Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி ராமனுடைய வரலாற்றைச் சொன்னது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
ராமனுடைய
வரலாற்றைச்
சொன்னது
1
▾
Meaning
Keep
தஸ்யாஸ்
தத்³
வசநம்
ஶ்ருத்வா
ஹநுமாந்
ஹரியூத²ப:
|
து³க்கா²த்³
து³க்கா²பி⁴
பூ⁴தாயா:
ஸாந்த்வமுத்தர
மப்³ரவீத்
||
Prose passage
▾
Meaning
Keep
ஓய்வில்லாமல்
ஸமுத்திரத்தின்
அலைகள்போல்
துக்கத்தால்
பீடிக்கப்படும்
ஸீதை
இப்படிச்
சொல்லக்
கேட்டு,
ஹநுமான்
அவளுக்கு
ஆறுதலுண்டாகும்படி
பதில்
சொன்னார்.
“ஸ்ரீராகவன்
க்ஷேமமாக
இருக்கிறார்.
அதைத்
தங்களிடத்தில்
தெரிவிக்கும்படி
என்னை
இங்கே
அனுப்பினார்.
தங்களுடைய
விருத்தாந்தத்தை
அறிந்து
அவரிடத்தில்
சொல்வதற்காக
வந்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிரஹ்மாஸ்திரத்தையும்
வேதங்களையும்
நன்றாயறிந்தவரும்
அவைகளின்
தத்வார்த்தத்தைத்
தெரிந்தவர்களுக்குள்
சிரேஷ்டருமான
ராமன்
தன்
க்ஷேமத்தைத்
தங்களிடத்தில்
சொல்லச்சொன்னார்.
அவருடைய
தம்பி
லக்ஷ்மணன்
தங்களுக்கு
நேர்ந்த
கஷ்டத்தை
நினைத்து
நினைத்து
வியஸனமடைந்து
தங்களுக்கு
ஸாஷ்டாங்க
நமஸ்காரம்
செய்தார்;
அவர்
மஹாதேஜஸ்வி
என்றும்
ராமனுக்கு
மிகவும்
அருமையானவரென்றும்,
அவருக்கு
ஸகல
கைங்கரியத்தையும்
செய்யப்
பெற்றவரென்றும்
தங்களுக்குத்
தெரியுமே”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
புருஷ
சிரேஷ்டர்களான
ராமலக்ஷ்மணர்கள்
க்ஷேமமாக
இருக்கிறார்களென்று
கேட்டு,
பிரியத்தால்
அவயவங்கள்
மயிர்க்
கூச்சமடைய,
ஸீதை
ஆஞ்ஜநேயரைப்
பார்த்து,
“என்ன
ஆச்சரியம்!
ஒருவன்
பிழைத்து
மாத்திரமிருந்தால்
நூறு
வருஷங்களுக்குப்
பிறகாவது
ஸந்தோஷத்தை
அனுபவிக்காமல்
இருக்க
மாட்டான்
என்ற
லோகவார்த்தை
என்
விஷயத்தில்
வாஸ்தவமாயிற்று”
என்றாள்.
பிறகு
தன்னிடத்தில்
தூதனாக
வந்த
ஹநுமாரிடத்தில்
ஸீதைக்கு
ஆச்சரியகரமான
பிரீதியுண்டாயிற்று;
அவ்விருவரும்
வெகு
நம்பிக்கையாய்ப்
பேசிக்
கொண்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
இப்படிச்
சொல்லக்
கேட்டு,
ஹநுமான்
சோகத்தால்
வாடியிருக்கும்
இவளை
இன்னும்
தேற்ற
வேண்டுமென்று
ஸமீபத்தில்
வர
ஆரம்பித்தார்.
உடனே
ஸீதைக்கு
சந்தேகம்
பிறந்து
அவர்
வர
வர
ராவணனென்றே
எண்ணினாள்.
Prose passage
▾
Meaning
Keep
“ஐயோ!
புத்தி
மயங்கி
இவனிடத்தில்
கபடமில்லாமல்
என்
மனத்திலுள்ள
விஷயங்களைச்
சொல்லி
விட்டேனே.
என்னைப்போல்
முட்டாளுண்டோ?
என்னை
வஞ்சகமாய்
அபகரித்த
ராவணனே
மாறுவேஷம்
கொண்டு
இப்படி
வந்திருக்கிறான்
என்று
அந்த
மரத்தின்
கிளையை
விட்டு,
வருத்தம்
மேலிட்டுப்
பூமியில்
உட்கார்ந்தாள்.
