Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Ciṉmayāṉantakuru
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
அங்கைகொடுமலர்தூவி யங்கமதுபுளகிப்ப
வன்பினாலுருகிவிழிநீ
ராறாகவாராத முத்தியினதாவேச
வாசைக்கடற்குண்மூழ்கிச்
சங்கரசுயம்புவே சம்புவேயெனவுமொழி
தழுதழுத்திடவணங்குஞ்
சன்மார்க்கநெறியிலாத் துன்மார்க்கனேனையுந்
தண்ணருள்கொடுத்தாள்வையோ
துங்கமிகுபக்குவச் சனகன்முதன்முனிவோர்க
டொழுதருகில்வீற்றிருப்பச்
சொல்லரியநெறியையொரு சொல்லாலுணர்த்தியே
சொரூபானுபூதிகாட்டிச்
செங்கமலபீடமேற் கல்லாலடிக்குள்வளர்
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
2
Keep
ஆக்கையெனுமிடிகரையை மெய்யென்றபாவிநா
னத்துவிதவாஞ்சையாத
லரியகொம்பிற்றேனை முடவனிச்சித்தபடி
யாகுமறிவவிழவின்பந்
தாக்கும்வகையேதிநாட் சரியைகிரியாயோக
சாதனம்விடுத்ததெல்லாஞ்
சன்மார்க்கமல்லவிவை நிற்கவென்மார்க்கங்கள்
சாராதபேரறிவதாய்
வாக்குமனமணுகாத பூரணப்பொருள்வந்து
வாய்க்கும்படிக்குபாயம்
வருவித்துவட்டாத பேரின்பமானசுக
வாரியினைவாய்மடுத்துத்
தேக்கித்திளைக்கநீ முன்னிற்பதென்றுகாண்
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
3
Keep
அவ்வியமிருக்கநா னென்கின்றவாணவ
மடைந்திட்டிருக்கலோப
மருளின்மைகூடக் கலந்துள்ளிருக்கமே
லாசாபிசாசமுதலாம்
வெவ்வியகுணம்பல விருக்குமென்னறிவூடு
மெய்யனீவீற்றிருக்க
விதியில்லையென்னிலோ பூரணனெனும்பெயர்
விரிக்கிலுரைவேறுமுளதோ
கவ்வுமலமாகின்ற நாகபாசத்தினாற்
கட்டுண்டவுயிர்கண்மூர்ச்சை
கடிதகலவலியவரு ஞானசஞ்சீவியே
கதியானபூமிநடுவுட்
செவ்விதின்வளர்ந்தோங்கு திவ்யகுணமேருவே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
4
Keep
ஐவகையெனும்பூத மாதியைவகுத்ததனு
ளசரசரபேதமான
யாவையும்வகுத்துநல் லறிவையும்வகுத்துமறை
யாதிநூலையும்வகுத்துச்
சைவமுதலாவளவில் சமயமும்வகுத்துமேற்
சமயங்கடந்தமோன
சமரசம்வகுத்தநீ யுன்னைநானணுகவுந்
தண்ணருள்வகுக்கவிலையோ
பொய்வளருநெஞ்சினர்கள் காணாதகாட்சியே
பொய்யிலாமெய்யரறிவிற்
போதபரிபூரண வகண்டிதாகாரமாய்ப்
போக்குவரவற்றபொருளே
தெய்வமறைமுடிவான பிரணவசொரூபியே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
5
Keep
ஐந்துவகையாகின்ற பூதபேதத்தினா
லாகின்றவாக்கைநீர்மே
லமர்கின்றகுமிழியென நிற்கின்றதென்னநா
னறியாதகாலமெல்லாம்
புந்திமகிழுறவுண் டுடுத்தின்பமாவதே
போந்தநெறியென்றிருந்தேன்
பூராயமாகநின தருள்வந்துணர்த்தவிவை
போனவழிதெரியவில்லை
எந்தநிலைபேசினு மிணங்கவிலையல்லா
லிறப்பொடுபிறப்பையுள்ளே
எண்ணினானெஞ்சது பகீரெனுந்துயிலுறா
திருவிழியுமிரவுபகலாய்ச்
செந்தழலின்மெழுகான தங்கமிவையென்கொலோ
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
6
Keep
காரிட்டவாணவக் கருவறையிலறிவற்ற
கண்ணிலாக்குழவியைப்போற்
கட்டுண்டிருந்தவெமை வெளியில்விட்டல்லலாங்
காப்பிட்டதற்கிசைந்த
பேரிட்டுமெய்யென்று பேசுபாழ்ம்பொய்யுடல்
பெலக்கவிளையமுதமூட்டிப்
