Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி ஸீதையைத் தன்னுடன் வரும்படி பிரார்த்தித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
ஸீதையைத்
தன்னுடன்
வரும்படி
பிரார்த்தித்தது
1
▾
Meaning
Keep
ஸீதா
தத்³
வசநம்
ஶ்ருத்வா
பூர்ணசந்த்³ர
நிபா⁴நநா
|
ஹநூமந்த
முவாசேத³ம்
த⁴ர்மார்த²
ஸஹிதம்
வச:
||
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
ஸீதை
நீதி
நிறைந்த
வாக்கியங்களால்
மறுமொழி
சொன்னாள்.
“ராமன்
வேறு
ஞாபகமில்லாமல்
இருக்கிறார்;
ஆனால்,
சோகஸமுத்திரத்தில்
முழுகி
இருக்கிறாரென்று
நீ
சொன்னது
விஷத்தையும்
அமிருதத்தையும்
கலந்து
கொடுத்தாற்
போலிருக்கிறது.
அவரைவிட்டுப்
பிரிந்தது
நானாகச்
செய்துகொண்டதல்ல.
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
ஐசுவரியங்களும்
பொருந்தின
ரகுநாதனையும்
மிகவும்
தாழ்ந்த
ஸ்திதியில்
கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்
ஸாமான்ய
புருஷனையும்,
தெய்வம்
கயிற்றால்
கட்டி
இழுப்பதுபோல்
நினைத்தபடி
யெல்லாம்
ஆட்டுகிறது.
பிராணிகள்
விதியை
வெல்வது
அஸாத்தியம்.
இதற்கு
என்னையும்
ராமனையும்
லக்ஷ்மணனையும்
காட்டிலும்
வேறு
உபமானங்கள்
வேண்டுமோ?
(மஹாவிஷ்ணுவான
ராமனும்,
காலரூபியும்
ஞான
ரூபியுமான
லக்ஷ்மணனும்,
பராசக்தியான
நானும்
கர்ம
கதிக்குத்
தப்ப
முடிந்ததோ?).
Prose passage
▾
Meaning
Keep
பெருங்கடலில்
காற்றால்
அடிக்கப்பட்ட
கப்பல்
தத்தளிப்பதுபோல்
ராமன்
சோக
ஸமுத்திரத்திலிருந்து
எப்பொழுது
கரையேறுவார்?
ராவணனை
ராக்ஷஸர்களுடன்
நாசம்
செய்து
லங்கையை
அழித்து
என்
நாயகன்
எப்பொழுது
என்னைக்
காண்பாரோ?
ராவணன்
கெடுவிட்ட
ஒருவருஷகாலம்
முடிவதற்குமுன்
என்னை
மீட்கும்படி
நீ
அவருக்குச்
சொல்லவேண்டியது.
அதுவரையிலும்தான்
நான்
உயிரோடிருப்பேன்.
பத்தாவது
மாதம்
நடக்கிறது;
இன்னும்
இரண்டு
மாதங்களிருக்கின்றன.
Prose passage
▾
Meaning
Keep
தன்
ஸஹோதரனான
விபீஷணன்
என்னைத்
திரும்பிக்
கொடுக்கும்படி
தன்னால்
கூடியமட்டும்
பிரயத்தனம்
செய்தும்
ராவணன்
அதைக்
கொஞ்சமாவது
லக்ஷ்யம்
செய்யவில்லை.
அந்த
விஷயமே
அவனுக்கு
இஷ்டமில்லை.
காலபாசத்தால்
கட்டுப்பட்ட
ராவணனை
மிருத்யுதேவதை
யுத்த
களத்தில்
தேடிக்கொண்டிருக்கிறது.
விபீஷணனுடைய
பாரியை
ஸுரஸை
என்பவள்
இந்த
ஸமாசாரத்தைத்
தனது
மூத்த
பெண்ணான
அனலை
மூலமாய்
எனக்குச்
சொல்லி
யனுப்பினாள்.
Prose passage
▾
Meaning
Keep
என்
அந்தராத்மா
கல்மஷமில்லாமல்
சுத்தமாக
இருக்கிறது.