பயத்தாலும்
துக்கத்தாலும்
அவள்
புத்தி
ஸ்வாதீன
மற்றிருப்பதை
ஆஞ்ஜநேயர்
அறிந்து
அவளை
நமஸ்கரித்தார்.
ஆனால்
ஜானகி
பயத்தால்
மிரண்டு
அவரைத்
திரும்பிப்
பார்க்கவே
இல்லை.
Prose passage
▾
Meaning
Keep
சற்று
நேரம்
கழித்து
அவர்
அப்படியே
தலையில்
கை
கூப்பி
வணக்கமாய்
நிற்பதைக்
கண்டு
ஸீதை
பெருமூச்சு
விட்டு,
நீ
“ஸகல
மாயைகளையும்
அறிந்த
ராவணனாகவே
இருந்து,
இந்த
ரூபத்தை
எடுத்து
வந்திருந்தால்,
பலவித
துக்கங்களால்
வாடியிருக்கும்
என்னை
இன்னும்
உபத்திரவிப்பது
க்ஷேமகரமல்ல.
தண்டகாரண்யத்தில்
கபட
ஸன்யாஸிவேஷம்
தரித்து
என்னை
மோசம்
செய்த
துஷ்டனல்லவா?
நினைத்த
ரூபத்தை
எடுக்கக்
கூடிய
உனக்கு
இது
மிகவும்
ஸுலபம்.
ஆனால்
ஆகாரமில்லாமல்
இளைத்து
மனம்
நொந்திருக்கும்
என்னை
மறுபடியும்
கஷ்டப்
படுத்துவது
உனக்கு
நன்மையன்று.
Prose passage
▾
Meaning
Keep
ஐயோ!
நான்
இப்படி
ஸந்தேகிப்பதும்
ஸரியல்ல.
உன்னைப்
பார்க்கையில்
எனக்கு
எல்லையற்ற
பிரீதியுண்டாகிறது.
ஆகையால்
நீ
ராவணனாக
இருக்க
மாட்டாய்.
நீ
நிஜமாகவே
ராமனால்
என்னிடத்தில்
அனுப்பப்பட்ட
தூதனாயிருந்தால்
உனக்கு
மங்களங்களுண்டாகட்டும்.
ரகுநாதனுடைய
சரிதங்களைக்
கேட்பது
எனக்கு
மிகவும்
பிரியம்.
ஆகையால்
உன்னைக்
கேட்கிறேன்.
என்
பிராணநாதனான
ராமமூர்த்தியின்
குணங்களைச்
சொல்.
ஜலப்பிரவாஹம்
ஆற்றங்கரையை
அறுப்பதுபோல்
என்
மனத்தை
வரவர
கவர்கின்றாய்.
Prose passage
▾
Meaning
Keep
இருக்கட்டும்.
இவ்வளவு
காலங்கழித்துப்
பயங்கரமான
ஸமுத்திரத்தைத்
தாண்டி
நான்
இருக்குமிடத்தைக்
கண்டு
பிடித்துக்
காற்றும்
நுழையமுடியாத
இந்த
லங்காபுரியில்
ராமனிடத்திலிருந்து
தூதன்
வருவதற்கு
நியாயமில்லை.
ஆகையால்,
இது
ஸ்வப்பனமே.
ஆனாலும்
மிகவும்
ஸுகமான
ஸ்வப்பனம்.
Prose passage
▾
Meaning
Keep
என்னை
அபகரித்த
இவ்வளவு
காலத்திற்குப்
பிறகு
ராமனால்
அனுப்பப்பட்ட
ஒரு
தூதனைப்
பார்க்கவும்
என்
நாயகனுடைய
விருத்தாந்தத்தை
அவன்
சொல்லக்
கேட்கவும்
கிடைத்தது.
என்ன
ஆச்சரியம்!
இப்படியே
இந்த
ஸ்வப்பனத்தில்
ராமலக்ஷ்மணர்களையும்
பார்க்கக்
கிடைத்தால்
என்
துக்கமெல்லாம்
தீர்ந்து
ஸந்தோஷிப்பேன்.
ஸ்வப்பனமும்
எனக்குச்
சத்துருவாய்
நிற்கிறதே!
Prose passage
▾
Meaning
Keep
இது
ஸ்வப்பனமாய்
இருக்க
நியாயமில்லை.