பெரியபுவனத்தினிடை போக்குவரவுறுகின்ற
பெரியவிளையாட்டமைத்திட்
டேரிட்டதன்சுருதி மொழிதப்பினமனைவிட்
டிடருறவுறுக்கியிடர்தீர்த்
திரவுபகலில்லாத பேரின்பவீட்டினி
லிசைந்துதுயில்கொண்மினென்று
சீரிட்டவுலகன்னை வடிவானவெந்தையே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
7
Keep
கருமருவுகுகையனைய காயத்தினடுவுட்
களிம்புதோய்செம்பனையயான்
காண்டகவிருக்கநீ ஞானவனன்மூட்டியே
கனிவுபெறவுள்ளுருக்கிப்
பருவமதறிந்துநின் னருளானகுளிகைகொடு
பரிசித்துவேதிசெய்து
பத்துமாற்றுத்தங்க மாக்கியேபணிகொண்ட
பக்ஷத்தையென்சொல்லுவே
னருமைபெறுபுகழ்பெற்ற வேதாந்தசித்தாந்த
மாதியாமந்தமீது
மத்துவிதநிலையரா யென்னையாண்டுன்னடிமை
யானவர்களறிவினூடுந்
திருமருவுகல்லா லடிக்கீழும்வளர்கின்ற
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
8
Keep
கூடுதலுடன்பிரித லற்றுநிர்த்தொந்தமாய்க்
குவிதலுடன்விரிதலற்றுக்
குணமற்றுவரவினொடு போக்கற்றுநிலையான
குறியற்றுமலமுமற்று
நாடுதலுமற்றுமேல் கீழ்நடுப்பக்கமென
நண்ணுதலுமற்றுவிந்து
நாதமற்றைவகைப் பூதபேதமுமற்று
ஞாதுருவின்ஞானமற்று
வாடுதலுமற்றுமே லொன்றற்றிரண்டற்று
வாக்கற்றுமனமுமற்று
மன்னுபரிபூரணச் சுகவாரிதன்னிலே
வாய்மடுத்துண்டவசமாய்த்
தேடுதலுமற்றவிட நிலையென்றமௌனியே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
9
Keep
தாராதவருளெலாந் தந்தருளமௌனியாய்த்
தாயனையகருணைகாட்டித்
தாளிணையென்முடிசூட்டி யறிவிற்சமாதியே
சாசுவதசம்ப்ரதாய
மோராமன்மந்திரமு முன்னாமன்முத்திநிலை
யொன்றோடிரண்டெனாம
லொளியெனவும்வெளியெனவு முருவெனவுநாதமா
மொலியெனவுமுணர்வுறாமற்
பாராதுபார்ப்பதே யேதுசாதனமற்ற
பரமவனுபூதிவாய்க்கும்
பண்பென்றுணர்த்தியது பாராமலந்நிலை
பதிந்தநின்பழவடியர்தஞ்
சீராயிருக்கநின தருள்வேண்டுமையனே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
10
Keep
போதமாயாதிநடு வந்தமுமிலாததாய்ப்
புனிதமாயவிகாரமாய்ப்
போக்குவரவில்லாத வின்பமாய்நின்றநின்
பூரணம்புகலிடமதா
வாதரவுவையாம லறிவினைமறைப்பதுநி
னருள்பின்னுமறிவின்மைதீர்த்
தறிவித்துநிற்பதுநி னருளாகிலெளியனேற்
கறிவாவதேதறிவிலா
ஏதம்வருவகையேது வினையேதுவினைதனக்
கீடானகாயமேதென்
னிச்சாசுதந்தரஞ் சிறிதுமிலையிகபர
மிரண்டினுண்மலைவுதீரத்
தீதிலருள்கொண்டினியுணர்த்தியெனையாள்வையோ
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
11
Keep
பத்திநெறிநிலைநின்று நவகண்டபூமிப்
பரப்பைவலமாகவந்தும்
பரவையிடைமூழ்கியும் நதிகளிடைமூழ்கியும்
பசிதாகமின்றியெழுநா
மத்தியிடைநின்றுமுதிர் சருகுபுனல்வாயுவினை
வன்பசிதனக்கடைத்து
மௌனத்திருந்துமுயர் மலைநுழைவுபுக்கியு
மன்னுதசநாடிமுற்றுஞ்
சுத்திசெய்தும்மூல ப்ராணனோடங்கியைச்
சோமவட்டத்தடைத்துஞ்
சொல்லரியவமுதுண்டு மற்பவுடல்கற்பங்க
டோறுநிலைநிற்கவீறு
சித்திசெய்துஞ்ஞான மலதுகதிகூடுமோ
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே.
Previous
←
Poruḷvaṇakkam
Next
Mauṉakuruvaṇakkam
→