Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஹநுமான் கணையாழியைக் கொடுத்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஹநுமான்
கணையாழியைக்
கொடுத்தது
1
▾
Meaning
Keep
பூ⁴ய
ஏவ
மஹாதேஜா
ஹநூமாந்
மாருதாத்மஜ:
|
அப்ரவீத்
ப்ரஶ்ரிதம்
வாக்யம்
ஸீதாப்ரத்யய
காரணாத்
||
Prose passage
▾
Meaning
Keep
மஹாதேஜஸ்வியான
மாருதி
ஸீதைக்கு
நம்பிக்கையுண்டாகும்படி
மிகவும்
வணக்கமாய்,
“அம்மா!
அளவற்ற
பாக்கியசாலியே!
நான்
மஹாபுத்திமானான
ராமமூர்த்தியால்
தங்களிடத்தில்
அனுப்பப்பட்ட
தூதன்.
அவருடைய
திருநாமத்தால்
அலங்கரிக்கப்பட்ட
இந்தக்
கணையாழியைப்
பாருங்கள்.
தங்களுக்கு
நம்பிக்கையுண்டாகும்
பொருட்டு
இதை
ராமன்
என்னிடத்தில்
ஒப்புவித்துத்
தங்களுக்குக்
கொடுக்கச்
சொன்னார்.
கவலையை
விடுங்கள்.
தங்களுக்கு
ஸகல
மங்களங்களும்
உண்டாகட்டும்.
அதிசீக்கிரத்தில்
தங்களுடைய
துக்கங்களெல்லாம்
இருந்த
இடம்
தெரியாமல்
போகும்”
என்று
சொல்லி
அந்த
மோதிரத்தைக்
கொடுத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
ராமனுடைய
கையில்
விளங்கும்
அந்த
ஆபரணத்தை
வாங்கிப்
பார்த்துப்
பர்த்தாவை
மறுபடியும்
கண்டவளைப்
போல்
அளவற்ற
ஸந்தோஷம்
அடைந்தாள்.
அதைப்
பார்த்துப்
பார்த்து
ஆசை
தீராமல்
அதிலிருந்து
கண்களை
எடுக்க
முடியவில்லை.
முதலில்
ராவணன்
மாறுவேஷம்
பூண்டு
வந்தானே
என்று
பயந்தவள்,
பிறகு
அனேக
காரணங்களால்
அவன்
தனது
பர்த்தாவிடமிருந்து
வந்த
பிரிய
தூதனென்று
நம்பிக்கை
பிறந்து
ஆஞ்ஜநேயரைப்
பார்த்து
ஸந்தோஷித்தாள்.
பிறகு
ராமனுடைய
மோதிரத்தைக்
கண்டு
ராமனையே
கண்டதுபோல்
பரவசமானாள்.
Prose passage
▾
Meaning
Keep
(தன்னை
ரகுநாதன்
பாணிக்கிரஹணம்
செய்த
காலத்தில்
அவருடைய
கையிலணிந்த
ஆபரணமாகையால்,
அந்த
மஹோத்ஸவமும்
அதற்குப்
பிறகு
அவரும்
தானும்
அனுபவித்த
ஏகாந்த
ஸுகங்களும்
ஞாபகத்திற்கு
வந்தன.
ரதி
காலத்தில்
இருவரும்
வேடிக்கையாகக்
கோபித்துக்
கொண்டிருக்கையில்
ஒருவர்க்கொருவர்
பேசாமலும்
பார்க்காமலும்
இருக்கும்
பொழுது,
பிரிந்திருக்க
ஸஹிக்காமையாலும்
வேறு
மத்தியஸ்தர்கள்
இல்லாமையாலும்
ராமன்
தன்
மோதிரத்தை
மெள்ளக்
கழற்றி
அகஸ்மாத்தாய்
நழுவினதுபோல்
கீழே
போடுவார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஸீதை
‘மோதிரம்
கழன்று
கீழே
விழுந்து
விட்டதே’
என்று
சொல்லி
அதை
எடுத்துக்கொடுப்பாள்.
உடனே
கலஹம்
தீர்ந்து
மறுபடியும்
ஆனந்தமாய்ப்
பேசிக்கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட
மோதிரமல்லவா
என்று
நினைத்தாள்.
வெகு
நாளாகப்
பிரிந்திருந்த
தங்களைச்
சேர்த்து
வைத்த
மோதிரமல்லவா
என்று
நினைத்தாள்.