ஸ்வப்பனத்தில்
குரங்கைக்
கண்டால்
கெடுதி
விளையுமென்று
சொல்லுகிறார்கள்.
எனக்கோ
பரமலாபம்
கிடைத்திருக்கிறது.
ஒருவேளை
சித்தப்பிரமையோ?
வாதபித்தங்களின்
விகாரமோ?
பைத்தியத்தின்
காரியமோ?
கானல்
நீர்ப்போல்
பொய்யோ?
ராமன்க்ஷேமமாக
இருக்கிறாரென்று
கேட்பதில்
எனக்குள்ள
ஆசையும்
எப்பொழுதும்
அவருடைய
தியானமும்
சேர்ந்து
இப்படி
என்
மனத்தில்
மோஹமுண்டாக்கிற்றோ?
அன்னபானமும்
நித்திரையும்
இல்லாமல்
தேகத்திலுள்ள
தாதுக்கள்
விகாரமடைந்து
இப்படித்
தோன்றுகிறதோ?
நாயகனை
விட்டுப்
பிரிந்தவர்களுக்கு
நேரும்
அவஸ்தைகளுக்குள்
ஒன்றான
உன்மாதம்
(பைத்தியம்)
என்ற
அவஸ்தையோ?
ஒரு
பதார்த்தத்தை
வேறொன்றாகத்
தோற்றுவிக்கும்
கானல்
நீர்போன்ற
விபரீத
ஞானமோ?
Prose passage
▾
Meaning
Keep
இது
உன்மாதமாயிருக்க
நியாயமில்லை.
பிரமை
என்பது
நிஜமானால்
அதைப்
போக்கக்
கூடிய
வஸ்து
இருக்க
வேண்டும்.
மேலும்,
மோஹம்
கொண்டவர்களும்
பைத்தியம்
பிடித்தவர்களும்
தாங்கள்
இன்னாரென்றும்
இன்னது
செய்கிறார்களென்றும்
பிறர்
இன்னாரென்றும்
இன்னது
செய்கிறார்களென்றும்
அறியார்கள்.
இருக்கும்
வஸ்துக்களை
இல்லை
என்றும்,
இல்லாதவஸ்துக்களை
இருக்கின்றன
என்றும்
நினைத்து
நடப்பார்கள்.
எனக்கு
அப்படியில்லையே.
என்
ஸ்வரூபமும்
எனக்கு
ஸமீபத்திலிருக்கும்
இந்த
வானரனுடைய
ஸ்வரூபமும்
நன்றாய்
விளங்குகின்றன.
முன்
சொன்ன
நான்கு
அவஸ்தைகளும்
நீங்கும்;
இது
நீங்காமல்
ஸ்திரமாக
இருக்கிறது.
Prose passage
▾
Meaning
Keep
மேலும்
அவைகளுக்கு
அவிவேகமே
ஆதாரம்;
எனக்கோ
விவேகம்
பூர்ணமாயிருக்கிறது”
என்று
நிச்சயித்து,
மேற்
சொன்னவைகளின்
பலாபலங்களைப்
பரிசோதித்து,
“இவன்
நினைத்த
ரூபங்களை
எடுக்கக்
கூடிய
ராவணனே”
என்று
தீர்மானித்தாள்.
ஆகையால்,
ஹநுமானைத்
திரும்பிப்
பார்த்துப்
பதில்
சொல்லவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
அவரும்
ஸீதையின்
எண்ணத்தை
அறிந்து,
கேட்பதற்கு
இனிமையான
வார்த்தைகளால்
அவளுடைய
மனத்தை
ஸந்தோஷப்
படுத்தினார்.
“லோகத்தில்
ஒரு
மஹானுபாவர்
இருக்கிறார்.
அவர்
தேஜஸில்
ஸூரியனைப்
போலும்,
ஸகலப்
பிராணிகளுக்கும்
ஆனந்தத்தைக்
கொடுப்பதில்
சந்திரனைப்போலவும்
ஸகல
ராஜாக்களுக்கும்
பிரபுவாயிருப்பதில்
குபேரனைப்
போலும்,
கீர்த்தியிலும்
பராக்கிரமத்திலும்
மஹாவிஷ்ணுவைப்
போலும்,
புத்தியில்
பிருஹஸ்பதியைப்
போலும்,
ஸௌந்தரியத்தில்
மன்மதனைப்
போலும்
இருப்பவர்.
ஸத்தியமாயும்மதுரமாயும்
பேசுகிறவர்.
