப்
பெரிய
ரூபத்துடன்
லங்கையில்
செல்வது
தவறு.
வாயு
பகவானும்
இவர்களுக்குத்
தெரியாமல்
இங்கே
ஸஞ்சரிக்கமுடியாதென்று
எண்ணுகிறேன்,
பலவான்களான
ராக்ஷஸர்களுக்குத்
தெரியாததும்
உண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
இந்த
ரூபத்துடன்
இங்கே
நான்
தங்கியிருந்தால்
நிச்சயமாகக்
கொல்லப்படுவேன்;
அப்பொழுது
என்
பிரபுவின்
காரியமும்
கெடும்.
அவருடைய
உத்தேசம்
கைகூடும்
பொருட்டு
ராத்திரி
காலத்தில்
என்
ஸ்வய
ரூபத்தை
மிகவும்
சுருக்கிக்கொண்டு
லங்கைக்குள்
செல்ல
வேண்டும்.
அதுவரையில்
எங்கேயாவது
மலைக்குகையில்
ஒளிந்திருப்பேன்.
அஸ்தமித்த
பிறகு
பிறர்
நெருங்க
முடியாத
இந்த
ராவணனுடைய
ராஜதானியில்
புகுந்து
ஸகல
வீடுகளிலும்
தேடி
ஸீதையைக்
கண்டு
பிடிக்கிறேன்”
என்று
நிச்சயித்து
அந்த
வானர
வீரன்,
ஸீதையைக்
காண
ஆவல்கொண்டு
ஸூரியாஸ்தமனத்தை
எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
ஸூரியன்
அஸ்தமித்து
ராத்திரியானவுடன்,
மாருதி
தன்
தேகத்தைப்
பூனையளவிற்குச்
சுருக்கிக்
கொண்டார்.
அது
பார்ப்பதற்கு
ஆச்சரியமாக
இருந்தது.
பிறகு
இரவின்
துடக்கத்தில்
ஹனுமான்
அங்கிருந்து
கிளம்பி,
அழகாய்
அமைக்கப்பட்ட
வீதிகளுள்ள
அந்த
லங்கையில்
வேகமாய்ப்
புகுந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அது
வெள்ளி,
தங்கம்
இவைகளால்
செய்யப்பட்ட
தூண்களாலும்,
தங்கமயமான
ஜன்னல்களாலும்
அலங்கரிக்கப்பட்ட
அரண்மனைக்
கூட்டங்களால்
கந்தர்வ
நகரம்போல்
தோன்றிற்று;
(நானா
ரத்னங்களிழைத்த
கோபுரங்களாலும்,
அரண்மனைகளாலும்
விளங்கும்
நகரத்தைப்போல்
ஆகாசத்தில்
காணப்படும்
மேகக்கூட்டம்
கந்தர்வ
நகரம்
எனப்படும்.
அது
தோன்றினால்
யானை,
குதிரை,
மனிதர்கள்
கணக்கில்லாமல்
மடிந்து,
பூமி
அவர்களின்
ரத்தத்தைக்
குடிக்குமென்று
சாஸ்திரம்).
ஏழெட்டு
உப்பரிகைகளுள்ள
வீடுகள்
ஸ்படிகக்
கற்களால்
அமைக்கப்பட்டு,
தங்கவேலை
செய்யப்பட்ட
தரைகளுடனும்
வைடூரியம்
முதலிய
ரத்தினங்களும்,
முத்துக்களும்
கலந்த
மாலைகளுடனும்
பிரகாசித்தன.
எங்கே
பார்த்தாலும்
ராக்ஷஸர்களின்
வீட்டு
வாசல்கள்
தங்கத்தால்
அலங்கரிக்கப்பட்டு
லங்கையை
ஜ்வலிக்கச்
செய்தன.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதையைக்
கண்டு
பிடிக்க
ஆவல்
கொண்ட
மாருதி,
மனத்தாலும்
நினைக்க
முடியாததாய்,
ஆச்சரியகரமாய்
விளங்கும்
அந்த
நகரத்தைக்
கண்டு,
அதில்
பிரவேசிப்பதிலுள்ள
கஷ்டத்தால்
துக்கத்தையும்,
அதன்
அழகைப்
பார்த்து
ஆச்சரியத்தையும்
அடைந்தார்.
ஆகாசத்தையளாவும்
வெண்மையான
விமானங்களாலும்,
விலையுயர்ந்த
ஸுவர்ணத்தால்
செய்யப்பட்ட
ஜன்னல்கள்,
வாசற்படிகளாலும்
மேன்மை
பெற்றுப்
பயங்கரமான
பலமுள்ள
ராக்ஷஸர்களால்
சூழப்பட்டு
ராவணேசுவரனால்
ரக்ஷிக்கப்பட்ட
அந்த
நகரத்தைப்
பார்க்க
மாருதிக்கு
ஆச்சரியமுண்டாயிற்று.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
ஸமயத்தில்
சந்திரனும்
ஆஞ்ஜநேயருக்கு
உதவி
செய்பவன்போல்,
நிலவென்ற
மேல்கட்டால்
லோகத்தில்
பரவி,
நக்ஷத்திரக்
கூட்டங்களுக்கு
நடுவில்
அனேகமாயிரம்
கிரணங்களுடன்
உதித்தான்.
வலம்புரிச்
சங்கின்
காந்தியுடன்,
பாலையும்
தாமரைக்
குருத்தையும்
போன்ற
நிறமுள்ள
சந்திரனைப்
பார்த்து
ஹனுமான்,
“இவ்வளவு
காந்தியுடன்
உதிக்கும்
இவன்
நிர்மலமான
தடாகத்தில்
ஆனந்தமாய்
நீந்தும்
ராஜ
ஹம்ஸமோ!”
என்று
நினைத்தார்.
58
▾
Meaning
Keep
ஶங்க²
ப்ரப⁴ம்
க்ஷீரம்ருணாள
வர்ணம்
உத்³க³ச்ச²
மாநம்
வ்யவபா⁴ஸமாநம்
|
த³த³ர்ஶ
சந்த்³ரம்
ஸ
ஹரிப்ரவீர:
போப்லூயமாநம்
ஸரஸீவ
ஹம்ஸம்
||
Previous
←
ஆஞ்ஜநேயர் ஸமுத்திரத்தைத் தாண்டி லங்கைக்குப் போனது
Next
மாருதி லங்காதேவதையை ஜயித்தது
→