அந்த
மோதிரமணிந்த
விரலையும்
கிரமமாய்க்
கையையும்
புஜங்களையும்
திருமேனியையும்
தன்னெதிரில்
நிற்பதுபோல்
பார்த்து
ஆலிங்கனம்
செய்து
கொண்டாள்).
சிவந்து
நீண்டு
ஸந்தோஷத்தால்
மலர்ந்த
கண்களையுடைய
ஸீதையின்
முகம்
ராகுவால்
விடப்பட்ட
சந்திரன்போல்
பிரகாசித்தது.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
“ஐயோ!
இவனை
நமக்கு
பிராணதானம்
செய்தவனென்று
கொண்டாடாமல்
ராவணனென்று
ஸந்தேஹித்தோமே”
என்று
வெட்கப்பட்டு,
ராமனுடைய
விருத்தாந்தத்தைக்
கேட்டதால்
பரமானந்தமடைந்து,
அந்த
ஸமாசாரத்தைக்
கொண்டு
வந்த
ஆஞ்ஜநேயரை
வெகுபிரியத்துடன்
குளிரக்
கடாக்ஷித்து,
“வானர
சிரேஷ்ட!
நீ
தனியாக
இந்த
ராக்ஷஸராஜதானியில்
அலக்ஷ்யமாய்
வந்தாயே!
உன்
பலத்தையும்
சக்தியையும்
புத்தியையும்
என்னவென்று
சொல்லுவேன்!
Prose passage
▾
Meaning
Keep
பயங்கரமான
ஜலஜந்துக்கள்
வஸிக்கும்
நூறுயோஜனை
விஸ்தீர்ணமுள்ள
இந்த
ஸமுத்திரத்தை
ஒப்பற்ற
பராக்கிரமசாலியான
நீ
பசுவின்
குளப்படியைப்போல்
அலக்ஷ்யமாய்த்
தாண்டினாயே!
ஸர்வலோக
கண்டகனான
ராவணனைக்கண்டு
உனக்குக்
கொஞ்சமாவது
பயமும்
கலக்கமுமில்லை,
ஆகையால்,
ஸாதாரணமான
வானரனென்று
உன்னை
நினைக்கவும்
முடியுமோ?
மஹாபுத்திமானான
ராமனே
உன்னை
என்னிடத்தில்
நம்பிக்கையாக
அனுப்பியிருக்கிறார்;
ஆகையால்
என்னுடன்
நீ
தடையில்லாமல்
பேசத்தகுந்தவன்.
பிறரால்
நெருங்க
முடியாத
சக்தியையுடைய
ராகவன்
ஒருவனுடைய
பராக்கிரமத்தைப்
பூர்ணமாக
அறிந்து
அவனை
நன்றாகப்
பரீக்ஷிக்காமல்
என்னிடத்தில்
அனுப்பமாட்டாரல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
தர்மாத்மாவும்
வீணாகாத
பிரதிக்ஞையையுடையவருமான
ராகவன்
என்
பாக்கிய
விசேஷத்தாலும்
தெய்வானுக்கிரஹத்தாலும்
க்ஷேமமாக
இருக்கிறாரா?
மஹா
தேஜஸ்வியான
லக்ஷ்மணர்
க்ஷேமமாயிருக்கிறாரா?
ராகவன்
க்ஷேமமாயிருந்தால்
கடல்
சூழ்ந்த
பூமியை
பிரளயகாலாக்னியைபோல்
கோபத்தால்
ஏன்
கொளுத்தாமல்
இருக்கின்றார்?
Prose passage
▾
Meaning
Keep
தேவாஸுரர்களை
ஒருக்ஷணத்தில்நாசம்
செய்ய
ராமலக்ஷ்மணர்களுக்குச்
சக்தியில்லையா?
ஆகையால்,
என்
துக்கம்
முடிவதற்குக்
காலம்
வரவில்லை
என்று
எண்ணுகிறேன்.
அந்தப்
புருஷோத்தமன்
வருத்தத்தால்
இளைக்காதிருக்கிறாரா?
பரிதவிக்காமலிருக்கிறாரா?
தைரியத்தை
இழக்காமலிருக்கிறாரா?
துக்கத்தால்
மெய்மறந்து
காரியங்களில்
மயங்காமலிருக்கிறாரா?
