Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Karuṇākarakkaṭavuḷ
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
நிர்க்குணநிராமய நிரஞ்சனநிராலம்ப
நிர்விஷயகைவல்யமா
நிஷ்களவசங்கசஞ் சலரகிதநிர்வசன
நிர்த்தொந்தநித்தமுக்த
தற்பரவிஸ்வாதீத வ்யோமபரிபூரண
சதானந்தஞானபகவ
சம்புசிவசங்கர சர்வேசவென்றுநான்
சர்வகாலமுநினைவனோ
அற்புதவகோசர நிவர்த்திபெறுமன்பருக்
கானந்தபூர்த்தியான
வத்துவிதநிச்சய சொரூபசாக்ஷாத்கார
வனுபூதியனுசூதமுங்
கற்பனையறக்காண முக்கணுடன்வடநிழற்
கண்ணூடிருந்தகுருவே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
2
Keep
மண்ணாதியைந்தொடு புறத்திலுளகருவியும்
வாக்காதிசோத்ராதியும்
வளர்கின்றசப்தாதி மனமாதிகலையாதி
மன்னுசுத்தாதியுடனே
தொண்ணூற்றொடாறு மற்றுள்ளனவுமௌனியாய்
ச் சொன்னவொருசொற்கொண்டதே
தூவெளியதாயகண் டானந்தசுகவாரி
தோற்றுமதையென்சொல்லுவேன்
பண்ணாருமிசையினொடு பாடிப்படித்தருட்
பான்மைநெறிநின்றுதவறாப்
பக்குவவிசேஷராய் நெக்குநெக்குருகிப்
பணிந்தெழுந்திருகைகூப்பிக்
கண்ணாறுகரைபுரள நின்றவன்பரையெலாங்
கைவிடாக்காட்சியுறவே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
3
Keep
எல்லாமுனடிமையே யெல்லாமுனுடைமையே
யெல்லாமுனுடையசெயலே
யெங்கணும்வியாபிநீ யென்றுசொலுமியல்பென்
றிருக்காதிவேதமெல்லாஞ்
சொல்லான்முழக்கியது மிக்கவுபகாரமாச்
சொல்லிறந்தவரும்விண்டு
சொன்னவையுமிவைநல்ல குருவானபேரும்
தொகுத்தநெறிதானுமிவையே
யல்லாமலில்லையென நன்றாவறிந்தே
னறிந்தபடிநின்றுசுகநா
னாகாதவண்ணமே யிவ்வண்ணமாயினே
னதுவுநினதருளென்னவே
கல்லாதவறிஞனுக் குள்ளேயுணர்த்தினை
கதிக்குவகையேதுபுகலாய்
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
4
Keep
பட்டப்பகற்பொழுதை யிருளென்றமருளர்தம்
பக்ஷமோவெனதுபக்ஷம்
பார்த்தவிடமெங்கணுங் கோத்தநிலைகுலையாது
பரமவெளியாகவொருசொற்
றிட்டமுடன்மௌனியா யருள்செய்திருக்கவுஞ்
சேராமலாராகநான்
சிறுவீடுகட்டியதி னடுசோற்றையுண்டுண்டு
தேக்குசிறியார்கள்போல
நட்டணையதாக்கற்ற கல்வியும்விவேகமு
நன்னிலயமாகவுன்னி
நானென்றுநீயென் றிரண்டில்லையென்னவே
நடுவேமுளைத்தமனதைக்
கட்டவறியாமலே வாடினேனெப்போது
கருணைக்குரித்தாவனோ
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
5
Keep
மெய்விடாநாவுள்ள மெய்யருளிருந்துநீ
மெய்யானமெய்யையெல்லா
மெய்யெனவுணர்த்தியது மெய்யிதற்கையமிலை
மெய்யேதுமறியாவெறும்
பொய்விடாப்பொய்யினே னுள்ளத்திருந்துதான்
பொய்யானபொய்யையெல்லாம்
பொய்யெனாவண்ணமே புகலவைத்தாயெனிற்
புன்மையேனென்செய்குவேன்
மைவிடாதெழுநீல கண்டகுருவேவிஷ்ணு
வடிவானஞானகுருவே
மலர்மேவிமறையோது நான்முகக்குருவே
மதங்கடொறுநின்றகுருவே
கைவிடாதேயென்ற வன்பருக்கன்பாய்க்