லோகோத்தரமான
காரியங்களைச்
செய்யவேண்டுமென்ற
ஸ்திரமான
பிரயத்தனமும்
அவைகளைச்
செய்வதற்கு
வேண்டிய
சக்தியும்
குரூரமற்றிருப்பதும்
நன்றி
மறவாமையும்
சௌரியமும்
மஹிமையும்
இன்னும்
அனந்தமான
குணங்களும்
ரகுநாதனிடத்தில்
விளங்குகின்றன.
ஆகையால்,
என்
பர்த்தா
என்னைச்
சீக்கிரமாயடைவாரென்பதில்
கொஞ்சம்கூட
ஸந்தேகமில்லை.
லக்ஷ்மணனுடைய
ஸஹாயமும்
இல்லாமல்
பதினாலாயிரம்
ராக்ஷஸவீரர்களை
ஒரு
முகூர்த்தத்தில்
லீலையாகக்கொன்ற
ரகுவீரனைக்
கண்டு
பயப்படாத
சத்துருவும்
உண்டோ?
எப்படிப்பட்ட
ஸங்கடங்கள்
நேர்ந்தாலும்
அவருடைய
தைரியம்
கொஞ்சமாவது
கலங்குமோ?
இந்திரனுடைய
மஹிமையை
இந்திராணி
அறிவதுபோல்
அவருடைய
மஹிமை
எனக்கல்லவா
தெரியும்?
Prose passage
▾
Meaning
Keep
ராமனென்ற
ஸூரியன்
பாணக்கூட்டங்களாகிற
கிரணங்களால்
ராக்ஷஸர்களென்ற
ஜலத்தை
அதி
சீக்கிரத்தில்
வற்றச்
செய்வார்,”
என்று
கண்ணீர்பெருக
மனத்தில்
துக்கம்
ததும்ப
ஸீதை
ராமமூர்த்தியைப்பற்றிப்
பரிதவிப்பதைக்
கேட்டு,
ஆஞ்ஜநேயர்,
“தாயே!
ஏன்
கவலைப்படுகிறீர்கள்?
தங்களுடைய
விருத்தாந்தத்தை
நான்
சொன்னவுடனே
கணக்கில்லாத
வானர
ஸைன்யங்களுடன்
ரகுநாதன்
இங்கே
வருவார்.
இவ்வளவென்ன?
தங்களுடைய
துக்கத்தை
இந்த
க்ஷணமே
போக்கடிக்கிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
என்
முதுகில்
ஏறுங்கள்.
ஒரு
நொடியில்
இந்த
ஸமுத்திரத்தைத்
தாண்டி
ராகவனிடத்தில்
தங்களைக்
கொண்டுபோய்ச்
சேர்க்கிறேன்.
ஸந்தேகப்
படவேண்டாம்.
இந்த
லங்கையையும்
இதிலுள்ள
ஸகல
பதார்த்தங்களையும்
அலக்ஷ்யமாய்
எவ்விடத்திற்கும்
கொண்டுபோக
என்னால்
முடியாதா?
ஹோமம்
செய்கிற
பதார்த்தங்களை
அக்னி
பகவான்
இந்திரனிடத்தில்
ஸமர்ப்பிப்பதுபோல்
பிரஸ்ரவணகிரியில்
விளங்கும்
ராமமூர்த்தியிடத்தில்
தங்களைக்
கொண்டுபோய்ச்
சேர்ப்பேன்.
Prose passage
▾
Meaning
Keep
மஹாவிஷ்ணு
அஸுரர்களை
நாசம்
செய்வதில்
உத்ஸாஹத்துடன்
இருப்பதுபோல்
எப்பொழுதும்
ஊக்கமுள்ள
ரகுநாதனையும்
லக்ஷ்மணனையும்
இப்பொழுதே
பார்ப்பீர்கள்.
தேவேந்திரன்
ஸ்வர்க்கத்தில்
மஹிமையோடு
வீற்றிருப்பதைப்போல்
தங்களைப்
பார்க்கும்
பொருட்டு
ஸகல
பிரயத்தனங்களையும்
செய்துகொண்டு
வீற்றிருக்கும்
பிரஸ்ரவணகிரியில்
மஹாபலவானான
ராகவனைப்
பார்க்கப்போகிறீர்கள்.
ஆகையால்,
என்
முதுகில்
ஏறுங்கள்.
என்னால்
என்ன
முடியும்
என்று
அலக்ஷ்யம்
செய்ய
வேண்டாம்.