ஸகல
புருஷ
பிரயத்தனங்களையும்
செய்து
கொண்டிருக்கிறாரா?
ஸ்நேஹிதர்களிடத்தில்
கிருபையுடன்
ஸாமதான
உபாயங்களையும்
பகைவர்களை
ஜயிப்பதற்காக
அவர்களிடத்தில்
பேதம்
தண்டமென்ற
உபாயங்களையும்
கிரமமாய்
அனுஸரித்து
வருகிறாரா?
Prose passage
▾
Meaning
Keep
சுத்தமான
மனத்தையுடைய
ஸ்நேஹிதர்களை
ஸம்பாதிக்கிறாரா?
அப்படிப்
பட்டவர்கள்
அவரைத்தேடி
அடைகிறார்களா?
அவர்களால்
கௌரவிக்கப்
படுகிறாரா?
என்னை
அடையும்
பொருட்டு
தேவதைகளுடைய
அனுக்கிரஹத்தை
பிரார்த்தித்து
வருகிறாரா?
அவருடைய
வீரியசௌரிய
பராக்கிரமங்களுக்குத்
தகுந்தபடி
ஸகல
புருஷப்
பிரயத்தனங்களையும்
குறைவில்லாமல்
செய்து
வருகிறாரா?
குலதெய்வமான
நாராயணனுடைய
கிருபைக்கு
தன்னைப்பாத்திரனாகச்
செய்துகொண்டு
வருகிறாரா?
Prose passage
▾
Meaning
Keep
அவரைவிட்டுப்
பிரிந்து
வெகுகாலமாய்க்
கண்ணுக்
கெட்டாத
தேசத்தில்
நான்
இருக்கிறேன்
என்று
என்னை
மறக்கவில்லையல்லவா?
என்னிடத்திலுள்ள
பூர்வ
ஸ்நேஹத்திற்குக்
கொஞ்சமேனும்
குறைவில்லையல்லவா?
இந்த
ஸங்கடத்திலிருந்து
என்னைச்
சீக்கிரத்தில்
விடுவிப்பாரா?
உத்தம
ஸுகங்களை
அனுபவிக்கத்
தகுந்தவர்.
கஷ்டத்தை
அனுபவிக்கவே
தகாதவர்.
அதிக
துக்கத்தால்
தேகம்
நொந்து
வருந்தாமல்
க்ஷேமமாக
இருக்கிறாரா?
Prose passage
▾
Meaning
Keep
கௌஸல்யை
ஸுமித்திரை
பரதன்
முதலியவர்கள்
க்ஷேமமாக
இருப்பதாக
ஸமாசாரம்
கிடைத்துக்
கொண்டிருக்கிறதா?
என்னைப்
பிரிந்த
சோகத்தால்
தாபத்தையடையாமலிருக்கிறாரா?
வேறு
விஷயங்களில்
மனத்தைச்
செலுத்தாமல்
என்னை
இந்தக்
கஷ்டத்திலிருந்து
கரையேற்றுவாரா?
ராமனிடத்தில்
பரமபக்தியுள்ள
பரதன்
தன்
மந்திரிகளையும்
கணக்கில்லாத
வீரர்களடங்கிய
சதுரங்க
பலத்தையும்
என்நிமித்தமாக
அனுப்புவாரா?
Prose passage
▾
Meaning
Keep
பற்களையும்
நகங்களையும்
ஆயுதமாக
உடைய
வானரவீரர்களால்
சூழப்பட்டு
ஸுக்ரீவ
மஹாராஜா
இங்கே
அதிசீக்கிரத்தில்
வருவாரா?
சூரனும்
அஸ்திர
ரஹஸ்யங்களைப்
பூர்ணமாக
அறிந்தவருமான
லக்ஷ்மணன்
பாணவர்ஷத்தால்
ராக்ஷஸர்களை
நாசம்
செய்வாரா?
நெருப்பு
ஜ்வாலைகளைக்
கக்கும்
பாணங்களால்
ராவணனும்
அவனுடைய
பந்துக்களும்
யுத்தத்தில்
அதிசீக்கிரத்தில்
அடிபட்டுக்
கிடப்பதைக்
காண்பேனா?
தங்க
நிறமுள்ளதும்
தாமரைப்
புஷ்பத்தின்
வாஸனையுடையதுமான
ராகவனுடைய
முகம்வெயிலால்
ஜலம்
வற்றின
ஓடையில்
வாடும்
தாமரைப்
புஷ்பத்தைப்போல்,
என்னைப்
பிரிந்த
துக்கத்தால்
உலர்ந்து
வாடாமலிருக்கிறதா?