கருத்தூடுணர்த்துகுருவே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
6
Keep
பண்ணேனுனக்கான பூசையொருவடிவிலே
பாவித்திறைஞ்சவாங்கே
பார்க்கின்றமலரூடு நீயேயிருத்தியப்
பனிமலரெடுக்கமனமும்
நண்ணேனலாமலிரு கைதான்குவிக்கவெனி
னாணுமென்னுளநிற்றிநீ
நான்கும்பிடும்போ தரைக்கும்பிடாதலா
னான்பூசைசெய்யன்முறையோ
விண்ணேவிணாதியாம் பூதமேநாதமே
வேதமேவேதாந்தமே
மேதக்ககேள்வியே கேள்வியாம்பூமிக்குள்
வித்தேயவித்தின்முளையே
கண்ணேகருத்தேயெ னெண்ணேயெழுத்தே
கதிக்கானமோனவடிவே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
7
Keep
சந்ததமும்வேதமொழி யாதொன்றுபற்றினது
தான்வந்துமுற்றுமெனலாற்
சகமீதிருந்தாலு மரணமுண்டென்பது
சதாநிஷ்டர்நினைவதில்லை
சிந்தையறியார்க்கீது போதிப்பதல்லவே
செப்பினும்வெகுதர்க்கமாந்
திவ்யகுணமார்க்கண்டர் சுகராதிமுனிவோர்கள்
சித்தாந்தநித்யரலவோ
இந்த்ராதிதேவதைகள் பிரமாதிகடவுள
ரிருக்காதிவேதமுனிவ
ரெண்ணரியகணநாதர் நவநாதசித்தர்க
ளிரவிமதியாதியோர்கள்
கந்தருவர்கின்னரர்கண் மற்றையர்கள்யாவருங்
கைகுவித்திடுதெய்வமே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
8
Keep
துள்ளுமறியாமனது பலிகொடுத்தேன்கர்ம
துட்டதேவதைகளில்லை
துரியநிறைசாந்ததே வதையாமுனக்கே
தொழும்பனன்பபிடேகநீ
ருள்ளுறையிலென்னாவி நைவேத்தியம்ப்ராண
னோங்குமதிதூபதீப
மொருகாலமன்றிது சதாகாலபூசையா
வொப்புவித்தேன்கருணைகூர்
தெள்ளிமறைவடியிட்ட வமுதப்பிழம்பே
தெளிந்ததேனேசினியே
திவ்யரசம்யாவுந் திரண்டொழுகுபாகே
தெவிட்டாதவானந்தமே
கள்ளனறிவூடுமே மெள்ளமெளவெளியாய்க்
கலக்கவருநல்லவுறவே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
9
Keep
உடல்குழையவென்பெலா நெக்குருகவிழிநீர்க
ளூற்றெனவெதும்பியூற்ற
வூசிகாந்தத்தினைக் கண்டணுகல்போலவே
யோருறவுமுன்னியுன்னிப்
படபடெனநெஞ்சம் பதைத்துண்ணடுக்குறப்
பாடியாடிக்குதித்துப்
பனிமதிமுகத்திலே நிலவனையபுன்னகை
பரப்பியார்த்தார்த்தெழுந்து
மடலவிழுமலரனைய கைவிரித்துக்கூப்பி
வானேயவானிலின்ப
மழையேமழைத்தாரை வெள்ளமேநீடூழி
வாழியெனவாழ்த்தியேத்துங்
கடன்மடைதிறந்தனைய வன்பரன்புக்கெளியை
கன்னெஞ்சனுக்கெளியையோ
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
10
Keep
இங்கற்றபடியங்கு மெனவறியுநல்லறிஞ
ரெக்காலமுமுதவுவா
ரின்சொறவறார்பொய்ம்மை யாமிழுக்குரையா
ரிரங்குவார்கொலைகள்பயிலார்
சங்கற்பசித்தரவ ருள்ளக்கருத்திலுறை
சாக்ஷிநீயிகபரத்துஞ்
சந்தானகற்பகத் தேவாயிருந்தே
சமஸ்தவின்பமுமுதவுவாய்
சிங்கத்தையொத்தெனைப் பாயவருவினையினைச்
சேதிக்கவருசிம்புளே
சிந்தாகுலத்திமிர மகலவருபானுவே
தீனனேன்கரையேறவே
கங்கற்றபேராசை வெள்ளத்தின்வளரருட்
ககனவட்டக்கப்பலே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
Previous
←
Mauṉakuruvaṇakkam
Next
Cittarkaṇam
→