Prose passage
▾
Meaning
Keep
ரோஹிணீதேவி
சந்திரனுடன்
கூடி
ஸுகிப்பதுபோல்
ரகுநாதனுடன்
சேர்ந்திருக்க
விரும்புங்கள்.
என்
முதுகில்
ஏறிக்கொண்டு
ஸூரிய
சந்திரர்களுடன்
வார்த்தை
சொல்வதுபோல்
ஆகாச
வீதியில்
உன்னதமாய்ச்
செல்லுங்கள்.
இந்த
லங்கையிலுள்ளவர்கள்
ஒன்று
சேர்ந்தாலும்
நான்
தங்களை
எடுத்துப்
போகும்பொழுது
என்னைத்
தடுக்கவாவது
பின்
தொடரவாவது
முடியுமோ?
நான்
இங்கே
எப்படி
அலக்ஷ்யமாய்
வந்தேனோ
அப்படியே
தங்களை
எடுத்துக்கொண்டு
ஆகாச
மார்க்கமாய்ச்
செல்வேன்;
இதில்
ஸந்தேகமில்லை”
என்று
பிரார்த்தித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
ஆச்சரியமான
வார்த்தையைக்
கேட்டு
ஸீதை
ஸந்தோஷத்தால்
மயிர்
கூச்சமடைந்து
மாருதியைப்
பார்த்து,
“நூறு
யோஜனை
விஸ்தீர்ணமுள்ள
ஸமுத்திரத்தைத்
தாண்டி
கிஷ்கிந்தைக்கு
என்னை
எடுத்துக்கொண்டு
போகிறேனென்று
நீ
சொல்வது
விநோதமாக
இருக்கின்றது.
உனக்கு
ஸ்வபாவமான
வானர
புத்தி
இதுதான்.
அல்பமான
சரீரத்தையுடைய
நீ
என்னை
ராமனிடத்தில்
கொண்டுபோய்
விடுகிறேன்
என்று
எந்தத்
தைரியத்தால்
சொன்னாய்”
என்று
கேட்டாள்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
ஹநுமார்,
“என்ன
ஆச்சரியம்!
நான்
இதுவரையில்
ஒருவரிடத்திலும்
இப்படி
அவமானப்பட்டதில்லை”
என்று
எண்ணினார்.
“நான்
அளவற்ற
பலமுடையவனென்றும்,
பிறரால்
செய்யக்கூடாத
காரியங்களைச்
செய்தவனென்றும்
இவளுக்குத்
தெரியாததால்
இப்படிச்
சொல்லுகிறாள்.
ஆகையால்
நான்
இஷ்டமான
ரூபங்களை
எடுக்கக்கூடியவன்
என்பதைக்
காட்டவேண்டும்”
என்று
நிச்சயித்து,
தன்
விசுவரூபத்தை
ஸீதைக்குக்
காட்டினார்.
Prose passage
▾
Meaning
Keep
அவளுக்கு
நம்பிக்கை
உண்டாகும்
பொருட்டு
அந்த
மரத்திலிருந்து
குதித்து
வரவர
வளர
ஆரம்பித்தார்.
மேரு
மந்தரம்
முதலிய
மஹாபர்வதங்களைப்போல்
காந்தியுடன்
பிரகாசித்துக்கொண்டு
ஸீதைக்கு
நேராக
நின்றார்.
மலைபோன்ற
தேகத்தையும்
சிவந்த
முகத்தையும்
எல்லையற்ற
பலத்தையும்
வஜ்ராயுதம்
போன்ற
பற்களையும்
நகங்களையும்
உடையவராய்ப்
பயங்கரமான
ரூபத்துடன்
ஸீதையைப்
பார்த்து,
“தாயே!
இந்த
லங்கையையும்
அதிலுள்ள
பர்வதங்கள்
வனங்கள்
பிராகாரங்கள்
கட்டிடங்கள்
பிராணிகள்
அவைகளுக்கு
அதிபதியான
ராவணன்
இவை
எல்லாவற்றையும்
துரும்பைப்
போல்
அலக்ஷ்யமாக
எடுத்துச்
செல்ல
எனக்குச்
சக்தியுண்டு.