Prose passage
▾
Meaning
Keep
தர்மானுஷ்டானத்தைக்
காரணமாய்
வைத்துக்
கொண்டு,
தன்
ராஜ்யத்தை
விட்டு,
ஸகல
ஸுகங்களையும்
அனுபவித்துக்
கொண்டிருந்த
என்னையும்
வனத்தில்
கால்நடையாய்
அழைத்துக்
கொண்டு
வந்த
ராமனுக்கு
வருத்தமும்
பயமும்
சோகமும்
கொஞ்சம்
கூட
இல்லையா?
அப்படிப்பட்டவர்
என்னைப்
பிரிந்து
தைரியத்தை
இழக்காதிருக்கிறாரா?
தன்னிடத்தில்
பரமப்
பிரீதிவைத்த
கௌஸல்யையும்,
தன்னைப்
பிரிந்து
உயிரோடிருக்க
ஸஹிக்காமல்
மரணமடைந்த
தசரதரும்,
இதர
பந்துக்களும்
ராமனுடைய
மனத்தில்
எனக்கு
ஸமமாவார்களோ?
ரகுநாதன்
என்னை
அழைத்துப்
போவாரென்ற
வார்த்தையைக்
கேட்கும்
வரையில்
மாத்திரம்
பிராணனை
வைத்துக்
கொண்டிருப்பேன்.”
Prose passage
▾
Meaning
Keep
இந்தப்
பிரகாரம்
அநேக
அர்த்தங்களடங்கிய
மதுரமான
வார்த்தைகளைச்
சொல்லி,
இந்த
வானரேந்திரன்
என்னுடைய
கேள்விகளுக்கு
என்ன
பதில்
சொல்வான்,
பார்ப்போம்”
என்று
பேசாமலிருந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
மஹா
பராக்கிரமசாலியான
மாருதி,
தலைமேல்
கைகூப்பி
வணக்கமாய்ப்
பின்வருமாறு
பதில்
சொன்னார்.
“பூர்வம்
அனுஹ்லாதனென்னும்
அஸுரன்
இந்திரனுடைய
பாரியையான
சசீதேவியை
ஒளித்தான்.
அவ்விடத்தை
வெகுகாலம்
அறியாமல்
இந்திரன்
பிறகு
தேடிக்
கண்டுபிடித்ததுபோல்,
ராமனுக்குத்
தாங்கள்
இருக்குமிடம்
இதுவரையில்
தெரியவில்லை.
செந்தாமரையைப்
பழிக்கும்
நேத்திரங்களையுடையவரே!
தங்களை
இதுவரையிலும்
அழைத்துப்
போகாததற்கு
இதுவே
காரணம்.
Prose passage
▾
Meaning
Keep
நான்
தங்களுடைய
விருத்தாந்தத்தைத்
தெரிவித்த
அடுத்த
க்ஷணத்திலேயே
வானரஸைன்யங்களைக்
கூட்டிக்
கொண்டு
இங்கே
வருவார்.
அவை
நூறுயோஜனை
விஸ்தீர்ணமுள்ள
இந்த
ஸமுத்திரத்தை
எப்படி
தாண்ட
முடியுமென்று
ஸந்தேகிக்க
வேண்டாம்.
ராகவன்
இந்தப்
பயங்கரமான
கடலைத்
தன்
பாணங்களால்
கட்டித்
தன்
ஸைன்யங்களுடன்
இங்கே
வந்து
ராக்ஷஸ
குலத்தை
வேரறுப்பார்.
மிருத்யுதேவதையாவது
தேவர்களாவது
அஸுரர்களாவது
அதைத்
தடுக்கப்பார்த்தால்
அந்த
க்ஷணமே
நாசமடைவார்களென்பதில்
ஸந்தேக
முண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
ஸிம்ஹத்தால்
பீடிக்கப்பட்ட
யானையைப்போல்
ராகவன்
தங்களைக்
காணாமல்
துக்கத்தால்
தவிக்கிறார்;
இது
ஸத்தியம்.
