Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Mauṉakuruvaṇakkam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
ஆசைநிகளத்தினை நிர்த்தூளிபடவுதறி
யாங்காரமுளையையெற்றி
யத்துவிதமதமாகி மதமாறுமாறாக
வங்கையின்விலாழியாக்கிப்
பாசவிருடன்னிழ லெனச்சுளித்தார்த்துமேற்
பார்த்துப்பரந்தமனதைப்
பாரித்தகவளமாய்ப் பூரிக்கவுண்டுமுக
படாமன்னமாயைநூறித்
தேசுபெறநீவைத்த சின்முத்திராங்குசச்
செங்கைக்குளேயடக்கிச்
சின்மயானந்தசுக வெள்ளம்படிந்துநின்
றிருவருட்பூர்த்தியான
வாசமுறுசற்சார மீதென்னையொருஞான
மத்தகசமெனவளர்த்தாய்
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
2
Keep
ஐந்துவகையாகின்ற பூதமுதனாதமு
மடங்கவெளியாகவெளிசெய்
தறியாமையறிவாதி பிரிவாகவறிவார்க
ளறிவாகநின்றநிலையிற்
சிந்தையறநில்லென்று சும்மாவிருத்திமேற்
சின்மயானந்தவெள்ளந்
தேக்கித்திளைத்துநா னதுவாயிருக்கநீ
செய்சித்ரமிகநன்றுகா
ணெந்தைவடவாற்பரம குருவாழ்கவாழவரு
ளியநந்திமரபுவாழ்க
வென்றடியர்பனமகிழ வேதாகமத்துணி
பிரண்டில்லையொன்றென்னவே
வந்தகுருவேவீறு சிவஞானசித்திநெறி
மௌனோபதேசகுருவே
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
3
Keep
ஆதிக்கநல்கினவ ராரிந்தமாயைக்கெ
னறிவன்றியிடமில்லையோ
வந்தரப்புட்பமுங் கானலின்னீருமோ
ரவசரத்துபயோகமோ
போதித்தநிலையையு மயக்குதேயபயநான்
புக்கவருடோற்றிடாமற்
பொய்யானவுலகத்தை மெய்யாநிறுத்தியென்
புந்திக்குளிந்த்ரசாலஞ்
சாதிக்குதேயிதனை வெல்லவுமுபாயநீ
தந்தருள்வதென்றுபுகல்வாய்
சண்மதஸ்தாபனமும் வேதாந்தசித்தாந்த
சமரசநிர்வாகநிலையு
மாதிக்கொடண்டப் பரப்பெலாமறியவே
வந்தருளுஞானகுருவே
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
4
Keep
மின்னனையபொய்யுடலை நிலையென்றுமையிலகு
விழிகொண்டுமையல்பூட்டு
மின்னார்களின்பமே மெய்யென்றும்வளர்மாட
மேல்வீடுசொர்க்கமென்றும்
பொன்னையழியாதுவளர் பொருளென்றுபோற்றியிப்
பொய்வேடமிகுதிகாட்டிப்
பொறையறிவுதுறவீத லாதிநற்குணமெலாம்
போக்கிலேபோகவிட்டுத்
தன்னிகரிலோபாதி பாழ்ம்பேய்பிடித்திடத்
தரணிமிசைலோகாயதன்
சமயநடைசாராமல் வேதாந்தசித்தாந்த
சமரசசிவானுபூதி
மன்னவொருசொற்கொண்டெனைத்தடுத்தாண்டன்
பின் வாழ்வித்தஞானகுருவே
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
5
Keep
போனகமிருக்கின்ற சாலையிடைவேண்டுவ
புசித்தற்கிருக்குமதுபோற்
புருஷர்பெறுதர்மாதி வேதமுடனாகமம்
புகலுமதினாலாம்பயன்
ஞானநெறிமுக்யநெறி காட்சியனுமானமுத
னானாவிதங்கடேர்ந்து
நானானெனக்குளறு படைபுடைபெயர்த்திடவு
நான்குசாதனமுமோர்ந்திட்
டானநெறியாஞ்சரியை யாதிசோபானமுற்
றணுபக்ஷசம்புபக்ஷ
மாமிருவிகற்பமு மாயாதிசேவையு
மறிந்திரண்டொன்றென்னுமோர்
மானதவிகற்பமற வென்றுநிற்பதுநமது
மரபென்றபரமகுருவே
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
