Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Poruḷvaṇakkam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
நித்தியமாய்நிர்மலமாய் நிட்களமாய்நிராமயமாய்
நிறைவாய்நீங்காச்
சுத்தமுமாய்த்தூரமுமாய்ச் சமீபமுமாய்த்துரிய
நிறை சுடராயெல்லாம்
வைத்திருந்ததாரகமா யானந்தமயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய்நின்றவொன்றைச் சுகாரம்பப்பெரு
வெளியைச் சிந்தைசெய்வாம்.
2
Keep
யாதுமனநினையுமந்த நினைவுக்குநினைவாகி
யாதின்பாலும்
பேதமறநின்றுயிருக் குயிராகியன்பருக்கே
பேரானந்தக்
கோதிலமுதூற்றரும்பிக் குணங்குறியொன்றறத்
தன்னைக் கொடுத்துக்காட்டுந்
தீதில்பராபரமான சித்தாந்தப்பேரொளியைச்
சிந்தைசெய்வாம்.
3
Keep
பெருவெளியாயைம்பூதம் பிறப்பிடமாய்ப்பேசாத
பெரியமோனம்
வருமிடமாய்மனமாதிக் கெட்டாதபேரின்ப
மயமாய்ஞானக்
குருவருளாற்காட்டிடவு மன்பரைக்கோத்தறவிழுங்
கிக் கொண்டப்பாலுந்
தெரிவரிதாய்க்கலந்தெந்தப் பொருளந்தப்பொரு
ளினையாஞ் சிந்தைசெய்வாம்.
4
Keep
இகபரமுமுயிர்க்குயிரை யானெனதற்றவருறவை
யெந்தநாளுஞ்
சுகபரிபூரணமான நிராலம்பகோசரத்தைத்
துரியவாழ்வை
அகமகிழவருந்தேனை முக்கனியைக்கற்கண்டை
யமிர்தைநாடி
மொகுமொகெனவிருவிழிநீர் முத்திறைப்பக்கரமலர்
கண் முகிழ்த்துநிற்பாம்.
5
Keep
சாதிகுலம்பிறப்பிறப்புப் பந்தமுத்தியருவுருவத்
தன்மைநாம
மேதுமின்றியெப்பொருட்குமெவ்விடத்தும்பிரிவற
நின் றியக்கஞ்செய்யுஞ்
சோதியைமாத்தூவெளியை மனதவிழநிறைவான
துரியவாழ்வைத்
தீதில்பரமாம்பொருளைத் திருவருளேநினைவாகச்
சிந்தைசெய்வாம்.
6
Keep
இந்திரசாலங்கனவு கானலினீரெனவுலக
மெமக்குத்தோன்றச்
சந்ததமுஞ்சிற்பரத்தா லழியாததற்பரத்தைச்
சார்ந்துவாழ்க
புந்திமகிழுறநாளுந் தடையறவானந்தவெள்ளம்
பொலிகவென்றே
வந்தருளுங்குருமௌனி மலர்த்தாளையனுதினமும்
வழுத்தல்செய்வாம்.
7
Keep
பொருளாகக்கண்டபொரு ளெவைக்குமுதற்
பொருளாகிப்போதமாகித்
தெருளாகிக்கருதுமன்பர் மிடிதீரப்பருகவந்த
செழுந்தேனாகி
அருளானோர்க்ககம்புறமென் றுன்னாதபூரணவா
னந்தமாகி
இருடீரவிளங்குபொரு ளியாதந்தப்பொருளினையா
மிறைஞ்சிநிற்பாம்.
8
Keep
அருமறையின்சிரப்பொருளாய் விண்ணவர்மாமுனி
வர்சித்த ராதியானோர்
தெரிவரியபூரணமாய்க் காரணங்கற்பனைகடந்த
செல்வமாகிக்
கருதரியமலரின்மண மெள்ளிலெண்ணெயுடலுயிர்
போற் கலந்தெந்நாளுந்
துரியநடுவூடிருந்த பெரியபொருளியாததனைத்
தொழுதல்செய்வாம்.
9
Keep
விண்ணாதிபூதமெல்லாந் தன்னகத்திலடக்கிவெறு
வெளியாய்ஞானக்
கண்ணாரக்கண்டவன்பர் கண்ணூடேயானந்தக்
கடலாய்வேறொன்
றெண்ணாத்படிக்கிரங்கித் தானாகச்செய்தருளு
மிறையேயுன்றன்
றண்ணாருஞ்சாந்தவரு டனைநினைந்துகரமலர்க
டலைமேற்கொள்வாம்.
10
Keep
விண்ணிறைந்தவெளியாயென் மனவெளியிற்
கலந்தறிவாம் வெளியினூடுந்
தண்ணிறைந்தபேரமுதாய்ச் சதானந்தமானபெருந்
தகையேநின்பா
லுண்ணிறைந்தபேரன்பா லுள்ளுருகிமொழிகுளறி
யுவகையாகிக்
கண்ணிறைந்தபுனலுகுப்பக் கரமுகிழ்ப்பநின்னரு
ளைக் கருத்தில்வைப்பாம்.
Ātiyantaṅkāṭṭā…
Keep
ஆதியந்தங்காட்டாத முதலாயெம்மை
யடிமைக்காவளர்த்தெடுத்த வன்னைபோல
நீதிபெறுங்குருவாகி மனவாக்கெட்டா
நிச்சயமாய்ச்சொச்சமதாய் நிமலமாகி
வாதமிடுஞ்சமயநெறிக் கரியதாகி
மௌனத்தோர்பால்வெளியாய் வயங்காநின்ற
சோதியையென்னுயிர்த்துணையை நாடிக்கண்ணீர்
சொரியவிருகரங்குவித்துத் தொழுதல்செய்வாம்.
Akaravuyirezhut…
Keep
அகரவுயிரெழுத்தனைத்து மாகிவேறா
யமர்ந்ததெனவகிலாண்ட மனைத்துமாகிப்
பகர்வனவெல்லாமாகி யல்லதாகிப்
பரமாகிச்சொல்லரிய பான்மையாகித்
துகளறுசங்கற்ப விகற்பங்களெல்லாந்
தோயாதவறிவாகிச் சுத்தமாகி
நிகரில்பசுபதியான பொருளைநாடி
நெட்டுயிர்த்துப்பேரன்பா னினைதல்செய்வாம்.
Previous
←
Paripūraṇāṉantam
Next
Ciṉmayāṉantakuru
→