நான்
வஸிக்கும்
இடங்களான
மலயம்,
விந்தியம்,
மேரு
மந்த்ரம்,
தர்த்துரம்
முதலிய
பர்வதங்களின்
மேலும்
நான்
புஜிக்கும்
பழம்
கிழங்கு
ஜலம்
முதலிய
பதார்த்தங்களின்
மேலும்
ஆணைவைத்துச்
சொல்லுகிறேன்.
அழகான
கண்களாலும்
கோவைக்கனிபோன்ற
உதடுகளாலும்
ஜ்வலிக்கும்
குண்டலங்களாலும்
பூர்ணசந்திரனைப்போல்
விளங்கும்
ராமமூர்த்தியின்
திருமுக
மண்டலத்தைக்
காண்பீர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ராமன்
மதுமாம்ஸங்களை
விட்டார்.
வானப்பிரஸ்தருக்குத்
தகுந்த
பழம்
கிழங்கு
முதலியவைகளை
ஸாயங்காலத்தில்
புஜிக்கிறார்.
தங்களிடத்திலேயே
மனத்தை
செலுத்தி
தேகத்தையும்
மறந்து,
காட்டு
ஈக்கள்,
கொசுக்கள்,
புழுக்கள்,
ஊரும்
ஜந்துக்கள்
முதலியவைகளால்
நேரும்
உபத்திரவத்தைக்
கவனிக்கிறதுமில்லை;
அவைகளை
ஓட்டுகிறதுமில்லை.
தங்களிடத்தில்
வைத்த
ஆசையால்
எப்பொழுதும்
தங்களையே
நினைத்துக்கொண்டு
சோகம்
மேலிட்டு
வேறு
ஞாபகமில்லாமல்
இருக்கிறார்.
Prose passage
▾
Meaning
Keep
அவருக்குத்
தூக்கமே
கிடையாது.
எப்பொழுதாவது
தன்னை
அறியாமல்
தேகம்
அலுத்துத்
தூங்கினாலும்,
‘ஸீதே!’
என்று
மதுரமான
வார்த்தையைச்
சொல்லிக்கொண்டே
விழித்துக்
கொள்ளுகிறார்.
பழங்கள்
புஷ்பங்கள்
முதலிய
மனோஹரமான
பதார்த்தங்களைக்
கண்டாலும்,
‘ஹா!
ஸீதே!’
என்று
அடிக்கடி
பெருமூச்சுவிட்டுத்
தாங்கள்
பேசுவதுபோல்
தங்களுக்குப்
பதில்
சொல்லுகிறார்.
Prose passage
▾
Meaning
Keep
தாங்கள்
எப்பொழுதும்
எதிரில்
இருப்பதாக
அவருடைய
பாவனை.
தங்களைப்
பிரிந்ததால்
எப்பொழுதும்
பரிதவித்துக்கொண்டிருக்கிறார்.
தங்களை
அடைவதற்கு
வேண்டிய
ஸகலப்
பிரயத்தனங்களையும்
குறைவில்லாமல்
செய்துகொண்டிருக்கிறார்.
அவர்
கலங்காத
தைரியமுடையவரென்றும்
செய்த
பிரதிக்ஞையைத்
தவறாதவரென்றும்
க்ஷத்திரிய
வீரரென்றும்
தங்களுக்குத்
தெரியாதா?”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
ராமனுடைய
விருத்தாந்தத்தைக்
கேட்டதால்
ஸீதைக்கு
ஒருவாறு
கவலை
நீங்கிற்று.
ஆனால்,
தன்னைப்
பிரிந்து
ராமன்
படும்
கஷ்டத்தைக்
கேட்டு,
அதைப்போல்
தானும்
சோகமடைந்து,
சரத்ருதுவின்
ஆரம்பத்தில்
கொஞ்சம்
மேகத்தால்
மறைந்து
மாறி
மாறி
பிரகாசிக்கும்
சந்திரமண்டலத்தைப்போல்
தோன்றினாள்
47
▾
Meaning
Keep
ஸா
ராமஸங்கீர்தந
வீதஶோகா
ராமஸ்ய
ஶோகேந
ஸமாநஶோகா
|
ஶரந்முகே²
ஸாம்பு³த³
ஶேஷசந்த்³ரா
நிஶேவ
வைதே³ஹஸுதா
ப³பூ⁴வ
||
Previous
←
மாருதி ராமனுடைய வரலாற்றைச் சொன்னது (தொடர்ச்சி)
Next
மாருதி ஸீதையைத் தன்னுடன் வரும்படி பிரார்த்தித்தது
→