ஆகையால்
என்னை
உபேக்ஷிக்காமல்
தங்களுடைய
மனத்தை
ஸ்திரப்படுத்திக்
கொண்டு
என்
பிரார்த்தனையை
அங்கீகரித்து
ராமலக்ஷ்மணர்களுடைய
துக்கத்தைப்
போக்குங்கள்”
என்று
வேண்டினார்.
Prose passage
▾
Meaning
Keep
பிரளயகால
ருத்திரனைப்போல்
பயங்கரமாய்
ஜ்வலிக்கும்
வாயுபுத்திரனை
ஸீதை
குளிரக்
கடாக்ஷித்து,
“வானர
சிரேஷ்ட!
உனது
பலத்தையும்
பராக்கிரமத்தையும்
நான்
நன்றாக
அறிவேன்.
வேகத்தில்
வாயுவிற்கும்
அத்புதமான
தேஜஸில்
அக்னிக்கும்
ஸமமென்பதையும்
நன்றாக
அறிவேன்.
Prose passage
▾
Meaning
Keep
உன்னைத்
தவிர
வேறு
ஸாமான்ய
புருஷன்
தனியாக
இந்த
மஹா
ஸமுத்திரத்தைத்
தாண்டி,
கோர
ராக்ஷஸர்களால்
நிறைந்த
இந்த
லங்கையில்
பயமில்லாமல்
பிரவேசித்து
மஹா
ஸாமர்த்தியமாய்
என்னுடன்
பேச
முடியுமா?
என்னை
எடுத்துக்
கொண்டு
ஆகாச
மார்க்கமாகப்
போகக்
கூடிய
சக்தியுடையவனென்று
எனக்கு
நன்றாய்த்
தெரியும்.
ரகுநாதனுடைய
காரியத்தில்
சீக்கிரம்
ஸித்தியடையும்
வழியை
யோசிக்க
வேண்டியது.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்,
நான்
உன்னுடன்
போவதுயுக்தமல்ல.
வாயுவிற்கு
ஸமமாகச்
செல்லும்
உன்
வேகத்தால்
எனக்கு
பிரக்ஞை
போய்விடும்.
ஸமுத்திரத்திற்கு
மேல்
ஆகாசத்தில்
அதிவேகமாய்
வர
வர
உயரக்
கிளம்பிப்
போகையில்
நான்
பயந்து
கடலில்
விழுந்து
விடுவேன்.
உடனே
அங்குள்ள
திமிங்கலம்
போன்ற
பயங்கரமான
ஜலஜந்துக்கள்
என்னைத்
தின்றுவிடும்.
Prose passage
▾
Meaning
Keep
நீ
சத்துருக்களை
நாசம்
செய்வதில்
ஒப்பில்லாதவனென்று
எனக்குத்
தெரியும்.
ஆனால்,
எடுத்துப்
போகையில்
உன்
பிராணனுக்கும்
நிச்சயமாய்
ஆபத்து
நேரும்.
எப்படி
என்றால்,
நான்
இங்கிருந்து
போய்விட்டது
தெரிந்தவுடன்
ராவணன்
பயங்கரமான
பராக்கிரமமுள்ள
ராக்ஷஸர்களை
உன்னைப்
பின்
தொடர்ந்து
கொல்லும்படி
கட்டளையிடுவான்.
சூலம்
உலக்கை
முதலிய
ஆயுதங்களுடன்
அவர்கள்
கணக்கில்லாமல்
தனியாக,
ஆயுதமற்றிருக்கும்
உன்னைச்
சூழ்ந்து
கொள்வார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அவர்களுடன்
யுத்தம்
செய்து
அவர்களை
நாசம்
செய்வாயா?
அல்லது,
உன்னைக்
காப்பாற்றிக்
கொள்வாயா?
அல்லது,
எனக்கு
யாதொரு
தீங்கும்
நேரிடாமல்
காப்பாற்றுவாயா?
இம்
மூன்றையும்
ஒரே
காலத்தில்
செய்ய
முடியாதல்லவா?
ஆகையால்
உன்
பிராணனுக்கு
ஆபத்து
நேருமென்பதில்
ஸந்தேக
மென்ன?
Prose passage
▾
Meaning
Keep
மேலும்,
அந்தக்
குரூரராக்ஷஸர்களோடு
நீ
யுத்தம்
செய்கையில்
நான்
அதைக்
கண்டு
பயந்து
உன்
முதுகிலிருந்து
விழுந்து
விடுவேன்.