ரமணீயமாயும்
காந்தி
பொருந்தியும்
இருக்கும்பார்வையை
உடையவர்.
இடமறிந்து
கோபித்து
சத்துருக்களை
நாசம்செய்பவர்.
அவருக்கு
மேலானவரில்லை;
மஹாரதர்
இந்த
பிரபஞ்சம்
முழுவதும்
அவருடைய
பராக்கிரமத்தின்
நிழலில்
கவலையற்று
வஸிக்கிறது.
Prose passage
▾
Meaning
Keep
பொன்மானைக்
கொண்டு
அவரை
ஆசிரமத்திலிருந்து
அப்புறப்படுத்தி
அவரில்லாத
ஸமயத்தில்
ராவணன்
தங்களை
அபகரித்தான்.
அதற்காக
அவனுக்குக்
கிடைக்கும்
பலனை
அதிசீக்கிரத்தில்
பார்ப்பீர்கள்.
கொஞ்சகாலத்திற்குள்
அவர்
கோபம்
கொண்டு
ஜ்வலிக்கும்
அக்னிக்
கொழுந்துகளைப்
போன்ற
பாணங்களால்
ராவணனை
யுத்தத்தில்
வதம்
செய்வார்.
நான்
அவரால்
தங்களிடத்திற்கு
அனுப்பப்பட்ட
தூதனாய்
வந்திருக்கிறேன்.
தங்களைப்
பிரிந்து
வியஸனத்தால்
பீடிக்கப்பட்டு
தங்களுடைய
க்ஷேமஸமாசாரத்தைத்
தெரிந்து
வரும்படி
என்னை
அனுப்பினார்.
Prose passage
▾
Meaning
Keep
மஹாதேஜஸ்வியும்
பராக்கிரமசாலியும்
ஸுமித்திரையின்
பாக்கிய
ரூபமான
லக்ஷ்மணன்
தங்களுக்கு
நமஸ்கரித்து
க்ஷேமத்தைத்
தெரிந்து
வரும்படி
சொன்னார்.
ராமனுக்கு
முக்கிய
ஸ்நேகிதரும்
வானராதிபதியுமான
ஸுக்ரீவ
மஹாராஜா
தங்களுடைய
க்ஷேமத்தை
விசாரித்துவரும்படி
சொன்னார்.
ராமனும்
லக்ஷ்மணனும்
ஸுக்ரீவனும்
எப்பொழுதும்
தங்களை
ஸ்மரித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ராக்ஷஸிகளின்
வசத்தில்
அகப்பட்டும்
தாங்கள்
பிழைத்திருப்பது
தெய்வானுக்கிரஹம்தான்.
அபார
பலமுள்ள
ராமரும்
லக்ஷ்மணனும்
ஸுக்ரீவனும்
கணக்கில்லாத
வானரஸேனைகளுக்கு
நடுவில்
ஒப்பற்ற
தேஜஸுடன்
விளங்குவதை
அதி
சீக்கிரத்தில்
பார்ப்பீர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
நான்
ஸுக்ரீவ
மஹாராஜாவின்
மந்திரி;
என்
பெயர்
ஹநுமான்.
இந்த
ஸமுத்திரத்தைத்
தாண்டி
லங்கையில்
பிரவேசித்துத்
தங்களைத்
தேடிவந்தேன்.
ராமனுடைய
கிருபையால்
எனக்குள்ள
பராக்கிரமத்தை
ஆதாரமாய்க்
கொண்டு
துஷ்டனான
ராவணனுடைய
தலையில்
அடிவைத்து
அவனை
அலக்ஷ்யம்
செய்து
தங்களைப்
பார்க்க
வந்தேன்.
தாங்கள்
ஸந்தேகிக்கிறபடி
நான்
ராவணனல்ல.
இந்தப்
பிசகான
அபிப்பிராயத்தை
விட்டு
விடுங்கள்;
என்
வார்த்தையில்
நம்பிக்கை
வையுங்கள்”
என்றார்.
40
▾
Meaning
Keep
நாஹமஸ்மி
ததா²
தே³வி
யதா²
மாமவக³ச்ச²ஸி
|
விஶங்கா
த்யஜ்யதாமேஷா
ஶ்ரத்³த⁴த்ஸ்வ
வத³தோ
மம
||
Previous
←
ஸீதை பதில் சொன்னது
Next
மாருதி ராமனுடைய வரலாற்றைச் சொன்னது (தொடர்ச்சி)
→