6
Keep
கல்லாதவறிவுமேற் கேளாதகேள்வியுங்
கருணைசிறிதேதுமில்லாக்
காட்சியுங்கொலைகளவு கட்காமமாட்சியாக்
காதலித்திடுநெஞ்சமும்
பொல்லாதபொய்ம்மொழியு மல்லாதுநன்மைகள்
பொருந்துகுணமேதுமறியேன்
புருஷர்வடிவானதே யல்லாதுகனவிலும்
புருஷார்த்தமேதுமில்லே
னெல்லாமறிந்தநீ யறியாததன்றெனக்
கெவ்வண்ணமுய்வண்ணமோ
விருளையிருளென்றவர்க் கொளிதாரகம்பெறு
மெனக்குநின்னருடாரகம்
வல்லானெனும்பெய ருனக்குள்ளதேயிந்த
வஞ்சகனையாளநினையாய்
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
7
Keep
கானகமிலங்குபுலி பசுவொடுகுலாவுநின்
கண்காணமதயானைநீ
கைகாட்டவுங்கையா னெகிடிக்கெனப்பெரிய
கட்டைமிகவேந்திவருமே
போனகமமைந்ததென வக்காமதேனுநின்
பொன்னடியினின்றுசொலுமே
புவிராசர்கவிராசர் தவராசனென்றுனைப்
போற்றிசயபோற்றியென்பார்
ஞானகருணாகர முகங்கண்டபோதிலே
நவநாதசித்தர்களுமுன்
னட்பினைவிரும்புவார் சுகர்வாமதேவர்முதன்
ஞானிகளுமுனைமெச்சுவார்
வானகமுமண்ணகமும் வந்தெதிர்வணங்கிடுமுன்
மகிமையதுசொல்லவெளிதோ
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
8
Keep
சருகுசலபக்ஷணிக ளொருகோடியல்லாற்
சகோரபக்ஷிகள்போலவே
தவளநிலவொழுகமிர்த தாரையுண்டழியாத
தன்மையரனந்தகோடி
இருவினைகளற்றிரவு பகலென்பதறியாத
வேகாந்தமோனஞான
வின்பநிஷ்டையர்கோடி மணிமந்த்ரசித்திநிலை
யெய்தினர்கள்கோடிசூழக்
குருமணியிழைத்திட்ட சிங்காசனத்தின்மிசை
கொலுவீற்றிருக்குநின்னைக்
கும்பிட்டனந்தமுறை தெண்டனிட்டென்மனக்
குறையெலாந்தீரும்வண்ணம்
மருமலரெடுத்துனிரு தாளையர்ச்சிக்கவெனை
வாவென்றழைப்பதெந்நாண்
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
9
Keep
ஆங்காரமானகுல வேடவெம்பேய்பாழ்த்த
வாணவத்தினும்வலிதுகா
ணறிவினைமயக்கிடு நடுவறியவொட்டாதி
யாதொன்றுதொடினுமதுவாய்த்
தாங்காதுமொழிபேசு மரிகரப்பிரமாதி
தம்மொடுசமானமென்னுந்
தடையற்றதேரிலஞ் சுருவாணிபோலவே
தன்னிலசையாதுநிற்கு
மீங்காரெனக்குநிக ரென்னப்ரதாபித்
திராவணாகாரமாகி
யிதயவெளியெங்கணுந் தன்னரசுநாடுசெய்
திருக்குமிதனொடெநேரமும்
வாங்காநிலாவடிமை போராடமுடியுமோ
மௌனோபதேசகுருவே
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
10
Keep
பற்றுவெகுவிதமாகி யொன்றைவிட்டொன்றனைப்
பற்றியுழல்கிருமிபோலப்
பாழ்ஞ்சிந்தைபெற்றநான் வெளியாகநின்னருள்
பகர்ந்துமறியேன்றுவிதமோ
சிற்றறிவதன்றியுமெவரேனுமொருமொழி
திடுக்கென்றுரைத்தபோது
சிந்தைசெவியாகவே பறையறையவுதரவெந்
தீநெஞ்சமளவளாவ
உற்றுணரவுணர்வற்றுன் மத்தவெறியினர்போல
வுளறுவேன்முத்திமார்க்க
முணர்வதெப்படியின்ப துன்பஞ்சமானமா
யுறுவதெப்படியாயினும்
மற்றெனக்கையநீ சொன்னவொருவார்த்தையினை
மலையிலக்கெனநம்பினேன்
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே.
Previous
←
Ciṉmayāṉantakuru
Next
Karuṇākarakkaṭavuḷ
→