பிறகு
பல
பராக்கிரமத்தால்
பயங்கரமான
அந்த
ராக்ஷஸர்கள்
உன்னை
எப்படியாவது
யுத்தத்தில்
ஜயிப்பார்கள்.
அல்லது
நீ
யுத்தத்தில்
கவனத்தைச்
செலுத்திப்
பராமுகமாயிருக்கையில்
உன்
முதுகிலிருந்து
நழுவி
விழுவேன்.
உடனே
அந்தப்
பாபிகள்
என்னையும்
பிடித்துக்கொண்டு
போவார்கள்.
உன்
கையிலிருந்து
என்னை
அபகரித்துக்
கொல்லவும்
கொல்வார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
‘நான்
ஸாமான்யனா?
என்னை
ஜயித்துத்
தங்களைக்
கொண்டுபோக
அவர்களுக்குத்திறமையுண்டா’
என்றுகேட்டால்,
யுத்தத்தில்
புகுந்தால்
ஜயமும்
அபஜயமும்
நிச்சயமில்லையே.
அவர்கள்
என்னை
மிரட்டி
உபத்திரவிக்கும்பொழுது
அதை
ஸகிக்காமல்
நான்
பிராணனை
விடுவேன்.
அப்பொழுது
நீ
இவ்வளவு
பிரயத்தனம்
செய்ததும்
சிரமப்பட்டதும்
வீணாகுமே.
Prose passage
▾
Meaning
Keep
மேலும்,
ஸகல
ராக்ஷஸர்களையும்
நாசம்செய்ய
உனக்குச்
சக்தியிருந்தாலும்
அப்படிச்
செய்வது
ராகவனுடைய
கீர்த்திக்குக்
குறைவல்லவா?
ராவணனை
எதிர்க்கத்
தைரியமில்லாமல்
திருட்டுத்
தனமாய்
ஒரு
குரங்கை
விட்டு
ராமன்
என்னை
எடுத்து
வரச்
சொன்னாரென்று
லோகத்தார்
சொல்வார்களே.
Prose passage
▾
Meaning
Keep
மேலும்,
ராக்ஷஸர்கள்
என்னைப்
பிடித்து
வானரர்களுக்கும்
ராமலக்ஷ்மணர்களுக்கும்
தெரியாத
ஓரிடத்தில்
மறைத்து
வைப்பார்கள்.
அப்பொழுது
எனக்காக
நீ
படும்
பாடெல்லாம்
வீணாகுமே.
ரகுநாதனிடத்தில்
நீ
போய்
என்
ஸமாசாரத்தைச்
சொல்லி,
அவரை
இங்கே
அழைத்துவருவதில்
அதிக
நன்மையுண்டு.
Prose passage
▾
Meaning
Keep
அப்படிச்
செய்யாமல்
என்னை
இங்கிருந்து
எடுத்துப்
போக
யத்தனித்துத்
தவறி
நான்
ராக்ஷஸர்களுடைய
கையில்
அகப்பட்டால்
மறுபடியும்
உங்களுடைய
கண்ணில்
படப்போகிறதில்லை.
என்னைக்
காணாமல்
ராகவன்
உயிரை
விடுவார்.
உடனே
அவருடைய
தம்பிகளும்
தாய்களும்
ஸுக்ரீவனும்
வானர
ஸைன்யங்களும்
பிராணனை
வைத்துக்
கொள்வார்களோ?
Prose passage
▾
Meaning
Keep
மேலும்
பர்த்தாவிடத்தில்
அளவற்ற
பிரியத்தையும்
பக்தியையும்
வைத்திருக்கும்
நான்
வேறு
புருஷனைத்
தொடுவது
நியாயமல்ல.
ராவணன்
உன்னைத்
தொட்டு
எடுத்து
வரவில்லையா
என்றால்,
நானோ
தனியாக
இருந்தேன்;
பலமற்ற
மனுஷ்யஸ்த்ரீ;
என்னை
ரக்ஷிப்பவர்கள்
ஸமீபத்திலில்லை;
அவனோ
ராக்ஷஸன்;
அளவற்ற
பலசாலி;
மஹாக்ரூரன்;
என்னைப்
பலத்தால்
தூக்கியபொழுது
எப்படித்
தடுக்க
முடியும்?
ஆனாலும்,
என்னால்
முடிந்த
வரையிலும்
தடுத்துப்
பார்த்தேன்?
முடியவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ராகவன்
இங்கே
வந்து
ராவணனையும்
அவனைச்
சேர்ந்தவர்களையும்
யுத்தத்தில்
கொன்று
எல்லோரும்
அறிய
என்னை
அழைத்துப்
போவது
அவருடைய
குலத்திற்கும்
வீரியத்திற்கும்
பராக்கிரமத்திற்கும்
கீர்த்திக்கும்
என்னிடத்தில்
வைத்த
பிரீதிக்கும்
அழகாகும்.
யுத்தத்தில்
தேவ
கந்தர்வ
பன்னக
ராக்ஷஸர்கள்
முதலியவர்களும்
அவருக்கு
எதிரில்
நிற்கமாட்டார்கள்.
அவருடைய
வீரியத்தையும்
விராதன்
கரன்
தூஷணன்
ஜனஸ்தானத்திலுள்ள
ராக்ஷஸர்கள்
முதலியவர்களைக்
கொன்ற
பொழுது
பார்த்திருக்கிறேன்.
என்னை
விவாஹம்
செய்வதற்கு
முன்
மாரீசன்
ஸுபாஹு
தாடகை
முதலியவர்களைப்
படுத்தின
பாட்டையும்
பிறர்
சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
கபந்தனையும்
வாலியையும்
வதம்செய்ததை
நீயே
சொல்லியிருக்கிறாய்.
Prose passage
▾
Meaning
Keep
கொழுந்து
விட்டெரியும்
நெருப்பு,
காற்றுடன்
சேர்ந்தது
போல்
மஹா
பலவானும்
தேவேந்திரனுக்கு
ஸமமான
பராக்கிரமசாலியும்
அத்புதமான
வில்லாளியுமான
ராமனும்
லக்ஷ்மணனும்
யுத்த
களத்தில்
சேர்ந்து
நின்றால்
எவன்தான்
அவர்களைக்
கண்ணெடுத்துப்
பார்க்க
முடியும்?
பிரளயகாலத்தில்
ஸகல
லோகங்களையும்
ஸம்ஹரிப்பதற்காக
ஸூரிய
பகவான்
ஆயிரத்தெட்டு
கண்களையும்
திறந்து
கொண்டு
நிற்பது
போல்
பாணங்களையே
கிரணங்களாயுடைய
ரகுவீரன்
யுத்த
களத்தில்
மதம்
கொண்ட
திக்கஜத்தைப்போல்
லக்ஷ்மணனுடன்
நின்று
கோதண்டத்தை
வளைத்துக்
கால
ஸர்ப்பங்களைப்போல்
பாணங்களை
வர்ஷித்து,
சத்ருஸைன்யங்களை
ஹதம்
செய்தால்
எவனாவது
அவர்களைப்
பார்த்துப்
பிழைக்க
முடியுமா?
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்,
வானர
சிரேஷ்ட!
ராமலக்ஷ்மணர்களையும்
ஸுக்ரீவனையும்
வானர
ஸைன்யங்களையும்
சீக்கிரமாய்
இங்கே
அழைத்துக்
கொண்டு
வா.
வெகுகாலமாய்
ராமனை
நினைத்து
நினைத்து
அவர்
வருவாரென்று
வழி
பார்த்து
ஸகல
கஷ்டங்களையும்
பொறுத்துப்
பொறுத்துத்
தேகம்
துரும்பாய்ப்போன
எனக்கு
ஸந்தோஷத்தையும்
பிராணனையும்
கீர்த்தியையும்
கொடுக்கும்
பெரும்
உபகாரத்தைச்
செய்வாய்”
என்றாள்.
68
▾
Meaning
Keep
ஸ
மே
ஹரிஶ்ரேஷ்ட²
ஸலக்ஷ்மணம்
பதிம்
ஸயூத²பம்
க்ஷிப்ர
மிஹோப
பாத³ய
|
சிராய
ராமம்
ப்ரதி
ஶோக
கர்ஶிதாம்
குருஷ்வ
மாம்
வாநரமுக்²ய
ஹர்ஷிதாம்
||
Previous
←
ஹநுமான் கணையாழியைக் கொடுத்தது
Next
காகாஸுர விருத்தாந்தம்
→